பெரும்பாலான பெத்தவங்களுக்கு ரெண்டே ரெண்டு ஆசைதான் இருக்கும். ஒன்னு பசங்க நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் நல்லா இருக்கனும்ங்குறது. இன்னொன்னு, பிள்ளை கையால கொள்ளியும் தர்ப்பணமும் கிடைக்கனும்ன்னு... அது அவங்க ஆசை மட்டுமில்ல. நம்ம கடமையும்க்கூட. வாழும்போது பெத்தவங்களை நல்லா பார்த்துக்கனும்.. அதேப்போல, இறந்தபின் அவங்களுக்கு செய்ய வேண்டியதை சரிவரை செய்யனும். அதனாலதான் இந்த தர்ப்பணம் செலுத்துறதை பிதுர்கடன், நீத்தார் கடன்ன்னு சாஸ்திரம் சொல்லுது. நம் மூத்தோர்கள் இறந்த நாளில் அதே திதியில் மறக்காமல் கவனத்தோடு பிதுர்கடன் செய்யுறதாலதான் அதுக்கு சிரார்த்தம்ன்னும் பேர் வந்திச்சு.
நம் உடலிலிருந்து பிரிந்த ஆன்மாக்களுக்கென்று ஒரு உலகம் இருக்கு. அந்த உலகம் தென் திசையில் இருக்கு. அதனால் அவ்வுலகத்துக்கு தென்புலம்ன்னு பேரு. மூத்தவர்கள் இறந்ததினம், ஒவ்வொரு அமாவசை அன்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவசரகதியாய் இயங்கும் இக்காலத்தில் வருடத்தின் மூன்று அமாவாசைகளிலாவது கொடுக்கட்டுமேன்னுதான் ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகள் மிக முக்கியம்ன்னு சொல்லப்படுது. இதிலும் புரட்டாசி அமாவாசை அன்று நமது குலத்தின் அத்தனை மறைந்தவர்களும் நமது தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வர் என்பது ஐதீகம். மற்ற அமாவாசைகளில் நாம யாரை நினைச்சு தர்ப்பணம் கொடுக்கின்றோமோ அவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்களாம். இதுவரை தர்ப்பணமே கொடுக்காதவங்கக்கூட இந்த புரட்டாசி அமாவாசையன்று கொடுக்க ஆரம்பிக்கலாம். நம் முன்னோர்கள் அத்தனைபேரும் பூமிக்கு இன்னாளில் வருவதாக சொல்லப்படுது. தர்ப்பணத்தின்போது எள், தண்ணீர், அரிசி, பிண்டம், வாழைக்காய் பயன்படுத்துவர். இதை பிதுர்தேவதை நம் முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்படுது. தர்ப்பணம் செய்வதும், தான தர்மங்களை செய்வதும், புனித நதிகளில் நீராடுவதும் நம் குடும்பத்தை வாழவைக்கும்.
புரட்டாசி மாதத்து பிரதமை முதல் புரட்டாசி பிரதமை வரையிலான பதினைந்து நாட்கள் மகாளயம் எனப்படும். இந்த பதினைந்து நாளும் நமது முன்னோர்கள் நம்மோடு வந்து இருப்பர் எனவும் சொல்லப்படுது. இறந்தவர்கள் நரகம் போகாமல் இருக்கவும், சுகமாய் இருக்கவும் தர்ப்பணம் செய்யப்படுது. பிதுர் உலகில் நீரும், உணவும் இருக்காதாம். நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் கொடுக்கப்படும் அரிசியும், எள்ளும் உணவாகவும், தண்ணீர் தாகத்தை தணிக்கவும் செய்யும்ன்னு நம்பப்படுது.
ஒவ்வொரு அமாவாசையன்றும் நாம் செலுத்தும் தர்ப்பணம் பிதுர்தேவதைகள் மூலம் எமதர்ம ராஜனிடம் போய் சேரும். அவர், அதை நம் முன்னோர்களுக்கு கொடுப்பாராம். இந்த மாகாளய பட்சம் ஆரம்பிக்கும்போது, நம் முன்னோர்களை அழைத்து, நீங்க விரும்பிய இடத்துக்கு சென்றுவாருங்கள்ன்னு பதினைந்து நாளுக்கு கேட்பாஸ் கொடுத்து அனுப்புவாராம். நம்ம முன்னோர்களின் விருப்ப இடம் அவங்க குழந்தைங்க இருக்கும் இடம்தானே?! அதனால, அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்கன்னு காலையிலேயே வீட்டை சுத்தப்படுத்தி அவங்களுக்கு பிடிச்ச உணவுகளோடு வாழைக்காய் சேர்த்து சமைத்து படைப்பர்.
இந்த பதினைந்து நாளில் எதாவது ஒருநாள் தர்ப்பணம் செய்யலாமென்றாலும் பெரும்பாலும் புரட்டாசி அமாவாசையன்றுதான் தர்ப்பணம் கொடுக்கின்றனர். மகாளாயத்தின் முதல் நாளான பிரதமைல தர்ப்பணம் கொடுத்தால் பணம் சேரும்...இப்படி..இரண்டாவது நாள் - துவிதியை - நன்மக்கட்பேறு மூன்றாவது நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறும். நான்காவது நாள் - சதுர்த்தி - எதிரிகளிடமிருந்து தப்பிப்பர் ஐந்தாம் நாள் - பஞ்சமி - கைவிட்டுப்போன சொத்துகள் கிடைக்கும்
ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைக்கும்
ஏழாம் நாள் - சப்தமி - உத்தியோக உயர்வும், புகழும் கிடைக்கும்
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தியும், அறிவாற்றலும் கிடைக்கும்.
ஒன்பதாம் நாள் - நவமி - திருமணத்தடை அகலும்,, சிறந்த வாழ்க்கைத்துணை, மருமகள், பெண்குழந்தை கிடைக்கும்
பத்தாம்நாள் - தசமி நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
பதினோறாம் நாள் - ஏகாதசி - சகல கலைகளிலும் தேர்ச்சி,
பனிரெண்டாம் நாள் - துவாதசி - விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும்.
பதிமூன்றாம் நாள் - திரயோதசி - விவசாயம் செழிக்கும். பசுக்கள் அபிவிருத்தி ஆகும். தீர்க்காயுள் கிடைக்கும்
பதினான்காம் நாள் - சதுர்த்தசி - பாவங்கள் நீங்கும் . வருங்கால சந்ததிக்கு நல்லது நடக்கும்.
பதினைந்தாம் நாள் - முன் சொன்ன அத்தனை செல்வமும் நமக்கு கிடைக்க நம் முன்னோர்கள் ஆசி வழங்கும் நாள்.
பிள்ளைகளுக்கு வரலாற்று தலைவர்கள் கதைகளை சொல்லித்தருவதுப்போல நம்ம முன்னோர்கள் பத்தி நல்லவிதமா சொல்லித்தரனும். உன் அப்பாவை பெத்த தாத்தா இருக்காரேன்னு குறைக்கூறாம அவங்களைப்பத்தியும், அவங்க பேரு தொழில்ன்னு சொல்லித்தரனும். குறைஞ்சது நாலு தலைமுறை பத்தியாவது சொல்லித்தரனும்.. இந்நாளில் தர்ப்பணம் கொடுப்பது நமக்கு மட்டுமில்ல. நம்ம எதிர்கால சந்ததிக்கும் நல்லது. அப்படி தர்ப்பணம் கொடுக்க இயலாதவங்க வழக்கம் இல்லாதவங்க வீட்டிலேயே மறைந்த தாத்தா, பாட்டி, அவங்க அப்பா அம்மாவை நினைத்து வணங்கலாம். பண்டிகைன்னாலே இல்லாதவங்களுக்கு கொடுப்பதற்கும்தான். அதனால, நம்மால முடிஞ்சளவுக்கு தான தர்மம் செய்வோம்..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.
வலைவழி வராதவற்களுக்கு பரிசு த ம 2
ReplyDeleteநான் வந்திக்கிட்டுதான்ப்பா இருக்கேன். உங்க கடைசி பதிவு முகநூலில் பகிர்ந்த பதிவுகள்தானே! அதுக்கு நான் வந்து கமெண்டியுமிருக்கேன்.
Deleteதர்ப்பணம் இறந்தவர்கள் மறைந்த திதியில் கொடுக்கலாம். அல்லது பரணியில், ஏகாதசியிலோ கூடாக கொடுக்கலாம். அமாவாசை மிகச் சிறப்பு. மூன்றாம் வாக்கு.
ReplyDeleteஒ. பரணியிலும் ஏகாதசியிலும் கொடுப்பதை இப்பதான் சகோ கேள்விப்படுகிறேன். எங்க ஊர் பக்கம் இறந்த நாளில் மட்டும்தான் வீட்டிலேயே புரோகிதரை கூப்பிட்டு திவசம் கொடுப்பாங்க. அதும் முதலிரண்டு வருசத்துக்கு. அப்புறம் வெறும் படையல் மட்டும்தான்.
Deleteபடமும் பகிர்வும் நன்று
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவிவரங்கள் சிறப்பு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteமறுதளிக்கிறேன் மேம் நான் இருக்கும் போடு திரஸ்கரித்து விட்டு இறந்தபின் கடன் என்பதெல்லாம் ஐதிகம் என்னும் பெயரில் சிந்திக்கவிடாமல் செய்யும்வழி போல் தோன்று கிறது நான் இதுவரை எந்த தர்ப்பணமோ திதியோ செய்ததில்லை
ReplyDeleteஎனக்கும் இதுலாம் நம்பிக்கை இல்லப்பா. இருக்கும்வரை கண்டுக்காம விட்டுட்டு இறந்தபின் பிண்டம், திதிலாம் ஓவர் ஆக்டிங்க்
Delete