நவராத்திரியின் நாலாவது நாளில் நாம் வணங்கப்போற பெண் தெய்வம் வைஷ்ணவி. இவள் சப்தகன்னிகளில் நாலாவது கன்னி. சங்கு, சக்கரம், கதை, வில்,வாள், சூலம், கத்தி, கேடயம் தாங்கி எட்டு கரங்களுடன், சிவப்பு நிற ஆடையணிந்து கருட வாகனத்தில் காட்சியளிப்பவள். இவள் பராசக்தியின் கைகளிலிருந்து பிறந்தவள். விஷ்ணுவின் சக்தி. பாரிஜாத மலருக்கு மனம் மயங்குபவள், சுக்கு, ஏலக்காய் பொடி தூவிய பானகம், எலுமிச்சை சாதம் இவளது நைவேத்தியம். தீயவற்றை சம்ஹரிக்க பிறந்தவள். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் கிடைத்திட வைஷ்ணவியின் அருள் மிக முக்கியம். நீல நிற மேனி கொண்டவள்.
தஞ்சை ஐய்யம்பேட்டைக்கு அருகில் நல்லிச்சேரி நந்திமங்கை என்ற ஊரில் வைஷ்ணவிதேவி சிவனை வணங்கி அவன் அருள் பெற்றாள் என்று புராணங்கள் கூறுகின்றது. இங்குள்ள சிவனுக்கு ஜம்புநாதஸ்வாமி என்றும், அம்பாளுக்கு அலங்காரவல்லி என்றும் பெயர். இந்த தலத்தில் பஞ்சாட்சரத்தை நந்திபகவான் ஓதி சிவனை பூஜித்ததால் இந்த ஊருக்கு நந்திகேஸ்வரம் என்ற பேரும் உண்டு. இந்த ஊருக்கருகில் வயல் வெளிகள் அதிகம் கொண்டதால் அங்கு விளைந்த நெல்களை இங்கு குமித்து வைத்ததால் நெல்லுச்சேரி என அழக்கப்பட்டு நல்லிச்சேரி என திரிந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.
இந்த கோவில் இருந்த இடம்,முன்பு அடர்ந்த காடாய் இருந்ததாம். இந்த கோவிலை மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கட்டியதாக கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோவிலில்தான் சப்த கன்னிகளில் ஒருவரான வைஷ்ணவி தேவி தனது பதினெட்டு வயதில் சிவ பெருமானையும் அம்பாளையும் ஒரு சேர வழிபட்டார். இவளுக்கு நாராயணி என்றும் பெயருண்டு.
108 சக்தி பீடங்களில் 51வது சக்தி பீடமான ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்ராவிலிருந்து அருள்புரியும் வைஷ்ணவிதேவியும், சப்தகன்னியருள் ஒருவரான இந்த வைஷ்ணவிதேவியும் வேறுவேறானவர்கள்.,
வைஷ்ணவிதேவியின் மூலமந்திரம்...
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி.
தஙகம் எனக்கு வேண்டாம்!த ம 2
ReplyDeleteதங்கம் வாங்கி தீபாவளிக்கு சீராய் எனக்கு கொடுத்துடுங்கப்பா
Deleteவணக்கம் !
ReplyDeleteஎனக்கும் தங்கம் வேண்டாம் ராஜி !
தமிழே போதும்....
அருமை அழகு படங்கள்
தம +1
எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை கேட்டு பார்த்துட்டு வேணாம்ன்னு சொல்லுங்க சகோ
Deleteஹா ஹா ஹா ...............
Deleteஎந்த வீட்டில் கேட்பது சகோ ?
வணங்கி கொண்டோம் வைஷ்ணவியை.
ReplyDeleteஅப்ப தங்க மழை பொழியும்.
Delete#தங்கம் கிடைக்க வணங்க வேண்டிய பெண் தெய்வம்#
ReplyDeleteஇது சாத்தியம் ஆகக் கூடியது என்றால் உலகத்தில் உள்ள தங்கம் எல்லாம் இந்தியாவில்தான் இருந்து இருக்க வேண்டும் :)
ம்ம்ம்ம்ம் ஆமாம்ண்ணே. மனசு திருப்திக்குதான் கடவுளே தவிர, வரம் வாங்க இல்லை.
Deleteவைஷ்ணவிதேவியை வணங்குகிறோம். தகவல்கள் சிறப்பு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteநல்லிச்சேரி சென்றுள்ளேன். இன்று மறுபடியும் பதிவு மூலமாக. நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteகட்வுளை வேண்டி தங்கம் வாங்க முற்படலாமா
ReplyDelete