உண்மையா நடந்ததா?! இல்லையாங்குறதை தாண்டி மகாபாரதம் கதைகள், படிக்க, கேட்க எப்பவுமே சுவாரஸ்யமானது. மஹாபாரத கதைகளில் எதிர்பாராத திருப்பங்கள் பல உண்டு. அவையெல்லாம் ஓரளவுக்கு யூகிக்க முடியும். ஆனா, கதையின் முடிவில் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?! குரு வம்சம் என்னானதுன்ற தகவல் சொல்லப்படுவதே இல்லை. நெருப்பு திருவிழாக்களில் சொல்லப்படும் பாரத கதைகளில்கூட பாண்டவர் பட்டாபிஷேகத்தோடு கதையை முடிச்சுடுவாங்க. கிருஷ்ணர் என்ன ஆனார்?! குருகுலம், யதுகுலம் என்னானதுங்குறதை அழகா ஸ்கிப் பண்ணிட்டு போய்ட்டே இருப்பாங்க. யதுகுலத்தோட முடிவு கிருஷ்ணரோட மகனால் முடிவுக்கு வந்துச்சுன்னும்.... கிருஷ்ணர் வேடனின் அம்பு பட்டு இன்பெக்ஷனாகி இறந்தார்ன்னு பதிவில் பார்த்திருக்கோம். பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பதிவு 1, பதிவு 2ல பார்த்துட்டு சீக்கிரம் வந்துடுங்க..
இறைவனுக்கே இந்த கதி நேர்ந்துச்சுன்னா... மனிதர்களான பாண்டவர்கள் கதி என்னாச்சுன்னு தேட ஆரம்பிக்கும்ப்போது அர்ஜுனன் தன் சொந்த மகனால் கொல்லப்பட்டான்ற தகவலை கேட்க நேர்ந்தது. இது செவிவழி கதையாகும். எந்தளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.... கேட்க ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கும் அந்த செவிவழி கதையை இன்னிக்கு தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம் .
குருஷேத்திர யுத்தம் முடிந்து ஒருவழியாக மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் மெல்ல மெல்ல திரும்பினர். அஸ்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு தருமர் நாட்டை ஆண்டுவந்தான். தம்பிகளுக்கு நாட்டை பிரித்து கொடுத்து நல்லவிதமாய் நாட்டை ஆண்டு வந்தனர். இப்படியாக அமைதியாகவே சில வருடங்கள் சென்றன. இந்த சமயத்தில் தன்னுடைய வல்லமையை மற்ற நாடுகளுக்கு தெரியப்படுத்த அஸ்வமேத யாகம் தொடங்க எண்ணினான் தருமன். யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்துக்கொண்டிருந்தது. அஸ்வமேதயாக குதிரை நாடெங்கும் வலம்வர ஏற்பாடு செய்யப்பட்டது. அர்ஜுனன் அதன் பிரதான காவலனாக தன் பரிவாரங்களுடன் பின்தொடர்ந்தான். இங்கேதான் அர்ஜுனன் தன் சொந்த மகன் பாப்புருவாகனால் கொல்லப்பட்டான். அது பற்றிய சுவாரஸ்யமான கதையை தொடர்ந்து பார்க்கலாம் .
சரி யார் இந்த பாப்புருவாகனன் என்று பார்ப்போம்..... மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்த மகன் பாப்புருவாகனன்.தனது வனவாசத்தின்போது பல இடங்களில் அலைந்து திரிந்த பாண்டவர்கள் இமயமலை பகுதிக்கு சென்றபோது அதற்கு கிழக்கே உள்ள மணிப்பூர் இராஜ்ஜியத்திற்கும் சென்றனர். அப்பொழுது மணிப்பூர் மன்னனின் மகள் சித்திராங்கதையைச் சந்தித்தான் அர்ஜுனன். அவளை மணம் செய்ய ஆசைப்பட்டு மன்னனிடம் வேண்டினான் அர்ஜூனன் அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அதனால், அவர்களை அர்ஜுனனோடு அனுப்ப முடியாது என்ற வழக்கத்துக்கு ஒப்புக்கொண்டால் திருமணம் செய்விக்க ஒப்புக்கொள்கிறோமென கூறினர். அர்ஜுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிக்கொடுத்து மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்குப் பிறந்த பாப்புருவாகனனை மன்னர் தனது வளர்ப்பு மகனாக வரித்துக் கொண்டு முடி சூட்டினார். பல வளங்களுடனும் அதிகாரத்துடனும் கூடிய அழகிய மணிப்பூர் அரசை சிறப்பாக ஆண்டு வந்தான் பாப்புருவாகனன். அர்ஜுனனுக்கும் அவனுக்கும் தொடர்பே இல்லாமல் போனது.
இப்பொழுது அஸ்வமேத யாக குதிரையின் பாதுகாவலனாக சென்ற அர்ஜுனன் தன் பரிவாரங்களுடன் செல்லும்போது ட்ரிகர்த்தா என்ற ராஜ்ஜியத்தினுள் நுழைந்த போது அந்த நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னன் அந்த குதிரையை பிடிக்க முயன்றான். அப்பொழுது அர்ஜுனன், இளவரசே! இது அஸ்தினாபுரத்தின் மன்னனான தர்மராஜாவின் அஸ்வமேத யாகக்குதிரை. இதன் பாதுகாவலன் நான். இந்த குதிரையை அவமதிப்பது அந்த தர்மரையே அவமதிப்பது போலாகும். என்னுடைய அண்ணன் என்னிடம் சொல்லியே அனுப்பினார். குருக்ஷேத்திர யுத்தத்தில் நம்மால் பல அரசர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சி இருப்பது அவர்களது வாரிசுகள்தான். ஆகையால், அவர்களுக்கு எந்தவித தீங்கும் செய்யவேண்டாம் அவர்களிடம் நட்பு பாராட்டு என கூறினார். ஆகையால், நாம் ஏன் எதிரிகளாக சண்டையிடவேண்டும்?! நாம் அமைதியாகவே சென்றுவிடலாம் என கூறினார் .
ஆனால் அர்ஜுனனின் பேச்சுக்கு ட்ரிகர்த்தா ராஜ்ஜியத்தை ஆண்டவர்கள் மறுத்துவிட்டனர். உடனே, அந்த நாட்டின் மன்னரான சூரியவர்மா அர்ஜூனன் மீது அம்பு எய்தினார். அர்ஜூனன் தன்னுடைய வில்வித்தை திறமையில் சூரியவர்மா எய்திய அம்பை முன்னேற விடாமல் நடுவில் இரண்டாக தன்னுடைய பாணங்கள் மூலம் ஒடித்தார். அர்ஜூனன் அவர்களை தடுத்தானே ஒழிய திருப்பி தாக்கவில்லை. அந்த சமயத்தில் சூரியவர்மாவின் தம்பி கேதுவர்மா அங்கே வந்தார். அவரும் அர்ஜூனன் மீது அம்புமாரி பொழிந்தார். தன்னுடைய திறமையினால் அர்ஜுனன் அந்த போர்க்களத்திலிருந்தே கேதுவர்மாவை விரட்டியடித்தான். பின் துருடாவர்மா அங்கே வந்து அர்ஜுனனுடன் போர் புரிய ஆரம்பித்தான். அவனுடைய சிறப்பான தாக்குதலை அர்ஜூனன் எளிதாக முறியடித்தார். அவனுடைய வில்வித்தை திறமையை பாராட்டினார். அவனை திருப்பி தாக்கவில்லை .தடுக்கும் கலையை மட்டுமே கையாண்டார் .
அர்ஜுனன், துருடாவர்மாவால் எய்யப்பட்ட அம்புகளை தடுப்பதும் அதை துண்டாக்குவதுமாகவே இருந்தான். ஆனால் துருடாவர்மா அம்புகளை மழையாக அர்ஜுனன்மீது பொழிந்தான். அதில் நிறைய அம்புகள் அர்ஜுனனின் உடம்பில் குத்தின. அந்த தாக்குதலில் காண்டீபம் அர்ஜுனனின் கையில் இருந்து கீழே விழுந்தது. அர்ஜுனனும் நிலைகுலைந்து கீழே விழுந்தான். உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்த அர்ஜுனன் தன்னுடைய காண்டீபத்தை எடுத்து பாணங்களை தொடுத்தான். ட்ரிகர்த்தாவின் படைகளை அழித்தான் எஞ்சி இருந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். அப்படி ஓடியவர்களை துரத்திச்சென்று அர்ஜுனன் அழிக்க முயற்சி செய்யவில்லை. ட்ரிகர்த்தாவை கைப்பற்றிய பிறகு அஸ்வமேதயாக குதிரை பிரகஜோதிஷபுரவில் ராஜ்ஜியத்தினுள் நுழைந்தது. . .
அங்குதான் அர்ஜுனனக்கு கடுமையான சவால் காத்திருந்தது. பிரகஜோதிஷ்டபுரத்தில் நடந்த போர். அப்பொழுது அந்த ராஜ்யத்தை ஆண்டவர் பகவத்காவின் மகனான வாஜரத்தா, அவர் அஸ்வமேதயாக குதிரையை கைப்பற்றி அர்ஜுனனுக்கு எதிராக போர்முரசு கொட்டினார். அர்ஜுனனுக்கு முன்னால் வாஜரத்தாவால் தாக்குப்பிடிக்க முடியாததால், அவர் போர்க்களத்தை விட்டு வெளியேறினார். வெளியேறிய சிறிது நேரத்தில் தன்னுடைய பெரிய யானை படையை திரட்டிக்கொண்டு மீண்டும் போர்க்களத்தினுள் நுழைந்தார். அதே வேகத்தில் அர்ஜுனன் மீது அம்புமாரி பொழிந்தார். இந்த யுத்தம் தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்தது வாஜரத்ரா கடுமையாக நடந்த யுத்தத்தில் அர்ஜுனனால் எய்யபட்ட அம்புகள் வாஜரத்ராவின் அம்புகளை வரும் வழியிலேயே முறியடித்தன. ஆனால் அர்ஜுனனின் அம்புகள் வாஜரத்ராவை காயப்படுத்தவோ இல்லை கொல்லும் முயற்சியிலோ எய்யப்படாமல் தடுப்பதிலேயே இருந்தன. நான்காவது நாள் வாஜரத்ரா அர்ஜுனனுக்கு சவால் விட்டார். இதில் கோபமடைந்த அர்ஜுனன். ஒரு அம்பை எய்து வாஜரத்ராவின் யானையை கொன்றார். அதனால் யானையின் மேல் இருந்த வாஜரத்ரா கீழே விழுந்தார். .
கீழேவிழுந்த வாஜரத்ராவை பார்த்து அர்ஜுனன் ஏ வாஜரத்ரா! இந்த அஸ்வமேதயாக குதிரை. அஸ்தினாபுரத்து மகாராஜா தருமனால் அனுப்பப்பட்டது. நான் அதன் பாதுகாவலனாக மட்டுமே வந்திருக்கிறேன். எனது நோக்கம் யாரையும் கொல்வததல்ல.. அவர் என்னிடம் சொல்லியே அனுப்பினார். அர்ஜுனா! யாராவது குதிரையையை தடை செய்தால்கூட அவர்களை கொல்ல முயற்சிக்கவேண்டாம் என சொல்லியே அனுப்பி இருக்கிறார். அதனால் நான் யாரையும் கொல்லவோ, காயப்படுத்தவோ விரும்பவில்லை. உன்மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. .நான் தருமரின் தூதுவனாகவே வலம் வந்துக்கொண்டிருக்கிறேன். சித்ரா பொர்ணமியில் நடக்கும் அஸ்வமேத யாகத்திற்கு உன்னையும், உன் உறவினர்களையும் அழைக்கவே வந்திருக்கிறேன் என்று கூறினார். வேறெதுவும் சொல்லமுடியாத நிலையில் வாஜரத்ரா, அர்ஜுனனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.
பின்னர் அர்ஜுனனுடைய படை சிந்து ராஜ்ஜியத்துனுள் நுழைந்தது. அஸ்வமேதயாக குதிரை சிந்து ராஜ்ஜியத்தினுள் வீறுநடையிட்டு சென்றது. மஹாபாரத யுத்தம் நடக்கும்போது, சிந்து தேசத்தினை சாய்ந்தாவா என்னும் அரசன் ஆண்டுவந்தார். அவர் குருஷேத்திர யுத்தத்தில் அவர் பாண்டவர்களால் கொல்லப்பட்டார் . அவருக்கு பின்னர் அவருடைய மகன்கள் சிந்து ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தனர். அவர்கள், அர்ஜுனன் தங்களுடைய ராஜ்ஜியத்தை நோக்கி வருவதை அறிந்து, எல்லோரும் சேர்ந்து அர்ஜுனனை எதிர்த்தனர். தன்னை எதிர்த்த சிந்து படைகளை அர்ஜுனன் கொன்று குவித்தார். எஞ்சி இருந்த படைவீரர்கள், போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டனர். ஆனாலும் சிந்து வீரர்கள் மீண்டும் படையை திரட்டி அர்ஜுனனை தாக்கினர் . தன்னை தாக்கவந்த படையினர் அனைவருக்கும் தருமரின் வேள்விக்கான அழைப்பை எடுத்து கூறினான். ஆனால் அதை அங்கு எவரும் செவிமடுக்கவில்லை. தங்கள் மன்னனை கொன்ற பாண்டவர்களை அவர்கள் நட்புடன் பார்க்கவில்லை. அர்ஜுனனை தாங்கும் எண்ணத்தோடு மட்டுமே இருந்தனர். வேறு வழியில்லாமல் அர்ஜுனன் அவர்களை கொன்று குவித்தான்.
இந்த சமயத்திலதான் ஒரு எதிர்பாராத திருப்பம் வந்தது. யுத்தம் நடந்த போர்களத்துக்குள் துச்சலை வந்தாள். அவளைக்கண்ட அர்ஜுனன் அம்பெய்வதை விட்டு தேரிலிருந்து இறங்கி ஓடிவந்தான். யார் இந்த துச்சலைன்னு பார்த்தோம்னா திருதராஷ்டிரன் காந்தாரி தம்பதிகளுக்குப் பிறந்த ஒரே பெண்குழந்தையும், துரியோதனின் ஒரே சகோதரியுமானவள்தான் இந்த துச்சலை. பாண்டவர்களுக்கும் இவர்தான் சகோதரி முறையாவார். பாண்டவர்கள், துச்சலை மீது நல்ல பாசம் கொண்டிருந்தனர். சிந்து தேசத்தின் மன்னன் ஜயத்ரதன் என்பனைதான் துச்சலை மணம் முடித்திருந்தாள். இவளுடைய கணவன் பாரதப் போரில் அருஜுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். அர்ஜுனன், துச்சலையை கண்டவுடன் பாசத்துடன் ஓடிவந்து சகோதரி எப்படி இருக்கிறாய்?! என நலம் விசாரித்து உன் மகன் எங்கே வரவில்லையா?! என கேட்டான். அண்ணா! உன்கைகளால் பாரதப்போரில் அவனது தந்தை கொல்லப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்தான். நீங்கள் இங்கு வந்து போர் புரிவதை கேள்விப்பட்டு துக்கத்திலிருந்து நெஞ்சடைத்து மரணமடைந்து விட்டான். இவன்தான் என் ஒரே பேரன். இந்த நாட்டுக்கு இவனை தவிர வேறு வாரிசு இல்லை என அர்ஜுனனிடம் கூறியதோடு, அண்ணா! ,இவன் என் பேரக்குழந்தை .இவனை விட்டுவிடுங்கள் என அர்ஜுனனிடம் வேண்டுகோள் வைத்தாள்.
துச்சலையின் மகனுடைய மரணத்திற்கு அர்ஜுனன் வருத்தப்பட்டான். பின்னர் துச்சலை அர்ஜுனனிடம் அண்ணா! கௌரவர்கள் உங்களால் சொல்லப்படாத பல துயரங்களை சந்தித்து, இறுதியில் போரில் அனைவரும் மாண்டுவிட்டனர். அவர்களுக்கு துணைப்புரிந்த என் கணவரும் அந்த போரில் உன்னால் கொல்லப்பட்டார். என்னுடைய மகனும் உன் வரவை கேட்டதும் அதிர்ச்சியடைந்து இறந்துவிட்டான். எஞ்சி இருப்பது என் பேரக்குழந்தை மட்டுமே. இவன் மட்டுமே! இந்த நாட்டை ஆள எஞ்சி இருக்கும் ஒரே வாரிசு இவனை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என அர்ஜுனனிடம் கூறினாள்.
இதைக்கேட்ட அர்ஜுனன் மிகுந்த மனவருத்தம் அடைந்தான். சகோதரியே! கவலைப்படாதே. உன்னுடைய சகோதரர்கள் அனைவரும் எங்களுக்கு பெரும் அநீதி இழைத்தனர். உன் கணவன் அதற்கு துணைப்போனான். அவர்கள் அனைவரும் தீயவர்கள். இருந்தாலும் போரில் இறந்தது நம்முடைய சொந்த சகோதரர்களும், உறவினர்களும் எங்கள் ஆசான்களும்தான். எங்களுக்கும் அதனால் மிகுந்த மனவேதனை உண்டு சகோதரி. என்னால் உன்னுடைய பேரனுக்கு எந்த தீங்கும் வராது என அர்ஜுனன் துச்சலையிடம் உறுதியளித்து போர்புரிவதை நிறுத்தி அவ்விடம் இருந்து அகன்றான். துச்சலையும் அங்கிருந்து சென்றுவிட்டாள். பின்பு அர்ஜுனன், அஸ்வமேத யாக குதிரையும் அந்த ராஜ்யத்தில் தங்கு தடையின்றி சென்றது. அர்ஜுனனும் அதை பின்தொடர்ந்து சென்றான். அங்கிருந்து மணிப்புரி ராஜ்ஜியத்தினுள் நுழைந்தது. இங்குதான் அர்ஜுனனின் மரணமும் அவனுக்காக காத்து இருந்தது .
அது என்னவென்று அடுத்தவார பதிவில் பார்க்கலாம்.....
.
நன்றியுடன்,
ராஜி
உண்மையா நடந்ததா?! இல்லையாங்குறதை தாண்டி மகாபாரதம் கதைகள், படிக்க, கேட்க எப்பவுமே சுவாரஸ்யமானது//
ReplyDeleteசுவாரஸ்யம்தான். தொடரட்டும். தொடர்வேன்.
படங்களும் மனதைக் கவர்கின்றன.
Deleteதொடர்ந்து பதிவுகளை படியுங்கள் இன்னமும் சுவாரஸ்யம் தொடரும் ...
Deleteபடங்கள் எல்லாம் பழைய நூற்றாண்டு ஓவியங்களில் இருந்து ,தேடி தேடி எடுத்தவை ,உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Deleteஇது வரை தெரியாது.நன்றி
ReplyDeleteஇதுபத்தி நிறைய மேற்கொள்கள் தேடினேன் ,ஆனால் ஒன்றுக்கொன்று புனைய போட்டதுபோல் ,அவரவருக்கு சாதகமாகவே எழுதியது போல் இருக்கிறது .
Deleteஇது வரை தெரியாது.நன்றி
ReplyDeleteஇனியும் நிறைய வரும் ..தொடர்ந்து ..இணைப்பில் இருங்கள்...
Deleteதெரியாத தகவலை பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்
ReplyDeleteபொதுவாக இந்த விஷயங்களஎல்லாமே சமஸ்கிருதத்தில் தெளிவாக உள்ளது .மொழிபெயர்த்த சிலரின் இடை சொருகல்களால் எல்லாமே தலைகீழாக மாறி போய்விட்டது .அர்ஜுனனை ,நல்லவன் என்றும் துரியோதனனை கெட்டவன் என்றும் சொல்லும் ,இவர்கள் ,ஒன்றை கவனிக்கவேண்டும் .அர்ஜுனனின் வாழ்க்கையில் ஊருக்கு ஒரு பெண் கட்டினான். மேலும் அவர்கள் போரில்.வெல்வதற்காக அவர்கள் பயன்படுத்திய குறுக்குவழிகளும் ஏராளம் ,ஆனால் துரியோதனன் கடைசிவரை ,ஏகாபத்தினி விரதனாக ,பிறன்மனை நோக்கத்தவனாகத்தான் ,இருந்திருக்கிறான் ,என்று குறிப்புகள் சொல்கின்றன .ஆனால் உண்மையான காரணம் என்பது எது என மறைக்கப்பட்டுவிட்டதாகவே நான் கருதுகிறேன் .உண்மையில் என்ன நடந்தது என அந்த காலகட்டங்களில் வாழ்ந்தவர்காளுக்கு மட்டுமே தெரியும் .
DeleteThis comment has been removed by the author.
Deleteபப்புருவாகனின் இன்னுமோர் பெயர் புலேந்திரன் என்றும் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். பீஷ்மரைக் கொன்றதால் அஷ்டவசுக்களைச் சார்ந்த ஏனைய எழுவரும் அருச்சுனனும் அவன் மகனால் கொல்லப்படவேண்டும் என்று சாபமிட்டார்கள். அதன்படி பப்புருவாகனால் அருச்சுனன் கொல்லப்பட்டுப் பின் நாககன்னிகை மூலம் உயிர்த்தெழுகிறான்
Deletehttp://chummaah.blogspot.com/2010/06/blog-post_28.html
பொதுவாக இந்த விஷயங்களஎல்லாமே சமஸ்கிருதத்தில் தெளிவாக உள்ளது .மொழிபெயர்த்த சிலரின் இடை சொருகல்களால் எல்லாமே தலைகீழாக மாறி போய்விட்டது .அர்ஜுனனை ,நல்லவன் என்றும் துரியோதனனை கெட்டவன் என்றும் சொல்லும் ,இவர்கள் ,ஒன்றை கவனிக்கவேண்டும் .அர்ஜுனனின் வாழ்க்கையில் ஊருக்கு ஒரு பெண் கட்டினான். மேலும் அவர்கள் போரில்.வெல்வதற்காக அவர்கள் பயன்படுத்திய குறுக்குவழிகளும் ஏராளம் ,ஆனால் துரியோதனன் கடைசிவரை ,ஏகாபத்தினி விரதனாக ,பிறன்மனை நோக்கத்தவனாகத்தான் ,இருந்திருக்கிறான் ,என்று குறிப்புகள் சொல்கின்றன .ஆனால் உண்மையான காரணம் என்பது எது என மறைக்கப்பட்டுவிட்டதாகவே நான் கருதுகிறேன் .உண்மையில் என்ன நடந்தது என அந்த காலகட்டங்களில் வாழ்ந்தவர்காளுக்கு மட்டுமே தெரியும் .// மிகச் சரியாகச் சொன்னீர்கள். ராஜி. இதுதான் எங்கள் கருத்தும்!!!
Deleteதுளசி, கீதா
அசுர உழைப்பு உங்களது! தொடர்கிறேன்.
ReplyDeleteநிறைய மேற்கொள் தேடவேண்டியதாக இருந்தது .ஆனால் ஒன்றுக்கொன்று ,முரண்பட்டவையாகத்தான் இருந்தன .ஆனால் சமஸ்கிருதத்தில் ஓரளவு தெளிவாகவே ,இருந்தது .
Deleteதகுந்த காலம் வந்ததும் பாண்டவர்கள் ஐவரும் தருமன் முன்செல்ல வைகுண்டம் நோக்கி சென்றார்கள் என்றுதான் படித்திருக்கிறேன். ஒவ்வொருவராக மரணமடைந்து விழுந்து கொண்டே வருவார்கள். அர்ஜுனனும் அங்குதான் மரணமடைவான். தருமர் பாஞ்சாலி குறித்து இந்த இடத்தில் ஒருவார்த்தை சொல்வார். பாஞ்சாலி மிகுந்த அன்புகொண்டிருந்தவன் அவரிடம்தான் என்று சொல்வார்.
ReplyDeleteஇந்தக் கதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
தம +1
அதுவும் ,ஒருசாரார் சொல்லும் கதை ,அதுபற்றியும் நாம் இங்கே பார்க்கப்போகிறோம் .
Deleteகடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// எவ்வளவு நிகழ்வுகள், சூழல்கள்? அவிழ்க்கமுடியாத முடிச்சுகள் போல.. அருமையான ஓவியங்களைக் கொண்ட புகைப்படங்கள். தொடர்கிறேன்.
ReplyDeleteபெரும்பாலும் தமிழில் மொழிபெயர்த்தவர்கள்,அந்தந்த சூழலுக்கேற்ப ஏற்றியோ ,இறக்கியோ எழுதிவிட்டனர் .ஆனால் ,சமஸ்கிருதத்தில் தெளிவாக உள்ளது.சகோ, வலசு - வேலணை மேற்கோள் காட்டியது போல ,பப்புருவாகனின் இன்னுமோர் பெயர் புலேந்திரன் என்றும் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன், என்றாலும் ,அப்பொழுது மணிப்பூர் ராஜ்யம் பாண்டியநாட்டிக்கு தெற்கு பக்கம் இருந்ததா , என்றுதானே அர்த்தம் ஆகிவிடும் .எல்லாமே முரண்பட்ட தொகுப்புகளாக இருக்கிறது .அதனால்தான் ,இதை ஒரு ஆராய்ச்சி கட்டுரை போலவே ,பல்வேறு கருத்துக்களின் தொகுப்புகளாகவே எழுதி இருக்கிறேன் .உண்மை என்னவென்று ,அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு ,அந்த கடவுளுக்கும் மட்டுமே தெரியும் ,இங்கே நாம் எழுதுவது எல்லாமே ஒரு அனுமானம் தான் .
Deleteஅசுவமேத யாகம் குறித்த சிந்தனைகளை தூண்டியிருக்கிறது
ReplyDeleteஅஸ்வமேத யாகம் குறித்தும் நிறைய முரண்பாடுகள் ,இருக்கின்றன .அதையும் ஒரு பதிவில் பார்க்கலாம் ....
Deleteநிறைய புதிய கோணங்கள் அறிந்துகொண்டோம்...
ReplyDeleteதுளசி, கீதா
இன்னமும் நிறைய புதிய கோணத்தில் அலசுவோம் சகோ ...
Deleteபகவத்காவின் மகனான வாஜரத்தா
ReplyDeleteShould this be BhaGa Dhatta and VaJra Dhatta