நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று நாம் வணங்க வேண்டியது கௌமாரி. இவள் முருகனின் அம்சம். மிகுந்த அழகுடையவள். வீரத்துக்கும் குறைவில்லாதவள். இவள் அகங்காரத்தின் நாயகி. இவளுக்கு வாகனம் மயில். பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில் இவளுக்கு முதலிடம். பன்னிரண்டு கரங்கள் கொண்டவள். அதில் வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். முருகனைப்போன்றே இவளுக்கும் ஆறுமுகம். இவள் நமது உடலில் ஓடும் ரத்தத்திற்கு அதிபதி. இவள் சஷ்டிதேவியாகும்.
ஒருமுறை கௌமாரி அம்மன் அசுரனை கொல்ல வேண்டி வைகை நதிக்கரையோரமிருந்த அடர்ந்த காட்டுக்குள் தவமிருந்தாள். அதை அறிந்த அந்த அசுரன் அம்பாளை கடத்தி செல்லும் நோக்கோடு அன்னையை நெருங்கினான். இதை அறிந்த அன்னை, தன் அருகிலிருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அசுரனை நோக்கி வீச அசுரன் இரண்டாக பிளக்கப்பட்டு இறந்தான்.
பாண்டிய மன்னன் ஒருவன், தான் செய்த பாவத்தால் பார்க்கும் திறனை இழந்தான். தன் செயலுக்கு மனம் வருந்தி சிவனை வேண்ட, மன்னன் கனவில் தோன்றிய இறைவன், இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகைக்கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் முருகன் அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. அவள் அருளால் உனக்கு பார்க்கும் திறன் கிடைக்கும் என கூறி மறைந்தார், அதேப்போல் கௌமாரியை வணங்கிய பாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மறு கண்ணையும் பெற்றார். அன்றிலிருந்து அங்கிருந்த சிவனுக்கு திருக்கண்ணீஸ்வரர் என்று பெயர் உண்டானது. இதற்கு கைமாறாக சிவனுக்கு பெரிய கோவிலும், கௌமாரிக்கு சிறிய கோவில் ஒன்றை எழுப்பி வணங்கி வந்தான். அதனாலாயே, இவ்வூருக்கு வீரபாண்டி என காலப்போக்கில் மாறிப்போனது. வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் கௌமாரி பார்க்கும் திசையில் அமைந்துள்ளது.
மந்தையிலிருந்து தனியே பிரிந்து சென்ற பசு ஒன்றின் காலிடறி, அங்கிருந்த கல்லிலிருந்து ரத்தம் கசிந்தது. அதைக்கண்ட பசு, தன் பால் சொரிந்து தன் கால்பட்ட காயத்தை போக்கியது. அன்றிலிருந்து, அக்கல்லுக்கு பால்சொரிவதை வழக்கமாக கொண்டது பசு. பால் குறைவதை கண்ட பசுவிற்கு சொந்தமானவன், மேய்ச்சல்காரனை கேட்க, மேய்ச்சல்காரன் பசுவை கண்காணிக்க, பசு, கல்லுக்கு பால் சொரிவதை கண்டு பசுவின் சொந்தக்காரருக்கு சொல்ல ஊரே திரண்டு வந்து அந்த அதிசயத்தை காண, பசு பால் சொரிந்த கல்லை பெயர்க்க முற்பட்டபோது, தான் கௌமாரி எனவும், தான் சுயம்புவாய் இங்கு அவதரித்துள்ளதாகவும், தனக்கு இங்கொரு கோவில் கட்டவேண்டுமென பணித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.
இவளை வழிபடுவதால் இளமை, அழகோடு செல்வம் சேரும், குழந்தை பாக்கியம் கிட்டும், கண் பார்வை தெளிவுபெறும், பார்வை குறைபாடு நீங்கும், கண்கட்டி உட்பட அனைத்து விதமான கண் நோய்களும் தீரும். கௌமாரியினை நிந்தித்தால் நமது வீட்டில் உள்ள பசுக்களுக்கு கோமாரி நோய் உண்டாகும். இவளுக்கு தேவசேனா என்ற மற்றொரு பெயருமுண்டு. எலுமிச்சை, தேங்காய் சாதம் இவளுக்கு நைவேத்தியம்.
கௌமாரியின் மூல மந்திரம்.....
ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹிதன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.
மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என்முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.....
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி
நிறைய நல்ல தகவல்கள். புதியவை அனைத்தும். கௌமாரியை வணங்கிடுவோம்!
ReplyDeleteகௌமாரி என்பது ஒருசிலரின் குலதெய்வமா இருக்கும்ண்ணே
Deleteஅம்மன் அழகு.. கெளரி அம்மன் தெரியும் கெளமாரி இன்றுதான் கேள்விப்படுறேன்.
ReplyDeleteசப்த கன்னிகளில் ஒருவள் இந்த கௌமாரி என்பது இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களா/1 எல்லா ஊர்களிலும் ஒதுக்குப்புறமான இடத்தில் மேற்கூரையில்லாம இந்த சப்த கன்னிகர்களின் கோவில் இருக்கும்ங்க ஆதிரா.
Deleteநல்ல தகவல்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteதம 7
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteகௌமாரியைக் கண்டேன், இன்று. நன்றி.
ReplyDeleteகௌமாரி அருள் உங்களுக்கு கிட்டும்ப்பா
Delete#பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில் இவளுக்கு முதலிடம்#
ReplyDeleteஇதிலும் முதலிடம் ,இரண்டாம் இடம் எல்லாம் உண்டா :)
உண்டுண்ணே. தாயும் தந்தையும் நம்மை காப்பாத்துவாங்கதான். ஆனா, அம்மா யோசிக்காம செய்வாங்க. அப்பா எல்லாத்தையும் யோசிச்சுதான் செய்வாங்க. அதுப்போலதான் இதும்..
Deleteத ம 10
ReplyDeleteநன்றிப்பா
Deleteஎல்லாகருத்துக்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறீர்கள்கதைகள் கேட்க கேட்க புரிதல் குறைகிறது கன்ஃப்யூஷன் மிஞ்சுகிறது பாற்கடலை கடைந்த போது வந்த அமுதததை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மோகினி வடிவம் எடுத்தாராம் விஷ்ணு பஸ்மாசுர நிடமிருந்த சிவனைக் காத்து பஸ்மாசுரனை அழிக்க மோகினியாக வருவதுபோலவும் கதை உண்டு இந்த சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்தவரே ஐயப்பன் எனப்படும் ஹரிஹர புத்திரன் என்றும் கதை உண்டு. இந்த மோகினிகள் எல்லாம் ஒன்றா இல்லை வேறு வேறா .
ReplyDeleteகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.. இது எதுக்கு பொருந்துதோ இல்லியோ கடவுள் விசயத்துக்கு நிச்சயமாய் பொருந்தும்ப்பா. கடவுளை கதை சொல்லி விளங்க வைக்க முடியாது, அது உணர்தல். புராண கதைகள் மொத்தமும் பாமரர்களுக்காய் எளிதில் புரியும்படி சொல்லப்பட்டது. அதுல கேள்விக்கேட்டா குழப்பம்தான் மிஞ்சும்.
Deleteஉதாரணத்துக்கு... ராமாயாணத்துல வரும் ராவணன் சிறந்த சிவபக்தன். ஒழுக்கசீலர், சிறந்த மன்னன். ஆனா பாருங்க, சீதையை பார்த்த மாத்திரத்துல லவ்விட்டாராம். பிறன்மனைன்னு தெரிஞ்சும் தூக்கினாராம். இது நம்புற மாதிரியா இருக்கு?! அதேப்போல தனிப்பட்ட காரியத்துக்கு இத்தனை பெரிய போர்?! இது சத்திரிய தர்மத்துக்கு அப்பாற்பட்டது.
உங்களுக்கே புராணகதைகளில் இருக்கும் தவறுகள் தெரிகிறது அதையே கதை என்று சொல்லி தப்பிக்கலாம் ஆனால் உண்மை என்று நம்பி தொடரும்போது நம் சிந்தனையை அடகு வசிக்கிறோம் புராணக் கதைகளில் எது விளங்குகிறது அதுவும் பாமரர்களுக்கு புரியும் விதத்தில்
Deleteஎதுமே புரிவதில்லைப்பா. குழப்பம் கூடும்போது அதைப்பத்தி தெரிஞ்சுக்கும் ஆவல் அதிகரிக்கும். ஆவலை பூர்த்தி செஞ்சுக்க நிறைய படிப்போம். அப்போது தெளிவு கிடைக்கும்
Deleteஇங்கே உலவும் கதைகள் எல்லாமே திரிக்கப்பட்டவை ,பாற்கடல் கடைந்தபோது வந்தவை எல்லாம்,பரம்பொருள் வசமே ,பூவுலகில் ,வழிபாடே தவறு ,முத்தொழில் புரியும் ,மேனஜர்களான,ருத்திரன் ,பிரம்மன் ,நாராயணன் ,இவர்களை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றனர் .முமூர்த்தியில் இருக்கும் ,ருத்திரனை சிவமாக வழிபடுகின்றனர் .சிவம் என்பது பரம்பொருள் ,இந்த மும்மூர்த்தியாலே அவரைப்பார்க்கமுடியாது .மணிகண்டன் கதை திரிக்கப்பட்டது .ஆதிசக்தியின் மகன் மணிகண்டன் .ஆதிசக்தியின் வடிவங்களே அனைத்தும் .மீதி எல்லாம் உவமான தோற்றங்களே.....
ReplyDeleteஉங்க கூற்று சரிதான் அமிர்தா. கடவுளுக்கு உருவமில்லை... நாம விளங்கிக்க சொன்னதுதான் பத்து கை, ஆறு தலை, மூணு கண்.... இப்படி.... ஆதி அந்தமில்லாதவர் கடவுள்
Deleteஇயேசு சொன்ன பராமபிதாவும் ,நபிகள் சொன்ன அல்லாவும் ,வள்ளலார் சொன்ன அருட்பெரும் ஜோதியும் ,நால்வர் பாடிய தேவாரம் எல்லாம் பரம்பொருளை பற்றியே ,சீனாவில் சீன கடவுளாகவும் ,ஆப்பிரிக்காவில் ஆப்ரிக்க கடவுளாகவும் ,உலகெங்கும் ஒரே கடவுள் ,அந்த ஆதி பரம்பொருள் அண்ணாமலையான் ,அவனே மதுரையில் ,சுந்தரேஸ்வரர் ஆகவும் ,ராமேஸ்வரத்தில் இப்படி பல இடங்களில் இருக்கிறார் .ஆனால் சிவனடியார் என்று சொல்பவர்களுக்கு ருத்திரன் யார் சிவம் யார் என தெரியவில்லை எல்லாமே தவறுதலான புரிதல் ...
ReplyDeleteகடவுளை கண்டவங்க பொறுமையா விளக்கமா எடுத்து சொன்னா எளியவங்க புரிஞ்சுப்பாங்க. அதைவிட்டு கோவப்பட்டா எப்படி?! கணக்கு ஒருத்தருக்கு சொல்லாமயே வெளங்கும்... சிலருக்கு ஒருமுறை.. சிலருக்கு பலமுறை.. இப்படி..
Deleteஅதைவிட்டு, உன் கர்மா உன்னால கடவுளை உணரமுடியாதுன்னு பெரியவாள்லாம் சொன்னா ஜடா முடியும், விபூதி பூசி காவி உடுத்துனவங்களாம் சாமியார்தான்
இராவணனை பத்தி அழகாக தெளிவாக உங்கள் பகுதியில் எழுதி இருக்கிறீர்கள் பின் ஏன் இந்த குழப்பம் ...நானே அதைப்பார்த்து தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .
ReplyDeletehttps://rajiyinkanavugal.blogspot.com/2015/11/blog-post.html
குழப்பமில்லை. உங்களை மாதிரி மெத்த படித்தவங்களுக்கு அப்பிடி சொல்லனும். என்னை மாதிரி அறிவிலிகளும் புரிஞ்சுக்கனுமில்லையா?! அதான் ஈசியா விளங்க வைக்க இப்படி....
Delete