Wednesday, September 13, 2017

மௌனராகத்தின் நாயகன் - மௌனச்சாட்சிகள்


எங்க குலத்தொழில் நெசவுங்குறதாலயும், அதிகப்படி வருமானத்துக்காகவும் என் அப்பா, வேலைக்கு போய் வந்த ஓய்வு நேரத்துல தறி நெய்வார். அப்பா பாட்டு பிரியர். ரேடியோவிலிருந்து வொயர் கனெக்‌ஷன் கொடுத்து பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு பாட்டு கேப்பார். அது ஒரு தனி எஃபெக்ட் கொடுக்கும் பாட்டுக்கும், மியூசிக்குக்கும்... டிவிக்கள் கிராமங்களில் தலைநுழைத்த காலக்கட்டம் அது.  அறிவியல் முன்னேற்றத்தோடு என் அப்பாவின் ரசனையும் முன்னேறினதன் விளைவு  வீட்டுக்கு டேப் ரெக்கார்டர் வந்துச்சு... அதுக்கும் அதே பானை ஸ்பீக்கர்தான்... அப்பா இன்னும் முன்னேறி டிவியும், ஸ்டீரியோ எஃபக்ட் கொண்ட டேப்ரெக்கார்டர் வாங்கினார். 1982 இல்ல 83 இருக்கும்ன்னு நினைக்குறேன். அப்பவே அதன் விலை 3000ரூபா. டேப்ரெக்கரோடு ரேடியோவும் இருந்துச்சு.. டிவியை விட டேப்ரெக்கார்டரே என்னை ஈர்த்துச்சு. ஏன்னா, அப்ப டிடி மட்டுமே. அதுல எப்பயுமே இந்திதான். மாலைல ஓரிரு மணிநேரம் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதும் நாடகம், செய்திகள், ஜ்னூன், வயலும் வாழ்வும் மாதிரி நிகழ்ச்சிகள்தான். அதனால் வீட்டிலிருந்தால் டேப்ரெக்கார்டரோடு பொழுது போக்கினேன்... பேசி ரெக்கார்ட் பண்ணி போட்டு கேக்குறது.. விதி, சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், பந்தம்... இதுமாதிரியான படங்களின் வசனங்கள் கொண்ட கேசட்டுகள் மட்டுமே கேட்டுக்கிட்டிருப்பேன்...
பருவங்கள் மாறியது.  அப்பலாம் வீட்டில் நடக்கும் விசேசத்துக்கு பந்தல் போட்டு, சீரியல் பல்ப், மைக் செட் போடுற வழக்கம் இருந்துச்சு. எங்க வீட்டு விசேசத்துக்கும் அப்படி நடக்க 1989ல  சோலைக்குயில் படத்து கண்ணுல நிக்குது.. நெஞ்சுல சொக்குது மானே... பாட்டு கேட்க நேர என்னை ஈர்த்துச்சு...  மனசுக்குள் எப்பயும் அந்த பாட்டுதான் ரிவைண்டிங்... , ஸ்கூல் டான்ஸ்ல கங்கைக்கரை மன்னனடி... பாட்டுக்கு ஆட.. அப்பாவை கேசட் வாங்கி வரச்சொல்லும்போது அதுல, வருசம் 16, சோலைக்குயில் படமும் சேர்ந்து வர கேசட் கதறி கதறி அழுது கெஞ்சுற அளவுக்கு அதே பாட்டுதான். பாட்டு ஈர்த்ததே தவிர யார் நடிச்சாங்கன்னுலாம் தெரிஞ்சுக்க விரும்பல.  வீட்டு விசேசத்துல நைட்ல டெக் போட்டு படம் காட்டுறதும் அப்ப ஒரு வழக்கம். அக்கா கல்யாணத்துல இந்த படங்களை பார்க்க நேர அன்னில இருந்து கார்த்திக்கை பிடிச்சு போச்சு.  பிடிச்சதுலாம் காலப்போக்கில் பிடிக்காம போற அதிசயம்  நிகழும் ஈ லோகத்தில் இத்தனை காலமும் மாறாம இருக்குறது கார்த்திக் மீதான ரசனை மட்டுமே! அவர் ஈர்த்த அளவுக்கு எந்த நடிகரும் இந்தளவுக்கு ஈர்த்ததில்லை....  அதுக்கப்புறம்,  எப்பயும் கார்த்திக்.. கார்த்திக்.. கார்த்திக்தான்.... 
 13/9/1960ல பிறந்திருக்கார். 1977ல அலைகள் ஓய்வதில்லை படம் வந்திச்சு.  எப்படி நடிப்பாரோன்னு பயந்துக்கிட்டிருந்த அவர் அப்பா முத்துராமனுக்கு  அந்த படம் ஹிட்டுன்னுகூட  தெரியாது.  அந்த வருசம்தான் முத்துராமன் நெஞ்சுவலியில் இறந்துட்டாரு. ஆலோசனை சொல்லி கைக்கொடுக்க ஆளில்லாம  கொஞ்சம் வருசங்களுக்கு பெருசா  எதும் ஹிட் கொடுக்கவே இல்ல. ரஜினி, ராதிகா நடிச்ச நல்லவனுக்கு நல்லவன் படத்துல  வில்லன் வேஷம்ன்னு சொல்லி ஏ.வி.எம். நிறுவனத்தார் கேட்க வில்லன் வேஷமான்னு யோசிச்ச கார்த்திக்கை எங்க நிறுவனத்தின் அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோன்னு வாக்களிச்ச பின் நடிச்சதா ஏ.வி.எம் சரவணனே சொல்லி இருக்கார்...
ஆவரேஜ் ஹீரோவா இருந்த கார்த்திக்கை நவரசநாயகனா காட்டுனது மௌனராகம் படத்துலதான்...  அதிகபட்சம் கால்மணிக்கூர் படத்துல வந்தாலும் காதல், குறும்பு, சோகம், கோபம்ன்னு அத்தனை அம்சத்தையும் காட்டி நடிச்சிருப்பார். படத்தின் நாயகன் மோகன்னாலும் படத்து பேரை கேட்டதும் நினைவுக்கு வர்றது கார்த்திக்தான். அந்த படத்துக்கப்புறம் கார்த்திக் கேரியர் டாப் கியர்ல போச்சு.. அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, கண் சிமிட்டும் நேரம், பாண்டி நாட்டு தங்கம், கிழக்கு வாசல், பொண்ணுமனி, முத்துக்காளைன்னு போய்க்கிட்டிருந்த கார்த்திக் கிராஃப்ல மீண்டும் ஒரு சறுக்கல்... எல்லாமே சொதப்பிக்கிட்டு வந்துச்சு...
மௌனராகத்துக்குபின் அக்னிநட்சத்திரத்தில் கார்த்திக்கை வச்சு இயக்கினார் மணிரத்தினம். பிரபு இன்னொரு நாயகன்.  பிரபு பெரிய வீட்டு பிள்ளையாய், போலீசாய் முறுக்கி காட்டி வருவார். காதல் காட்சியிலயும் அந்த ரஃப்னெஸ் தெரியும்.  ஆனா கார்த்திக் சாக்லேட் பாயா வந்து எல்லாரையும் கட்டிபோட்டார். நான் அந்த படத்துக்காக உடம்பை ஏத்தி கஷ்டப்பட்டு நடிச்சு வராத பேரை சும்மா கேமரா முன்னாடி நின்னு பேர் வாங்கிட்டு போயிட்டான் கார்த்திக்ன்னு பிரபு சொல்லி இருக்கார். 

மணிரத்தினத்தின் தளபதி படத்துல கலெக்டர் வேசத்துக்கும், ரோஜா படத்து ஹீரோவாகவும் கார்த்திக்தான் முதல்ல நினைவுக்கு வந்திருக்கார். முதல்ல தளபதி படத்துக்காக போய் கேட்டபோது, என்ன நினைச்சாரோ தெரியல, அந்த படத்தை தவிர்க்க அதிக சம்பளம் கேட்டிருக்கார் கார்த்திக் அதனால் அந்த ரெண்டு படத்தையும் நடிக்க தவறவிட்டிருக்கார். பலவருசங்கழிச்சு ராவணன் படத்துலதான் மீண்டும் ரெண்டு பேரும் கைக்கோர்த்திருக்காங்க. பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என்ட்ரிக்கு பறக்காத விசில் கார்த்திக் என்ட்ரிக்கு பறந்துச்சு.  கார்த்திக்குண்டான இடம் இன்னும் சினிமாவில் நிரப்பப்படாமயே இருக்குன்னு மணிரத்தினமே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார். 


மிஸ்டர் சந்திரமௌலி... மிஸ்டர் சந்திரமௌலி... வசனத்தை எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி நடிக்காத நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும் இதுவரை இல்லை. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு கார்த்திக் குரல்ன்னா அல்வா சாப்பிடுறமாதிரி... கார்த்திக் ஹே.. ஹேய்..ன்னு சொல்லி கைகாலை ஆட்டி, குழைஞ்சு பேசி ஓவர் ஆக்டிங்க் செய்ய மட்டுமே தெரியும்ன்னு சொன்னவங்க வாய மூடுற மாதிரி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்... படத்துலயும், ஆனந்தபூங்காற்றே... படத்துலயும் நடிச்சு அசத்தி இருப்பார். ஹீரோவா நடிச்சிட்டிருக்கும்போதே அஜீத், பிரபுதேவா, விஜயகாந்த்... மாதிரியான நடிகர்கள் படத்துல கெஸ்ட்ரோல்லயும் நடிச்சிருக்கார். ஆறு பாடல்களை பாடி இருக்கார். 

பொதுவா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ரீ எண்ட்ரிங்குறது ஒருமுறைதான் வரும். ஆனா கார்த்திக்குக்கு ரெண்டாவது முறையும் வந்துச்சு..  சுந்தர் சி இயக்கத்துல 1995ல உள்ளத்தை அள்ளித்தா படத்துமூலமா மீண்டும் பிசியானார் கார்த்திக். பூவரசன், மேட்டுக்குடி, பிஸ்தா, கோகுலத்தில் சீதைன்னு அவர் கொடுத்த ஹிட்டுகள் ஏராளம். கோகுலத்தில் சீதை படத்துல கார்த்திக் ரிஷியாவே வாழ்ந்திருப்பார். அந்த படத்து சாயலும் எல்லா நடிகர்கள்கிட்டயும் பார்க்கலாம்.  இதுக்கிடையில், கார்த்திக்கின் கவனம் அரசியல் பக்கமும் பார்வை போனது ...  அரசியல்ல மூழ்கி முத்தெடுத்தவங்க வெகுசிலரே! மூழ்கி காணாம போனது நிறைய பேரு. ஆனானப்பட்ட சிவாஜியே அரசியல்ல ஜெயிக்க முடியாதபோது தான் எம்மாத்திரம்ன்னு நினைச்சிருக்கனும்.. சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் அரசியல்ல இறங்கி சினிமாவை இழந்துதான் மிச்சம்...

பொதுவா, நீச்சல் தெரியாம நீரில் முங்குறவங்களை,  ரெண்டு முறை வெளித்தள்ளி காப்பாத்த பார்க்குமாம். அதுல தப்பிச்சுக்கலைன்னா மூணாவது முறை முங்கிதான் போகனும். ஆனா, கார்த்திக் விசயத்துல இந்த விதி உடைக்கப்பட்டிருக்கு...  மாஞ்சா வேலு படத்துல கெஸ்ட்ரோலும், அனேகன் படத்துல வில்லனாவும் மீண்டும் கைக்கொடுத்து அவருக்குன்னு இன்னும் ரசிக பட்டாளம் இருக்குங்குறதை  அவருக்கு உணர்த்தி இருக்கு. இப்ப சூர்யாவோடு ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல வில்லனா கைக்கோர்த்திருக்கார்.  இந்த வாய்ப்பையாவது தக்க வச்சுப்பாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்..... உங்களுக்கு கைக்கொடுக்காத அரசியலை விட்டு, உங்களுக்குன்னு இன்னமும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை கவனிங்க கார்த்திக் சார்... 

காதல் மன்னன், காதல் இளவரசன், நடிகர் திலகம்ன்னு எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லாரும் உணர்ச்சிகளை வெளிக்கொணர கொஞ்சம் மெனக்கெடனும்... உங்களுக்கு அதுலாம் வேண்டவே வேண்டாம். தானாவே வரும். நவரச நாயகன்ங்குற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அந்த பட்டம் மௌனமாய் ராகம் பாடியப்படி... உங்கள் நடிப்பு திறமைக்கு மௌனச் சாட்சியாய் என்னிக்கும் உங்களுக்காகவே இருக்கும்... 

ஹாப்பி பர்த்டே கார்த்திக் சார்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி. 

15 comments:

 1. கோகுலத்தில் சீதை டாஃப் க்ளாஸ்...

  ReplyDelete
  Replies
  1. எல்லாபடங்களிலும் எந்த கதா பாத்திரமானாலும் ,கிராமத்து நாயகனாகவோ ..இல்லை சிட்டி பாய்யாகவும் கச்சிதமாக பொருந்தி நடிக்கும் ஒரே நடிகர் ...அண்ணா .இன்றைய தமுறை ரசனை மாறிவிட்டது ..நடிப்பும் மாறிவிட்டது ..நம் தலைமுறையில் ரசிக்கவைத்த நடிகர் ...

   Delete
 2. மௌனராகம் - சிறிது நேரமே வந்தாலும் கலக்கல்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அண்ணா அது மறக்கமுடியாத படம் ...பாடல் ..இசை ..நாட்டியம் ..குறும்பு என அனைத்தும் ஒரே இலையில் பரிமாறிய விருந்து ..

   Delete
 3. சாதியை நம்பி அரசியல் செய்து காணாமல் போய்விட்டாரே :)

  ReplyDelete
  Replies
  1. அரசியல் எல்லோருக்கும் வசப்படுவதில்லையே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் சகோ

   Delete
 4. அவர் பேசும் ஸ்டைலே தனி! நல்ல திறமையான நடிகர். இடையில் சில வேண்டாதவைகள் அவரைத் தொற்றிக் கொள்ள ரொம்பவே தடுமாறினார்...இப்போது கொஞ்சம் மீண்டும் வந்திருக்கிறார்...அரசியல் யாரத்தான் ஆட்டுவிக்கலை அதுவும் சினிமா நட்சத்திரங்களை..

  ReplyDelete
  Replies
  1. ரஜினிக்கு சொன்ன டயலாக் கார்த்திக்குதான் பொருந்தும்... வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகலைன்னு... ஆனா, முடி மட்டும்தான் போயிட்டுது

   Delete
 5. ஓ... கார்த்திக்குக்கு பிறந்த நாளா? கார்த்திக் புராணம் சுவாரஸ்யம். அவர் நடிப்பில் நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும். ஸ்ரீதர் படத்திலும் நடித்திருக்கார் கார்த்திக். நி நி.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் அந்த படமும் கார்த்திக்குக்கு ஒரு டர்னிங்க் பாயிண்டாச்சே

   Delete
 6. கார்த்திக்கை மறந்து இருப்பாங்க நல்லா ஞாபகப்படுத்தி இருக்கீங்க நன்றி த.ம வாக்குடன்

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக்கை மறக்குறதா?! நோ சான்ஸ் சகோ..

   Delete
 7. அவரோட கிழக்கு வாசல் படம் ரொம்ப பிடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. பொன்னுமணி, வருசம் 16, உள்ளத்தை அள்ளித்தா படம்லாம் விட்டுட்டியேப்பா

   Delete
 8. அலசல் அருமை!பழைய படங்கள் த ம 8

  ReplyDelete