வியாழன், ஜூன் 22, 2017

காதோடுதான் நான் பேசுவேன் - கைவண்ணம்


சில்க் த்ரெட் நூல்ல செய்யுற  ஜுவல்க்குதான் இப்ப மவுசு அதிகம். பார்க்க செம அழகு. நல்ல ஜொலிஜொலிப்பா இருக்கும். எல்லாவித கலர்லயும் செய்யலாம். வளையல், கம்மல், மணிமாலை, ஹேர்க்ளிப்ன்னு எல்லாமே செய்யலாம். பழகிட்டா செம ஈசி.. இதுக்கு மூலப்பொருட்கள் எல்லா பேன்சி ஸ்டோர்லயும் கிடைக்குது. அதிகபட்சம் 25 ரூபாய்ல ஒரு கம்மல் செய்யலாம். ஆனா, ஆரம்பவிலை 120ரூபா. வேலைப்பாடு அதிகரிக்க, அதிகரிக்க விலை கூடும். ஒரு கம்மல் செட்டை ஒரு மணி நேரத்துல செஞ்சுடலாம்...
 கம்மல் செய்ய பிளாஸ்டிக்ல ஜிமிக்கை  பேஸ் கிடைக்குது.

ஸ்கேல் இல்லன்னா நோட்ல நூலை சுத்தி மொத்தம் 15 இழை இருக்குற மாதிரி எடுத்துக்கனும்....

இடைவெளி விட்டு மேல படத்துல இருக்குற மாதிரி நூலை கோர்த்துக்கிட்டு வரனும்.

நூலை எல்லா இடத்துலயும் சுத்திட்ட பிறகு கம்மலுக்குள் க்ளூ வச்சு நூலை ஒட்டி மிச்ச மீதி நூலை வெட்டிடனும்.

 கம்மல் பேஸ் ரெடி.....


 எல்லாவித ஜுவல்சும் இந்த மாதிரி நூல் சுத்துறதுதாலதான் வரும்.


 ரெண்டு ஐபின்னை ஒன்னுக்குள் ஒன்னை ஜாயின் பண்ணிக்கனும்.


 ஒரு கம்பில முத்தை கோர்த்துக்கிட்டு செஞ்சு வச்சிருக்கும் கம்மலை கோர்த்துக்கனும். 

 மேல பீட் கேப்பை கோர்த்து மிச்ச மீதி கம்பியை வெட்டி வளைச்சுக்கனும்.

 அதேமாதிரி இன்னொரு பக்கத்து கம்பில இன்னொரு முத்தை கோர்த்து இன்னொரு கம்மலை கோர்த்து க்ளூ போட்டு ஒட்டிக்கனும். 

எப்ப பாரு ஜிமிக்கை கம்மல்ன்னு செஞ்சு போட்டுக்குறதுக்கு பதிலா புது டிசைன்ல தொங்கட்டான் ரெடி.  


ரெண்டு கம்மலும் ஜாயின் பண்ண இடம் தெரியாம இருக்க ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கனும்.  அதை சுத்தி சின்ன சைஸ் கோல்ட் முத்து செயினை சுத்தனா தொங்கட்டான் ரெடி.


 கம்மல் பேஸ்ல க்ளூ தடவிக்கனும்... சின்ன பிளாஸ்டிக் ரவுண்ட்ல நூலை சுத்தி கம்மல் பேஸ்ல ஒட்டிக்கிட்டு நமக்கு விருப்பப்பட்ட மாதிரி கல், முத்துன்னு வச்சு அலங்கரிச்சுக்கலாம். 


 தொங்கட்டான் ரெடி...

அடுத்த வாரம் இதுக்கு மேட்சிங்கா வளையல், ஆரம்ன்னு செஞ்சு வாரேன்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464172

நன்றியுடன்,
ராஜி.


24 கருத்துகள்:

 1. அடடா எல்லோருமே வீட்டிலிருந்து வருமானத்துக்கு வழி செய்யலாம் போலயே...
  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ண்ணே. வீட்டிலிருந்தபடியே மாதம் பத்தாயிரம் வரை வருமானம் ஈட்டலாம்.

   நீக்கு
 2. இப்பொழுதுதான் ஓட்டு போட்டேன் "ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது" என்று சொல்கிறதே... ?

  பதிலளிநீக்கு
 3. ரொம்பவே அழகாக உள்ளது. வகைவகையாக கலர்க்கலராகச் செய்யலாம். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ம்மா... இப்ப ட்ரெண்ட் இதான்

   நீக்கு
 4. அடடா, தோடுகளை இப்படி நூலிலும் செய்யலாமா? பார்க்க வேறு அழகாக இருக்கிறதே..!

  தொங்கட்டான் என்பதை இலங்கையில் தூக்கணம் என்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிடவும் அழகாலாம் செய்றாங்க சகோ. நான் காஞ்சம் சோம்பேறி. ஆச்சா போச்சான்னு செய்யும் ஆள்.

   நீக்கு
 5. வாவ் !!நல்லாயிருக்கு ராஜி ..அழகான கலர்எப்பவுமே ஆலிவ் க்ரீன் மெரூன் ரெட் டீப் ப்ளூ கலர்ஸ் ரொம்ப அழகா இருக்கும் இந்த மாதிரி செய்ய ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஏஞ்சல். என் பச்சையும் ரோசும் கலந்த புடவைக்கு மேட்சிங்கா செஞ்சேன். இன்னும் வளையலும், ஆரமும் செய்யனும்ப்பா

   நீக்கு
 6. நுட்பமான வேலை
  அருமையான படங்கள்
  பயனுள்ள பதிவு
  தொடர்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   நீக்கு
 7. அருமையாக உள்ளது
  சகலக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றத்
  தங்கள் திறன் பிரமிப்பூட்டுகிறது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுலாம் பிரமாதமான வேலையாப்பா?! இதுக்கே அப்பா திட்டுவாங்க .. சும்மா இருக்கியேன்னு...

   நீக்கு
 8. அழகாக இருக்கின்றது ராஜி.

  பதிலளிநீக்கு
 9. பக்கத்தில் உட்கார்ந்து சொல்லித் தர்ற மாதிரி தத்ரூபமா இருக்கு.

  இதுக்கும் மேல ஒன்னும் சொல்லத் தெரியல!

  பதிலளிநீக்கு
 10. எனக்கு சம்பந்தம் இல்லாத விடயம்! தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன்?! உங்க கையால செஞ்சு உங்க மனைவிக்கு கொடுக்கலாமே!

   நீக்கு
 11. வணக்கம்
  அழகிய கை வண்ணம் பார்க்க அழகு மேலும் புதிய புதிய வடிவங்கள் உருவாக்க எனது வாழ்த்துக்கள் த.ம8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. கைகளில் கலைவண்ணம் மெருகேறியுள்ளது காட்டுகிறது பதிவு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு