நவராத்திரி ஒன்பதாவது நாளில் வணங்க வேண்டியது பிராம்மியை. இவள் அம்பிகையின் முகத்திலிருந்து தோன்றியவள். . சப்த கன்னிகளில் முதலானவள். பிரம்மனின் அம்சம். அதனாலாயே, அவரைப்போல், 4 முகங்கள், ஜப மாலையும் கமண்டலமும் தாங்கி அபய வரத கரத்தோடு, ஜடாமுடியோடு, பீதாம்பரம் உடுத்தி, மான் தோலில் அமர்ந்தவாறு அன்ன வாகனத்தில் காட்சியளிக்கிறாள். மேற்கு திசைக்கு காவல்காரி. கல்வி செல்வத்துக்கும் அதிபதி. சிதம்பரம் காளி கோவிலின் மூலவர் இந்த ப்ராம்மியே ஆகும்.
தஞ்சை அய்யம்பேட்டைக்கருகில் இருக்கும் சக்கராப்பள்ளியில் தங்கி ஈசனை பூஜித்து அருள்பெற்றாள். முக்திக்கு சாட்சி சக்கரவாஹு பறவை. இத்தலத்தில் ஈசனை பூஜித்து , தான் வணங்கிய ஈசனாலாயே முக்திக்கு அழைத்து செல்லப்பட்ட தலம். அதனாலாயே இத்தல ஈசனுக்கு சக்ரவாகேஸ்வரர் என்று பெயர். ஆதிசக்தி இத்தலத்தில் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக்கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயை கலப்பில்லா பூரணமான ஞானத்தை இத்தலத்தில் அன்னை பெற்றாள். ஈசனே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து அரூபமாய் இத்தலத்திலேயே தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள். இங்கு அன்னை ஏழு வயது சிறுமியாய் அருள்புரிகிறாள்.
இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம். மிகப்பழமையான கோவில் இது. இங்கிருக்கும் சுவற்றில் சக்கரவாஹு பறவை ஈசனை பூஜிப்பது போன்ற சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. ஈசன் சக்ரவாகேஸ்வரராய் தியானத்தில் மூழ்கி இருக்கும் ஒரு ரிஷியின் அமைதியான சொரூபமாய் பூரணத்துவமாய் காட்சியளிக்கிறார். இங்கு அருளாட்சி புரியும் அம்மன், பக்தரின் குரலுக்கு ஓடிவரும் பரபரப்பு தோரணையில் ஒரு காலை சற்றே முன்வைத்த மாதிரி காட்சி தருகிறாள். பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தி தலைமேல் ஐந்து தலை நாகம் குடைப்பிடிக்க, கைகளில் நாகாபரணம் பூண்டு காட்சியளிப்பது எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.
ப்ராம்மி தேவியின் மூல மந்திரம்...
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473146 நன்றியுடன்,
ராஜி.
நிறைந்த விடயங்கள்
ReplyDeleteஇனிய ஸரஸ்வதி பூஜா வாழ்த்துகள் சகோ.
நன்றிண்ணே
Delete#ஈசனே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து#
ReplyDeleteகடவுளை நம்புகிறவர்கள் ,இன்னும் இதை உணர்ந்ததாக தெரியவில்லையே :)
யாரு உணரலை?!
Deleteஊர் ஊரா கோவிலைத் தேடி அலைபவர்கள்:)
Deleteஎல்லாம் உணர்ந்திருப்பவர்கள் உண்ர்ந்த மாதிரி செயல்களில் இல்லையே
Deleteம்ம்ம்ம் என்ன சொல்ல?!
Deleteசக்கராப்பள்ளி திருத்தலம் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! கலைமகள் திருநாள் மற்றும் வெற்றித்திருநாள் நல் வாழ்த்துகள்!
ReplyDeleteவெற்றித்திருநாள்... அழகான தமிழ் வாழ்த்து... வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிப்பா
Deleteசக்ராதலம் பற்றிய தகவள்கள் அருமை.
ReplyDeleteசரஸ்வதி பூஜை வாழ்த்துகள்! விஜயதசமி வாழ்த்துகளும்!
தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களும் சப்தமங்கை என்று பதிவு எழுதி வருகிறார். இன்று இறுதிப் பகுதி என்று நினைக்கிறோம்...
அப்படியா! அவர் பதிவை பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி
Deleteவணக்கம் ராஜி !
ReplyDeleteஎல்லாவற்றையும் கடைசி நாள் வாசிக்கிறேன்
தமன்னா +1
மெதுவா வாசிங்க. எங்கிட்டும் போகாது. இங்குதான் பதிவுகள் இருக்கும்.
Deleteமுடிந்தது அப்பாடா!த ம 6
ReplyDeleteநாளையோடு முடியுதுப்பா.
Deleteநவராத்திரி ஆரம்பித்து முடித்தாயிற்று எல்லா நாளும் வந்த தகவலும் அருமை சில நான் கேட்டு அறியாதவை, இன்றும், நன்றி.
ReplyDeleteஉங்களுக்கு சரஸ்வதி பூஜா அடுத்துவரும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
நாளையோடு நவராத்திரி முடியுதுப்பா. பதிவுக்காக தேடும்போதுதான் புது விசயங்கள் பல கன்ணுக்கு பட்டது. பொறுமையா தேடினா இன்னமும் கிடைக்கும்.
Delete