Sunday, March 31, 2019

காதல் ஊர்வலம் இங்கே... கன்னி மாதுளம் எங்கே?! - பாட்டு புத்தகம்

வெயிலில் அலைஞ்சு திரிஞ்சு வேர்க்க, விறுவிறுக்க சுத்திக்கிட்டிருக்கும்போது வேப்பமர/பூவரச நிழலோ கிடைச்சா எப்படி இருக்கும்?! அப்படிதான் இருக்கும் இந்த பாட்டு...  டி.ஆர் படங்களில் பிரம்மாண்டமான செட் எப்படி முக்கியமா இருக்குமோ அந்தமாதிரி பாட்டும் சூப்பரா இருக்கும். அவர் படங்களுக்கு மட்டுமில்லாம இன்னும் சிலரது படத்துக்கும் இசை அமைச்சிருக்கார். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கு. பூக்களை பறிக்காதீர்ன்ற படத்துக்குன் இவர்தான் இசை. படம் சூப்பர் ஹிட். நல்ல கதை, இசைன்னு இருக்கும்போது படம் ஹிட்டடிக்காம போகுமா?!

கமல் - ஸ்ரீதேவி,  விஜயகாந்த்- ராதிகா, ரஜினி-ஸ்ரீதேவி, கார்த்திக்-ரேவதிலாம் நிஜ ஜோடின்னு நினைச்சுக்கிட்டிருந்த காலக்கட்டம். இந்த வரிசையில் சுரேஷ்-நதியா ஜோடியும் ஒன்னு.  அத்தனை பொருத்தம் ரெண்டு பேருக்கும். இத்தனைக்கும் நதியா, சுரேஷைவிட குள்ளம்தான். ஆனாலும் நல்லா இருக்கும்...  குறைஞ்ச பட்ஜெட்ல எடுத்த படம். காதல் படங்களா வந்த காலக்கட்டத்தில் எடுத்தப்படம்..  சுரேஷ் டான்ஸ்ல பிச்சு உதறுவார். நல்ல நடிகர்தான் ஆனா தெலுங்கு கரையோரம் ஒதுங்கிட்டார். நதியா பத்தி சொல்லவே வேணாம் அவங்க டிரஸ்சென்ஸ் யாருக்குமே வராது. மாடர்ன் ட்ரெஸ் போட்டு பெரிய பொட்டு வச்சு வருவாங்க ஆனாலும் அவங்களுக்கு மேட்ச் ஆகும்.  நதியா பொட்டு, நதியா வளையல், நதியா கொண்டைன்னு பொண்ணுங்க பைத்தியம் பிடிச்சு அலைஞ்ச காலக்கட்டம் 1980 டூ 1990.. 

எஸ்.பி.பியும், சித்ராவும் இந்த பாட்டை ரசிச்சு பாடி இருப்பாங்க.  பாடல் முழுக்க எஸ்.பி.பியின் குறும்புத்தனமான எள்ளல் சிரிப்போடு கூடிய தொனி பாடல் முழுக்க வரும். ஆனா, இந்த பாட்டு கார்த்திக்குக்கு கிடைச்சிருந்தா பாட்டோட ஹிட் கிராஃப் எகிறி இருக்கும். ஒரு டூயட் பாட்டை துளிகூட ஆபாசமில்லாம எடுத்திருப்பாங்க.
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆஆ
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்
கவியெனும் நதியிலே
குதிக்கிறேன் குளிக்கிறேன்
மரகத வீணையுன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
வாழையிலைபோல நீ ஜொலிக்கிறாய்
தாழை விருந்துக்கு எனையழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

ஆஹஹாஆஆஹஹஹா

காதலி அருகிலே
இருப்பதே ஆனந்தம்
காதலன் மடியிலே
கிடப்பதே பரவசம்
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா
புத்தகத்துள் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆஆ
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே...

படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை: டி.ஆர். ராஜேந்தர்,
பாடல் எழுதியவர்: டி.ஆர்.ராஜேந்தர்
பாடியது: எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்; சுரேஷ், நதியா

படம்: பூக்களை பறிக்காதீர்,
இசை: டி.ராஜேந்தர்(பாடலுக்கு மட்டும்)
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்: சுரேஷ், நதியா

நன்றியுடன்,
ராஜி


12 comments:

 1. நல்ல பாடல்.

  இங்கே கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 2. ஒரு காலத்தில் நதியா விளக்குமாறு கூட பேமஷாக விற்பனை ஆனதே...

  ReplyDelete
  Replies
  1. இதென்ன புதுக்கதை?!

   Delete
 3. மிகவும் பிடித்த பாடல்...

  ReplyDelete
 4. கேட்டு ரசித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என் கலெக்சனில் இப்பவும் இருக்கும் பாடல் இது.

   Delete
 5. பாடல் கேட்டிருக்கேன் ராஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. 85-90களில் சக்கைப்போடு போட்ட பாடல் இது

   Delete