சனி, செப்டம்பர் 07, 2013

மனதின் குமுறல்

உன் கடுஞ்சொற்களால் நான் 
வீழ்ந்து போனாலும் கூட,
உன் நினைவுகள்
என்னை விட்டு விலகவில்லை!!

நாம் இருந்த இடங்கள் யாவும் 
மறைந்து போனாலும் கூட,
 நீ விட்டு சென்ற 
தடயங்கள் இன்னும் மறையவில்லை!! 

நம் எதிர் வாதங்கள் எல்லாம் 
எதிர் மறையானதால்,  
என் எதிரில்
எதிரியாக கூட நீ இல்லை!! 

நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால், 
உன் நினைவுகளால்  கூட அதை 
குணபடுத்த முடியவில்லை!!

புன்னகை சூழ்ந்த உன் 
இதழ்கள் ரெண்டும் 
மௌனமாகி போனதால்,  என்னை
திட்ட கூட அவை திறக்கவில்லை!!

பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும், 
தொலைவுகளால் கூட நம்மை 
தொலைத்து விட முடியவில்லை!!

மறுப்புகள் எல்லாம்
 மலை போல் இருந்தாலும் ,
மீண்டு வருவதும், மாண்டு போவதும் ,
நம் கைகளில்தான் அன்பே!


24 கருத்துகள்:

 1. // பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும்,
  தொலைவுகளால் கூட நம்மை
  தொலைத்து விட முடியவில்லை!!//
  தூரங்கள் துயரமில்லை. நல்லா சொல்லிருக்கீங்க சகோ.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. //// நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால்,
  உன் நினைவுகளால் கூட அதை
  குணபடுத்த முடியவில்லை!! ///

  எனக்காகவே எழுதப்பட்டவை போல் உள்ளது ...!!!
  எனது எண்ண அலைகள் அப்படியே வார்த்தைகளில் வார்த்திருக்கிறிர்கள் ....

  பதிலளிநீக்கு
 4. மனதின் குமுறல் நன்றாக தெரிகிறது கவிதையில்.

  பதிலளிநீக்கு
 5. "நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால்,
  உன் நினைவுகளால் கூட அதை
  குணபடுத்த முடியவில்லை!!"

  அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 6. மனம் தொட்ட அருமையான கவிதை
  பகிர்வு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அருமையான கவிதை.. அழகாய் உயிருள்ள போட்டோ.. ஆமா அதை எப்படி இணைக்கிறது..

  பதிலளிநீக்கு
 8. என்ன சண்டை , எதற்கு சண்டை !?
  சீக்கிரம் ஒண்ணாயிடுங்க !

  பதிலளிநீக்கு
 9. // மீண்டு வருவதும், மாண்டு போவதும் ,
  நம் கைகளில்தான் அன்பே!//
  அசத்திட்டீங்க ராஜி!

  பதிலளிநீக்கு
 10. மனக் குமுறல்கள்
  கொப்பளிக்கின்றன
  வார்த்தைகளில்

  பதிலளிநீக்கு
 11. நீண்ட நாட்களுக்கு பின் நல்லதொரு கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. //என் எதிரில்
  எதிரியாக கூட நீ இல்லை!! //


  அட அட அட செம்ம லைன்ஸ்..

  பதிலளிநீக்கு
 13. உங்கள் மனக் குமுறல் கவிதையாய் வெளியே வந்தது.
  அருமை.

  பதிலளிநீக்கு
 14. பதிவர் சந்திப்பில் பிரியாணி கிடைக்கவில்லை என்பதற்கு இப்படி ஒரு குமுறலா? sorry, கவிதையா?

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள..

  உயிர்ப்பான கவிதை.

  தீதும் நன்றும் பிறர்தர வாரா.

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான கவிதை.
  குமுறல் கூட ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. அழகான வரிகள் சகோ. உணர்த்து ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 18. பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும்,
  தொலைவுகளால் கூட நம்மை
  தொலைத்து விட முடியவில்லை

  nice lines

  unakum enakumana intha idaivil
  un meethana piriyangal athikarithu
  konde povathal thaan
  naan innum pirivai nesithu konde irukiren

  பதிலளிநீக்கு
 19. சென்ற வாரம் எனது ரசனையின் டாப் வரிசையில் இடம் பிடித்த இந்தக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
  http://jeevanathigal.blogspot.com/2013/09/02-to-08-09-2013.html

  பதிலளிநீக்கு
 20. மறுப்புகள் எல்லாம்
  மலை போல் இருந்தாலும் ,
  மீண்டு வருவதும், மாண்டு போவதும் ,
  நம் கைகளில்தான் அன்பே!

  உண்மைதான்!

  பதிலளிநீக்கு