Saturday, February 23, 2019

சன்னியாசியா போறதுலாம் பெருமையில் சேர்த்தியா எரும?! - சுட்ட படம்

திருமணசடங்கு பார்த்து இருப்பீங்க, மரண சடங்கில் கூட கலந்து இருப்பீங்க , துறவரம் கொள்ளும் சடங்கை பார்த்திருக்கீங்களா?! பெற்றவர்களுக்கே ஆசி வழங்கும் அற்புத திருவிழான்னு ட்விட்டர்ல இந்த போட்டோ சுத்திக்கிட்டு இருந்துச்சு. இதுலாம் ஒரு பெருமையான்னுதான் விளங்கல!! குடும்பத்தை உதறித்தள்ளுவது ரொம்ப சுலபம். ஆனா, அந்த குடும்பம் படும்பாடு.. அவனோ/ளோட கடமைகள், ஆசைகள், வார்த்தைகள், வாக்குகள்ன்னு அத்தனையும் சுமந்தலையும். இந்த படத்துலயே பாருங்க. தன் பையன் சாமியாரா போய்ட்டா, உலகை காப்பான், பெரிய மகான் ஆவான், வரலாறு பேசும், நாமளும் அதுல இடம்பெறுவோம், நமக்கும் முக்தி கிடைக்கும்ன்னு ரொம்ப பெருமையா உக்காரலை. பிரிவின் துக்கம் தாளாது அழும் தந்தையும், என்ன நடக்குதுன்னு புரியாம இருக்கும் தாயின் கலக்கமும் தெரியும் :-( இப்படிதான் எல்லா சன்னியாசத்தின்பின்னும் ஒரு கதையும், கதறலும் இருக்கும்.

அவள் ஒரு தொடர்கதை படத்துல இதுமாதிரியான ஒரு சீன் வரும். சின்ன வயசில வீட்டைவிட்டு போன தந்தை சாமியாரா வருவார். நீங்க ஈசியா குடும்பத்தை உதறித்தள்ளிட்டு போயிட்டீங்க. அதை காப்பாத்த நான் பட்டப்பாடு...ன்னு சொல்லும். கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு போராட்டத்தை திபெத்திய படம் ஒண்ணு அழகா சொல்லும். சாமியாரா போறேன்னு சொல்றவனை தக்கவச்சுக்க ஒரு பொண்ணு போராடும் படம்.. கிட்டத்தட்ட 2 மணிநேரம் இந்த படம் போகும். அந்தளவுக்கு பொறுமையும் மொழியும் புரியாதவங்க இந்த பட இங்க விமர்சனத்தை படிங்க...

படத்தோட யூட்யூப் லிங்க்.. . இதோ
சரணடைஞ்சபின் எதிரிகூட இறங்குவான்.  ஆனா உறவுகள் இருக்கே!. அதுக்கப்புறம்தான் வச்சு செய்யும் :-(
இவனுக்குலாம் கல்யாணம் ஒரு கேடு?!
உடல் கொஞ்சம்?! பூசினாப்ல இருக்குதுதான். அதுக்காக இப்படியா சொல்றது!!?!
இதுக்கு காய பறிச்சு ஒரு பையில் வச்சிட்டா மரமாவது தப்பிக்கும்... 
திருமணத்தால் ரொம்ப பாதிச்சிருப்பார்போல!! பொண்ணை பத்தி ஆராய்ச்சியே பண்ணி இருக்கார். 
Image may contain: one or more people
பொண்ணு ரொம்ப விவரம்தான் :-)

எனக்கு கோவம் வந்திச்சு... அப்புறம் அழுதுபுடுவேன்.. அழுது.. மொமண்ட்... 
சீரியலால் ரொம்ப பாதிச்சுட்டாரு...

பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து இன்னிக்கு ஃப்ரீ.. எஞ்சாய் சகோஸ்
நன்றியுடன்,
ராஜி



22 comments:

  1. இப்ப எல்லாம் TV சீரியல் பத்தி, உங்களிடமிருந்து எதுவும் பதிவு வரவில்லை என்பது ஏன் என்று புரிகிறது...!

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும். செம்பருத்தி சீரியலை போன்ல, டிவில, நெட்லன்னு பார்க்குறதே மாமாதான்,. நியாயமா பார்த்தா பொட்டி படுக்கைலாம் கட்டிக்கிட்டு நாந்தான் அம்மா வீட்டுக்கு போகனும்,,,

      என் வீட்டில் செட் அப் பாக்ஸ் இல்லாததால் ஒரு பத்து சேனல்தான் வருது. அதைவச்சு எப்படி கேபிள் கலாட்டா போடுறதாம்!!

      Delete
  2. இம்மாதிரி மொட்டை அடித்து சந்நியாசம் ஜைனர்களிடம்தான் என்று நினைக்கிறேன் பெட்டியில் பெண் என்று வரும் இடட்தில் ஆணென்று இருந்தாலும் சரியாய்தானிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இது எந்த சமயத்து சன்னியாசம்ன்னு பிரச்சனையில்லை. பிரச்சனையே சன்னியாசம் பத்திதான்...

      அதென்னமோ ஆண்கள்லாம் பெரிய தியாகிங்க மாதிரியும், பொண்ணுங்கலாம் அரக்கி வம்சம் மாதிரிதான் இங்க புலம்புவாங்க

      Delete
  3. சாமியாராகப் போவது சுலபம் அல்ல! :) ஒரு படத்தில் வடிவேலு “சும்மா இருப்பது சுலபம் அல்ல” என்று சொல்வது போல!

    நிறைய படங்கள் திருமணம் பற்றியே இருக்கிறது போல!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய படங்கள் திருமணம் பற்றியே இருக்கிறது போல!
      //////////////
      தானாய் அமைஞ்சுட்டுது:-(

      Delete
  4. திருடருக்கு செருப்படி வாசகம் ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் திருந்தமாட்டோமே!

      Delete
  5. இது போல சன்னியாசம். புத்த சன்யாசி. துறவறம் செய்யாமலியே எத்தனையோ நன்மைகள்
    அறவழியில் செய்யலாமே.
    திருமணப் படங்கள் பல கதைகள் சொல்கின்றன. அடிபட்ட அந்தப் பெண் அந்தக் கணமே மேடையை விட்டு இறங்கி இருக்க வேண்டும்.
    மனம் கனமாகிறது ராஜி.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அந்த புள்ள பாவம்தான். காலம் முழுக்க அவன்கிட்ட எப்படி மல்லுக்கட்ட முடியும்?!

      துறவறம் செய்யாமலியே எத்தனையோ நன்மைகள்
      அறவழியில் செய்யலாமே.
      //////
      இதை சொன்னால்தான் பொல்லாப்பு. சாமியாரா போறவங்க உறவுக்குள் விழக்கூடாது. உறவை தவிக்க விட்டு உலகை காத்து என்ன பயன்?!

      Delete
  6. நியாயமாய்த் திருடச் சொல்லும் அறிவிப்பு! ரசிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. மரத்தையாவது காப்பாத்திக்கலாம்ன்னுதான்...

      Delete
  7. புத்த சன்யாசி - இது கொஞ்சம் பரவாயில்லை. ஜெயின் சன்யாசி/சன்யாசினி ஆகிறது இதைவிடக் கஷ்டம். முடியைத் தனக்குத்தானே பிடிங்கிக்கொள்ளணும், மிகக் கடினமான வாழ்க்கை. இத்தனைக்கும் பெண்/பையன் சன்யாசியாப் போகும்போது பெற்றோர், அவங்க சொத்துக்களை வைரம்/நகை/பணமாக மாற்றி அத்தனையையும் தெருவில் ஊர்வலத்தில் இறைப்பார்கள். (மகிழ்வோட).

    ஆமாம்... சாமியாராப் போகிறேன் என்று தங்கள் கடமையை சரிவர முடிக்காமல் செல்பவர்கள் ஒருவிதத்தில் முழுச் சுயநலவாதிகள் இல்லையோ? (குடும்பத்தை அம்போன்னு விட்டுட்டுப்போவதால்)

    ReplyDelete
    Replies
    1. இது புரிஞ்சால்தானே?!

      Delete
  8. பொண்ணு விவரம்தான் - எனக்குப் புரியலை...இந்தப் படம்.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீகளே சகோ! பொண்ணோட ஜடையில் பாருங்க.. என்னவெல்லாம் இருக்குன்னு...

      Delete
  9. நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 23வயது வாலிபர் ஒருவர் துறவரம் பூண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, நான் விற்பனை பிரதிநிதியாக இருந்தேன். ஒரு நாள் வேலை விஷயமாக வெளியூருக்கு இரயிலில் சென்று கொண்டிருக்கும்போது மனமாற்றம் ஏற்பட்டு சந்நியாசியாக மாறினேன் என்று கூறினார். அப்போது அவர்களின் பெற்றோர்கள் பற்றிய எண்ணம் தான் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. எதும் சொல்றதிக்கில்லை. கேட்டால் உம்மாச்சி கண்ணை குத்தும்ன்னு சொல்வாங்க. எனக்கெதுக்கு வம்பு?! இருக்க இடம்தெரியாம இருந்துட்டு போகவேண்டியதுதான்

      Delete
  10. துறவறம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் ஒரு சுயநலம் தான். எஸ்கேப்பிங்க் ஃப்ரம் பொறுப்புகள்.

    அது எதற்கு அந்தப் பையன் அப்படி அடிக்கிறான். அப்பெண் உடனே வெளியேறியிருக்க வேண்டாமோ? எல்லா நாடுகளிலும் பெண் அடிமைத்தனம் இருக்குதான்.

    திருடச் சொல்லும் அந்த நோட்டீஸ் ரசிக்க வைத்தது.

    துளசிதரன், கீதா

    அந்தப் பெண் ஏன் இப்படி பாதாம் கேஷ்யூ எல்லாம் வைத்து சடை பின்னியிருக்கிறார். ஏனோ மனம் இதை ஏற்க மறுக்கிறது. இப்படி எல்லாமா அலங்காரம் தேவை?!!!! ரொம்பப் பணக்காரத் தனம் காட்டுகிறது...

    நான் மிகவும்ர் ரசித்த படம் அந்த பூனையார் படம்!!!

    அடைசி வீடியோ குரல் எனக்குத் தெளிவாகக் கேட்கலை...மொபைல்ல கேட்டுப் பார்க்கறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //இப்படி பாதாம் கேஷ்யூ எல்லாம் வைத்து சடை// - இதுல ஒரு ஆபத்து இருக்கு. பின்னால இருந்து ஒவ்வொண்ணா யாரேனும் பிடுங்க முயற்சித்தா, ஜடை அப்படியே வந்துவிடாதோ?

      இந்த சைசுல பாதாம், முந்திரி என்று நம்ப முடியலை

      Delete
    2. இந்த சைசுல நம்மூரிலேயே கிடைக்குது சகோ., முதல் தரமான முந்திரி, பாதாம் இந்த சைசுலதான் இருக்கும்.

      ஜடையில் யாரும் கைவைக்காம இருக்க ஆள் போட்டிருப்பாங்க

      Delete
    3. அடைசி வீடியோ குரல் எனக்குத் தெளிவாகக் கேட்கலை...மொபைல்ல கேட்டுப் பார்க்கறேன்...

      /////////////
      செம்பருத்தின்னு ஜீ டிவில சீரியல் போகுது. அதுல கதாநாயகிக்கு கல்யாணம் ஆகலைன்னு வீட்டுக்காரம்மா புலம்புதாம்.காலையில இருந்து தான் படும்பாட்டை சொல்லி இப்படி பொண்டாட்டி அழுகுறா. கோவம் வந்திட்டு, நான் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டேன்னு சொல்றார்.

      அம்புட்டுதான் கீதாக்கா

      Delete