கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.. அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு....
என்னாச்சு புள்ள! ரொம்ப குஷியா பாட்டு பாடிக்கிட்டு இருக்கே?!
என் தலையெழுத்து கருப்பா இருக்குற உன்னைய கட்டிக்கிட்டு இப்படிலாம் பாடி மனசை தேத்திக்க வேண்டியதுதான்?!
ஏய் யாரை பார்த்து கருப்புன்னு சொன்னே?! கண்ணன் கருப்பு, கருவிழி கருப்பு, கூந்தல் கருப்பு, மேகம் கருப்பு...
- போதும். பக்கம் பக்கமா டயலாக் விடாத! இதுலாம் ரஜினி நடிச்ச சிவாஜி படத்துல விவேக் சொல்லிட்டாப்ல! நீ எதாவது புதுசா சொல்லு பார்க்கலாம்.
புதுசாதானே?! பலவிசயம் சொல்றேன் வா! கருப்பு நிறம் அமங்கலம், சூனியம், அமானுஷ்யம்ன்னு ஒதுக்குறோம். ஆனா, கருப்பு நிறம் அச்சம், வீரம், அதிருப்தி, அமைதி, புரட்சி, எதிர்ப்பு என எல்லா எல்லா உணர்வுகளையுமே ஒருசேர பிரபலிக்கும் குறியீடு. கருப்பு நம்ம தமிழ்மண்ணிற்கு நெருக்கமான நிறமாவே இருந்திருக்கு. அதனால்தான் தமிழர்களின் நிறமும் கருமையா இருக்கு. நாம கும்பிடும் சாமிக்கும் கருப்பு பிடிக்கும் அதனால்தான் ஐயப்பனுக்கு விரதமிருக்கவுங்க கருப்பு நிற உடையை உடுத்துறாங்க, நம்ம சாமிக்கும் கருப்பண்ண சாமி, பெரிய கருப்புன்னு பேர் இருக்கு. ஆனா, நாமதான் கருப்பு நிறத்தை தாழ்த்தப்பட்ட சாதியின் நிறமா மாத்தி கருப்பு நிறத்தை ஒதுக்க ஆரம்பிச்சோம். எல்லாரும் எல்லா கடவுளையும் தொட்டு தொழும்போது கருப்பு நிறத்தைக்கொண்டு பேதம் பிரிக்கவில்லை. ஈசன், பெருமாள், வினாயகர், லட்சுமி, முருகன்ன்னு பெருதெய்வ வழிபாட்டில் ஒருசில இனத்தவர் ஈடுபட்ட பின்னரே கருப்பு தாழ்ந்த நிலைக்கு போனது..
கருமை நிறம் உழைப்பின் நிறம். நமது முருகன், சிவன், விஷ்ணு என அனைத்து தெய்வங்களும் கருமை நிறத்துடையவர்கள்தான். சினிமாப்பாடல்களில்கூட கருப்பு நிறத்தை சிலாகிச்சு பாடி இருப்பாங்க. ரஜினியின் கருப்பு நிறத்தை வச்சு புதுக்கவிதை படத்துல ஒரு பாட்டே உண்டு. ரஜினி, விஜயகாந்த், விஜய்சேதுபதி, ராதிகா, ரேவதின்னு கருமை நிறத்தவர்களின் வெற்றிப்பட்டியல் அதிகம்.
கருமை நிறம் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை உடையது. கருப்பு சட்டையைவிட வெள்ளைச்சட்டை சீக்கிரம் அழுக்காகும். ஆனா, நம்மை சீக்கிரமே சோர்வடைய வைக்கும். அதனால்தான் விளையாட்டு வீரர்கள்லாம் வெள்ளை நிற உடையை உடுத்துறாங்க. எந்த பொருளுமே 100 % கருப்பால் ஆனதில்லை. கருப்பு நிறத்தால் ஆன ஒரு பொருள்மீது நாம மஞ்சளாய், வெள்ளையாய் ஒளியை அடிக்கும்போது அந்த நிறத்தில் பட்டும் கருப்பாய் தெரியுதே தவிர, அது கருமை நிறமல்ல! 100% இயற்கையான, உண்மையான கருமை நிறம்ன்னா அது கருந்துளைகள்ன்னு சொல்லப்படும் black hole தான். அதும் 100%ன்னு சொல்லமுடியாது. 100% கருப்பை நானோ டெக்னாலஜி மூலமா கண்டுப்பிடிக்க ஆராய்ச்சிகள் நடக்குது.. இப்ப நாம கருப்புன்னு சொல்லப்படும் எதுவுமே நிஜமான கருப்பில்லை.. அதும் வெறும் ஒளியின் பிரதிபலிப்பு மட்டுமே! அதனால் இனியாவது கருப்புன்னு சொல்லி என்னைய மட்டுமில்ல யாரையும் கிண்டல் பண்ணாத தெரியுதா?!
இனி கிண்டல் செய்யல. ஆனா, இப்படிலாம் பேசி என்னைய கொலையா கொன்னியோ நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன். பேசியே இந்தாள் என்னைய சாவடிக்குறான்னு..
சரி, போய் கம்ப்ளைண்ட் பண்ணு. அதுக்குமுன் போலீஸ் POLICE க்கு அர்த்தம் சொல்லிட்டு போ.
போலீஸ்ன்னா காவலர்கள்ன்னு அர்த்தம். இது தெரியாதா?!
போங்காட்டம் ஆடாத. நான் கேட்டது அந்த வார்த்தையில் உள்ள எழுத்துக்கான அர்த்தம்.
தெரியாதே!!
P - Protective, O - Obedient, L - Law maintain, I - Inteligence, C - Character, E - Efficiency இதான் அந்த எழுத்துக்களான அர்த்தம்.. போலீஸ் என்னும் காவல்துறை..
போதும் மாமா! எனக்கு இப்பவே கண்ணை கட்டுது. இந்த மாதிரிலாம் டார்ச்சர் செஞ்சியோ கடுப்புல எனக்கு தலைவலி வரும். அப்புறம் எனக்கு ராத்திரியில் தூக்கம் வராது.
தூக்கம் வரனும்ன்னா இஞ்சிப்பால் போட்டு தரேன்.
இஞ்சியில பாலா?! எரிச்சலா இருக்குமே எனக்கு வேணாம் மாமா!
லேசாதான் எரியும் இஞ்சிப்பால் சாப்பிட்டா தூக்கம் வரும், சளித்தொந்திரவு நீங்கும். உடல் சுறுசுறுப்பாகும், கேஸ் ட்ரபுள் வராது, நுரையீரல் சுத்தமாகும்... இஞ்சியை தோல் நீக்கி கழுவி நசுக்கி முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின் சாறு இறங்கியபின் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக்கனும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் கிடைக்கும். . இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். இப்படி குடிச்சு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தொப்பை குறையும்.. ரத்தம் சீராகும்..
சரி ரொம்ப பேசியாச்சு.. பெண்கள் ஏன் நடுவகிட்டில் பொட்டு வைக்குறாங்கன்னு தெரியுமா?!
தெரியும். எனக்கும் வாட்ஸ் அப்ல அந்த படம் வந்திட்டுது. அதனால் ஓவரா பில்டப் கொடுக்காம நீ கிளம்பு மாமா!
தெரியாதோன்னு சொல்லவந்தேன் . இனி எதாவது என்னைய கேட்டு பாரு. அப்புறம் தெரியும் சேதி!!
ராஜி
இனி மேல் இந்த பக்கம் வந்தா ஏன்-னு கேளு...
ReplyDeleteநான் அண்ணன்கூடலாம் சண்டை போடுறதில்லையாக்கும்...
Deleteஇஞ்சிப்பால், மஞ்சள் பால், மிளகுப்பால் எல்லாம் சமீபத்துல இந்த சளித் தொந்தரவு, தொண்டைக்குன்னு குடிச்சு குடிச்சு...ஹப்பாஆஆஆ...ஆனா எங்க குடும்ப மருத்துவர் சொல்றது என்னனா பால் சேர்த்தா சளி கூடும்னு...ஸோ அப்புறம் பால் சேர்க்காம குடிச்சேன்..
ReplyDeleteபோலீஸ் விளக்கம் எப்பவோ எங்கேயொ வாசித்த நினைவு...
நெற்றிக் குங்குமம்....தகவல் அது...
ஹாங்க் கருப்பு வெள்ளை படங்கள் செம அழகா இருக்கு....நானும் சில படங்களை எடுத்துட்டு ப்ளாக் அண்ட் வொயிட்டா கேமரால மாத்துறதுண்டு..கருப்பு கலரும் பிடிக்கும்...
கீதா
பால் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும்ங்குறது உண்மைதான் கீதாக்கா. சிலர் பாலை தண்ணி சேர்க்காம திக்க்கா குடிப்பாங்க. அதும் தப்பு. அதும் சளியை கூட்டும்.
Deleteஎனக்கும் கருப்பு பிடிக்கும். அதனால்தான் உனக்கு கருப்பா மாப்ளை வாய்ச்சிருக்குன்னு என் தங்கச்சி கிண்டல் பண்ணுவா
ஐஞ்சுவையில் ஒரு சுவை குறைகிறது. புதிரோ?!!!
ReplyDeleteஅதே!
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
வண்ணங்கள் பற்றி எனகு வலைப் பூவில் ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன்
தேடிப்பார்க்கிறேன்ண்ணே!
Deleteகருப்பின் தகவல்கள் மிக சிறப்பு ராஜி க்கா..படங்கள் இன்னும் சிறப்பு
ReplyDeleteஇஞ்சி பால் செம்ம...
ஆஹா போலீஸ் ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு
Deleteஇஞ்சி டீ கேள்விப்பட்டிருக்கிறேன், குடித்திருக்கிறேன்(டீயில் மிகவும் பிடித்த டீ). அதென்ன இஞ்சிப்பால்?
ReplyDeleteஅதையும் குடித்து பார்த்துடுறேன்..
இஞ்சிச்சாறுதான் இஞ்சிப்பால்..
Delete//பெருதெய்வ வழிபாட்டில் ஒருசில இனத்தவர் ஈடுபட்ட பின்னரே//
ReplyDelete//நமது முருகன், சிவன், விஷ்ணு என அனைத்து தெய்வங்களும் கருமை நிறத்துடையவர்கள்தான். //
இரண்டு வரிகளும் வேறு வேறு செய்திகளைனா சொல்லுது.....
நம்ம நிறம் (தமிழர்கள் நிறம் பொதுவா) கருப்பு நிறம். அதுனால நமக்கு வெண்மை நிறம் மனசுல ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவ்வளவுதான். நமக்கு 'சப்பாத்தி, பரோட்டா, குருமா' மீது அதீத ஆசையும் வட நாட்டவர்களுக்கு 'இட்லி தோசை' ஆசையும் இருக்கறமாதிரி...