Wednesday, February 13, 2019

அர்த்தமில்லாத பீஷ்மரின் தியாகம் - வெளிச்சத்தின் பின்னே!

பலரின் தியாகத்தினாலேதான் ராமாயணம், மகாபாரதம்ன்ற இதிகாச கதைகளும், புராண, சங்க கதைகளும் கட்டமைக்கப்பட்டது.    அந்த வரிசையில்  இன்னிக்கு நாம பார்க்கப்போறது மகாபாரத கதைக்கு ஆணிவேர்ன்னு சொல்லப்படும் தியாக புருஷரான பீஷ்மரை பத்திதான்...  பெற்ற தாயால் கொல்லப்படவிருந்தவர்,  தகப்பனை பிரிந்து வளர்ந்தவர், இளமை ஊற்றெடுக்கும் பதின்ம வயதில் தந்தையின் ஆசை/காதல்/காமத்துக்காக தனது திருமண வாழ்க்கையே தியாகம் செய்தவர். நியாயமா தனக்கு கிடைக்க வேண்டிய அரியணையை விட்டுக்கொடுத்து, அந்த அரியணையில் அமர்ந்தவர்களுக்கு எந்தவித மனசங்கடமுமின்றி ஊழியமும் செய்தவர், குருவம்சத்தை காப்பேன் என சபதம் செய்தவர்.. இப்படி பீஷ்மரின் தியாகத்தை லிஸ்ட் போடலாம்.. அப்படிப்பட்ட தியாக புருசரின் கதையைதான் நாம இன்னிக்கு பார்க்கப்போறோம். 


Image result for பீஷ்மர்
வசிஷ்ட மகரிஷியின் கன்றான நந்தினியை அஷ்ட வசுக்கள் திருடியதால் அவர்களை பூமியில் பிறக்குமாறு சபிக்கிறார் வசிஷ்டர் தன் மனைவியின் வற்புறுத்தலால் இந்த திருட்டிற்கு தலைமை தாங்கிய தியா எனும் வசுவே சாபத்தின் காரணமாக பீஷ்மராக அவதரித்தார். மற்ற வசுக்கள் துணை நின்றனர் இதனால் அவர்கள் ஏழு பேரும் பிறந்தவுடன் மரணிப்பர் என்றும் பீஷ்மனே பலகாலம் வாழ்வான் என்றும் வசிஷ்டர் சாபமிட்டார்.  இந்த சாபத்தினால் சந்தனு மகாராஜாவிற்கும் கங்கைக்கும் அஷ்டவசுக்கள் மகனாக அவதரித்தனர் சாபத்தின் காரணமாக ஏழு பேரை பிறந்தவுடன் கொல்கிறார் கங்கா தேவி. என்ன செய்தாலும் தன்னை கேள்வி கேட்கக்கூடாதென கங்காதேவி திருமணத்தின்போது வரம் வாங்கி இருந்த காரணத்தால் சந்தனு எதும் சொல்லாமல் இருந்துவிட்டார்.  ஆனால் எட்டாவது குழந்தையை கொல்ல செல்கையில் தன் அளித்த வாக்கை மீறி கங்கையை தடுக்கிறார் சந்தனு.

King Shantanu, Ganga Devi and Bhishma
குழந்தைகளை கொன்றதற்கான காரணத்தை சொன்ன கங்காதேவி, தன் மகன்  தேவவிரதனை வளர்த்து சந்தனுவிடம் அளிப்பதாக வாக்களித்து, தனக்களித்த வாக்கினை சந்தனு மீறிவிட்டதால் பிரிந்து செல்வதாய் தன்னோடு அழைத்து சென்று  வேதங்களையும் வேதாங்கங்களையும்  வசிஷ்டரிடமும்  அரசனுக்குரிய கடமைகள் மற்றும் தர்மங்களை பிரகஸ்பதியிடமும், சாஸ்திரங்கள் மற்றும் அஸ்திரங்களை பரசுராமரிடமும்  கற்று தேர்ந்து, இளமைப்பருவத்தில் தந்தையிடம் வந்து சேர்ந்தார். சந்தனுவும் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டி மகிழ்ந்தார்.
KING SHANTANU MEET DEVAVRAT & ENTITLE HIM BHEESHMA (Devvrat's Bhishma pratigya - Great oath of Devvrat)  Ganga got released from curse when King Shantanu questioned her.
ஒருநாள் வேட்டைக்கு செல்லும்போது மீனவ பெண்ணான சத்தியவதிமீது காதல் கொள்கிறார் சந்தனு. சத்தியவதியை பெண்கேட்டு செல்லும்போது, அவளின் வளர்ப்பு தந்தையான  செம்படவனோ " தன் மகளை சந்தனுக்கு அளித்தாலும் தேவரதனே அரசனாவான் என் மகளின் சந்நதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும் ஒருவேளை தேவரதன் அரச பதவியை விட்டுகொடுத்தாலும் அவனது சந்ததியினர் பின்னாளில் ஆட்சியை கைப்பற்றுவர் " எனக்கூறி  திருமணம் செய்துதர மறுக்கிறார்.  இதனை கேள்வியுற்ற பீஷ்மர் "தான் அரசனக பதவியேற்கமாட்டேன். இனி அஸ்தினாபுரத்து சேவகர்களில் நானும் ஒருவன். அதுமட்டுமில்லாமல் எனக்கு சந்ததியினர் யாரும் தோன்றாதவாறு நான் திருமணம் செய்துக்கொள்ளாமல் பிரம்மச்சரியாயாகவே காலம் கடத்துவேன் என  சபதமேற்கிறார்.  யாரும் செய்யாத தியாகத்தை செய்ததால், தேவலோகமே பீஷ்ம! பீஷ்ம என வாழ்த்தியது. பீஷ்மன்ற சொல்லுக்கு செயற்கரிய செயல்களை செய்பவன்னு பொருள். அன்றிலிருந்து தேவரதன் பீஷ்மர் என அழைக்கலானார். 
Related image
தேவரதனின் சபதத்தினை கேள்விப்பட்ட சந்தனு, எப்பொழுது மரணம் சம்பவிக்க வேண்டுமென தேவரதனே(பீஷ்மரே) முடிவெடுக்கும் வரத்தினை அளித்தார். சத்தியவதியை சந்தனு மணமுடித்து, அவர்களுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர். மூத்தவனான சித்ராங்கதன் அதேபெயருடைய கந்தர்வனால் கொல்லப்பட இளையவனான விசித்திரவீரியனுக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடக்கிறது.  விசித்திரவீரியனுக்கு மணமுடிக்க நேரம் வந்துவிட்டதாக அறியும் தாய் சத்தியவதி பீஷ்மரை காசிதேசத்தில் நடக்கும் சுயம்வரத்தில் காசி அரசனின் மகள்கள் மூவரையும் கவர்ந்துவர ஆணை பிறப்பிக்கிறார்.  அவ்வாறே செல்லும் பீஷ்மர் மூவராலும் விரும்பப்படுகிகிறார்.  இதனால் அங்கு இருந்த அரசர்களுக்கும் பீஷ்மருக்கும் யுத்தம் வருகிறது கங்கை மைந்தன் அனைத்து அரசர்களையும் வீழ்த்தி மூன்று இளவரசிகளையும் கவர்ந்து அஸ்தினாபுரம் நோக்கி வருகிறார்.
Related image
அப்படி வருகையில் மூவரில் மூத்தவளான அம்பை, சால்வ தேசத்து அரசனான சால்வனை விரும்புவதாக சொல்லி தன்னை விடுவிக்க சொல்லி கேட்கிறாள். பீஷ்மர் மறுத்து, அஸ்தினாபுரம் அழைத்து சென்று அரண்மனையில் தங்க வைக்க, அங்கிருந்து அம்பை தப்பி, சால்வதேசத்துக்கு சால்வனை தேடி செல்கிறாள். போரில் தோற்றதாலும் மாற்றான் தொட்ட பெண்ணை ஏற்கமாட்டேனென சால்வன் மறுக்க, அம்பை மீண்டும் பீஷ்மரை நாடி, வெற்றிப்பெற்ற தாங்களே என்னை ஏற்கவேண்டுமென மன்றாட தனது சபதத்தினை சொல்லி பீஷ்மர் மறுக்க,  பீஷ்மரை பழிவாங்க, அம்பை கடும்தவம் செய்து முருகப்பெருமானை மகிழ்வித்து தேவலோகத்தின் வாடாத மலர்மலையை வரமாக பெறுகிறார் அம்பை. அம்மாலை அணிபவர் பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவர் என வரமும் வாங்கி வருகிறாள். பலதேசம் சுற்றியலைந்தும் ஐந்து வருடகாலம் பீஷ்மரின்மேல் கொண்ட பயத்தினால் எவரும் அந்த மாலையை ஏற்க மறுக்கின்றனர். இதனால் அந்த மாலையை துருபதனின் அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டு தவம்புரிய செல்கிறாள் அம்பை.
Image result for பீஷ்மர் பரசுராமன் போர்


அப்போது, தனது தாய்வழி பாட்டனான பரசுராமரின் நண்பரான ஹோத்திரவாகனரை சந்திக்கிறாள் அம்பை.  தாத்தாவின் அறிவுரைப்படி பரசுராமரிடம் சரண்புகுகிறாள். இதனால் பரசுராமருக்கும் பீஷ்மருக்கும் யுத்தம் மூள்கிறது. 23 நாட்கள் நடக்கும் யுத்தத்தில் பீஷ்மர் அவர் வசுவாக இருந்தபோது தெரிந்த பிரஸ்வாப்ன அஸ்திரத்தை விட முயல்கிறார் அந்த அஸ்திரத்தை தடுக்க அஸ்திரம் இல்லை இதை ஏவினால் எதிரி தூங்கிவிடுவார்.  ஆனால் குருவை அவமதிக்கும் செயலை செய்யாதே பீஷ்மா என நாரதர் கூற அந்த அஸ்திரத்தை திரும்ப அழைக்கிறார் இதைக்கண்ட பரசுராமர் தன் தோல்வியை ஒப்புகொள்கிறார்.
Image result for திருதிராஷ்டிரன் பிறப்பு
பரசுராமர் தன் தோல்விக்குபிறகு பிறக்கும் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரருக்கு குருவாகி அவர்கள் வளரும்வரை ஆட்சியை கவனித்து கொள்கிறார். அவர்களை தனது மகன்களைபோல வளர்க்கிறார் பிறகு மூவருக்கும் மணமுடிக்கிறார்.  பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பிறந்து வளர்ந்தவுடன் அவர்களை சரத்வானின் மகனும் தனது சகோதரனுமாக வளர்த்த கிருபரிடம் கல்விகற்க வைக்கிறார்.  கிருபரின் தந்தையான சரத்வானர் வில்வித்தையில் சிறந்த முனிவர் தவம்செய்யும் போதுகூட வில் இல்லாமல் இருக்கமாட்டார் இந்திரனையே வில்வித்தையில் வென்றவர் இவரின் மகனானதாலும் வில்லிற்கே பிறந்ததாலும் சாஸ்திரங்களில் கிருபரை வெல்வோர் இல்லை. இதனால் குரு வம்சத்தின் இளவரசர்கள் சஸ்திரங்களில் தேர்ந்தவர்களாகின்றனர் இதை அறியும் பீஷ்மர் அவர்கள் அஸ்திரங்களிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்.  இந்நேரத்தில்தான் துரோணரை இளவரசர்கள் சந்திக்கின்றன சாஸ்திரங்களில் கிருபர்போல அஸ்திரங்களில் சிறந்தவர் துரோணர்.  இதனால் அவரை குருவாக்குகிறார். பாண்டவர்களும், கௌரவர்களும்  அரசனாவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு வளர்ந்து வந்தனர்.

Bhishma, the patriarch of the house of Hastinapur, unbeatable ancient warrior.
பாண்டவர்கள், கௌரவர்கள் தாமரை இலை தண்ணீராய் ஒட்டாமலே வாழ்ந்து வந்தனர். அவர்களின் பங்காளி சண்டைக்காக  குரு இராஜ்யத்தை அரியணைக்காக இரண்டாக பிரிப்பதை பீஷ்மர் சிறிதும் விரும்பவில்லை முன்னோர்களின் புகழை சிதைக்கும் செயலாக கருதினார் ஆனால் விதுரர் அதற்கு வழியில்லை என்பதை உணர்த்த, வேறு வழியில்லால் ஆமோதிக்கிறார்.  இராஜசூய யாகத்தில் பீஷ்மரும் துரோணருமே எது எது நடந்தது மற்றும் நடக்க வேண்டும் என கண்காணித்து யாகம் சிறப்பாக நடக்க யுதிஷ்டிரனால் வேண்டப்பட்டவர்கள்,  இராஜசூய யாகத்தில் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் யாரை தலைமையாக கொள்ளவேண்டும் என வினவ அவர் கிருஷ்ணனை தலைமையேற்க பீஷ்மர் அறிவுறுத்துகிறார்.  கிருஷ்ணனை சிசுபாலன் அவமதிப்பதையும், கிருஷ்ணன் தகுதியற்றவன் என்பதை கூறியபோதும் கிருஷ்ணனால் வீழ்த்தப்படாதவன் யாருமில்லை எனக்கூறி கிருஷ்ணனின் பெருமைகளை  பீஷ்மர் கூறுகிறார் 
Image result for பீஷ்மர்

பாண்டவர்களின் அஞ்ஞான வாசத்தின்போதுகூட பீஷ்மர் யுதிஷ்டிரன் இருக்கும் இடம், பெறும் வளம் மற்றும் வளர்ச்சியை தெளிவாக கூறுகிறார் அதை வைத்தே துரியோதனன் பாண்டவர்கள் மறைந்துள்ள இடத்தை எளிதாக கண்டுபிடிக்கிறான்.  அர்ஜுனன் விராடயுத்தத்தில் வெளிப்பட்ட பின் அஞ்ஞாத வாசம் முடிந்ததா இல்லையா என துரோணர் கேட்க பீஷ்மரே காலத்தை சரியாக சொல்லி அஞ்ஞாதவாசம் முடிந்தது என உரைக்கிறார்.  அதேபோல் அர்ஜுனன் சம்மோகன அஸ்திரத்தை விட்டபோது பீஷ்மர் மட்டும் அதற்கு மயங்கவில்லை. ஏன்னா, அந்த அம்பிற்கான எதிர்வினை பீஷ்மருக்கு மட்டுமே தெரியும். இதற்காக உத்தரனை பீஷ்மரை கடக்கும்போது மட்டும் இடப்புறமாக கடந்துசெல் என கிருஷ்ணன் அறிவுறுத்துகிறான் (காரணம் அவ்வாறு கடப்பது பராமரிப்பாளர் மற்றும் நட்பானவர்களே இதனால் உத்திரனை பீஷ்மர் தாக்கவில்லை).  அனைவரும் மயங்கியபின்னும் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம் தொடர்கிறது பிறகே அனைவரும் விழிக்கின்றனர். பிறகு விராடத்தின் பசுக்களை ஒப்படைக்குமாறு துரியோதனுக்கு அறிவுறுத்துகிறார்.
Image result for பீஷ்மர்

பீஷ்மரின் வார்த்தைகளை துரியோதனன் ஏற்கவில்லை. பீஷ்மருக்கு யுத்தத்தில் சற்றும் விருப்பம் இல்லை. ஆனாலும் அரியணைக்கு சேவகனாக இருப்பேன் என்ற சபதத்தால் வேறு வழியின்றி கௌரவர்கள் பக்கம் நிற்கிறார்.  சேனையில் ஒவ்வொரு முக்கிய வீரரை பற்றியும் துரியோதனன் அறிய விரும்பியதால் அனைவரை பற்றியும் எடுத்துரைத்து சிறந்த சேவகனாய் பீஷ்மர் இருந்தார். வீரர்களின் வீரத்தின் அடிப்படையில் அர்த்த-ரதி என பிரிக்கப்பட்ட மிகச்சிறந்த 3000 பேர்களை ஒருசேர போர்க்களத்தில் சந்திக்கும் திறன், தனக்கும், அடுத்து கர்ணனுக்கும் இருப்பதை உணர்ந்து, துரியோதனின்  நன்மைக்காக கர்ணனை கோவம் கொள்ள செய்து, பீஷ்மருக்கு பின்னரே தான் போர்க்களம் புகுவதாய் சபதமேற்க வைத்தார். 
ArtStation - Bhishma, VESLE ( Vijendra Singh Vesle )

போரின்  தொடக்கத்தில் தருமன் ஆயுதங்களை கீழே எறிந்துவிட்டு பீஷ்மர், துரோணர்களிடத்தில்  ஆசியை பெறச்செல்கிறான். தன்னை வணங்கியவருக்கு வரம் கொடுப்பது மூத்தவர்களின் வழக்கம்.  இதனால் பீஷ்மர் என்ன வரம் வேண்டும் எனகேட்க  உம்மை வீழ்த்தும் வழி யாதென வேண்ட, பீஷ்மர் அதற்கான நேரம் வரவில்லை என்றும் அந்தநேரம் வரும்போது தானே அந்த உபாயத்தை அளிப்பதாகவும் வரமளித்து தனது மரணத்துக்கான அழைப்பிதழை அவரே எழுதிக்கொண்டார்.  யுத்தகளத்தில் பீஷ்மர் இருந்தவரை தர்மம் மாறாமல் யுத்தம் நடந்தது.   அர்ஜுனனுக்கு பீஷ்மரை தடுப்பததிலேயே பொழுது கழிந்தது. பாண்டவர் பக்கமே சேதாரம் இருந்தது, துரியோதனன் பக்கம் பெரிய அழிவு எதும் நடக்காமல் இருக்க பீஷ்மரே காரணமாய் இருந்தார்.
Krishna Attacks Bhishma
போரின் மூன்றாம் நாள் அர்ஜுனன் பீஷ்மரை சரியாக எதிர்க்கவில்லை என கையில் சக்கரத்தை ஏந்தி பீஷ்மரை கொல்ல விரைகிறான்.  இதைக்கண்ட பீஷ்மர் கிருஷ்ணனை வரவேற்று தனக்கு முக்தியளிக்க வேண்டுகிறார் ஆனால் அர்ஜுனன் ஆயுதமேந்த மாட்டேன் என்றுரைத்த வாக்கை தாம் மீறலாகாது என சமாதானம் கூறி தடுக்கிறார்.  தேவர்களையும் அசுரர்களையும் ஷண நேரத்தில் அழிக்கும் திறன்கொண்ட பீஷ்மர் மேலும் பலர் தனது படையில் இருந்தும் பாண்டவர்களை ஏன் கொல்ல முடியவில்லை என பீஷ்மரிடம் துரியோதனன் வினவ " கிருஷ்ணன் காப்பவர்களை கொல்லக்கூடியவன் எக்காலத்திலும் இல்லை " என கிருஷ்ணரின் பெருமையினை எடுத்துச்சொல்லி சூசகமாய் துரியோதனனை எச்சரிக்கிறார் பீஷ்மர்.   போரின் எட்டாவது நாளில் அர்ஜுனனின் மகன் அரவான் அலம்புசனால் கொல்லப்பட வெகுண்டெழுந்த அர்ஜுனன் கௌரவ படையை நாசம் செய்கிறான். மேலும் துரோணர் பார்த்துகொண்டிருக்கும்போதே துரியோதனின் தம்பிகளை பீமன் கொல்கிறான் இதனால் பெரும் வேதனையடந்த துரியோதனன், பீஷ்மரிடம் தம்மால் நான் ஒருபலனையும் காணவில்லை எனவே தாம் கர்ணனை ஆயுதமேந்த அனுமதியளிக்க வேண்டும் என பாண்டவர்பால் பீஷ்மரின் பாசத்தினை துரியோதனன் இடித்துச்சொல்ல பீஷ்மர் வெகுண்டெழுகிறார்.  இதனால் போரின் ஒன்பதாம் நாள் இரக்கமற்றவராக காட்சியளிக்கிறார் பீஷ்மர் அவரின் பிரவாகத்தை தடுக்க தவறுகிறான் தனஞ்செயன் இதனால் வாசுதேவர் தானே கொல்வதாக சக்கரம் ஏந்தி செல்கிறார் ஆனால் விஜயன் மீண்டும் தடுக்கிறான். 
Image result for பீஷ்மர்


பீஷ்மரை வீழ்த்தமுடியாது. அதேநேரம் பீஷ்மர் யுத்தகளத்தில் இருக்கும்வரை வெற்றியில்லை என பாண்டவர்கள் இரவில் பீஷ்மரை தனியாக கூடாரத்தில் சந்திக்கின்றனர். அவர்களை அன்புடன் வரவேற்ற பீஷ்மர் " பேரப்பிள்ளைகளே! இது அன்பாக இருக்கும் நேரம் யுத்தகளம் இல்லை "எனக்கூற தருமன் பீஷ்மர் தனக்களித்த வரத்தின்படி அவரை வீழ்த்தும் வழியை கேட்கிறார். அப்போது பீஷ்மர் நான் கையில் ஆயுதமேந்தி இருக்கையில் தேவபடையினாலும் வீழ்த்த இயலாதவன்தான். ஆனால் ஆயுதங்களை கீழே வைத்தபோது வீழ்த்துவது இயலுமென தான் ஒருமுறை எடுத்த சபதத்தை எடுத்து சொல்லி,  ஆயுதத்தை கீழே வைத்தவன்,  கவசத்தையும் கொடியையும் இழந்தவன்,  பயந்தவன் மற்றும் ஓடுகிறவன்,  பெண்ணால் ஜெயிக்கப்பட்டவன் மற்றும் பெண்ணின் பெயரில் உள்ளவன்,  ஏகப்புத்திரனுள்ளவன் மற்றும் சந்ததியை உண்டு பண்ணாதவன்,   அலி (பெண்ணாய் இருந்து ஆணாய் மாறியவன்) மற்றும் மாவீரன் என்று போற்றப்படாதவன் என  இவர்கள் எவரின் முன்னும் நான் ஆயுதத்தை ஏந்த மாட்டேன். இது நான் முன்னமே செய்த சபதம். இதைக்கொண்டு நீங்கள் என்னை வீழ்த்தலாமென பீஷ்மர் தன்னை வீழ்த்தும் ஆயுதத்தை தானே கையிலெடுத்து பாண்டவர்கள் கைகளில் தந்தார்.

Duryodhan ...{1 / 15 to 19 } Duryodhana, worry ?? why ..i.e like bhishma pitamah participate war karun is not involve , in krupachacharya involve dronaacharya not involve  ,  if bhishma pitamah and other person is participated of Kauravas but they hartly not involve of thisi war .  THE MINING OF HARIKASH ( हृषीकेशं) attract (charm: )  of arjun goal  the krihna sea true  way .
பீஷ்மரை வீழ்த்தும் அலி யாரென பாண்டவர்கள் அலச, சிகண்டிதான் அந்த அலி என தெரிய வந்தது. இந்த் சிகண்டி யாரென பார்த்தால், பீஷ்மர் மணக்க மறுத்ததால், அவரை பழிவாங்க வேண்டி தவமிருந்த அம்பையே இப்பிறவியில் சிகண்டியாய் பிறந்து வந்தாள். சிகண்டி பெண்ணாய் பிறந்தவள்தான். ஆனா, அவள் பிறக்கும்போதே ஆணாய் வளர்க்கவேண்டுமென அசரீரி சொல்ல அவ்வாறாய் வளர்க்கப்பட்டவள்தான் இந்த சிகண்டி. அர்ஜுனன், துருபதன்,  திருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் புதல்வர்கள்,  சிகண்டி என பலபேர் பீஷ்மரை எதிர்த்து களம் புகுந்தனர். அத்தனைபேரையும் எதிர்த்து அம்பு தொடுத்து எதிர்கொண்ட பீஷ்மர் சிகண்டியை ஏதும் செய்யவில்லை.  இந்தநேரத்தில் தருமனிடன்,  யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் தருமா! முறையற்ற இந்த போரினால் மனம் சலிப்படைந்துவிட்டேன். இந்த நேரமே என்னை வீழ்த்த சரியான நேரமென  பீஷ்மர் கூறியபடி தனது வில்லினை தரையில் வைத்தார். சிகண்டியின் அம்புகள் பீஷ்மரை துளைத்தது. ஆனாலும் பாதிப்பு ஏதுமில்லாத பீஷ்மர் வில்லை கையில் எடுக்க அர்ஜுனனின் அம்பு அவரின் வில்லினை முறிக்கின்றது.  ஈட்டி, கதாயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை கையில் எடுத்தாலும் அத்தனையும் அர்ஜுனன் அம்பு உடைத்தெறிகிறது.  கிருஷ்ணரும், சிகண்டியும் இல்லாவிட்டால் ஒரு அம்பு போதும் உன்னை சாய்க்க என  கோவத்துடன் கர்ஜிக்கும்போது, தன் முடிவுக்காலம் நெருங்கிவிட்டதை, உணர்ந்த அதேநேரம்  பீஷ்மரின் பிறப்பின் ரகசியம் அறிந்த தேவகணங்களும், வசுக்களும், சப்தரிஷிகளும்  அதை ஆமோதித்து ததாஸ்து என உரைத்தனர். அதன்பின் பீஷ்மர் ஆயுதத்தை எடுக்க முன்வரவில்லை. இதை பயன்படுத்திக்கொண்ட அர்ஜுனன் அம்புமழை பெய்து பீஷ்மரை அம்பு படுக்கையில் சாய்க்கிறான். இதற்காக வசுக்களின் சாபத்துக்கு ஆளாகி தன்மகன் பாப்ருவாகனின் அம்பால் அர்ஜுனன் வீழ்ந்த கதையை பாகம் 1  பாகம் 2 படிக்கலாம்..

பீஷ்மர் வீழ்ந்ததால், வெற்றி பேரிகையோ அல்லது ஆரவாரமோ செய்யக்கூடாதென தருமன் தனது படைகளை தடுத்துவிட்டான்.  தன் தலை தொங்குவதாய் சொல்லி அம்பினால் அர்ஜுனன் தலை தொங்காமல் செய்ய, தாகமென பீஷ்மர் சொல்ல, தனது அம்பினால்  கங்கையை கொண்டு வந்து தாகம் தணிக்கிறான். பாண்டவர் அகன்றதும். இப்போதாவது யுத்தத்தைஇ நிறுத்து என துரியோதனிடம் கேட்க அவன் மறுக்க,  தன் தந்தையிடம் வாங்கிய வரத்தால், முக்தி அளிக்கும் உத்தராயண காலம் வரும்வரை மரணத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.  
Image result for பீஷ்மரும் கர்ணனும்
யாருமற்ற தனிமையில் கர்ணன் பீஷ்மரை சந்திக்கிறான். குற்றமற்றபோதிலும் உங்களால் வெறுப்போரு பார்க்கப்பட்டவன் நான் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அவனை தன்னோடு அணைத்துக்கொண்ட பீஷ்மர், நீ துரியோதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்கக்கூடாதென்ற முடிவில் தீர்க்கமாய் இருந்தேன். காரணம் நீ குந்தியின் மைந்தன் என நான் அறிந்திருந்தேன் என சொன்னார்.  இப்போதும் நீ உன் தம்பிகளோடு சேரலாம் என பீஷ்மர் சொல்ல அதை கர்ணன் மறுத்து, குந்தி மைந்தன் என தெரிந்தும், தன்னை படைத்தளபதியாய் அறிவிக்காமல் வெறும் படைவீரனாய் அறிவிக்க என்ன காரணமென கர்ணன் கேட்டான்.
Anga Raj Karna
கர்ணா! நீ சிறந்த வீரன் என்பதி எனக்கு யாதொரு சந்தேகமுமில்லை. மிகச்சிறந்த வீரர்களான அர்த்த-ரதி என்னும் 3000 பேர்க்கொண்ட படைப்பிரிவினரை தன்னந்தனியனாய் சந்திக்கும் திறன் எனக்கடுத்து   உனக்கு மட்டுமே உள்ளதென உணர்ந்தேன். எனக்கடுத்து துரியோதனன் பக்கமிருந்து போராட ஆள் வேண்டுமென்றுதான் உன்னை தாழ்த்துக்கூறி வெளியனுப்பினேன் என தனது மனதில் உள்ளதை பீஷ்மர் எடுத்துக்கூறினார். கர்ணனும் சமாதானமாகி மறுநாளிலிருந்து படைக்கு தலைமைதாங்கும் தன்னை  ஆசீர்வதிக்க வேண்டுமென கர்ணன் கேட்க, புகழோடு வாழ்கவென பீஷ்மர் வாழ்த்த, ஆசியின் அர்த்தம் புரிந்தவனாய் கர்ணன் அவ்விடம் அகன்றான்.

போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனாலும் குற்ற உணர்வில் தருமர் அரியணை ஏறமாட்டேன். ராஜ்ஜிய பாரமும், தருமமும் வெவ்வேறு பாதை என்னால் இரட்டை பாதையில் செல்லமுடியாதெனவும், யாசகம் பெற்று உயிர்வாழ்வேனென  தருமன் சொல்ல, வியாசரும், நாரதரும் தருமனை பீஷ்மரிடம் சென்று ஆலோசனை கேட்க அறிவுறுத்துகின்றனர். இதைக்குறித்து ஆலோசிக்க கிருஷ்ணரிடம் செல்ல, கிருஷ்ணரோ நிஷ்டையில் இருந்தார். என்னை நோக்கி பீஷ்மர் தவம்புரிகிறார், அதனால் என்மனம் அங்கு செல்கிறது. பீஷ்மரின் காலத்துக்கு பின் கல்வி, தருமம், என அனைத்து நல்லவைகளும் குறைய தொடங்கும். உடனடியாக சென்று அவரிடம் ஞானத்தை பெற்றுக்கோள் எனச்சொல்லி அனைவரையும் பீஷ்மரிடம் அழைத்துச்சென்று பீஷ்மரிடம் ஞானோபதேசம் செய்யச்சொல்கிறார் கிருஷ்ணர்.பீஷ்மரும் உபதேசிக்கிறார். 

பீஷ்மர் அம்புபடுக்கையில் வீழ்ந்த 58வது நாள் தருமரை அக்னி கொண்டுவர பணிக்கிறார்,. தருமனும் கொண்டுவர பாண்டவர்களும் உன் பிள்ளைகளே!  அவர்களை நல்லபடியாய் பார்த்துக்கொள் என்றும், துரியோதனுக்காக நான் போரில் கலந்துக்கொண்டேன். என்னை மன்னித்துவிடு என கிருஷ்ணரிடம் பீஷ்மர் சொல்ல, தந்தைக்காக, தவவாழ்வினை வாழ்ந்தவர் நீங்கள். அதனால்தான் உம்மிடம் அந்த எமனே கைக்கட்டி நிற்கிறார்.  நீங்கள் வசுக்களடைவீர் என கிருஷ்ணர் சொல்ல, பீஷ்மர் எழுந்து நிற்கிறார்,  அவர் நின்றவுடனே அவர் உடம்பில் தைத்து இருந்த அம்புகள் மாயமாய் மறைந்தன இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது பிறகு அவர் தலையிலிருந்து புறப்பட்ட ஜோதி விண்னை அடைந்து மறைகிறது.
விதுரர் மற்றும் யுயுத்சு சந்தன கட்டைகளை அடுக்கினர். திருதராஷ்டிரனும்,  தருமனும் பீஷ்மரின் உடலை மலராலும் பட்டாலும் மூடினர். யுயுத்சு குடை பிடித்தான். பீமனும் அர்ஜுனனும் வெண்சாமரம் வீசினர். நகுலசகாதேவர்கள் கீரிடம் வைத்தனர்.பித்ருமேதமெனும் சாஸ்திரத்தை முறையாக செய்து சந்தனத்தாலும் வாசனைதிரவியங்களாலும் மஞ்சளாலும் பீஷ்மரை மூடி தீமூட்டி அனைவரும் வலம் வந்து வணங்கினர் பீஷ்மர் நித்ய பிரம்மச்சரியாய் இருந்ததால் அவருக்கான சிரார்த்தத்தினை யார் செய்வதென தருமன் கலங்கி நிற்க, மார்க்கண்டேயனை போல தவ வாழ்வினை பீஷ்மர் வாழ்ந்ததால், மனித கடமைகளுக்கு அப்பாற்பட்டவராவர். அவருக்கு உலக உயிர்கள் அனைத்திலும் யாரும் சிரார்த்தம் செய்யலாமென வியாசர் கூற, தருமன் அவ்வாறே செய்ய, பீஷ்மர் முக்தியடைந்தார். தருமன் அரியணை ஏறினார். பீஷ்மர்   விண்ணுலகம் சென்ற தினம் இன்றும் பீஷ்ம அஷ்டமி என கொண்டாடப்படு அந்த பீஷ்மாஷ்டமி தினம் இன்று. பீஷ்மருக்காக சிரார்த்தம் செய்யும் எல்லோருக்கும் முன் ஜென்ம பாவம் போகும்.அவர்களின் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
Image result for பீஷ்மரும்


எத்தனை பேர் தியாகத்தினை நாம படித்தாலும், பீஷ்மரின் தியாகத்துக்கு ஈடாகாதுன்னு சிலாகிச்சு சொல்வோம்.  ஆனா அவருக்காக எதாவதொரு கோவில் இருக்கா?! ஏன்னா, அவரின் தியாகம் அர்த்தமில்லாதது. வடிவேலு பாஷையில சொல்லனும்ன்னா  தேவையில்லாத ஆணி. அவரோட அப்பாவுக்கு திருமணமானதை தவிர பெருசா எந்த பலனும் இல்லை. சத்யவதிக்கு பிறந்த மகன்களில் ஒருவனுக்கு அற்பாயுசு. இன்னொருவருக்கு வாரிசு இல்லாமயே இறக்க, பின்னர் வாரிசு வேண்டி வியாசருடன் சத்யவதியின் மருமகள்கள் கூட, குருடாய், சருமக்குறைபாடுடன் பிள்ளை பிறக்க, அது பங்காளி சண்டையில் முடிய எந்த குருவம்சத்தை காப்பாற்றுவதாய் சபதமெடுத்தாரோ அதே குருவம்சத்தின் அழிவுக்கும் பீஷ்மர் காரணமானார். அம்பை வற்புறுத்தலுக்கு இணங்கி இருந்தால்கூட பரத கண்டத்தின் வரலாறு எப்படியோ மாறியிருக்கும். கொடுத்த வாக்கை எப்படி மீறுவதுன்னு கேக்கலாம். குருஷேத்திர போரில் ஆயுதமேந்தமாட்டேன் என சூளுரைத்த கிருஷ்ணரே பீஷ்மருக்காக தேர்க்காலினைக்கொண்டு போருக்காக குதித்தான். அப்படி கொடுத்த வாக்கை பீஷ்மர் மீறி இருந்தால் மிகச்சிறந்த அறிவாற்றலும், குணாதிசயமும், வீரத்துடன் வாரிசு தோன்றி இருக்கும். ஆனால், பகவானின் எண்ணம் வேறு மாதிரியாய் இருக்க,  ஷத்திரிய வம்சம்  முடிவுக்கு கொண்டு வரவேண்டி பீஷ்மரை சபதம் செய்ய தூண்டியது.  பீஷ்மரின் தியாகத்துக்கும் அர்த்தமில்லாது போனது. அர்த்திமில்லாத தியாகத்தினால் என்ன பலன்?!

அடுத்த வாரம்  அம்பை கதையினை வெளிச்சத்தின் பின்னே  பகுதியில் பார்க்கலாம்..

நன்றியுடன்,
ராஜி

13 comments:

  1. பீஷ்மாஷ்டமி தினத்திற்கேற்ப அருமையான பதிவு...

    ReplyDelete
  2. பீஷ்மரின் தியாகம், 'நல்லவர்', 'அல்லவர்' என்று இரு பிரிவாக உருவாகி, 'அல்லவர்' அழிவிற்கு அடிகோலியதல்லவா?

    ஆனாலும், ஏதேனும் சபதம் ஒருவன் எடுத்துக்கொண்டால் (நல்லதோ கெட்டதோ), அதை நிறைவேற்றும் வழியில் ஏகப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கிக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதும் அதில் உள்ள உண்மை. அரிச்சந்திரனிலிருந்து இதுதானே உண்மை..

    ReplyDelete
    Replies
    1. அரிச்சந்திரன் கதை வேறு, அவரின் கொள்கைக்காக தனது, தனது குடும்பத்தினர்தான் கஷ்டப்பட்டாங்க. ஆனா, பீஷ்மரின் சபதத்தால் மாபெரும் குரு வம்சமே அழிந்து போனது. பரத கண்டத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமானது.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. எல்லாம் தெரிந்த கதை என்றாலும் மகாபாரதக் கதைகள் என்று வந்தால் மறுபடி மறுபடி படிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. மறுபடி, மறுபடி படிக்க படிக்க புதுப்புது கோணம் கிடைக்கும்.

      Delete
  4. மிகுந்த மெனக்கடலை கொண்டு படங்களை தொகுத்துள்ளீர் ..
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பதிவு தேத்துவதைவிட படத்துக்காகத்தான் அதிகநேரமே செலவாகுதுப்பா!

      Delete
  5. நல்ல விவரங்கள் சகோதரி - துளசிதரன்

    எந்த ஒரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு காரண காரியம் இருக்கும் என்பது பீஷ்மரின் சபதத்திற்கும் பொருந்தும் தான். பீஷ்மரின் சபதம்தானே மஹாபாரதத்திற்கான விதை- கீதா

    ReplyDelete
    Replies
    1. குரு, ஷத்திரிய வம்சத்தின் அழிவுக்குமான விதையும்கூட

      Delete
  6. "//பீஷ்மரின் தியாகத்துக்கும் அர்த்தமில்லாது போனது. அர்த்திமில்லாத தியாகத்தினால் என்ன பலன்?!"// - உண்மை தான் சகோ.

    ReplyDelete
    Replies
    1. இதைச்சொன்னால் என்னைய திட்டுறாங்க சகோ.

      Delete
  7. அருமையான பதிவு...

    ReplyDelete