இந்தா புள்ள! மணி ஆறாகிட்டுது பாரு. இன்னும் விளக்கேத்தலையா?!
அப்படிலாம் சொல்லக்கூடாது புள்ள. வீட்டுக்கு விளக்கேத்துறது வெளிச்சத்துக்காக மட்டுமில்ல. லட்சுமி கடாட்சத்தை வரவைக்கவும்தான் விளக்கேத்துது. காலையும் மாலையும் விளக்கேத்தி இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டு வேலையை தொடரும்போது மனசுக்கு ஒருவித உற்சாகம் பிறக்கும். உத்வேகமும் பிறக்கும். எல்லா இறைவனையும் அக்னியில் வரவைக்க முடியும். அதனாலதான் முனிவர்கள் யாகம், ஹோமம் வளர்த்தி இறைவனை வழிப்பட்டனர். அதையேதான் அன்றாட வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி எளிமையா விளக்கேத்துறதுன்னு கொண்டு வந்திருக்காங்க. இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. காஸ்மிக் பவர்ன்னு சொல்ற பிரபஞ்ச சக்தியை பெற்றுத்தரும் ஆண்டனா மாதிரி விளக்கு செயல்படுது.
விளக்கின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். அதனால, விளக்கேற்றுவதால் முப்பெரும்தேவியரின் அருளை பெறலாம். தினமும் விளக்கேற்றி வழிப்படும் வீட்டில் தெய்வபலம் பெருகும், தீயசக்திகள், தீயவினைகள், திருஷ்டிகள் அண்டாது. வெள்ளிக்கிழமைகளில் வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அவ்விளக்கை வீட்டுக்குள் கொண்டு வரும்போது கூடவே மகாலட்சுமி வருவதாய் சொல்லப்படுது. காலை, மாலைன்னு விளக்கேத்துறது எல்லா நலனையும் நமக்கு கிடைக்கும். ஏற்றிய விளக்கு எண்ணெய் இல்லாமல் தீர்ந்து தானாய் அணையக்கூடாது. பூவினைக்கொண்டு விளக்கின் திரியை எண்ணெயில் இழுத்து அணைக்க வேண்டும். பூ இல்லன்னா ஊதுவத்தி குச்சி கொண்டும் அணைக்கலாம்.
கைகளை வீசியும், வாயால் ஊதியும் விளக்கை அணைக்கக்கூடாது, விளக்குன்னு இல்ல மெழுகுவர்த்தி, ஊதுவத்தி, கற்பூரம்ன்னு எதையும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது, இதுக்கு காரணம் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயமாகிய பஞ்சபூதங்களை நாம் வணங்குகின்றோம். அதனால ஒன்றைக்கொண்டு மற்றொன்றை அணைக்கக்கூடாது. விளக்கேற்றுவதையும், குளிர்விப்பதையும் பெண்கள்தான் செய்யனும். ஆண்கள் செய்யக்கூடாது. காரணம் முப்பெரும் தேவியர்கள் வாசம் செய்யும் திருவிளக்கானது அவர்களின் உடலுக்கு ஒப்பானது. அதை ஆண்கள் தொடலாமோ?! அதான் காரணம். அப்ப கோவில்ல சிலைக்கு ஆண்கள் பூஜை, அபிஷேகம்லாம் செய்றாங்களேன்னு எடக்கு மடக்கா கேள்வி கேக்கக்கூடாது.
விளக்கேத்துறதுல இத்தனை விசயமிருக்கா?! இனி இரண்டு வேளையும் சாமி விளக்கேத்துறேன். என் போன் தண்ணில விழுந்துடுச்சு மாமா. கடையில் கொண்டு போய் கொடுத்துட்டு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வர்றீகளா?!

மொபைல் தண்ணில விழுந்திட்டாலோ இல்ல மழையில நனைஞ்சுட்டாலோ போனை முதல்ல ஆஃப் பண்ணனும். இல்லன்னா உள்ளுக்குள் ஷார்ட் சர்க்யூட் ஆகி வெடிக்க வாய்ப்புண்டு. ஒருசில மொபைல் கம்பெனி போன்ல பேட்டரி முனை அல்லது அதன் கீழ்ப்பகுதில் வெள்ளை கலர்ல வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். நீரில் மூழ்கும்போது இது சிவப்பு கலராகிடும். இத பார்த்துக்கூட மொபைல்ல தண்ணி இறங்கியிருக்கான்னு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ,மொபைலை ஆஃப் பண்ணதும் மொபைல் கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரிகார்டுன்னு அத்தனையையும் கழட்டி சுத்தமான துணியால தொடைச்சு ஈரத்தை எடுக்கனும்.
சிம்ல தண்ணி புகாது அதனால அதை வேற மொபைல்ல யூஸ் பண்ணிக்கலாம் அப்பதா சிம்ல இருக்கும் காண்டாக்ட், மெசேஜ்லாம் டெலிட் ஆகாம பார்த்துக்க முடியும். மொபைல்ல இருக்கும் தண்ணிய வெளில எடுக்குறேன்னு மொபைல குலுக்க கூடாது. இதனால டிஸ்ப்ளேவுக்குள்ளும் தண்ணி போக வாய்ப்பிருக்கு. தண்ணி உறியுற காட்டன் துணியால தொடைச்சா போதும். இப்படி தொடைச்சுட்டு வெயில் இல்ல காத்து படும்படி மொபைலையும், அதோட எல்லா ஸ்பார்ட்சையும் உலர
வைக்கனும். காய வைக்குறேன்னு ஹேர் ட்ரையர், அடுப்புக்கிட்டன்னு கொண்டு போகக்கூடாது. அரிசி டப்பாவுல மொபைலை போட்டு இறுக்கமா கொஞ்ச நேரத்துக்கு மூடி வைங்க. அரிசி மொபைல இருக்கும் தண்ணியை இழுத்துடும். அப்புறம் சுத்தமா துடைச்சுட்டு எல்லா ஸ்பார்ட்டையும் பூட்டி பாருங்க. மொபைல் ஆன் ஆகிடும். அப்படியும் ஆகலைன்னா சினிமாவுல வரும் டாக்டர் சொல்லுற மாதிரி எதும் நம்ம கையில் இல்லன்னு மேல விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட்டுக்கிட்டு சர்வீஸ் செண்டருக்கு கொண்டு போய் கொடுக்கனும்..

சரி, சரி ரெண்டு மார்க் கேள்விக்கு பத்து மார்க் அளவுக்கு பேசி சாவடிக்காதீங்க. இந்தாங்க இந்த மொபைலை நீங்க சொன்ன மாதிரி கழட்டி அரிசி பானைல வைங்க..
ஏண்டி ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி வேலை வாங்குவியா?!
ம்க்கும் ஒரு பேச்சுக்கு சொன்னேன், ரெண்டு பேச்சுக்கு சொன்னேன்ற கதைலாம் இங்கிட்டு நடக்காது. வெற்றி கொடி கட்டு படத்துல பார்த்தீபன் ஜஸ்ட் லைக் தட்டுன்னு சொல்லிட்டு போன விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோட், துபாய்ன்ற அட்ரசையே நம்மாளுங்க கண்டுப்பிடுச்சிருக்காங்க . இந்த படத்தை பாருங்க...
அடப்பாவிகளா! இனி சும்மானாச்சுக்கும் கூட எதும் சொல்ல முடியாது போலிருக்கே. சும்மா ஒப்புக்குலாம் சொல்லக்கூடாது. சொன்னா சொன்ன சொல்லை காப்பத்தனும் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் போல.
அவர் என்ன பண்ணாரு?!
கரகாட்டக்காரன் படத்துல ஊரு விட்டு ஊரு வந்துன்னு ஒரு பாட்டு வரும். ராமராஜனை கிண்டல் செஞ்சு கவுண்டமணி பாடுற மாதிரியும், அவருக்கு ராமராஜன் மாதிரி சொல்லுற மாதிரியும் வரும் பாட்டு இது. கவுண்டமணிக்காக பாட மலேசியா வாசுதேவனை செலக்ட் பண்ணியாச்சு. ராமராஜனுக்காக குரல் கொடுக்க எஸ்.பி.பி, மனோன்னு எத்தனை பேரை யோசிச்சாலும் ஜோடிக்குரலா செட்டாகல. அதனால, ஒரு பேச்சுக்கு கங்கை அமரன்கிட்ட , மலேசியா வாசுதேவன்க சொன்னாராம்... ஏய்யா பேசாம நானே ரெண்டு குரல்லயும் பாடிர்றேனே! பேமெண்ட் அதிகமா கிடைக்கும்ன்னு கிண்டலடிக்க, உன்னால முடியுமான்னு பேசி ரெண்டு விதமா மலேசியா வாசுதேவன் பாடி பட்டி தொட்டிலாம் ஒலிச்ச பாட்டுதான் ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் செய்யாதீகன்ற பாட்டு....
தெரிஞ்சுக்கிட்டேன்... நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு பார்ப்போம்.. மாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்?! நீ யோசிச்சிக்கிட்டே இரு. நான் மொபைல் என்னாச்சுன்னு பார்க்குறேன்..
தமிழ்மணம் ஓட்டு பட்டை தெரியாதவங்களுக்காக.....
நன்றியுடன்,
ராஜி.
இதை எங்களது கல்லூரி மக்கா அனுப்பி இருந்தாக ஏதோ நம்ப ஆளுக தான் அங்கன போய் இதை கண்டுபிடிச்சு அனுப்புனாகன்னு பார்த்த யாரோ எழுதிய கவிதையா இது
ReplyDeleteநான் ட்விட்டர்ல பார்த்தேன்ப்பா.
Deleteகதம்பம் ரசிக்க வைத்தது
ReplyDeleteஅரபியில் எழுதியுள்ள போர்டுக்கும், ஆங்கில மாற்றத்திற்கும் தொடர்பில்லை விவேகானந்தர் மட்டுமில்லை துபாய் என்ற வார்த்தையே போர்டில் எழுதப்படவில்லை
இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் காமெடிக்காக... - கில்லர்ஜி
த.ம.2
அப்படியா?! நான் உண்மைன்னு நினைச்சுக்கிட்டேன்ண்ணே.
Deleteஎனக்கு கூட அந்த சந்தேகம் இருந்தது - ஏன் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று..?
ReplyDeleteஇன்று சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
டுபாய் மெயின் ரோடு - ஹா ஹா
- மாடி இல்லைன்னா படிகள் எப்படி வரும்? :) :) ( பரிசு எனக்கே )
பரிசு உங்களுக்கே. ஏன்னா விடை சரிதான்.
Deleteகலவையான அவியல் நன்று...
ReplyDeleteகருத்துக்கு நன்றிண்ணே.
Deleteபதிவுகள் அனைத்தும் தீபத்தின் ஒளி போல பளீச் பாராட்டுகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவெளிச்சம்
ReplyDeleteநன்றி சகோ
Deleteதகவல் களஞ்சியம்.
ReplyDeleteதம +1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
DeleteThagaval arumai, nagai suvai romba arumai, vaalthukal
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவிளக்கிலிருந்து மலேசியா வரை அனைத்தும் நல்ல தகவல்கள்..
ReplyDeleteதுளசி, கீதா
நிரம்ப தகவல்கள் அறிய முடிந்தது ராஜி.இப்போதெல்லாம் தண்னீரில் விழுந்தாலும் ஸ்விம் செய்யும் போன் வந்து விட்டதே!
ReplyDelete