Sunday, September 15, 2013

ஒரு தெய்வம் தந்த பூவே!! - பர்த் டே ஸ்பெஷல்

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்,ஓராயிரம் முறை மனதிற்குள் ஒளிபரப்பி அதே சிலிர்ப்பை.. அதே சுகத்தை,அனுபவித்திருக்கிறேன் பலமுறை.... இதோ ... மீண்டும் ஒரு மறு ஒளிபரப்பு....,
 

                                                                                          
தூங்கும் முன் கதை கேட்கும் பழக்கம் இனியாக்கு உண்டு...

அம்மா நான் பொறந்த கதையை சொல்லும்மா.

பன்னீர் ரோஜா கலர், கருப்பு கோலிக்குண்டு கண்ணு,தந்தத்தால செஞ்ச மாதிரி கைக்கால், கிண்கிணி நாதம் போல உன் அழுகை.

அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?

அம்மா மூஞ்சியப் பார்த்தே. எனக்காக என் அம்மா நீ இருக்க நான் ஏன் அழுகனும்னு நீ அழுகையை நிப்பாட்டிட்டேம்மா.

போம்மா, அப்போ நான் குட்டி பாப்பாதானே எனக்குதான் அப்போ ஒண்ணும் தெரியாதே. நீ குளோசப்ல உன் மூஞ்சியக் காட்டி இருப்பே. நான் பயந்துப் போய் அழுகையை நிப்பாட்டிட்டேன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் டமால்

  இனியாவை எல்.கே.ஜி ல சேர்த்த இரண்டாம் நாள்:

ஸ்கூல் விட்டு ஓடிவந்து, ஒரு நோட்டைக் காட்டி, இது என்னன்னு கேட்டா?
அவள் நீட்டிய பக்கம் பார்த்த போது..,நெடுக்குவாக்குல சின்ன சின்ன கோடுகளை நெருக்கமா வரைந்திருந்தா. நான் அதை மழைன்னு நினைச்சு..,

என்னம்மா! மழை படம் வரைஞ்சிருக்கியா?
ஐயோ! அம்மா! உனக்கு ஒண்ணுமே தெரியலை, இது மழை இல்லம்மா, ONE.
எங்கே சொல்லு பார்க்கலாம்   O,   N,  E  " ONE"

அவ்வ்வ்வ்வ்வ்வ்குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்
    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...
    மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ....
    என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்..

    மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
    எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ..
    எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
    மீட்டெடுத்த புதையல் நீ...

    என் வாழ்வின் சூர்யோதயம் நீ..
    மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
    வாழ்வின் எல்லா உயரங்களுக்கும் நீ செல்ல
    நீ ஏறும் படிக்கட்டாய்
    நானிருப்பேன்...,
    வாழ்க நீ பல்லாண்டு...

  Let the God decorate each
golden ray of the sun reaching you
with wishes of success, happiness and prosperity 4 you
wish you a super duper 
Happy birthday My Baby..,

                                                

இரண்டாவதும் பொண்ணகிட்டுதேன்னு உறவுகள்லாம் ஒதுங்கி நின்ன நேரம். ஒண்ணுக்கொண்ணு துணையா இருக்கும்ன்னு, கலங்காத! நாங்க இருக்கோம்ன்னு அம்மா தைரியமூட்டினாங்க. பெரியவ பொறந்த பின்னும் தாயாகம பிள்ளையாய் இருந்த என்னை தாயாக்கிய தேவதை! அவளுக்கு வாழ்த்து சொல்லும் இதே நாளில், எனக்கு கொஞ்சம் பொறுப்புணர்வை வரவைத்ததற்கு நன்றியும் சொல்லிக்குறேன்!!

இங்கிட்டு வந்தவங்கலாம் சண்டை போடாம,  கேக் எடுத்து  சாப்பிட்டுக்கிட்டே.., உங்க விலைமதிப்பில்லா வாழ்த்துகளையும் ஆசிகளையும் இனியாவுக்கு கொடுங்க.


39 comments:

 1. இனியா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி!

   Delete
 2. அன்பின் ராஜி - இனியாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துகளை இனியாக்கு சேர்பிச்சுடுறேன்.

   Delete
 3. வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. சகோ..

  ReplyDelete
  Replies
  1. சொல்லிட்டேன் கருண்!

   Delete
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்களின் இனிய மகளுக்கு....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி

   Delete
 5. இனியாவுக்கு எங்கள் இதயம் கனிந்த
  நல் வாழ்த்துக்கள்
  (எனக்குத் தெரிய ஒன்று இரண்டு
  மற்றும் பதினாங்கு பதினைந்து தேதிகளில்
  பிறந்தவர்களெல்லாம் ஏதேனும் ஒரு துறையில்
  சாதனையாளர்களாகவே இருக்கிறார்கள்
  இனியாவும் நிச்சயம் இருப்பாள்
  வாழ்த்துக்களுடன் )

  ReplyDelete
  Replies

  1. எனக்குத் தெரிய அம்மா கொஞ்சம் அசட இருந்தா பிள்ளைகள் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கும்

   Delete
  2. சகோதரியை விட மருமக ஒசத்தி போல! என்னை கலாய்ச்சாச்சா!!?? இன்னிக்க்கு நைட் நிம்மதியா தூங்குங்க!

   Delete
  3. அப்படி அவ பெரிய ஆளாய் வந்தால் சந்தோசம்ப்ப்பா! உங்க வாய் முகூர்த்தம் பலிச்சா போதும். வாழ்த்துக்கு நன்றிப்பா!

   Delete
 6. அம்மா மகளுக்கு அளித்த சிறப்பு பரிசு, இந்த அழகான கவிதை. வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று வாழ இனியாவுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஆவி!

   Delete
 7. இனியாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி !!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா!

   Delete
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அபயா!

   Delete
 9. இனியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி

   Delete
 10. இனியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தம்பி!

   Delete
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இனியா.

  ReplyDelete
 13. இனியா என்ற பெயரே இனிப்பதால் ,கேக் வேறு எதுக்கு ?வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. ////உங்க விலைமதிப்பில்லா வாழ்த்துகளையும் ஆசிகளையும்////

  மாமாவின் வாழ்த்துக்கள் விலைமதிப்பில்லா வாழ்த்துக்கள் அல்ல விலைமதிப்பு பெற்ற வாழ்த்துக்கள்.
  என் இனிய இனியாவிற்கு இந்த மாமவின் இதயங்கனிந்த பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 17. அன்பு கனிந்த வாழ்த்துகள் இனியா .அம்மாவுக்கும் வாழ்த்துகள்.
  என் பெண் எனக்குச் சொல்லிக் கொடுத்தது.
  ஒரு குழந்தை பிறக்கும்போது அவள் அம்மாவும் மீண்டும் பிறக்கிறாள் புதிதாக.

  ReplyDelete
 18. நிஜமாவே மூணு பிள்ளைகளில் சின்ன பொண்ணுக்கு எல்லோர் மீதும் பாச உணர்வு கொஞ்சம் அதிகம்தான் அண்ணா!

  ReplyDelete
 19. நாந்தான் எங்க வீட்டில கடைக்குட்டி ஆனா வயசு ஆக ஆக நான் கழுதை குட்டியா அதுவும் இந்த வலைதளம் ஆரம்பிச்சபின் ஆயிட்டேன் ஹீ.ஹீ

  ReplyDelete
 20. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 21. இனியாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete


 22. super amma super ponnu
  super raji super iniya
  ellorukkum super birthday greetings.
  and thank u for the nice cake too.

  subbu thatha.
  meenaachi paatti
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
 23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவுக்கு...

  ReplyDelete
 24. இனியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 25. இனியவள் இனியாவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 26. "மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
  எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ.."

  ஆசான் இனியாவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. இரண்டாவதும் தேவதையை பெற்ற பாக்கியசாலிப்பா ராஜி...

  தூயாவுக்கு அடுத்து இனியா... இறைவனின் கருணை...

  குழந்தைக்கு என் ஆசிகள்.

  ReplyDelete