Wednesday, September 20, 2017

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - மௌனச்சாட்சிகள்


சென்னை .. இந்த பேருக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன். பறக்கும் ரயில், பளபளக்கும் ஹோட்டல், வானுக்கு போட்டி போடும் கட்டிடங்கள், அல்ட்ரா மாடர்ன் பெண்கள், அப்பா, அம்மா முதற்கொண்டு நிம்மதி தவிர கிடைக்காத பொருள் ஏதுமில்ல. கல்வி, மருத்துவம், கலை, பொழுதுபோக்குன்னு வாழ்க்கைக்கு தேவையான அத்தனை அம்சமும் இங்கு கிடைக்கும். எல்லா தொழிலுக்கும் வாய்ப்புண்டு. உண்மை, கடின உழைப்பு இருந்தா சென்னைல பொழைச்சுக்கலாம். அதனாலதான்,   கெட்டும் பட்டணம் போய் சேருன்னு சொன்னாங்க போல. ஆனா பாருங்க.. இன்னிக்கு பட்டணம் வந்து கெட்டுப்போனவங்கதான் அதிகம்.  

முடிவெது?! தொடக்கமெது?!ன்னு   பிரம்மாண்டமாய் உருவெடுத்திருக்கும் சென்னை,  ஒருக்காலத்தில் சிறுசிறு கிராமங்களாகத்தான் இருந்தது அப்போல்லாம் அடையாறுக்கும், மயிலாப்பூருக்கும் இடையில் ஊர்களே கிடையாது.  வெறும் வயல்வெளிகளும், தோட்டங்களும்தான் இருந்தது. அடையாறிலிருந்து மயிலாப்பூர் கிராமத்திற்கு செல்ல ஒரு நீண்ட பாதை மட்டுமே இருந்ததாம். இன்று, அங்கு கஸ்தூரிபாய் மாடி ரயில்வே இருக்கும் பாதையில் மக்கள் நடமாடக்கூட இடம் இல்லாத அளவு கூட்டம். ஆனா, அன்று அது மிகப்பெரிய ஓடை!! பெரிய வயல் வரப்புக்களை கொண்ட வயல்வெளி. அந்த வயல்வெளிகளுக்கு தண்ணீர், இன்றைய IITயின் உள்இருக்கும் மிகப்பெரிய குளத்தில் இருந்துதான் தண்ணீர் பாசனம் நடந்ததாம். இன்று அந்த குளம் IIT  யில் இருக்கிறது. அக்குளத்தில் தண்ணீரும் இல்லை. தண்ணீர் இருந்தாலும் அதை பாய்ச்ச  வயல்வெளிகளும் இல்லை ... :-(கோடம்பாக்கத்தில் 1953-1954-களில், காலக்கட்டங்களில் சொற்பமான தியேட்டர்களே  இருந்தன.  மவுண்ட் ரோட்டின் மையப்பகுதியில் கெயிட்டி, கேஸினோசித்ராநியூகுளோப்வெலிங்டன்நியூ எல்பின்ஸ்டன்,மிட்லேண்ட், ஓடியன்,பிளாஸா,பாரகன்.   திருவல்லிக்கேணியில் ஸ்டா ர், பிராட்வேயில் பிராட்வே,பிரபாத்,மினர்வாவால்டாக்ஸ் ரோட்டில் ரீகல்.  தங்கசாலையில் கிரவுன்,கிருஷ்ணாஸ்ரீமுருகன் டாக்கீஸ்.  வண்ணாரப்பேட்டையில் பாரத், மகாராணி,மகாராஜாபுரசைவாக்கத்தில் ராக்ஸி கெல்லிஸில் உமாஅயனாவரத்தில் சயானி மயிலாப்பூரில் கபாலி, காமதேனுதியாகராயநகரில் பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்குச் சொந்தமான ராஜகுமாரிசைதாப்பேட்டையில் நூர்ஜஹான்இவைகள் எல்லாம் இப்பொழுது இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லை. ன்று இரண்டு விடுபடலாம் . அதுவும் உறுதியாக தெரியவில்லை .
       (Rare photographs of Arni in southern India portraits of the Jaghiredar of Arni and his family,)

சென்னை கிராமம் நூற்றாண்டுகள் பழமை கொண்டது. ,.    வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இனி இதிலிருந்த கிராமங்கள் எப்படி உருத்தெரியாமல் போனதோ அதேபோல் அந்த கிராம்களின் பெயர்களும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டன.

மதராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட சென்னையை ஆட்சி செய்ய இங்கிலாந்து அரசால் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மதராஸ் கவர்னராக இருந்தார். அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே, வெள்ளையர்களுக்கு உதவி வேலைகளைச் செய்ய அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ஜார்ஜ் டவுனாக உருவானது. பிறகு கோல்கொண்டா சுல்தானின் நிர்வாகத்தில் இருந்த திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் ஆகிய கிராமங்களை விலைக்கு வாங்கி நகரின் எல்லையை விரிவுபடுத்தினார் கவர்னர் யேல். கோட்டைக்குள் இருந்த குதிரை லாயத்தால் சுகாதாரப் பிரச்சினை எழுந்தது. இதனால் குதிரைகளை மேய்க்க ‘பிளாக் டவுன்’ அதாவது கறுப்பர்கள் நகரம் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கே போதிய மேய்ச்சல் நிலம் இல்லை. மேய்ச்சல் நிலமும் நீர்வளம் நிறைந்த பகுதியைத் தேடியபோது, கண்களில் பட்டது ஆற்றுக்கரையில்(அடையாறு) இருந்த திருப்புலியூர். அதுதான் இன்றைய கோடம்பாக்கம்.

ஆடு மாடுகளை நம்பி வாழும் ஆயர்குடி மக்கள் இங்கே அதிகம் வாழ்ந்தனர். கர்நாடக நவாபுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்தப்பகுதி, அவர்களது குதிரைப்படை லாயமாகவும் இருந்தது. நவாபுகளிடமிருந்து முதல்தரமான குதிரைகளை வாங்கிய யேல் நிர்வாகம், புலியூருக்குத் தனது குதிரைகளின் லாயத்தை மாற்றியது. நவாபுகள் தங்கள் குதிரைப்படை லாயத்தை உருது மொழியில் ‘ கோடா பாக்’ என்று அழைத்தனர்.கோடா பாக் என்பதற்குக் குதிரைகளின் தோட்டம் என்பது பொருள். கோடா பாக் காலப்போக்கில் கோடம்பாக்கம் என்று மருவியதாகச் சொல்கிறார்கள் சென்னை வரலாற்றை ஆய்வுசெய்தவர்கள். 
கோடம்பாக்கத்திற்கு இன்னொரு விளக்கமும் உள்ளது.  'கோடா' என்ற உருதுச் சொல்லுக்கு 'குதிரை' என்றும், 'பாக்' என்பதற்கு 'இடம்' என்றும் பொருள். கோடா+பாக் = 'கோடாபாக்' என்ற தமிழ் உச்சரிப்புச் சொல் திரிந்து நாளடைவில் 'கோடம்பாக்கம்' என்று ஆகிவிட்டது.  அதிருக்கட்டும். குதிரைக்கும் கோடம்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?.

அது என்னவென்றால், ஆங்கிலேயரின் சென்னை வருகைக்கு முற்காலத்தில், ஆற்காட்டை ஆண்டு வந்த 'நவாப்' என்னும் முஸ்லிம் அரசர்கள், மேற்குத் திசையிலிருந்து கிழக்கே உள்ள சென்னப்ப நாயக்கன் பட்டினத்திற்கு தம் பரிவாரங்களுடன் வருவார்கள். அப்போழுதெல்லாம் நீண்ட தூரம் பயணித்து வந்த குதிரைகளிலிருந்து இறங்கி, இந்த இடத்தில் இளைப்பாறி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அவர்களைச் சுமந்து ஓடிவந்த குதிரைகளுக்கும் போதிய ஓய்வு கொடுப்பார்கள். அவ்வாறு தமது குதிரைகளை நிறுத்தி வைத்து ஓய்வும், உணவும் கொடுத்த அந்தக் குறிப்பிட்ட  சிற்றூர்தான் நாளடைவில் 'கோடா பாக்' என்றும், பிறகு 'கோடம்பாக்கம்' என்றும் வழங்கலாயிற்று என்று அதன் வரலாறு கூறுகின்றது.

கோடம்பாக்கத்தைச் சார்ந்து இருக்கின்ற 'சாலிக்கிராமம்' என்பதும் காரணப்பெயர்தான். எப்படி என்றால் 'சாலிகன்', 'சாலியன்' என்ற சொல்லுக்கு 'கைத்தறி நெசவாளன்' என்று பொருள். ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் 'சாலியர்' குடும்பங்கள் நிறைந்திருந்து, நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது. இதனால் 'சாலிக்கிராமம்' என்னும் பெயர் உண்டானது. இங்கு நேர்த்தி மிக்க புடவைகள் நெய்யப்பட்டன.  60 ஆண்டுகளுக்கு முன்பு, 'கோடம்பாக்கம் புடவை' புகழ் பெற்றிருந்தது. ஒருமுறை உடுத்திய பெண்கள் அதை விரும்பி உடுத்தியதால் அதனால் சென்னை வந்து செல்பவர்கள் , நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நிறைய புடவை வாங்கி இருக்கிறேன் செல்வர். இன்றைக்கு கோடம்பாக்கமும், அதைச்சார்ந்த சாலிகிராமமும் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட அந்த அழகிய வண்ணவண்ண புடவைகள் மட்டும் இல்லை.


ஆங்கிலேய  வாணிபக் கழகத்தின் துணிமணிகளை வெளுப்பதற்கும், துவைப்பதற்கும், சாயம் போடுவதற்கும் பல சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்கள்) பெத்தநாயக்கபேட்டைக்கு வடப்புறத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய திறந்தவெளியும், பெருமளவு நீரும் கிடைக்காததால், கறுப்பர் பட்டினம் அழைக்கப்பட்ட  ஜார்ஜ் டவுன் வடக்கில் சென்று குடியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு இந்த இடம் வசதியாக மாறிப்போய் விட்டதால், அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த  இந்தப் பகுதிக்கு வண்ணாரப்பேட்டை ன்னு பேர் வந்து இன்னிக்கு வாஷர்மேன்பேட்டையாகிட்டுது. 


தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்திருப்பதால், திரு +வேர்+காடு திருவேற்காடு எனப்பேர் உண்டாச்சு. இன்றைய கோயம்பேடு அமைந்திருக்கும் பகுதியில் முன்னொரு காலத்தில்   கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைவனின் நாமத்தை துதித்ததால் அந்நாரைக்கு முக்தி கிடைத்ததாம். அதனால, அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' ன்னு அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என அழைக்கப்படுது.


பதினேழாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் தொண்டியிலிருந்து வந்த   இஸ்லாமிய துறவியான குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவர்   சென்னையின் "லெப்பை காடு" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர்வாசிகள் அவரை "தொண்டி ஆவர் நாயகன்" எனப்பொருள்படும்படி "தொண்டியார்" என   அழைத்தனர். பின்னர், காலப்போக்கில் லெப்பைக்காடு,  தொண்டியார்பேட்டை என்று அழைக்கப்பட்டு இப்போது தண்டையார்பேட்டை என இன்று அழைக்கப்படுது. 

ஒருக்காலத்தில் வில்வ மரங்கள்  நிறைந்த  பகுதியாக இருந்தது. வில்வம்=மாவிலம்=மாம்பலம் எனப் பெயர் பெற்றது. "மயிலை மேல் அம்பலம்" அதாவது, மயிலையின் மேற்குப் பகுதியில் இவ்விடம் அமைந்திருப்பதால் மேல் அம்பலம் பிந்நாளில் "மேற்கு மாம்பலம்" என மாறியதாக சொல்லப்படுது.   குரோம் லெதர் ஃபேக்டரி இருந்ததால் அப்பகுதியில் வசித்த மக்கள் இந்த இடத்தை குரோம்பேட்டைன்னு அழைக்க ஆரம்பித்தனர். ஒருக்காலத்தில் அல்லி மலர்கள் பூத்து குலுங்கும் நீர்த்தடங்களை கொண்டிருந்ததால் திரு+அல்லி+கேணி = திருவல்லிக்கேணி என அழைக்கப்படுது.  பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் என்றழைக்கப்படும் திராவிட கட்சியின்  மூத்த தலைவரும், சிறந்த தொழிலதிபருமாய் இருந்த இவரின்  நினைவாக டி.நகர் அழைக்கப்படுது.
இன்றைய சென்னையை அன்னிக்கே தோலுரித்து காட்டிய கண்ணதாசன் பாடல்வரிகளும், அதுக்குண்டான லிங்கும்... 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக 
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும் 
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே 
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே?
வெட்டவெளி நிலமில்லையே? 
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே?
அடி சக்கே..

வைக்கேலாலே கன்னுக் குட்டி 
மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது?
வைக்கேலாலே கன்னுக் குட்டி 
மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது?
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே? - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே?
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு 
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு 
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

தேராட்டாம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே 
எங்க ஏரோட்டோம் நின்னு போனா 
உங்க காரோட்டோம் என்னவாகும்?
ஹே..ஹே..

காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே?
காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே?
கெட்டுப்போன புள்ளிகளா 
வாழப் பட்டணத்தில் வந்தீகளா?
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே 
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் 
வித்தியாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ..

என்னதான் பேர் மாறினாலும், நாகரீகம், பழக்க வழக்கங்கள் மாறினாலும், அந்த இடத்துக்குண்டான பெருமை மறக்கப்பட்டாலும், ஊர்ப்பேர் மூலமா தன் பெருமையை பறைச்சாற்றியபடி  மௌனச்சாட்சியாய் இருக்கு.  அபா! மூச்சு வாங்குது. மிச்சம் மீதி ஊர்ப்பெயர்க்காரணத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்....  ஒரு ஜோடா ப்ளீச்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472220


நன்றியுடன்,
ராஜி.

24 comments:

 1. பழைய நினைவுகளில் படமும் பகிர்வும் அருமை. பாடலும் ஈடுகொடுக்கின்றன. பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. எனக்கு எப்போதுமே சென்னை அவ்வளவு ஈர்த்ததில்லை. சென்னையில் சாமான்கள் வாங்குவது பிடிக்கும்...அவ்வளவே...ஆனால் இங்குதான் வாழ்க்கை...ஹாஹாஹா

  நல்ல தகவல்கள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என் அப்பாக்கு சென்னைன்னாலே அலர்ஜி

   Delete
 3. பல தகவல்கள்...
  இப்போ இருக்கும் சென்னை , இப்படியே இன்னும் 100 வருடங்களின் பின்பும் இருக்குமோ..:).

  ReplyDelete
  Replies
  1. நூறு வருடங்கழிச்சு சென்னையே இருக்காதாம். ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க ஆதிரா!

   Delete
 4. எவ்வளவு விடயங்கள் பிரமிப்பாக இருக்கிறது நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. படித்ததை பகிர்ந்துக்கொண்டேன் அவ்வளவே!

   Delete
 5. டிராபிக் ஜாம் இல்லாவிட்டால் சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்,உங்க பெயர்பொருள் ஆராய்ச்சி அருமை:)

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் சென்னையை நோக்கி படையெடுக்கும்போது இதுமாதிரியான அசௌகரியங்களை சகிச்சுக்கத்தான் வேணும்

   Delete
 6. எனக்கே 1942-1944 களில் இருந்த மெட்ராஸ் நினைவுக்கு வருகிறது 1955-ல் ட்ராம் வண்டிகள் பிரசித்தம் நாங்கள் குடியிருந்த பைக்ராஃப்ட் ரோட் க்ராசில் சேரிகள் இருந்த நினைவு. அப்போதெல்லாம் எங்கு போகவு ம் நடைதான் சென்னையி ந் நினைவுகள் நிறையவே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ட்ராம் வண்டி பயணம் எப்படி இருந்துச்சுப்பா1? அதைலாம் பதிவிடலாமே!

   Delete
 7. படித்ததைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. என்ன இருந்தாலும் வெளிப்படையாக இன்ன புத்தகம் என்று நன்றி சொல்லி இருக்க வேண்டாமோ? மெட்ராஸ் என்றுமே நல்ல மெட்ராஸ்தான். எனக்கும் பிடித்த பாடல்.

  ReplyDelete
  Replies
  1. புத்தகத்தின் படமே போட்டிருக்கேனே அண்ணே!

   Delete
 8. வணக்கம் !

  அழகாய்ப் பழங்கதை அடுக்கிச் சொன்னாய்
  அறியா தறிந்தேன் நானே - தினம்
  பழசாய்ப் போகும் பகுத்தறி விற்கும்
  பாடம் எடுத்தல் வீணே !

  நல்ல வரலாற்றுப் பதிவும் கண்ணதாசன் பாடலும் அருமை

  தங்கள் ஓட்டுச் சேர்க்கப்பட்டது நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 9. அட! நிரம்ப தகவல் சேகரித்திருக்கிங்க ராஜி.

  ReplyDelete
  Replies
  1. படித்ததை பகிர்ந்துக்கிட்டேன் அவ்வளவ்தான் நிஷாக்கா

   Delete
 10. சுவாரஸ்யமான விவரங்கள். பல ஏற்கெனவே ஆங்காங்கே படித்தவை. சில புதியவை. படங்களும் சுவாரஸ்யம். சென்னை எனக்குப் பிடித்தமான நகரமில்லை. வேறு வழி இல்லாமல் இருக்கிறேன்!

  கோடம்பாக்கம் பற்றிச் சொல்லி வரும்போது போட்டிருக்கும் அந்தப் பெண்ணின் படம் பார்த்தால் சுஹாசினியின் முகச்சாயல் தெரிகிறது!!

  ReplyDelete
  Replies
  1. சுகாஷினி முகச்சாயல்!? அட ஆமால்ல..

   சென்னைல இருக்கவங்களுக்கு சென்னை பிடிக்காது..
   சென்னைக்கு வெளில இருக்கவுங்களுக்கு அது சொர்க்கபூமி

   Delete
 11. படமும் பகிர்வும் அருமை
  நன்றி சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 12. பாடலும் படங்களும் நன்று!தம 13

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete