காதல் ன்ற ஒற்றை வார்த்தைக்கு சுகமானது, அற்புதமானது, தெய்வீகமானது, கொடுமையானதுன்னு எத்தனையோ அர்த்தங்களை அனுபவப்பூர்வமாய் மணிக்கணக்கில் சொல்லலாம். பக்கம் பக்கமாக எழுதலாம்.கவிதை வடிக்கலாம். ஒப்பாரி வைக்கலாம். குடிச்சுட்டு புலம்பலாம். அட, எதும் செய்ய வாய்ப்பில்லைன்னா தனிமையில் உக்காந்து மனசுக்குள்ளயே காதலை ரசிக்கலாம், போற்றலாம், தூத்தலாம். வளர்க்கலாம். காதலை பத்தி சொல்ல ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கதை இருக்கும். உலகம் உருவாக, இயங்க இறைவன், பஞ்சபூதங்கள்ன்னு ஆயிரம் காரணங்களை முன்வைத்தாலும், இறைவனுக்கு சற்றும் குறைவில்லாதது காதல். காதலும் கடவுளும் வேறில்லை. இரண்டுக்குமே உருவமில்லை. இரண்டையுமே உணரமுடியுமே தவிர கண்ணுக்கு அகப்படாது. இரண்டுமே நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை பொய்த்துபோனால் கடவுளுக்கும், காதலுக்கும் வேலையே இல்ல. இரண்டுமே வழித்துணையாக காலம் முழுக்க வரும்.சிலசமயம் காலையும் வாரிவிடும். ரெண்டுமே பொல்லாதது.
காதலை பத்தி புதுசா நான் எதும் சொல்லிடப்போறதில்லை. ஆனா, காதலர் தினத்தன்னிக்கு இப்படியொரு பதிவு போடலைன்னா தெய்வக்குத்தமாகிடுமேன்னுதான்... நான் ஒன்னும் எனக்காக சாப்பிடல.. என்னைய பார்க்க வச்சு சாப்பிட்டா உனக்கு வயித்து வலிக்குமேன்னு முதல்மரியாதை சிவாஜி வசனம் மாதிரிதான் இது. நான் எனக்காக பதிவு போடலீங்கோ!! மனித உயிர் தோன்றியபோதே காதலும் தோன்றிவிட்டது. ஆதிமனிதன் கடித்த ஆப்பிளில் ஒட்டியிருந்த எச்சிலிலிருந்து காதல் பிறந்தது. அது ஆதாம், ஏவாள் உடல்சேர்க்கை. இன்னிக்கும் காதலின் முக்கிய நோக்கம் உடல்சேர்க்கைன்னு சொல்வாங்க. ஆண் தன்னோட அன்பை வெளிப்படுத்த ஆயிரம் விசயமிருக்கு. ஆனா, பெண் தன்னோட அன்பை வெளிப்படுத்த சமையல், செக்ஸ்ன்னு இரண்டே விசயங்கள்தான் இருக்கு. சாப்பாட்டை யாருக்கும் கொடுக்கலாம். ஆனா, உடலை மனசுக்கு பிடிச்சவனை, நம்பிக்கையானவனுக்கு மட்டுமே முழுக்க கொடுப்பாள். அதனால் காதலில் காமம் தப்பில்லை. காமத்துக்காகதான் காதல்ன்னாதான் தப்பு.
ஆணும், பெண்ணும் பகிர்ந்துக்கொள்வது மட்டும் காதல்ன்னு நம்ம புத்தியில் பதிய வச்சிருக்காங்க. காதல்ன்னா அன்பு, அன்பு ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு வடிவமெடுக்கும், ஆசிரியர் மாணவர்களுக்கிடையே அக்கறை-மரியாதையாய் உருவெடுக்கும், கடவுளுக்கும், பக்தனுக்குமான அன்பு பக்தியாய் மாறும். இப்படி காதல் பல அவதாரமெடுக்கும். வாலண்டைன்ஸ் டே, காதலர் தினம், அன்பர்கள் தினம்ன்னு சொல்லப்படும் இந்நாளில் அன்புக்கொண்ட யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லலாம். ஆனா காதலிக்குறவங்க மட்டுமே இந்நாளை கொண்டாடனும்ன்னு சங்கத்தில் முடிவெடுத்துட்டதால் இந்த நாளை பற்றிய தகவல்கள் சிலதை பார்ப்போம்.
இந்நாளுக்கான காரணமாய் பல கதைகள் சொன்னாலும், மிக முக்கியமானது 270ம் ஆண்டில் ரோமப்பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர் வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போரின்போது குடும்பத்துக்காக சரிவர போரிடமாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ணிக்க விடலை. ஆனால், பிஷப் வேலன்டைன் (Bishop Valentine) என்பவர் அரசனின் ஆணைக்கெதிராக திருட்டுத்தனமாக பல போர் வீரர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்த நடவடிக்கை அரசனுக்குத் தெரியவந்ததும், வேலன்டைன் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும், சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் எவ்வளவோ முயன்றாள். இதை அறிந்த சிறைத்தலைவன் தன் மகளை வீட்டுச்சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள் சிதைந்தது. உருக்குலைந்து போனாள் அஸ்டோரியஸ். அஸ்டோரியஸக்கு அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று செய்தி சுமந்து வந்தது.
விழி இருந்தும்
வழி இல்லாமல்
மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து,
நீ மன வலி தாங்காது
கதறும் ஒலி கேட்டும்,
உனை மீட்க வழி தெரியாமல்
மக்களுக்காக பலியாடாய் போகிறேன்;
நீ ஒளியாய் வாழு!
பிறருக்கு வழியாய் இரு!!
சந்தோஷ ஒளி
உன் கண்களில்மிளிறும்!!
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து („From your Valentine“) என எழுதிவிட்டு, February 14ம் தேதி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றி கொல்லப்பட்டார் அவர் இறந்த நாளில் காதலர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள. „From your Valentine“ என்கிற வசனத்தை, காதலர்கள் தங்கள் கடிதங்களில் பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே காதலர்தின தினத்தின் முதல் வாழ்த்து அட்டையானது.
சொர்க்கத்தின் அரசனுக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ பேரழகி. ஒருநாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத்தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கிவர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும்தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்தநாள்தான் சீனர்களின் காதலர் தினமாய் கொண்டாடப்படுது.
பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப்படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வேண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப்படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இவ்விழாவை கொண்டாடாமல் விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்க, ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண்டைன்நாள் என அறிவித்தார்ன்னும் ஒரு கதை இருக்கு.
தனியாய் காதலர் தினம் கொண்டாட்டம்..
பின்லாந்தின் வேலண்டைன்ஸ் டே கொஞ்சம் வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்தநாளை ‘ஸ்டேவான்பாபியா’ன்னு சொல்றாங்க. அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என அர்த்தம். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை கொண்டாடுறாங்க. நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்தநாளை கொண்டாடுறாங்க. எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள்லாம் ஒரு இடத்தில் கூடி இந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடுவாங்க. பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ்ன்னு சொல்றாங்க. பிரேசில் நாட்டுக்காரங்களுக்கு மட்டும் காதலர் தினம்ன்னு தனியாக வேறு ஒருநாள் உண்டு. அது ஜூன் 2 ம் தேதி அந்தநாளில் காதலர் தினத்தை கொண்டாடுறாங்க.
உலகம் பூராக 35.000.000 இதயம் வடிவ சாக்லெட் பெட்டிகள் விற்கப்படுதாம். அமெரிக்காவில் மட்டும் 1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் இந்நாளில் விற்கப்படுமாம். வேலன்டைன்ஸ் டேன்னு சொல்லப்படும் பிப்ரவரி 14ல் விற்கப்படும் மலர்களில் 73% பூக்கள் ஆண்களாலும், 27 % பூக்கள் பெண்களாலும் வாங்கப்படுதாம். 189.000.000 ரோஜாக்கள் அமெரிக்காவில் மட்டுமே விற்கப்படுதாம். அதே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு 145.000.000 வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுதாம். அதிலும் அதிகான வாழ்த்து அட்டைகள் யாரால் அனுப்பப்படுதுன்னு பார்த்தா, ஆசிரியர்களால், மாணவர்களுக்கு அனுப்பப்படுதாம்!! . நாய், பூனை..ன்னு வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுக்குறாங்கன்னா பார்த்துக்கோங்க.
காதல் நிபந்தனைகளுக்குட்படாதது. காதலில் பயணிக்க தோற்றமும் அழகும், உடல்வலிவும் மட்டுமே போதாது. புரிதலும், அர்ப்பணிப்புமே காதலுக்கு முக்கியமானது. அழகானதொரு உணர்வு. நீ பேசினாலே போதும், எனக்காக நீ இருப்பாய் என்ற நம்பிக்கையொன்றை மட்டுமே எதிர்பார்க்கும். அந்த நம்பிக்கையில் எதையும் எதிர்க்கொள்ளும் தைரியத்தையும், பொறுமையையும் காதல் தரும். நிபந்தனையற்ற காதலை, அன்பை செலுத்துங்கள். நீங்கள் பதிலுக்கு என்ன பெற்றாலும் அன்பை மட்டுமே செலுத்த பழகுங்கள். நாளடைவில் உலகமே அன்பால் வசப்படும். ஆதலால் காதல் செய்வீர்!
காதலிப்போருக்கும், காதலிலிருந்து மீண்டோருக்கும், காதல்ன்னா என்னன்னே தெரியாத மண்டுகளுக்கும் காதலர் தின வாழ்த்துகள்.
நன்றியுடன்.
ராஜி
காதலிப்போருக்கும், காதலிலிருந்து மீண்டோருக்கும், காதல்ன்னா என்னன்னே தெரியாத மண்டுகளுக்கும் காதலர் தின வாழ்த்துகள்.....
ReplyDelete..
நன்றி ராஜி க்கா
இந்த மூணுல நீ எந்த பிரிவு அனு?!
Deleteரொம்ப அழகான அன்பான பல தகவல்கள் ராஜி க்கா ..சூப்பர் ...
ReplyDeleteநிபந்தனையற்ற காதலை, அன்பை செலுத்துங்கள். நீங்கள் பதிலுக்கு என்ன பெற்றாலும் அன்பை மட்டுமே செலுத்த பழகுங்கள். நாளடைவில் உலகமே அன்பால் வசப்படும். ஆதலால் காதல் செய்வீர்!...
மிக அழகான வரிகள் கா...
ஆனா, நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லா வரிகள்
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஅன்பர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ
Delete"//காமத்துக்காகதான் காதல்ன்னாதான் தப்பு. //" -
ReplyDeleteசரியா சொன்னீங்க சகோ
நான் இதுலாம் சொன்னா சிரிச்சுப்புடுறாங்க சகோ
Deleteஅன்பர்தின வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிம்மா
Deleteஎன் வாலண்டைனுக்கு எழுதிய காதல் கடிதம் என்பதிவில் பார்க்கவில்லையா
ReplyDeleteநேரம் கிடைக்கலைப்பா
Delete