Saturday, February 09, 2019

wifeக்கு அர்த்தம் தெரியுமா?! - சுட்ட படம்

மனைவியால் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார்போல!


இந்த யோசனை எனக்கு வராம போச்சு?! அதுசரி, நான் படுத்தும் பாட்டுக்கு என்னை கேக்காம எனக்கு ஏன் பொறந்தேன்னு என் அப்பா அம்மா கேஸ் போடாம இருந்தா சரி.
ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண்!
மாத்தி யோசி.. மாப்பிள்ளைக்கு 25, மணமகளுக்கு 48... இன்னும் இருபது வருசங்கழித்து கௌதம்- ராஜி கல்யாணம்ன்னு இப்படிதான் படம் வரும். அப்ப எல்லாரும் வந்திருந்து மொய் எழுதி ஆசீர்வாதம் பண்ணுங்க சகோஸ்.. என்ன ஒன்னு 37 வருசம் வித்தியாசம்ன்னு உலகமே கண்ணு வைக்கும்!! 

இந்த அவமானம் நமக்கு தேவையா?!


வறுமையிலும் நேர்மை..

மதுரை விமான நிலையத்திற்கு பாதுகாப்பே கருப்பண்ணசாமிதான்...  உள்ளுக்குள் 800 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு.. அதுல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சை பழத்துல ஓடிடப்போகுது - மின்னலே படத்து விவேக் மொமண்ட்
இது லைப்ரரியாம்!
  
புதுசு கண்ணா! புதுசு!   

பக்கம் பக்கமா படிக்கும் இம்சைல இருந்து விடுதலை.. எஞ்சாய் சகோஸ்
நன்றியுடன்,
ராஜி

19 comments:

  1. இரண்டாவது செய்திக்கு:-

    நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா...?
    இல்லை என் பிள்ளை எனைக்கேட்டு பிறந்தானா...?

    தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி...
    கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி...!

    ReplyDelete
    Replies
    1. இது அந்த லூசுப்பயலுக்கு தெரியலியே!

      Delete
  2. சுடும்வித்தை தெரிந்தால் பதிவுகள் எழுத பஞ்சம்வராது

    ReplyDelete
    Replies
    1. சுடலைன்னாலும் பதிவு வரும்ப்பா

      Delete
  3. ஒவ்வொரு சுட்ட பதிவிகளின் கீழே தங்களின் கைவண்ணம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. புத்தக வீடு அருமையான கற்பனை. அருமையான கைவண்ணம். அனைத்தையும் ரசித்தேன். டிடி சொல்லி இருக்கும் பாடல் எனக்கும் தோன்றியது. அவர் பகிர்ந்து விட்டதால் நான் பகிரவில்லை!

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு முறை சொன்னாலும் தப்பில்லையே!

      Delete
  6. நூலக வீடு அருமை அருமை

    ReplyDelete
  7. WIFE - அப்படீன்னாக்க WORRIES INVITED FOR EVER னுதானே அர்த்தம்? (நல்லவேளை என் மனைவி இந்தத் தளத்துக்கு வருவதில்லை)

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் வரும். அண்ணி வாட்ஸ் அப்க்கு இந்த மெசேஜ் பார்சேல்ல்ல்ல்ல்ல்

      Delete
  8. இந்த மணமகனுக்கு 12 கோடி ரூபாயும், பென்ஸ் காரும், இன்னும் பலவிதமான வரதட்சணைகளும் செஞ்சாங்கன்னுதானே படித்தேன்.

    மதுரையின் பாரம்பர்யத்துக்காக 'கருப்பண்ணசாமி' சிலை வச்சிருக்காங்க (சென்னை ஏர்போர்ட்டில் நிறைய சிற்பங்கள் வைத்திருப்பதுபோல). எதைத்தான் கிண்டலடிக்கறதுன்னு கிடையாதா? ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. எவனா இருந்தாலும் வெட்டுவேன்னு கவுண்டமனி காமெடி போல கிண்டல் அடிக்குறதுன்னு முடிவானப்பின் யாரா இருந்தாலும் கிண்டலிங்க்தான்.. ஆகமொத்தம் ஒரு சின்ன பையன் வயசில் மூத்த பெண்ணை மணந்ததுதான் டாபிக். மத்தபடி அந்த புள்ளைக்கு எம்புட்டு சீர் தந்தால் என்ன?!

      Delete
    2. இந்த செய்தியே பொய். மணமகள் வயது 27 மட்டுமே. ஐந்து பேரை கைது செய்திருக்கிறார்களாம். இணையம்/ஊடகங்கள் மூலம் பரவும் பல விஷயங்களை நம்ப முடியாதவை.

      Delete
    3. முகத்தை பார்த்தால் வயது அதிகமாய்தான் தெரியுதுண்ணே!

      Delete
  9. https://pattisonnakathaikal.blogspot.com/2019/02/blog-post_84.html

    ReplyDelete