Monday, September 25, 2017

குயில் பாடும். தவம் செய்யுமா?!

நவராத்திரியின் ஐந்தாவது நாள் வணங்க வேண்டிய பெண் தெய்வம் மகேஸ்வரி. இவள் சப்த கன்னியரில் இரண்டாவது கன்னி. இவள் சிவனின் அம்சம்.  இந்த சக்தியினால்தான் சிவன் தன் சம்ஹாரத்தை நிகழ்த்துகிறான். இவள் வெண்ணிற மேனியனாள். மூன்று கண்களோடு, பிறை சூடிய ஜடா மகுடத்துடன், பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு, மான், மழு ஏந்தி அபயவரத கரத்தோடு கூடிய பத்து கரங்களோடு ரிஷப வாகனத்தில் வடகிழக்கு திசையான ஈசானிய திசையை நிர்வகிப்பவள். இவள் கோபத்தை குறைக்கும் ஆற்றலை கொண்டவள். கடின உழைப்புக்கு சொந்தக்காரி. தர்மத்தின் திருவுருவம். தன்னை வழிபடுபவருக்கு போகத்தை வழங்கக்கூடியவள்.


சப்த கன்னியர்கள் வழிப்பட்டு சிவன் அருள் பெற்ற தலங்கள் வரிசையில் மகேஸ்வரி சிவனை வழிப்பட்ட தலம் நாகப்பட்டனம் கருங்குயில்நாதன்பேட்டையில் அருள்பாலிக்கும் ஆனந்தவல்லி சமேத சக்திபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.  இந்திரன் குயில் உருவங்கொண்டு ஈசனை வழிப்பட்ட தலம் இது.  இங்குள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு கருணா தீர்த்தம் என்று பெயர். வில்வமரம் இங்கு ஸ்தல விருட்சம்.  தட்சன் சிவனை மதியாது யாகம் செய்தபோது அங்கு வந்த அன்னையால் யாகம் அழியப்பெற்றது. அந்த அழிவிலிருந்து தப்பிக்க எல்லாரும் ஓடியபோது இந்திரன் குயில் உருவங்கொண்டு உயிருக்கு அஞ்சி ஓடினான்.



தன்னையுமறியாமல் சிவநிந்தனைக்கு ஆளானதை எண்ணி வருந்தி, இந்திரன் குருபகவானிடம் யோசனை கேட்க, சப்த கன்னிகையரில் ஒருவளான மகேஸ்வரி  வழிப்பட்டு அருள்பெற்ற  கருணாபுரம் என்ற திருத்தலமொன்று உண்டு. அங்கு சென்று இறைவனை வழிப்பட்டால் உன் பாவம் தீரும் என கூறினார். அதன்படி இந்திரன் வழிப்பட்ட தலம் இது.  இதனாலயே, இந்த ஊருக்கு கருங்குயில்நாதன்பேட்டை என்றும், சிவனின் கருணையினை குறிக்கும் விதமாக கருணாப்பேட்டை என்றும் அழைக்கப்படுது.


மகேஸ்வரி மூல மந்திரம்.... 

ஓம் வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472746 நன்றியுடன்,
ராஜி.

14 comments:

  1. விடயங்கள் அருமை

    ReplyDelete
  2. #குயில் பாடும். தவம் செய்யுமா?!#
    இது நான் கேட்க வேண்டிய கேள்வியாச்சே :)

    ReplyDelete
  3. வணக்கம் !

    அற்புதக் கதையில் இன்பம்
    அளித்திட உதவி செய்த
    பொற்புடைக் கரங்க ளுக்குப்
    போடலாம் தங்கக் காப்பு .......

    அருமை அருமை தொடர வாழ்த்துகள்
    தமனா +1

    ReplyDelete
    Replies
    1. என்னைலாம் நம்பி எந்த வாக்கும் கொடுத்திடாதீக சகோ

      Delete
  4. தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. ஐந்தாம் நாள். அறிந்தேன், மகேஸ்வரியின் பெருமையை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  6. நிறைய விசயங்கள் அறிந்து கொண்டோம்! சகோ/ராஜி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  7. படங்கள் எல்லாம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. நவராத்திரியின் இன்ன நாளில் இன்ன தெய்வத்தை வணங்கவேண்டும் என்னும் தகவல்கள் ஒரே கன்ஃப்யூஷனாகவே இருக்கிறது ஒவ்வொருவர் பதிவிலும் வெவ்வேறு தெய்வங்கள்

    ReplyDelete
    Replies
    1. இது தினத்தந்தி பக்தி மலர்ல வந்த ஆர்டர்ப்பா. கூடவே ராஜேஸ்வரி அம்மா பதிவிலும் இதே ஆர்டர்தான்.

      நம்ம முன்னோர்கள் தெய்வ ரகசியம்ன்னு எல்லாத்தையும் மூடி மூடி வச்சதன் விளைவு இதுமாதிரியான ஆன்மீகத்தில் தெளிவில்லாதது.

      Delete