Friday, September 29, 2017

ஆயுத பூஜை கொண்டாடுவதன் அர்த்தம் என்ன?!


சரஸ் என்றால் நீர், ஒளின்னு அர்த்தம், சரஸ்வதி பிரம்மனின் நாவில் இடம்பெற்றிருப்பதால் அவளுக்கு நாமகள்ன்னும் பேரு. இவள் மூல நட்சத்திரத்திற்கு சொந்தக்காரி. பிரம்மனின் மனைவி என்று பொருள்படும்படி பிராஹ்மின்னு சொல்வாங்க. இதில்லாம, கலைமகள், கலைவாணி, கலையரசி, கலைச்செல்வின்னு அழகான தமிழால் இவளுக்கு பேர்கள் அனேகம். ஒட்டக்கூத்தர் என்ற புலவரால் கூத்தனூரில் சரஸ்வதிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஞானபீட விருதுக்கு  வாக்தேவி என்று பெயர். குமரகுருபரர் இயற்றிய சரஸ்வதி துதிக்கு சகலகலாவல்லி மாலை என்றும்,  கம்பர்,  சரஸ்வதிதேவி பற்றி பாடியதற்கு சரஸ்வதி அந்தாதி என்றும் பெயர்.


ஒருமுறை பிரம்மனின் சாபத்தால் பேசும் சக்தியை இழந்தாள் கலைவாணி. இதையடுத்து பூலோகத்துக்கு வந்த கலைவாணி, ஈசனை  வேதங்கள்  வழிப்பட்ட தலமான வேதாரண்யத்துக்கு வந்து ஈசனை வழிப்பட்டாள். அப்போது வேதாரண்யம் அம்பாளிடம் வீணையை இசைத்துக்காட்ட வந்தாள். அங்கு வந்தப்பின் அம்பாளின் குரலை கேட்க நேர்ந்தது. வீணையின் இசையைக்காட்டிலும் அம்பாளின் குரல் இனிமையானதாய் இருந்ததால், தனது வீணையை மூடி வைத்து விட்டாள். அதனால், வேதாரண்யம் அம்பிகையின் பெயர் யாழைப் பழித்த மென்மொழியாள் என்று விளங்கலாயிற்று. 




இந்த நிலையில் தன் சாபத்தால் பேசும் சக்தியை இழந்த கலைவாணியை காண பிரம்மன் சத்தியலோகத்திலிருந்து பூலோகம் வந்தார்.   சிருங்கேரி என்ற தலத்திலிருந்து கலைவாணி தவம் செய்துக்கொண்டிருந்தாள்.  அவளை சமாதானம் செய்து  அங்கிருந்து, வேலூர் அருகிலிருக்கும் வாணியம்பாடி என்ற தலத்திற்கு அழைத்து வந்தார்.  அங்குள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி  கலைவாணிக்கு மீண்டும் பேச்சு வர வேண்டினார்.  பிரம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணிய அதிதீஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் பிரம்மன் முந்தோன்றி,  ஹயக்கிரீவர் முன் கலைவாணியை வீணை வாசிக்க அருளினர்.  மேலும் கலைவாணிக்கு பேசும் சக்தியையும் அருளினர்.  கலைவாணி வீணையை இசைத்துக்கொண்டு  பாடல் பாடியதால் இத்தலத்திற்கு வாணியம்பாடி என்றானது. 




இத்தல அதிதீஸ்வரர் சுயம்புவாய் தோன்றியவர். மேற்கு நோக்கி அமர்ந்து நமக்கு அருள்புரிகிறார்.  பெரியநாயகி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாளிக்கிறாள்.  இங்கு சரஸ்வதி தேவிக்கென்று தனிச்சன்னிதி உள்ளது..  இவர் கிழக்கு நோக்கி அமர்ந்து,  மடியில் வீணையுடன், இடது காலை மடித்து ஒய்யாரமாய்  காட்சி தருகிறாள். இத்தலத்தில் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணன் கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.   இங்கு, பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித்தனி சன்னிதியில் அருள்புரிகின்றனர். அத்தீஸ்வரர், பெரியநாயகி அம்பாள். சரஸ்வதி தேவி ஆகியோருக்கு தனித்தனியே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிப்பட்டால்  கல்வி அறிவு பெருகும்,  கல்வியிலும் பேச்சாற்றலிலும், நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறும் ஆற்றலை அருள்வாள்.  வேலூரிலிருந்து 65கிமீ, ஜோலார்பேட்டையிலிருந்து 16 கிமீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.




நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன்  கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி  சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். சிருங்கேரியில்  ஒரு மாணவிபோல படிக்கின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் சரஸ்வதி.  வேதாரண்யம்,  திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை காணலாம்.   கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற கலைப்பொக்கிஷத்தில் நடனமாடும் கோலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியை காணலாம்.




ஜப்பானியர்கள் ‘பென் டென்’ என்னும் பெயரில் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர்.  டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் இத்தேவி சிதார் வாசிக்கிறாள்.  இந்தோனேசியா, பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்ஹ்டு பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.  விஜயதசமி நாளில் பாலித்தீவில் தாம்பாத்ஸரிம் என்னும் குளத்தில்  நீராடி புத்தகங்களை வழிப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை.





ஆயுதங்களின் உண்மையான பயனையும், அதனை நேர்வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.  உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் நிறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜையாகும்.   

ராமாயணத்தில் ராமர் கொண்டாடிய ஆயுத பூஜை

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லாவகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் போட்டு, விபூதி பூசி,  மஞ்சள் குங்குமம் வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். 


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் தெரிந்ததே.  நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.


இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மன்னனும் போருக்கு செல்லும் முன்னும், சென்று வந்த பின்னும் தங்களின் போர்ப்படை ஆயுதங்களுக்கு பூஜை போடுவதை வழக்கமாய் கொண்டிருந்தனர்.


நமக்கு பலவிதங்களில் உதவும் ஆயுதங்களை சரிவர, நேர்வழியில் மட்டுமே பயன்படுத்துவோம். அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473208
நன்றியுடன்,
ராஜி.

12 comments:

  1. எத்தனை எத்தனை கதைகள் இருக்கின்றன பிரமிப்பாக இருக்கின்றது.
    சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் இருக்குண்ணே. அவசர பதிவு. அதான் கொஞ்சமா டெல்

      Delete
  2. அருமையான விளக்கங்களும், அபூர்வ விஷயங்களும் . ராஜி மா. மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete
  3. விவரங்கள் சுவாரஸ்யம். குறிப்பாய் வாணியம்பாடி பெயர்க்காரணம்.

    ReplyDelete
    Replies
    1. வாணியம்பாடில இருந்து 100கிமீ தூரத்துலதான் இருக்கேன், ஆனாலும் எனக்கு இந்த விவரங்கள் தெரியாது, இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். விரைவில் கோவிலுக்கு போய் வரனும்

      Delete
  4. வண்ணப்படங்களுடன் அதிக விவரங்கள். வாணியம்பாடி பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. சரஸ்வதிதேவியின் நகைகள் எல்லாம் சூப்பராய் மின்னுகின்றன ,எந்த கடையில் வாங்கியது என்று விசாரித்து சொல்லவும் :)
    அப்புறம் ,அவர் கையில் செல்லாத ரூபாய் கட்டு இருக்கிற மாதிரியிருக்கு ,ஆரஞ்சு நிற 2௦௦௦ ரூபாய் கட்டைக் கொடுக்கவும் :)

    தமன்னா ,உங்களுக்கு சொல்ற மாதிரி என்னிடமும் பொய் சொன்னது ,வேறு சிம் மூலம் உள்ளே வந்து வாக்களித்தேன்,க்ளிக் ஆகிவிட்டது ....ங்கொய்யால யாரு என் கிட்டேயாவா :)

    ReplyDelete
  6. நிறைய தகவல்கள்! அறியாதவையும்....வாணியம்ப்பாடிக்கான பெயர்க்காரணம் அறிந்தோம்...

    ReplyDelete
  7. கல்பாத்தி விசுவநாதர் கோவிலில் சிறு வயதில் விஜய தசமி கொண்டாடி பார்த்திருக்கிறேன் அம்பிகையை தூக்கி வருவார்கள் ஒரு வாழை மரம் ஒரே வெட்டில் சாய்க்கப்படும் மகிஷனாம் அது

    ReplyDelete
  8. நன்று! பதிவும் படங்களும் த ம 8

    ReplyDelete