வீட்டில் சும்மா இருக்கும்போதுன்னு சொன்னா கீதாக்கா சண்டைக்கு வர்றாங்க. அதனால், வீட்டு வேலைபளு, மன அழுத்தத்திலிருந்து, என்னை புத்தாக்கம் செய்துக்கொள்ள மாலை 7 மணியிலிருந்து சின்ன சின்னதா கிராஃப்ட் செய்ய நேரம் ஒதுக்கி இருக்கேன். அப்படி நேரம் ஒதுக்கி செய்வதில் போன வாரம் அம்மாவின் உடல்நலம், ஊர்பயணம் செஞ்சதால ஒரேஒரு வாசல் தோரணம் மட்டுமே செய்யமுடிஞ்சது. பின்னிக்கிட்டிருக்கும் வயர்கூடையோ கைப்பிடி போடப்படாம பாதில நிக்குது. சரி, கழுத அடுத்த வாரம் பதிவுக்கு உதவும்ன்னு மனசை தேத்திக்கிட்டு வுல்லன்ல பின்னின வாசல் தோரணத்தை பதிவாக்கியாச்சுது.
தெரிஞ்சவங்க வீட்டுக்கு முன்னமே ஒருமுறை பின்னி கொடுத்திருக்கேன். இப்ப, சாமி ரூம்ல இருக்கும் கப்போர்டுக்கு ஒரு தோரணம் பின்னி தரச்சொன்னாங்க. வாசல் தோராணத்தைவிட சின்னதா பின்னிக்கொடுத்தேன்.100ரூபா கொடுத்தாங்க...
அடுத்தவாரம் வயர்கூடை முடிச்சுட்டு பதிவாக்கனும்ன்னு வேண்டிக்கோங்க.
நன்றியுடன்,
ராஜி
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் சகோதரி.....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே!
Deleteவாவ் சூப்பர் ராஜி க்கா
ReplyDeleteரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் ...
நானும் சின்ன சின்ன பைகள் செஞ்சு ஒரு நண்பர்க்கு கொடுத்தேன் ..
இங்க லிங்க் போடுறேன் பாருங்க..http://anu-rainydrops.blogspot.com/search/label/crochet%20work
இதோ வந்து பார்க்கிறேன்ம்மா...
Deleteஅழகா இருக்கு ராஜி. எனக்கும் கற்றுக் கொள்ள ஆசை வருகிறது.
ReplyDeleteநானே கத்துக்கிட்டு செய்யும்போது நீங்களும் செய்வீங்க! முயற்சி செய்ங்க சகோ
Deleteகைவண்ணத்துக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅருமை
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரியாரே
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே
Deleteஆஹா அருமை அருமை. தங்களின் திறமையோ திறமை. வாழ்த்துக்கள் சகோ
ReplyDelete