Tuesday, June 20, 2017

ஆத்தாடி! இம்புட்டு நல்லவிகளா நீங்க?! - கிச்சன் கார்னர்வெள்ளரி இனத்தை சார்ந்த படர்கொடியாகும் இந்த பீர்க்கங்காய். இது மிக வெப்பமான பகுதிகளில் வளரக்கூடிய தன்மை கொண்டதாகும்.. பூ, இலை, காய்லாம் சமையலுக்கு உதவுது. இதோட நார் உடல் தேய்த்து குளிக்கவும், கைவினைப்பொருட்கள் செய்யவும் உதவுது. ஆசியா, ஆப்பிரிக்காவில் அதிகளவு விளையுது.  Ribbed gourdன்னு ஆங்கிலத்துலயும், கடுகோஷ்டகி, திக்த கோஷ்டகி, ஷிரேபல்லி, ஜிங்கதோரீ, தோனா, பீர்க்கை, பீர்க்கங்காய்ன்னு இந்தியா முழுக்க பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுது. 

ஆந்திராவில் பீர்க்கங்காயில் அரைக்குற  காரசார துவையல், கேரளாவில் பருப்பும் பீர்க்கங்காயும் சேர்த்துச் செய்யுற கூட்டு, கர்நாடகாவில் பீர்க்கங்காய் பஜ்ஜி, மகாராஷ்டிராவில் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்த்துச் செய்கிற பீர்க்கங்காய் ஃப்ரைன்னு இந்தியா முழுக்க மட்டுமில்ல வியட்நாமில் சூப்பிலும், சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஸ்பெயின்லயும்கூட தினசரி சமையலில் பீர்க்கங்காயின் ஆதிக்கம் அதிகம். 

பீர்க்கங்காயில் உள்ள சத்துகள்.... 
உடல் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான வைட்டமின் சி, துத்தநாகம்,  இரும்பு, ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. செல்லுலோஸ் , நீர்ச்சத்து, பெப்டைட், ஆல்கலாயிட் ஆகிய இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுது. அதிகளவு பீட்டாகரோட்டின் இருக்கு. இத்தனை நல்ல சத்துகள் இருந்தாலும் குறைந்தளவு கலோரியை கொண்டுள்ளது. பீர்க்கங்காயின் பயன்பாடு..
மலசிக்கலை போக்குது, மூலநோயை முற்றாக நீக்குது. ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. பார்வைக்கோளாறுகளை நீக்கி பார்வைத்திறனை அதிகரிக்க செய்யுது.  ரத்தத்தை சுத்திகரிக்க பீர்க்கங்காய் உதவுறதால கல்லீரலின் ஆரோக்கியம் காக்கப்படுது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலை சரிசெய்ய பீர்க்கங்காய் பெரிதும் உதவுது.  மஞ்சள் காமாலைக்கு பீர்க்கங்காய் சாறு கொடுக்கப்படுது. இன்ஃபெக்‌ஷன் வராம தடுக்குது. எதிர்ப்பு சக்தியை அதிகளவு உண்டாக்குது...  பீர்க்கங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளன்னு இருக்கும். வயிற்றில் அமிலச்சுரப்பை தடுத்து புண்கள் வராம தடுக்குது. சிறுநீர் கழிக்கும்போது உருவாகும் எரிச்சலை கட்டுப்படுத்துது. இதில் அதிகளவு நீர்சத்தும் குறைந்தளவு கொழுப்புசத்தும் , கலோரியும் இருக்குறதால எடையை குறைக்க உதவுது. பாதங்களை பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் பித்த வெடிப்பு நீங்கி பாதம் மென்மையடையும். பீர்க்கை நார்க்கொண்டு பூச்சாடி, போட்டோ ஃப்ரேம், கீச்செயின்னு  அழகிய கைவினைப்பொருட்கள் செய்யவும் பயன்படுது. 


பீர்க்கங்காயின் சதைப்பற்றை அரைத்து காயங்களின் மேல் பற்றாக போட்டால் ரத்தக்கசிவு நிக்கும்.   பீர்க்கங்காய் துண்டுகளோடு  ரெண்டு டம்ப்ளர்  நீரூற்றி கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து காலை, மாலைன்னு குடித்து வந்தால் வயிற்று பூச்சிகள் வெளியாகும். பீர்க்கங்காய் சாறுடன் போதிய அளவு வெல்லம் அல்லது தேன் கலந்து குடித்துவர ஆஸ்துமா நோய் நீங்கும். பீர்க்கங்காயின் இலையோடு பூண்டு சேர்த்து பற்றாய் போட்டுவர தொழுநோய் புண் ஆறும். பீர்க்கங்காய் துண்டுகளை வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சோறு வடித்த தண்ணியோடு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்துவர இளநரை சரியாவதோடு தலைமுடி பளப்பளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். பீர்க்கைக்கொடியின் வேரை காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என நீரில் கலக்கி குடித்தால்  சிறுநீரகக்கல் கரைஞ்சு வெளியேறும். பீர்க்கை இலையினை அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட சீதப்பேதியும், வயிற்றுக்கடுப்பும் நீங்கும். இலையின் சாறை நாள்பட்ட புண்ணில் பூசிவர குணமாகும்வெளிச்சத்தின் கீழ் இருட்டு இருக்குற மாதிரி அதிகளவு நன்மைகள் கொண்ட பீர்க்கங்காய் பித்தத்தையும், சீதளத்தையும் உண்டாக்கி, வாத கபத்தை தாறுமாறாய் எகிறும். அதனால, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்டா போதும். இட்லி தோசைக்கு சாம்பார், கூட்டு, துவையல், சாதத்துக்கான சாம்பார்ன்னு விதம் விதமாய் செய்யலாம்.. 

இனி பீர்க்கங்காய் கூட்டு செய்யும் முறை...
பீர்க்கங்காய்,
பாசிப்பயறு,
கடலைப்பருப்பு,
வெங்காயம்,
தக்காளி,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
மிளகாய் தூள்,
உப்பு,
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை கொத்தமல்லி.. 
தேங்காய் துருவல். 


பீர்க்கங்காயை தோல் நீக்கி கழுவி சின்ன சின்ன துண்டுகளாக்கி வச்சுக்கோங்க..  பீர்க்கங்காய் தோலை தூக்கி போட்டுடதீங்க.. அதை வச்சு துவையல் செய்யலாம்..  கடலைப்பருப்பு பாசிப்பருப்பை வேக வச்சுக்கோங்க. 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்க....

 நசுக்கின பூண்டு சேருங்க... 

 .
  
காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க விடுங்க....

பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்குங்க....

வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து நல்லா வேகவிடுங்க...

பீர்க்கங்காய் துண்டு சேர்த்து வதக்குங்க... 

மிளகாய் தூள் சேர்க்கனும்... 

மஞ்சப்பொடி சேர்த்து வதக்குங்க..... 

உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணி சேர்த்து வேகவிடுங்க....

காய் நல்லா வெந்ததும், வேக வெச்ச பருப்பு சேர்த்து தண்ணி சுண்டுற வரை கொதிக்க விடுங்க.

கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்தால் சுவையான கூட்டு ரெடி.என் அம்மா லேசா கரம் மசாலா தூள் சேர்ப்பாங்க. பசங்களுக்கு அந்த காம்பினேசன் பிடிக்காததால நான் சேர்க்கலை. தேவைப்பட்டா சேர்த்துக்கோங்க. 


சூடான சாதத்துல நெய் விட்டு இந்த கூட்டு சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டா செமயா இருக்கும். அடிக்கடி பீர்க்கங்காய் சேர்த்துக்கிட்டா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இங்க இருக்கு...

நன்றியுடன்,
ராஜி

21 comments:

 1. வணக்கம்

  செய்முறை விளக்கத்துடன் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.வீட்டிலும் செய்து சாப்பிடுகிறோம் த.ம2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
 2. ஊரில் எங்கள் வளவில் பீர்க்கங்காய் இருந்தது. அதன் காய்ந்த காயை 'நெத்து' என்போம். அந்த நெத்தினால் குளிக்கும் போது தேய்த்துக் குளிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலயும் அதான் பயன்படுத்துறோம் சகோ. பிளாஸ்டிக் நாரை பயன்படுத்துறதில்லைங்க சகோ

   Delete
  2. மீ டூ அந்த நார்தான். முன்னாடி பல வருஷங்களுக்கு முன்னாடி ஊர்ல இருந்தப்ப தேங்காய் நாரை எங்கள் ஊர்ப் பெண்கள் பயன்படுத்துவாங்க. நான் இந்த நார் தான் இப்பவும்.. இப்ப இந்த நார் வைச்சு பல ஷேப்ல வருது.

   கீதா

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. எங்கள் வீட்டுக்கிணற்றடியில் பீர்க்கங்காய் கொடி வளர்ந்தது. பிர்க்கங்காயை பறிக்காமல் அப்படியே முற்ற விட்டால் காய்ந்து தும்பு போல் வரும்.அதை பாத்திரம் தேய்க்க அம்மா பயன் படுத்துவார். பீர்க்கங்காயில் நாங்கள் தேங்காய்ப்பால் சேர்த்த பால் கறி. சொதி. தேங்காய்ப்பூ சேர்த்து பொரியல் எனவெல்லாம் செய்வோம். காயோடு அதன் பலனுமாய் நல்ல பதிவு ராஜி .

  ReplyDelete
  Replies
  1. லேசான இனிப்பு சுவையோடு அருமையா இருக்கும்ல நிஷாக்கா. பீர்க்கங்காய் நாரில் கலைப்பொருட்களும் செய்றாங்க நிஷாக்கா.

   Delete
  2. யெஸ் நிஷா பீர்க்கங்காய் பால் கூட்டு, சொதி எல்லாம் நல்லா இருக்கும்...பொரியலும்....

   கீதா

   Delete
  3. ஆமாம். சொதி வைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், பீர்க்கைங்காயும் சேர்த்தும் வைப்பார் அம்மா. அக்காலத்தில் இதெல்லாம் தாம் எங்கள் அமிர்தமாக இருந்தது இக்காலத்தில் தேடினாலும் கிடைப்பதில்லையப்பா. அப்போ நாங்கள் இருந்த வீட்டு முற்றத்தில் நான்கைந்து முருங்கை மரம், அதில் கொடியாக படரும் படி பீர்க்கை விதைகளை அம்மா தூவி விடுவார். முற்றத்தோடு கிணற்றடியும் என்பதனால் பாத்திரங்கள் கழுவும் நீர் தான் செடிகளுக்கும் செல்லும் . எந்த வித அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் தானாகவே வளரும். புடலங்காயும் இப்படித்தான்.இன்னும் பல காய் வகைகளை நாம் இழந்து கொண்டே வருகின்றோம் அல்லவா ராஜி, கீதா.

   ராஜி இனிப்புச்சுவை பச்சைமிளகாய் சேர்ப்பதால் மட்டுப்பட்டிருக்கும், தேங்காய்ப்பால் வயிற்றுக்கும் நல்லது தான் செய்திருக்கின்றது. எங்கள் பக்கம் எல்லா சமையலுக்கும் தேங்காய்ப்பூ, தேங்காய்ப்பால் என சேர்ப்போம்பா.

   Delete
  4. நினைவுகளை கிளறிவிட்டேனா நிஷாக்கா

   Delete
 5. சிறுவயதில் பீர்க்கை நார் வைத்துத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். அதிகம் சமையலில் சேர்ப்பதில்லை. பீர்க்கையால்தான் எத்தனை பயன்கள்?

  ReplyDelete
  Replies
  1. நாட்டு மருந்து கடைகளில் இப்பயும் கிடைக்குது சகோ. கேரட், பீட்ரூட், ப்ரூக்கலி மாதிரியான இங்க்லீஷ் காய்கறிலதான் அதிக சத்துகள் இருக்குன்னு நாம நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா, நம்மூர் காய்களில்தான் அதிகம் சத்துக்கள் இருக்கு சகோ. அதை நாம உணரவே இல்ல. அதான் வேதனை.

   Delete
  2. ராஜி சுரைக்காய் கூட பல நன்மைகள் சத்துகள் கொண்ட காய். வட இந்தியாவில் சுரைக்காய் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கேன்சருக்கு மிகவும் நல்ல காய் என்று பரிந்துரைக்கப்படுகிறது...சுரைக்காய்...

   கீதா

   Delete
  3. ஆமாம்ங்க கீதா. பெரும்பாலும் நீர்ச்சத்துள்ள காய்கள் உடலுக்கு நல்லது.. பீர்க்கை, புடலை, சுரக்காய், முள்ளங்கின்னு...

   Delete
 6. எங்களது உணவில் இதுவும் முக்கிய இடம் பெறுகிறது.

  ReplyDelete
  Replies
  1. என் சின்ன பொண்ணுக்கு பிடிக்காத காய்களில் பீர்க்கங்காயும் ஒன்னு. அவளை தவிர நாங்களாம் சாப்பிடுவோம்.

   Delete
 7. பீர்க்கங்காய் எங்கள் இருவர் வீடுகளிலும் அதிகம் செய்யப்படும் காய்...

  துளசி, கீதா

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலயும்... சின்னது மட்டும் தள்ளி வெச்சிடும் இந்த காயை.. அதனால துவையலாக்கிடுவேன்

   Delete
 8. பீர்க்கங்காய் வரலாறு நன்று

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete