Thursday, June 29, 2017

பழசு ஆனா புதுசு - கைவண்ணம்.

புடவைக்கு மேட்சிங்கா இருக்க மெட்டல் வளையலை பல கலர்ல டிசன்ல வாங்குவோம். கொஞ்சம் நாள் போச்சுன்னா கலர் மாறிடும்.. வளைஞ்சிடும்... ஒன்னிரண்டு தொலைஞ்சு போய் செட்டு சேராம சிலது தனியா இருக்கும். கொஞ்சம் நாள் வச்சிருந்திட்டு தூக்கி போட்டுடுவோம். முன்னலாம் இந்த வளையல்களை பழைய பேப்பர் பொருள் வாங்குறவங்க வாங்கிப்பாங்க. இப்பலாம் வாங்குறதில்ல. அதனால நிறைய குப்பைக்குதான் போகும். அந்த மாதிரி இல்லாம இப்ப புது வளையல் பிரேஸ்லேட் கம்மல் வீட்டு அலங்காரப்பொருட்கள்ன்னு உருமாறுது.. பார்க்க அழகாவும் இருக்கு. அடிக்கடி புதுசு போடுற மாதிரியும் நாமளே நம்ம விருப்பத்துக்கேத்தமாதிர்இ செஞ்சு போட்டுக்கலாம். அதுமட்டுமல்லாம மனசுக்கு இதமான பொழுதுபோக்கு.. கூடவே வருமானம்ன்னு ஒரே கல்லுல பல மாங்காய்... 


 என்னோட பழைய வளையல்ல பட்டு நூல் சுத்தி......

 ரெண்டு பிளாஸ்டிக் மணிலயும் நூல் கோர்த்து....


 வளையல்ல கோல்ட் முத்து ஒட்டி......


 பிளாஸ்டிக் மணில நூல் கோர்த்து கல் முத்துன்னு இஷ்டம்போல அலங்காரம் செஞ்சு....
 வளையல் நுனில க்ளூ போட்டு ஒட்டி......


 ரெண்டு நுனிலயும் முத்துக்களை ஒட்டிக்கனும்....

அழகான சிம்பிளான பிரேஸ்லெட் ரெடி...

க்வில்லிங்க் பேப்பர்ல திலகம் மாதிரி செஞ்சுக்க்கனும்...

நூல் சுத்திக்கனும்... 


விருப்பப்படி அலங்கரிச்சுக்கனும்....

வெயிட்லெஸ் கம்மல் ரெடி.....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்
 ராஜி. 

14 comments:

  1. ரொம்ப அழகா இருக்கு ராஜி அனைத்துமே...செம டேலன்ட். நோ வேஸ்ட்!! இல்லையா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னை தவிர எங்க வீட்டுல எதும் வேஸ்ட் இல்லீங்க கீதா.

      Delete
    2. என்னை தவிர எங்க வீட்டுல எதும் வேஸ்ட் இல்லீங்க கீதா.

      Delete
  2. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
    த.ம.+1

    ReplyDelete
  3. திறமைக்கும் பொறுமைக்கும் பாராட்டுக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் உங்க சகோதரியை மெச்சிக்கனும்...

      Delete
  4. இந்த ரீ மிக்சும் அழகுதான் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கண்ணே

      Delete
  5. பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  6. வளையலை வளைத்தால்...கம்மலா? திறமைக்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் சின்ன சைஸ் வளையலை கொஞ்சமா கட் செஞ்சு ஒட்டினா கம்மல் ரெடிங்க சகோ

      Delete
  7. அனைத்தும் அழகு...வளர்க உங்கள் கலை நயம்...

    கியில்லிங் பேப்பர் மேல் சில்க் thread வச்சு செஞ்சது சூப்பர் ஐடியா...அருமையாய் இருக்கு..

    ReplyDelete