Tuesday, June 27, 2017

எலேய்! நீ நல்லவனா?! கெட்டவனா?! - கிச்சன் கார்னர்.

எனக்கு ஈரல்லன்னா ரொம்ப பிடிக்கும்.  சின்ன வயசுல அம்மா சமைச்சுக்கொடுக்குறதுக்கு முந்தியே   கம்பில நுழைச்சு  உப்பு தேய்ச்சு நெருப்புல சுட்டு சாப்பிடுவேன். வளர்ந்தப்புறம் குழம்புல ஊறிய காரசாரமான் ஈரல் ருசிக்கு பழக்கப்பட்டதால ஈரலை சுட்டு சாப்பிடுறதில்லை. கொஞ்ச நாளைக்கு முந்தி ஈரல் சாப்பிடுறது நல்லதில்ல. எல்லா கிருமியும் அதுலதான் போய் உக்காரும். அந்த கிருமிகளால நமக்கு எதாவது வியாதி வரும்ன்னு சொன்னதிலிருந்து ஈரலை சாப்பிடுறதை விட்டுட்டேன். 

சின்னவளுக்கு டைஃபாய்ட் வந்து ரொம்ப கஷ்டப்பட்டா.  அப்ப அவ ரத்தத்துல  வெள்ளை அணுக்களும், ஹீமோக்குளோபினும் கம்மியா இருக்கும்ன்னு சொல்லி சாப்பிட சொன்ன லிஸ்ட்ல இந்த ஈரலும் இருக்கு. அவ எப்பயுமே ஈரல் சாப்பிடமாட்டா. இதுல என் நண்பர் சொன்னாங்கன்னு சொல்லி நான் சாப்பிடாததையே சொல்லி சொல்லி சாப்பிடாம டபாய்க்குறா. இதுக்கு பேருதான் வாயக்கொடுத்து வாங்கிக்கட்டிக்குறதுன்னு...

முன்னலாம் கிராமங்களில் ஆட்டை வெட்டி கறியாக்கும்போது எடை போடுறதைவிட கூறுபோடுவதுதான் அதிகம். அப்ப எல்லாருக்கும் ஒரு துண்டு ஈரல் வரும். இப்ப கடையில போய் எடைபோட்டு வாங்கி வருவதால நோ ஈரல். ஆட்டு ஈரல் விலை அதிகம். ஒரு ஆட்டோட முழு ஈரல் 160ரூபாய்.  ஆனா கோழி ஈரல் விலை குறைச்சல். 

ஆட்டு ஈரல்ல இருக்கும் சத்துகள்...
உயிர் சத்துக்க்களை சேமித்து வைத்து தேவையானபோது கொடுக்குறதுல ஈரலோட பங்கு முக்கியம். இதுல வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி2,பி3,பி5,   தாமிரம்,  செலினியம், துத்தநாகம், புரோட்டீன், இரும்பு சத்து ட்ரிப்டோபேன் கொலைன், ஃபொடேட், இரும்பு சத்துக்கள்ன்னும், போலிக் அமிலமும்கூட இதுல இருக்கு. ரத்த சோகையால பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆட்டு ஈரல் நல்ல பலனை கொடுக்கும். வைட்டமின் ஏ அதிகமா இருக்குறதால ஊட்டச்சத்து குறைவா இருக்கும் கர்ப்பிணிகள் எடுத்துக்கலாம்.  இதுல அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும் இதை மட்டும் கவனத்துல வச்சுக்கனும் சகோஸ்.


 ஈரல் தொக்கு செய்முறை...’’

ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல்,
வெங்காயம்,
தக்காளி,
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
பட்டை
லவங்கம்,
அன்னாசிபூ
எண்ணெய்,
உப்பு,
மிளகாய்ப்பொடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா..


வாணலில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, பட்டை, லவங்கம், அன்னாசி பூ போட்டு பொறிய விடுங்க. ஈரல்ல கொழுப்பு சத்து அதிகம்ங்குறதால எண்ணெயை கொஞ்சமா சேர்த்துக்கனும். 

கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துடும்..
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேருங்க.... 
அடுத்து தக்காளி சேர்த்து நல்லா மசிய வேகவிடுங்க.... 


அடுத்து கழுவி சுத்தம் செஞ்ச ஈரலை சேர்த்துக்கோங்க... 

ஈரல் நல்லா வதங்கினதும் மிளகாய்ப்பொடி போட்டுக்கோங்க....
அடுத்து மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க... 


கொஞ்சமா தண்ணி சேர்த்து ஈரல் நல்லா வேக விடுங்க... ரொம்ப நேரம் வெந்தா ஈரல் ரப்பர் மாதிரி ஆகிடும் . அதனால கவனமா கொஞ்சமா தண்ணி சேருங்க. 

ஈரல் வெந்து சுருண்டு வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போட்டு கிளறி இறக்கிடுங்க.... 


ஆட்டு ஈரல் ரெடி.... அதிகமா கொலஸ்ட்ரால் இருக்குறதால கொஞ்சம் மிளகு, சோம்பு, பட்டை, கிராம்புன்னு வறுத்து கொரகொரப்பா பொடி செஞ்சு பூண்டு நாலு பல்லை ஒன்னிரண்டா தட்டி சேர்த்து காரசாரமா சாப்பிடுங்க. என் பொண்ணு காரம் சேர்த்துக்கக்கூடாதுங்குறதால நான் இதுலாம் போடல. 

தமிழ்மணம் ஓட்டு பட்டை லிங்க்..

நன்றியுடன்,
ராஜி.

14 comments:

 1. எல்லாம் சரி ரசித்தேன் சின்ன டவுட்டு
  ஆட்டு ஈரலில் ''துத்தநாகம்'' இருக்கா ? ஆச்சர்யமாக இருக்கு.
  த.ம.2

  ReplyDelete
 2. வணக்கம்
  செய்முறை விளக்கத்துடன் அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 3. எனக்கு ஈரல் பிடிக்காது. ஆனால் ஆட்டுக்கறி பிடிக்கும் (இதென்னடா புதுசா இருக்கு )...எங்கள் ஊர் பக்கமெல்லாம் ஆட்டுக்கறி வாங்கி வரும்போது அதில் ஈரல் இல்லையென்றால் ....கறி விற்பவரிடம் சண்டையே நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இங்கெல்லாம் சண்டைப்போட்டா நம்ம ஈரல் கடையில் தொங்கும்

   Delete
 4. அசைவச் சமையலும் ராஜிக்கு அத்துபடியோ!?

  ReplyDelete
  Replies
  1. பறக்குறது, ஊர்வது, நீந்துவது, ஓடுறது ஓடுறது போடுறதுன்னு எல்லாமே அத்துபடிப்பா. சாப்பிட மட்டும்.

   Delete
 5. #எல்லா கிருமியும் அதுலதான் போய் உக்காரும்#
  சமைக்கும் போது எல்லாம் போயிடாதா :)

  ReplyDelete
  Replies
  1. சொன்னது நண்பனா இருந்தா கண்ணை மூடி நம்பிடனுமண்ணே. நான் அப்பிடித்தான்.

   Delete