Friday, April 10, 2020

சற்குரு மகான் ஸ்ரீகணபதி சுவாமிகள்,தட்டாஞ்சாவடி-பாண்டிச்சேரி சித்தர்கள்.

தமிழர் மரபே சித்தர் மரபுதான். சித்தர் என்பவர் யார்? அவர்தான் புலவர். அவர்தான் மருத்துவர். அவரேதான் குரு. அவரேதான் வழிகாட்டி. அவர்தான் சோதிடர். அவர்தான் போர்க்கலை வல்லுனர். அவர்தான் ஆயக்கலை வித்தகர். சித்தர் என்பவன் ஏதோ குகைக்குள் அல்லது தனிமையில் அமர்ந்து சதா சர்வக்காலமும் சாமி கும்பிட்டுக்கிட்டு இருப்பவன்னு இன்னிக்கு நம்மை புத்தகங்களும், சினிமாக்களும், நாடகங்களும் நம்பவைக்கப்பட்டிருக்கு. மக்களோடு சேர்ந்து வாழ்ந்தவங்கதான் சித்தர்கள். ஆனா அவர்கள் சிந்தனை முழுக்க மருத்துவம், சோதிடம்.. இப்படி எதாவது ஒன்று ஓடிக்கிட்டே இருக்குறதால மக்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாங்க. இன்றைய கொரோனா வாசகத்துக்கு முன்னோடி இந்த சித்தர்கள்தான். உள்ளத்தால் இணைந்து உடலால் தனிச்சிருப்பாங்க. ஆனா, நாம அவங்களை சாமியார்ன்னு ஆக்கி, அவங்க என்ன நினைச்சுட்டிருந்தாங்களோ அதை நிறைவேற்றாம சித்தர்கள்ன்னா மக்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாங்க. அரூபமானவங்கன்னு சொல்லி ஃபிலிம் காட்டிக்கிட்டிருக்கோம்.


இறைவன் ஒன்றுதான். கடவுள் மதக்கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர். எல்லாருக்கும் எல்லா கடவுள் அருள்பாளிப்பார் என்பதை போனவாரம் சிவ ஸ்ரீமகான் படா சாஹிப் கதையினை பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்த்தோம்  இந்தவாரம் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் நாம தரிசனம் செய்யப்போறது பாண்டிச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடியில் இருக்கும் மகான் ஸ்ரீகணபதி சுவாமிகள்  ஜீவசமாதியினை.. இந்த மகான் மட்டும் இந்த நூறாண்டில் ஜீவ சமாதியானதால் அவருடைய பிறந்த தேதிஇருப்பிடம் எல்லாம் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகிறது. வட ஆற்காடு மாவட்டத்தின் வாலாஜா தாலுகாவில் உள்ள செட்டிகுப்பம்ன்ற ஊரில் சிதம்பரம் என்பவருக்கும் சின்னம்மாள் என்ற புண்ணியவதிக்கும் மகனாக 1879-ம் வருடம்,ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று மகனாய் பிறந்தார். விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்ததால் அந்த பிள்ளைக்கு கணபதி ன்னு பேர் வச்சிருக்காங்க. 
மானிட பிறப்பு எடுத்ததன் பயன் என்னவென்பதை  உணர்ந்ததாலோ என்னமோ, சுவாமிகள் பாலகனாக இருக்கும்போதே அவருக்கு பல கேள்விகள் மனதில் எழுந்தனஉடம்பில் இந்த உயிர் வந்தது எப்படி?! உடலைவிட்டு உயிர் போவது எப்படி? நான் யார்கணபதி என்ற பெயர் இந்த உடலுக்கா?! இல்லை உயிருக்கா?இறப்பு என்றால் என்ன?! அது எப்படி வருகிறது!? அப்படி வருகிறது என்றால் அதை தடுக்கமுடியுமா?என பற்பல கேள்விகள் மனதில் எழுந்ததன் விளைவாக அதைதெரிந்துக்கொள்ள பல குருமார்களை நாடி பலகாலங்கள் சேவை செய்துகொண்டிருந்தார்.ஆனால் யாருடைய பதில்களும் அவருக்கு ஆத்ம அனுபவத்தை தரவில்லை ஆகையால் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உண்மையை தேடி அலைய ஆரம்பித்தார் .
பரதேசியாய் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தார். பல புண்ணிய தலங்களுக்கும்காடு மலை என எல்லா இடமும் தேடி அலைந்தார். இதனால் மனமுடைந்த பெற்றோர்கள் மகனை தேடி அலைந்து கண்டுபிடித்தனர். கல்யாணம் செய்தால் திருந்தி விடுவான் என்று,அவரின் அக்கா மகளான மாரியம்மாள் என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். ஆனாலும் அவருடைய ஆத்ம தேடல் நிற்கவில்லை. சிலகாலம் குடும்ப வாழ்வு சென்றதும் ஒருமுறை ஸ்ரீமத் அகண்ட பரிபூரண அருளானந்தரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார் கணபதி சுவாமிகள். அவரின் கேள்விகளுக்கு  அருளானந்தரிடம் பதில் இருந்தது ,உடனே அவரிடம் அடைக்கலம் ஆனார் கணபதி சுவாமிகள்குருவானவர் கணபதி சுவாமியை பல சோதனைகளை செய்து பக்குவபடுத்தி பிறகு திருவடி தீட்சை கொடுத்தார்.
கணபதி சுவாமிகளுக்குள் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் குருவின் அருளால் அவருக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது. ஆன்ம ஆனந்தத்தில் திளைத்து இருந்தார் சுவாமிகள். நாட்கள் இப்படியே சென்றன. கணபதி சுவாமிகளின் ஆன்ம சாதனையும் தொடர்ந்தது. தன்னுடைய சீடன் ஒரு சம்சாரி என தெரிந்துக்கொண்ட குருவானவர்கணபதி ச்வாமிகளை இல்லறமே நல்லறம் அதன்பிறகுதான் துறவறம் என்று உணர்த்திஅவருக்கு இல்லற வாழ்வின் மகத்துவத்தை விளக்கி அவருடைய துணைவியாருடன் சென்று வாழ்க்கை நடத்துமாறு அறிவுறுத்தினார். குருவின் வாக்கை, தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார் சுவாமிகள். அந்த குடும்பவாழ்வுக்கு பரிசாக அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன
பரவாழ்வும்இகவாழ்வும் தன்னுடைய இரு கண்களாக பாவித்து சஞ்சலம் இல்லாதுதன் குருவோடு அகத்திலும்இல்வாழ்வில் புறத்திலும் ஞானியாக வாழ்ந்தார். சிலகாலங்கள் கழிந்ததும் கணபதி சுவாமிகளின் குருவானவர்தனக்கு பிறகு தனது சிஷ்யனான கணபதி சுவாமிகளை குருவாக அறிவித்து சிலகாலம் கழித்து சமாதியாகிவிட்டார். பிள்ளைகளை வளர்த்து கரைசேர்த்துதன் மனைவிக்கு தன்னுடைய பிரிவால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டுதன் குருமூலம், தான் பெற்ற ஆனந்தத்தை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கதோடுஆத்ம ஆனந்தத்தை தேடும் மனிதர்களோடு தன்னை இணைத்துக்கொண்டு முழுவதுமாக சந்நியாசம் ஏற்றுக்கொண்டார் கணபதி சுவாமிகள் 

தன் குருநாதருக்கு குருபூஜை ஆண்டுதோறும் சிறப்பாக செய்துவந்தார் கணபதி சுவாமிகள்அதன்பிறகு 1994-ம் ஆண்டு புதுவைக்கு வந்தார். புதுவையில் தனெக்கென சில சிஷ்யர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆன்ம இன்பத்தை போதித்து அவர்களை பக்திமார்க்கத்தில் திளைக்க செய்தார். சிலருடைய வாழக்கையில் உள்ள பிரச்னைகளுக்கு வழிகாட்டினார். அப்பொழுது அவருக்கு வயது 115-க்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இயன்ற அளவு பலருடைய வாழக்கையை ஆன்மீக தன்மையான மாற்றி அவர்களின் வாழ்க்கை தரத்தை .உயர்த்தினார். இப்படியே சிலகாலம் சென்றபிறகு அவருக்கு, தான் சமாதியாகும் காலம் நெருங்குவது தெரியவந்தது. அதை தன் அடியவர்களுக்கு உணர்த்தினார். தமிழ் விஷு வருடத்தில் வைகாசி மாதம் 16 ம் தேதி செவ்வாய்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய நன்னாளில்(29/05/2001)இரவு 9:00 மணியிலிருந்து 10:30 -க்குள்ளாக நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தார். 

நிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்)மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்)போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்மவடிவாகவே ஆகி பிரமத்துடன் ஒன்றி,ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதில் அறிபவன் (திருக்)அறியப்படும் பொருள்(திருஷ்யம்)போன்ற வேறுபாடுகள் எல்லாம் கரைந்து போயிருக்கும் நிலை பிரம்மவஸ்து ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும். இத்தகைய உயர்ந்த சமாதிநிலையை அடைவதற்கு    யமம்   நியமம்    ஆசனம்    பிராணாயாமம்    பிரத்தியாகாரம்    தாரணம்    தியானம்,  சமாதி  என்னும் எட்டுபடிகளில் சாதனை செய்யவேண்டும். இவற்றை இடைவிடாது பயிற்சிகள் மேற்கொண்டால் நிர்விகல்ப சமாதி மூலம் பிரம்ம அனுபவம் நேரடியாக உண்டாகும். 

கடந்த 29.5.2001-ம் ஆண்டு லாஸ்பேட் விமானநிலையம் பின்புறம் மகான் கணபதி சுவாமிகள் நிர்விகல்ப சமாதியடைந்தார். இதையடுத்து பக்தர்கள் அந்த இடத்தில் கோவில்கட்டி வழிபட்டுவந்தனர். இதனிடையே லாஸ்பேட் விமனநிலையத்தை விரிவுசெய்ய அரசு முடிவு செய்தது. அதற்காக கணபதி சுவாமிகளின் ஜீவசமாதியை அகற்றவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் மகானின் சமாதியை இடிப்பதற்கு அவரது பக்தர்கள் 2005 -ம் ஆண்டு தொட்டே கடும் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பாக புதுவை அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பக்தர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மகானின் ஜீவ சமாதியை பாதுகாப்புடன் இடமாற்றம் செய்து வேறொரு இடத்தில் சமாதியை வைக்க அரசு இடம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமாதியில் கணபதி சுவாமிகளின் பக்தர்கள் அவரிடம் மானசீகமாக வேண்டுகோள் வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.அதற்கு கணபதி சுவாமிகள் பக்தர்களின் கனவில் வந்து அதற்கு சம்மதம் கூறியதாகவும் சிலபக்தர்கள் சொன்னதாக தகவல்கள் உள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் அரசின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஒரு மாலை வேளையில் மகானின் சமாதியை சுற்றி கட்டப்பட்டிருந்த சுவர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டுசமாதி இருக்கும் இடத்தை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு மகானின் சமாதி கண்டெயினர் மூலம் பாக்கமுடையான்பட்டு பகுதிக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு எதிரில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மகானின் சமாதி வைக்கப்பட்டது. இந்த செய்தி அந்தநாளில் உள்ள மாலைமலர் பத்திரிகையின் ஆதாரத்தை வைத்து தொகுக்கப்பட்டது. பத்திரிக்கையில் வந்த படங்கள் உங்கள் பார்வைக்கு...
கடந்த வருடம் 2019 -ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கணபதி சுவாமிகளின்  18ம் ஆண்டு மகா குருபூஜை விழா சிறப்பாக பக்தர்களால் கொண்டாடப்பட்டது. அதற்கு முதல்நாள்  குருதீப ஆராதனையுடன் விழா களைகட்ட ஆரம்பித்தது.. மாணிக்கவாசகர் சைவநெறி திருக்கூட்டம் திருவாசக மேடை நிகழ்ச்சி,இசை, நாட்டிய பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி என்று பக்தர்கள் கணபதி சுவாமிகளின் குருபூஜையை சிறப்பாக கொண்டாடினர். ஜூன் 9  காலை 6:00 மணிக்கு பிரணவ கொடியேற்றத்துடன் குருபூஜை விழா துவங்கியது. தொடர்ந்து, திருப்பள்ளி எழுச்சி, திருப்புகழ் எழுச்சி, மகா யாகசாலை திருமுறை வேள்வியும், அச்சுதானந்த சுவாமிகளின் கீர்த்தனைகள் நடந்தது. பகல் 12.00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிேஷக ஆராதனைகள் நடந்தன. பகல் 2: 30க்கு ஆன்மிக சொற்பொழிவு என்று கடந்தவருடம் அவருடைய குருபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.இனி இந்தவருடம் குருபூஜை நாளில் இறையருளும் ,குருவருளும் இருந்தால் நேரில் சென்று பதிவு செய்யும் வாய்ப்பினை கொடுக்கட்டும் .
அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் ஜீவசமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.

நன்றியுடன் 
ராஜி 

15 comments:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    எங்கள் தளத்தில் தங்களது பதிவு: சற்குரு மகான்ஸ்ரீகணபதி சுவாமிகள்,தட்டாஞ்சாவடி-பாண்டிச்சேரி சித்தர்கள்.

    ReplyDelete
  2. திருத்தம்: இந்த பதிவை ஆன்மீகம் என வகைப்படுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,ஆன்மீகம் எழுத தொடங்கியது புண்ணியம் தேடி என்ற தலைப்பில்,அதில் நம் மாநில கோயில்கள் மட்டுமல்லாது பல வெளிமாநில கோவில்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.அந்தவகையில் இப்பொழுது பாண்டிச்சேரி சித்தர்கள் பற்றிய வரிசை தொடர்.இதுவும் ஆன்மீக பதிவே...

      Delete
    2. நல்லது. தாங்கள் எமது திரட்டியில் உள்ள குறிச்டிசாற்களை பயன்படுத்தினால் அந்த குறிச் சொற்களுக்குள் (மெனு) தங்கள் பதிவு தானாக இணைந்து விடும். ஆகவே திரட்டியில் உள்ள குறிச்சொற்களை பின்பற்றுவது எமது திரட்டிக்கு இலகுவாக இருக்கும்.

      நமது வலைத்திரட்டி: வலை ஓலை

      Delete
  3. அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. என் பதிவின் மூலம் அறிந்துகொண்டமைக்கு நன்றிங்க அண்ணா..

      Delete
  4. இல்லறம் சிறந்த அறம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா,"இல்லறமல்லது நல்லறமன்று "என்பது ஆன்றோர் கருத்து.'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை 'என்பார் வள்ளுவர் .எனவே இல்வாழ்க்கை என்னும் நல்வாழ்க்கையை இருபாலாரும் புனிதத்தன்மையோடு இல்லறம் என்னும் நல்லறத்தை நடத்திச்சென்றால் அதுவே ஒரு தவநிலை,கோவிலில் தினம் தினம் அபிஷேகம் ,ஆராதனை போல்,இல்வாழ்க்கையிலும் எத்தனைக் கடமைகள் உள்ளன.ஆகவேதான் முதலில் இல்லறமே அதன்பிறகுதான் துறவறம் என்பது நமது சான்றோர் கருத்து.

      Delete
  5. Replies
    1. உங்கள் வருகையும் கருத்துக்களும் அதைவிட நன்று அண்ணா...

      Delete
  6. அரிய செய்திகளைக் கொண்ட பதிவு. அருமை.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவில் ஒரு விஷயங்களை கவனித்தோமானால் 1800 க்கு முன்பு ஜீவசமாதியான சித்தர்கள் அனைவரும் செய்த சித்துக்கள் அளப்பரியது.ஆச்சர்ய மூட்டுவது .ஆனால் இந்த நூற்றாண்டுகளில் ஜீவ சமாதியான இவர்கள் தங்கள் சித்துக்களை குறைத்து கொண்டார்களா,இல்லை மனிதகுலம் தான் தோன்றி தனமாக நடந்துகொள்வதால்,இவர்கள் தங்களை தாங்களே.குறுக்கி இறை சிந்தனை மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்து சென்று விட்டனரா என்று தோன்றுகிறது.

      Delete
  7. பயணங்கள் தொடரட்டும்
    சித்தர் அருள் பெருகட்டும்
    வையகம் தழைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. வாழும் நாட்கள் சொர்க்கமாக இருக்கட்டும்,
      இயற்கையின் இன்னருள் தழைக்கட்டும்,
      வான் மழை வற்றாமல் பெய்யட்டும் ,
      உங்கள் வருகையும்,ஒவ்வொரு பதிவிலும் இருக்கட்டும்

      Delete
  8. நன்றி ..இணைத்தாகிவிட்டது...

    ReplyDelete