சின்ன வயசில் அரக்கோணத்தில் சாய்ராம்ன்ற ஹோட்டலுக்கு அப்பா கூட்டி போகும்போது இட்லிதான் தனக்கு சொல்லிக்குவார். அதேமாதிரி வேலூருக்கு கூட்டிப்போகும்போதெல்லாம் சி.எம்.சிக்கு அருகில் இருக்கும் பேலஸ் கபேக்கு கூட்டி போவாங்க. அங்க பொழுதன்னிக்கும் இட்லி கிடைக்கும். ஆவி பறக்கும் இட்லி தும்பை பூவாய் தேங்காய் சட்னி, இளம்பெண்ணின் கன்னம்போல் சிவந்த கார சட்னி, இதோடு ஒரு ஸ்பூன் இருக்கும். இந்த ரெண்டு ஹோட்டலிலும் ஒரு ஒற்றுமை. நாம கேக்காமயே, சாம்பார் குறைய குறைய கொண்டு வந்து ஊத்திக்கிட்டே இருப்பாங்க. இட்லியைவிட சாம்பார்லதான் வயிறு நிறையும்.
ஆற்காட்டில் பஸ் ஸ்டாப் பக்கத்துலயே சாமி ஹோட்டல்ன்னு இருக்கும். அங்க 90களில் மினி இட்லி செம பேமஸ். அந்த பக்கம் போகும்போதெல்லாம் வாங்கி கொடுப்பார். ஒரு கிண்ணம் நிறைய சாம்பார்ல மிதக்கும் இட்லியை துண்டாடி சாப்பிடுறதே ஒரு கெத்து.. எதுக்கு இந்த ஹோட்டல் விளம்பரம்ன்னா, சாம்பாருக்காக இட்லியா?! இட்லிக்காக சாம்பாரான்னு யோசிக்கும்போது சாம்பாரின் ருசிதான் காரணம்ன்னு தெரியுது. அதேமாதிரியான ஒரு சாம்பாரை செய்யனும்ன்னு என்னோட போராட்டத்துல ஒருவழியா ஜெயிச்சுட்டேன்னுதான். கிட்டத்தட்ட ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் இப்ப வீட்டிலேயே செய்றேன்.
ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்...
துவரம்பருப்பு
பச்சை மிளகாய்,
பூண்டு
காய்ந்த மிளகாய்
வெங்காயம்
தக்காளி
மிளகாய் பொடி (தனியா, பருப்புலாம் போட்டு அரைச்சது. தனி மிளகாய்தூள் இல்ல)
உப்பு
கேரட், கத்தரிக்காய், முருங்கை, முள்ளங்கின்னு காய்கறிகள்
எண்ணெய்
வெல்லம்.
அரைக்க
தேங்காய்
தக்காளி
உ.கடலை
து.பருப்பை கழுவி மஞ்சப்பொடி சேர்த்து வேகவைக்கனும். நான் வாசனைக்காக பூண்டு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய், தக்காளி சேர்த்து வேகவைப்பேன்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கனும்...
காய்கறி சேர்த்து வதக்கனும்..
மிளகாய் பொடி சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும்வரை வதக்கிக்கனும்..
தேவையான அளவு தண்ணியும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடனும்..
குழைய வேகவைத்த பருப்பை சேர்த்துக்கனும்..
தேங்காய், தக்காளி, உ.கடலைலாம் அரைச்சுக்கனும்..
அரைச்ச விழுதை சேர்த்து கொதிக்கவிடனும்..
பெருங்காயப்பொடி சேர்த்துக்கனும்..
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொ.மல்லி, காய்ந்த மிளகாய்லாம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கனும்..
ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக்கிட்டா ஹோட்டல் சாம்பார் ரெடி. சிலருக்கு சாம்பார் தண்ணியா இருக்கனும். சிலருக்கு கெட்டியா இருக்கனும். அவரவருக்கு தகுந்தமாதிரி கொதிக்கவிட்டு இறக்கிக்கலாம்..
இட்லி, தோசை, பொங்கலுக்கு இந்த சாம்பார் நல்லா இருக்கும். பூரியை சின்ன சின்னதா சுட்டு சாம்பாரில் போட்டு எடுத்து சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். இதேமாதிரி உளுந்து வடையும் சேர்த்து சாப்பிடலாம்.. வடையும், பூரியும் மிதந்த சாம்பார் இன்னும் ருசியா இருக்கும்...
அடுத்த வாரம் கீரை மசியலோடு வரேன்...
நன்றியுடன்,
ராஜி
ஒரு துண்டு வெல்லம் தான் இவ்வளவு வேலை செய்யுதோ...?!
ReplyDeleteஇருக்கும் இருக்கும்ண்ணே!. ஆகமொத்தம் என் கைப்பக்குவம்ன்னு சொல்லமாட்டீங்க! அப்படித்தானே?!
Deleteகுறிப்புகள் சூப்பர் ராஜி....பருப்பு அளவு எதுவுமே போடலையே....அதுதான் சீக்கரெட்டோ?!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..இது எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாப்புல இருக்கு. இப்படித்தான் சொல்லுவாங்க...நான் என்னம்மா அளவு சொல்லும்மான்னா...உடனே கைய காமிச்சு இம்புட்டு பருப்பு, விரல்களை வைச்சுக் காமிச்சு இம்புட்டு கடுகு ...இம்புட்டுனு சொல்லுவாங்களே தவிர அளவு எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
என் அம்மாக்கு சாம்பார்ன்னா நீர்க்க இருக்கனும். அதுதான் ருசின்னு சொல்வாங்க. மாமியார் வீட்டில் சாம்பார் கெட்டியா இருக்கும். தேவையான அளவையும், செய்முறையையும் சொல்லிட்டா,அவரவர் ருசிக்கும், பழக்கத்துக்கும் ஏத்த மாதிரி செஞ்சுக்க போறாங்க. அதனால்தான் எப்பயுமே அளவுகளை சொல்வதில்லை.
Deleteசுவையான சாம்பார் ரெடி. இதை எங்கள் ப்ளாக்ல போட்டிருக்கலாமே ராஜி மா.
Deleteஉ.கடலைன்னால் உப்புக் கடலையா. சூப்பர் ரெசிபி.
@கீதா எல்லா அம்மாக்களும் இப்படித்தான் கையளவு,இத்தனூண்டு
இதுதான் கணக்கு.
நன்றி ராஜி மா.
எங்கள் பிளாக்கில் என்னை சேர்க்கலியே! அப்படி சேர்த்தால் பதிவை போடுவதற்கு ஆட்சேபணை இல்லம்மா.
Deleteகேட்டு வாங்கிப்போடும் கதைப்பகுதிக்கே உங்களிடம் கதை கேட்டிருந்தேன். நீங்கள்தான் அனுப்பவில்லை. பலமுறை கேட்டபிறகு நீங்கள் உங்கள் பக்கத்திலேயே வெளியிட்டு விட்டேன் என்று சொன்னீர்கள்!! நினைவிருக்கிறதா? சமையல் பகுதிகளும் நீங்கள் எங்கள் பகுதிக்கு
Deleteஎப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். இதையும் உங்கள் ஒரு பதிவில் முன்னரே சொல்லி இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். மோசடிவெல்கம். என் மெயில் ஐடி sri.esi89@gmail.com
கதை விட தெரிஞ்ச எனக்கு கதை எழுத வரலியே! என்ன செய்ய?!
Delete//மோசடிவெல்கம். //
Deleteமன்னிக்கவும். இதை இப்போதுதான் பார்க்கிறேன். "மோஸ்ட் வெல்கம்" என்று இருக்கவேண்டும்.
எப்படியோ பிற்காலத்துல ஹோட்டல் வச்சீங்கன்னா, உங்க கடை சாம்பார் மாதிரியே மத்தவங்க செஞ்சுரக்கூடாதுன்னு அளவு சொல்லலையா? நீர்க்க என்பது ஓகே, ஆனால் பருப்புகளுக்கு அளவு வேண்டாமா?
ReplyDeleteஹோட்டல்ல பூண்டு சேர்க்கறாங்களா என்ன? (சாம்பார்ல)
ம்க்கும் ஹோட்டல் ஒன்னுதான் குறை... சரி உங்களுக்காக சொல்றேன் ஒரு ஆழாக்கு.
Deleteஹோட்டலில் சேர்க்குறாங்களான்னு தெரியாது. வாசத்துக்காக நான் சேர்க்குறேன். எங்க வீட்டில் பூண்டை அவிச்சு வச்சாலும் பசங்க சாப்பிடும். எல்லாத்துக்குமே பூண்டு பிடிக்கும்.
ஹோட்டல் சாம்பாரில் பூண்டு சேர்ப்பதில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்.
Deleteஎனக்கு தெரிலப்பா.
Deleteஹோட்டல் சாம்பார் மாதிரி என்றாலே எப்பவும் கவர்ச்சிதான். இதையும் செய்து பார்த்து விடுவோம். நான் ஒருமுறை எங்கோ படித்த சரவணபவன் டைப் சாம்பார் செய்யும் வகை பகிர்ந்திருந்தேன்.
ReplyDeleteஎங்கேன்னு சொல்லுங்க. தேடி கண்டுப்பிடிச்சு செஞ்சிடுவேன்
Deleteஎங்கள் பிளாக்கிலேயே செய்முறையும் இருக்கு. நான் நிறையதடவை செய்வது. ஒவ்வொரு முறையும் நல்லா இருக்கும் (ஒவ்வொரு மாதிரி வந்து)
Deleteசுவைக்கத் தூண்டுகிறது
ReplyDeleteஆசையை தூண்டிவிட்டேனா?!
Deleteடெல்லியில் வடக்கத்திக்காரர்கள் சாம்பாரைக்குடிக்கவே இட்லி வாங்குவார்கள
ReplyDeleteஇங்கிட்டும் நிறைய பேர் அப்படியேதான் இருக்காங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇங்கே வரைக்கும் மணக்கிறது.
ReplyDelete