(படங்கள் செல்போன்ல எடுத்தது. கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும்)
சிவன் கொடுத்த சாபத்திலிருந்து நிவர்த்தி பெற, சிவனின் ஆலோசனைப்படி காவிரி நதியின் தென்புறத்தில் பார்வதி மயில் ரூபம்கொண்டு தவமிருக்கிறாள். அவள் தவத்தினை கண்டு மெச்சிய சிவன் ஆண் மயில் உருவங்கொண்டு, பெண்மயிலாய் இருக்கும் பார்வதியுடன் நாட்டியம் ஆடியக்காரணத்தால் மயிலாடிய காவிரித்துறைன்னு பேர் உண்டாச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை இந்த ஊருக்கு மாயவரம். திருமுறைல மயிலாடுதுறைன்னு பேர் இருக்குறதை சொல்லி எம்.ஜி.ஆர் மயிலாடுதுறைன்னு பேர் வச்சாராம்.
மயிலாடுதுறையில் இருக்கும் புண்ணிய தீர்த்திற்கு காவிரி துலாக்கட்டம்ன்னு பேரு. ஒவ்வொரு ஐப்பசி மாசமும் காவிரி தீர்த்தவாரி இங்க நடக்கும். கங்கையில் தினமும் குளிப்பதுக்கு நிகரான புண்ணியம் இந்நாளில் இங்கு நீராடினால் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கரையில் நடக்கும் காவிரி தீர்த்தவாரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காவிரிக்கரையில் இருக்கும் சிவன் ஆலயங்களில் இருக்கும் நந்திகளில் இரண்டு மட்டுமே மேற்கு நோக்கி இருக்கு. ஒன்று கர்நாடகாவில், மன்றொன்று இங்கொன்று. காவிரியின் நடுவே தனிச்சன்னிதியில் நந்தி பகவான் அருள்பாலிக்கிறார்.
அன்றிலிருந்து தினம் ஒன்றாக 27 நட்சத்திரங்களை குறிக்கும் விதமாக 27 பெண்குழந்தைகளை அலங்கரித்து அமரவைத்து அவrகளுக்கு அணிவித்து உடைகள், மங்களப்பொருட்கள் கொடுத்து ஆரத்தி எடுத்து வழிபடும் கன்னிகா பூஜை உட்பட நடத்துறாங்க. எல்லாம் சரி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தவங்க அதுக்குண்டான ஏற்பாடுகளை சரிவர செய்ய தவறிட்டாங்க. உடை மாற்ற மறைவிடம், கழிவறைன்னு செய்ய தவறிட்டாங்க. பக்தர்கள் ரொம்ப அவஸ்தைப்பட்டதை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சாமானியர்களை நினைவில் கொண்டு சரியா திட்டமிட கத்துக்கோங்கப்பா. .
முகநூலில் பார்த்ததும் பயந்தது....
முகநூலில் பார்த்ததும் கான்டானது....
நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
யோசிச்சு பதில் சொல்லுங்க... ஊர் சுத்தின அலுப்பு. தூங்கிட்டு வாரேன்..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472005
நன்றியுடன்,
ராஜி.
கார்ட்டூன் ஹாஹாஹாஹாஹா...ரசித்தோம்...
ReplyDeleteநானும்தாங்க சகோ
Delete#அனைத்து ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை#
ReplyDelete# லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்#
கோடிக்கணக்கான என்று சொலுங்கள்,பாவிகளுக்கு இங்கே பஞ்சமா:)
ஆமாம்ண்ணே. பிறந்த ஒரு வாரம் ஆன குழந்தையைக்கூட கொண்டு வண்டிருந்தாங்க.
Deleteஅது பாவி இல்லை ,அப்பாவி :)
Deleteபிஞ்சு குழந்தைகளைக்கூட பாவின்னு சொல்லும் உலகம் இது.
Deleteபடங்களுடன் பதிவை ரசித்தேன்.
ReplyDeleteபுதிருக்கு விடை அம்மியும் ஆட்டுக்கல்லும்!
விடை சரிதான் சகோ
Deleteகார்ட்டூனை ரசித்தேன் சகோதரியாரே
ReplyDeleteநன்றிண்ணே
Deleteபடங்கள் அத்தனையும் அருமை, பதிவில் நிரம்ப விடயங்கள் அறிந்தேன்பா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா
Deleteமூஞ்சிப்புத்தக படம் ஸூப்பர் மிகவும் இரசித்தேன் சகோ.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றிண்ணே
Deleteபெண்களை கண்டால் பேயும் இரங்கும் என்பது நாம் வாங்கும் (Pay) சம்பளத்தை குறிப்பதாகும்
ReplyDeleteபே எப்படி இரங்கும்?!
Deleteதெளிவா கடடுரைய கொடுத்து கடைசில பன்ச் வச்சிட்டீங்க சூப்பர்
ReplyDeleteகார்ட்டூன்...... ஹான்......
என்னையும் சேர்த்துக்கோங்க நானும் காண்ட் ஆயிட்டேன்
ம்ம் அதென்னமோ பொண்ணுங்கன்னா எளப்பம்தான் எல்லாத்துக்கும்
Deleteஇந்த சாக்குலெயாவுது துலாகட்டம் கொஞ்சம் சுத்தமாகி இருக்கும் என்று நம்பலாமா? நான் பார்த்த சமயம் கண்ணில் ரத்தம் வராததுதான் பாக்கி :-(
ReplyDeleteசுத்தமாகலம்மா. சரியான ஏற்பாடு ஏதும் செய்யல. கழிவறை வசதி இல்ல. உடை மாத்த மறைவிடம் இல்ல. நாங்க போன நேரம் விடிகாலைங்குறதால் இருட்டு விலகல, அதனால மூடி இருந்த கடையில் புடவையை கட்டி உடை மாற்றினோம்
Deleteப்ச்......... நேரம் இருந்தால் இங்கேயும் கொஞ்சம் எட்டிப் பாருங்கப்பா.
Deletehttp://thulasidhalam.blogspot.co.nz/2016/08/67.html
இந்தா வந்திக்கிட்டே இருக்கேன்ம்மா
Deleteஅவியல் நன்று! த ம 9
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Delete