மாமா சாப்பிட வாங்க.
இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?!
எதிர்வீட்டு பாய் வீட்டுல இருந்து பிரியாணி கொடுத்து அனுப்பி இருக்காங்க. அதான் இன்னிக்கு ஸ்பெஷல். என்னதான் நம்ம வீட்டுல பிரியாணி செஞ்சாலும் பாய்மாருங்க செய்யுற பிரியாணி மாதிரி ஆகுமா?!
ம்ம்ம்ம்ம் ரம்ஜான் பிரியாணி ஓகே. ரம்ஜான் பண்டிகைன்னா என்னன்னு தெரியுமா?!
நமக்குலாம் பிரியாணி தரும் டே..
ஏய் எடக்கு மடக்கா பேசினே ... செவுளு பிஞ்சிரும்...
ம்க்கும் நான் ஜோக்கடிக்கடிக்கக்கூடாது. நாம வினாயகர் பொறந்த நாளை வினாயகர் சதுர்த்தி, முருகர் பொறந்த நாளை வைகாசி விசாகம், ஏசு பொறந்த நாளை கிறிஸ்துமஸ்ங்குற மாதிரி எதாவது முஸ்லீம் சாமி பொறந்த நாளை ரம்ஜான்ன்னு கொண்டாடுவாங்க.
ஒருவிசயம் தெரியலைன்னா தெரியலைன்னு ஒத்துக்கோ. அதைவிட்டு ஜல்லியடிக்காத. ஏழைகளின் பசிக்கொடுமையை உணர இந்நோன்பு உதவுது. ஏழைகளின் வறுமையை உணர்ந்து அவர்களுக்கு எல்லாவகை உதவிகளையும் செய்யுறதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கம். ரம்ஜான் பண்டிகைக்கு ஈகை பெருநாள்ன்னும் ஈகை திருநாள்ன்னும் செந்தமிழில் அழைக்கப்படுது.
முஸ்லீமா பொறந்த ஒவ்வொருத்தருக்கும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது என மொத்தம் அஞ்சு கடமை இருக்கு. இறைவன் ஒருவனே. முகம்மது நபி அவரது தூதர்ன்னு நம்பனும். அதுக்கப்புறம் தினம் ஐந்து வேளை தொழுகை, ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கனும். ஏழைகளின் துயர் உணர ஜகாத் என்ற கொடை, ஹஜ்ன்ற புனித பயணம்ன்ற ஐந்து கடமை.
ரம்ஜான் மாதத்துல இருக்கும் நோன்பானது தீமைகள் பக்கம் செல்லாமல் தடுத்து நன்மைகளின் பக்கம் நடக்க முன்னோட்டமாவும், கேடயமாவும் இருக்கும்ன்னு இஸ்லாம் மதம் சொல்லுது. ரம்ஜான் மாசத்துல 30 நாளும் நோன்பிருப்பது தார்மீக கடமையாகும். தனிமனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான். மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது. ஆனால் நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.
ஐந்து வேளை தொழுதல், குர்ஆன் படித்து, தர்மங்கள் அதிகம் செய்வது ஆகியவற்றுக்கு ரம்ஜானில் முன்னுரிமை தரப்படுகிறது. பொய், புறம் பேசுதல், ஏமாற்றுவது என அனைத்து குற்றங்களில் இருந்தும் மனிதன் தன்னை இம்மாதத்தில் தடுத்துக்கொள்கிறான். நோன்பு இருக்கிறோம் என்ற பயம் அவனை ஆட்டிப்படைக்கிறது. ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும்ங்குறதுக்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ‘சஹர்’ ன்னு சொல்லப்படுற காலை உணவில் இருந்து இந்த நோன்பு தொடங்குது. விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பாங்க.
சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி) நோன்பு தொடங்கிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு, அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ன்னு பேரு. நோன்பு வைக்க சிலப்பேருக்கு விதிவிலக்கு கொடுத்திருக்கு. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனநோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை. வயதானவரகள், குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள் (வசதி உடையோர்) நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம். மற்றவர்கள் ரம்ஜான் மாதத்துக்கு பிறகு, தங்கள் விட்ட நோன்பை, மற்ற நாட்களில் வைக்க வேண்டுமென்பது விதி.
ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி கொடுக்கிறார். அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’. இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள ஐந்து விஷயங்களில் ஒன்று. கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகைகளின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதுதான் ஜகாத். ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள் வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம். முதலில் அவங்களுக்கு கொடுக்கனும். பிறகு, பிற ஏழைகளுக்கு கொடுக்கலாம். அடுத்தது பித்ரா. பித்ரான்னா அதுவும் ஒருவிதமான தானம். ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும். பிறை பார்த்ததில் இருந்து ஈகைப்பெருநாளுக்கான தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஏழைக்கு பித்ரா கொடுத்துவிட வேண்டும். அரிசி அல்லது கோதுமையை ஒன்றரை படி அளவுக்கு கொடுக்கலாம். இல்லன்னா அதற்குரிய பணத்தை கொடுக்கலாம். ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்றால் 6 பேருக்கும் கணக்கிட்டு பித்ரா தர வேண்டும். ஜகாத், பித்ரா தவிர சதகா எனப்படும் பிற தர்மங்களையும் இம்மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துது.
இம்மாதத்தில் கடைசி பத்து நாள்களில் ஒற்றைப்பட எண்களில் (21, 23, 25, 27, 29 இரவுகள்) புனித இரவு ஒன்று இருக்கிறது. அது லைலத்துல் கத்ர் இரவு. நமக்கு சிவராத்திரி மாதிரி இஸ்லாமியர்களுக்கு இந்த ராத்திரி. அந்த இரவில் அதிகமாக இறைவனை வழிபடுங்கள் என்கிறார் முகமது நபி. ஆனால் அது எந்த இரவு என்பதை இஸ்லாம் கூறவில்லை. அதனால் இந்த ஐந்தில் எந்த இரவாகவும் அது இருக்கலாம் என்ற படப்படப்புடன் இறைவனின் கருணையை பெற ஐந்து இரவுகளும் விழித்திருந்து பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். இம்மாதத்தின் கடைசி பத்து நாட்களில் முகமது நபி இதிகாப் இருப்பார்கள்.
இதிகாப்ன்னா பத்து நாட்கள் மசூதியிலேயே தங்கியிருந்து வெளியிடங்களுக்கு செல்லாமல் இறைவனை மட்டுமே நினைத்து, பிரார்த்தனை செய்யுறது. பத்து நாட்கள் இதிகாப் இருக்க இயலாதவர்கள், 5 அல்லது 3 நாட்கள்கூட இதிகாப் இருக்கலாம். இம்மாதம் முடிந்து, ஷவ்வால் மாதத்தின் முதல் நாள்தான் ஈத் எனப்படும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகை நடத்தி, தர்மம் செய்து, உறவினர்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். 30 நாட்கள் நம்மை பக்குவப்படுத்திச் சென்ற நல்ல குணங்களை அதன் பின்பும் நினைவில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இதுதான் ரம்ஜான் பண்டிகையின் நோக்கம். இதுலாம் தெரிஞ்சுக்காம பிரியாணிய மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கே. தீனிப்பண்டாரம்.
அப்ப்ப்ப்ப்ப்பாடி இத்தனை நல்ல விசயம் இருக்கா?! பிரியாணியோடு சேர்த்து இதையுமெல்லாம் நினைவுல வச்சுக்கிடுதேன் மாமா.
பிரியாணி சூடு ஆறதுக்குள்ள சாப்பிடனும் அதனால, இன்னிக்கு வெறும் மீம்ஸ் மட்டும் சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு போயிரலாம்... சென்னைக்கு புதுசா போறவங்க கதி...
அந்த காலத்து அலாரம் பீஸ்கள்....
நம்மூரு விஞ்ஞானி......
பிரியாணி செரிமானம் ஆக யோசிங்க.....
நிலா, நட்சத்திரங்கள், சூரியன்... இவைகளில் எது புத்திசாலின்னு சொல்லுங்க பார்ப்போம்....
நன்றியுடன்,
ராஜி.
ரமதானைப்பற்றி நிறைய விடயங்கள் அறியத்தந்தீர்கள் சகோ
ReplyDeleteகீர ஸூப்பர் மிகவும் ரசித்து சிரித்தேன்
பிரியாணியை கண்ணுல காட்டலயே... பிறகு எப்படி செர்மானம் ?
த.ம.1
பதிவு போடும்போது எனக்கே பிரியாணி வரலியே!
Deleteரம்லானைப்பற்றிய விடயங்களும் கதம்பகொத்தாய் படங்களும். அருமை ராஜி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நிஷாக்கா
Deleteதமிழ் மண வாக்களிப்பு பட்டை தெரியவில்லை. ஏன்?
ReplyDeleteதெரிலையே
Deleteரமலான் விஷயங்கள் புதிதாகவும் விபரமாகவும் இருந்தன. நம்மூர் விஞ்ஞானிகள்.... ஹாஹா....
ReplyDeleteபறவை ஒலிகள் - ஆச்சரியம்
கடைசியா ஒரு புதிர் போட்டேனே! அதை கண்டுக்கவே இல்ல போல
Deleteரம்ஜான் ஸ்பெஷல்...
ReplyDeleteபிரியாணி ஸ்பெஷல்
Deleteபிரியாணி மட்டுமல்ல
ReplyDeleteரம்ஜான் என்பதை மிக மிக
அழகாக, விரிவாக , நிறைவாகப்
பதிவிட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா
Deleteதமிழ் மணப்பட்டியைக் காணோம்
ReplyDeleteசரி அப்புறமா ஒரு முறை வாரேன்
வாழ்த்துக்களுடன்..
பிரியாணி சாப்பிடுற அவசரத்துல மறந்துட்டேன்பா
Deleteத.ம 5
ReplyDeleteரமலான் சிறப்புகளை மறுபடியும் அறிந்துகொண்டேன். என்னுடன் பணிசெய்த இஸ்லாமிய நண்பர் மூலம் ஏற்கெனவே அறிவேன். ஒருமுறை ரமலான் மாதத்தில் திங்கறகிழமையில் நோன்புக்கஞ்சியும் பகிர்ந்திருந்தேன். தம +1
ReplyDeleteவருடம்தவறாமல் நோன்பு கஞ்சி வீடு தேடி வந்திரும் சகோ.
Delete