Wednesday, February 27, 2019

பய உணர்ச்சி போக்கும் காட்டேரி - சிறுதெய்வ வழிபாடு

அணுக்களின் மோதலால் உலகம் உண்டானது.  நீரிலிருந்து ஒரு செல் உயிர் தோன்றி படிப்படியா வளர்ச்சிக்கொண்டு மனித இனம் உருவானது. தனது தேவைக்கான பொருட்களை மனிதன் உருவாக்கினான்.  சிங்கம், புலி, கரடி, பாம்புகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொண்ட மனிதன். நெருப்பு, காற்று, நீர் என தன்னால் கட்டுப்படுத்த முடியாதவைகளை கண்டு பயந்தான். அதற்கு கடவுள் என வழிபட்டு அதை தன்வசப்படுத்த முடியுமாவென பார்த்தான். காற்று  (வளி) மண்டலத்தை  பிரம்மன் எனவும்விண்வெளி மண்டலம் என்ற விஷ்ணு, (வெளி), சூரிய மண்டலம் என்ற சிவன் (ஒளி) என வணங்க ஆரம்பித்தான். இது ஆதி தமிழனின் வானியல் அறிவு. அதை பிற்காலத்தில் மூன்று பெருந்தெய்வங்களாய் மாற்றப்பட்டன. வளி, வெளி,ஒளி இவை மூன்றுமே ஒரு உயிர் உருவாக முக்கிய காரணியாகும். ஆரியர்களின் வருகைக்கு பின்னரே இம்மூவரும் பெருந்தெய்வங்களாய் கொண்டாடப்பட்டு, அதன்பின்னரே ஏசு, அல்லா, புத்தர்ன்னு மதப்பிரிவுகள் உண்டானது. முப்பெருந்தெய்வங்களுக்கு இணையாக முப்பெருந்தேவிகள் படைக்கப்பட்டனர். அதன்பின் முருகன், வினாயகர், ஐயப்பன்னு பட்டியல் நீண்டது... 

ஆதிதமிழனின் வரலாற்றில் இறைவழிபாடே கிடையாது. இயற்கையையே தெய்வமாய் வழிபட்டனர். பிற்காலத்தில், குடிமகன்களின் நலனுக்காகவே வாழ்ந்து, அவர்களின் துயர் துடைத்த, அவர்களுக்காகவே அனைத்தையும் இழந்த சிறந்த தலைவன், மன்னன் இவர்களை தமிழ்புலவர்கள் பாட, அதுவே கடவுள் என்றொருவருக்கு சாட்சியானது. அரசனுக்கும்,இறைவனுக்கும் பொதுப்பெயர்கள் ஒன்றே. கோ, அரசன், ஆண்டவன்.. சோழர்களின் ஆட்சிக்கு பின்னரே சிவவழிபாடு தமிழகத்தில் தழைத்தோங்கியது.  நம்புனாதான் சோறுன்ற சினிமா வசனத்துக்கேற்ப,இதுக்காக பல கொலைகள் அரங்கேறி இருக்கு. இப்படி...  இதுலாம் நான் சொன்னா சிரிச்சுக்கிட்டே திட்டிட்டு போய்டுவாங்க.

ஒரு நூறு, இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்குமுன் ஊருக்காக  வாழ்ந்து மறைந்த, பழியுணர்ச்சியால் தற்கொலை, கௌரவக்கொலைகள்ன்னு உயிரிழந்தவர்களை அந்த ஊர் காவல்தெய்வமா கொண்டாடுவாங்க. இதுக்கு பல சாட்சிகள் உண்டு, இசக்கி அம்மன், பேச்சியம்மன், மதுரை வீரன், ஐயனார்ன்னு எல்லாருமே வாழ்ந்து மறைந்தவங்க. இவங்கதான் குலதெய்வமாவும் இருக்காங்க. ஊர்க்காவலாவும் இருக்காங்க. இவங்களைலாம் சிறுதெய்வங்கள்ன்னு ஒரு பிரிவாக்கி வகைப்படுத்தி வச்சிருக்காங்க.  ஒருத்தருக்கு முதல் தெய்வம் அவங்க அப்பா அம்மா, பின், குல தெய்வம், அடுத்து ஊர்க்காவல் தெய்வம், அதுக்கடுத்து இஷ்ட தெய்வம். கட்டக்கடைசியாதான் நாம வணங்கும் முருகன், சிவன், பிள்ளையார், பெருமாள்லாம்....
சிறுதெய்வங்களை வரிசையா பார்த்துக்கிட்டு வரலாம். சிறுதெய்வ வழிபாட்டில் இன்னிக்கு பார்க்கப்போறது காட்டேரி அம்மன். கரிய உருவம், கருமை நிற உடைகள், வெளித்தள்ளிய நாக்கு, ரத்தம் தோய்ந்த உதடுகள், கோரைப்பற்கள், தலைவிரிகோலம், கையில் முறம், துடைப்பம் தாங்கி இருக்கும் கோலமே காட்டேரி அம்மன்.  குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் ஊருக்கு வெளியே இருப்பாள். பெரும்பாலும் கோவில் எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஊருக்கு ஒதுக்குபுறமான குளத்தடி, ஆற்றங்கரையோர மரத்தடியில் சிலாரூபமாய் இல்லாமல், பாறாங்கல்லே அம்மனாய் நினைத்து வழிபடுவர். கானகம் திரியும் இவளை தேவிமகாமியத்தில் துர்காதேவியின் கடைசி அவதாரமான சண்டியின் அம்சமாய் கொள்வர். 

நெல்லூர், சித்தூர் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், நாகை, பாண்டி, சென்னை ஆகிய ஊர்களிலேயே இந்த காட்டேரியை குலதெய்வமாய் கொண்டவர்கள் இருக்கின்றனர். 

இருசியுடைமை இராத் தங்காது...  இருசி தெய்வம் இரவில் தங்காமல் அலைந்து திரியும் என்பதே இதன் பொருள்.  இருசி என்பது காட்டேரியின் இன்னொரு பெயர். நல்லிருசி, பொன்னிருசி, குழி இருசி என்பது இவளது பெயர்.  இருசின்ற வார்த்தைக்கு பூப்படையும் தன்மையில்லாத பெண்ன்னு அர்த்தம்.  காட்டேரி அம்மன்  வழிபாடு சங்ககாலத்துலயே இருந்திருக்கு..
ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர் 
வெள்ளத்தானை அதிகன் கொன்று 
உவந்து ஒள்வாள் அமலை ஞாட்பிற் - இது சங்கக்கால பாடல்..
அதியனுக்கும் மிஞிலிக்கும் போர் ஏற்பட்டது அப்படி நடக்கும் போரில், தனக்கு வெற்றியை தேடித்தந்தால் பெரும்பலி தருவேன் என பாழி நகரத்தெய்வத்தை வேண்டி போர்க்களம் மிஞிலி சென்று, அதியனை வென்று அதியனை பேய்தெய்வத்திற்கு பலியிட்டு அமலை கூத்தாடினான் என பாடல் சொல்லுது. பகை மன்னனின் தலையை பேய்தெய்வத்துக்கு பலிக்கொடுத்து அருகிலிருக்கும் மரத்தில் மாட்டி வைக்கும் முத்திரை  சிந்துச்சமவெளியில் கிடைத்திருக்கு. இவளை குலதெய்வமாய் வணங்குவோருக்கு வெற்றியை தருவாள்.பதிலுக்கு உயிர்பலி கேட்பாள். ஒருவேளை பலியிடாமல் அலட்சியம் செய்து அவளது கோவத்துக்கு ஆளானால் அக்குடும்பத்தின் கருவுற்ற பெண்களின் இளங்கருவை தின்பாள். தொடர்ந்து கருச்சிதைவு நடந்தால் குழந்தைப்பேறு கிட்டாது. குழந்தை இல்லாத பெண்களை இருசின்னு திட்டுவது பழந்தமிழர் வழக்குமொழி. கருவை தின்று இருசியாக்கிதால் பயபக்தியால் இருசியாயின்னும் சொல்லப்பட்டாள்.  இன்னிக்கும் கிராமப்புறங்களில் காரணமே இல்லாம கருக்கலைந்தால், அதுக்கு முனி, காட்டேரி அடிச்சிடுச்சுன்னுதான் சொல்வாங்க. உடனே காட்டேரி வழிபாடு நடக்கும். 


எங்க ஊர்பக்கமும் இந்த காட்டேரி அம்மன் வழிபாடு பெரும்பாலும் எல்லார் வீடுகளிலும் உண்டு. திருமணம், காதுகுத்து, சீமந்தம், புதுவீடு புகுதல், குழந்தை பிறந்த பிறகு என இந்த அம்மனை கும்பிடுவோம். எங்க ஊர்ப்பக்கம்லாம் தனியா கோவில் கிடையாது. ஞாயிறு, வியாழக்கிழமை இரவு பெண்கள் மட்டும் அருகிலிருக்கும் ஆற்றங்கரை, குளத்தங்கரை வழக்கமா காட்டேரி அம்மனை ஆவாகனம் செய்யும் இடத்துக்கு கிளம்புவாங்க. வீட்டின் பெரிய சுமங்கலி பெண், ராந்தர் விளக்கோடு முன்செல்ல, அடுத்து ஒரு தட்டில் விபூதி, கற்பூரம் ஏந்தி செல்ல, சாதம், கருவாட்டு குழம்பு, முருங்கைக்கீரை, கொழுக்கட்டை, வடை, பாயாசம்ன்னு வீட்டில் சமைச்சதோடு, வெற்றிலை பாக்கு, தேங்காய் பழத்தோடு அரளிப்பூ, அரளி இலை, காதுமணி கருவளையம், மஞ்சள் சரடு கொண்டு செல்வாங்க.  அப்படி கிளம்பி செல்லும்போது காட்டேரி அம்மனை வழிபடும் வழக்கமில்லாத வீட்டை சேர்ந்தவங்க எதிரிலும் வரமாட்டாங்க. காட்டேரி அம்மனை கும்பிடும் வீட்டுக்கும் போகமட்டாங்க.
எங்க ஊரில் இப்படிதான் வீடு கட்டுவாங்க. பெருக்கல் குறி இருக்கும் இடத்தில்லாம் மண் உருண்டை பிடிச்சு வைப்பாங்க.

மேல படத்தில் இருக்குறமாதிரி  லேசா பள்ளம் பறிச்சு அந்த மணல் அல்லது ஆற்றுமணலால் வீடு கட்டுவாங்க. வீடு கட்டும் இடத்தை மஞ்சள் தண்ணீர் தெளிச்சு சுத்தம் செய்துவிட்டு படத்தில் இருக்குறமாதிரியே சின்னதா வீடு கட்டுவாங்க. பெரிய வீட்டுக்கு எதிரில் சின்னதா ஒரு குழி வீடு கட்டுவாங்க. வீட்டுக்குள் ஆற்றுமணலால் உருண்டை பிடிச்சு வைப்பாங்க. மஞ்சள், குங்குமம் இட்டு, அரளிப்பூ சார்த்தி, மஞ்சள் சரடு சுத்தி, கதம்ப பொடி தூவி சமைச்சு கொண்டுவந்ததை படைச்சு சாப்பிடுவாங்க.  மிச்சம் மீதியை அங்கயே கொட்டிட்டு வந்திடுவாங்க. வீட்டுக்கு கொண்டு வரமாட்டாங்க. ஆண்களுக்கு அந்த வழிபாட்டில் இடமில்லை. மஞ்சசரடு, விபூதி மட்டும் வீட்டுக்கு கொண்டு வரலாம். காட்டேரி அம்மனை வழிபடும் வழக்கமில்லாதவங்க இதுலாம் விட்டுக்கக்கூடாது. குழிவீட்டுக்குள் வைக்கப்படும் இலை திருமணத்துக்காக இருக்கும் பெண், குழைந்தை இல்லாதவங்க, நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவங்களுக்கு வீட்டின் பெரிய சுமங்கலிப்பெண் சேலைத்தலைப்பினில்  கொடுப்பாங்க.

சாமி கும்பிட்டு முடிச்சதும் அந்த வீட்டை வெட்டிய பள்ளத்துலயே போட்டு, மிச்சம் மீதி சாப்பாட்டை அதில் கொட்டி மணலால் மூடி வெற்றிலை, பாக்கு, பழம் வச்சு கற்பூரம், ஊதுவத்தி  ஏத்தி  வச்சிட்டு திரும்பி பார்க்காம வந்திடுவாங்க.
Image result for காட்டேரி அம்மன் வழிபடும் முறை
தாய்ப்பால் இல்லாதவங்க,  பிரசவ வலியால் துடிப்பவர்கள் ஆகியோர் காட்டேரியம்மனை வழிபட்டால் உடனே தீர்வு கிடைப்பதாக நம்புகின்றனர். காரணமே இல்லாமல் அழும் சிறு குழந்தைகளுக்கும், பய உணர்ச்சி கொண்டவங்க காட்டேரி அம்மனுக்கு படைச்ச மஞ்ச சரடு, விபூதி பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.  என் அம்மா வீட்டில் கருப்பு சேலை, அசைவம் வச்சு படைப்பாங்க. மாமியார் வீட்டில் புடவை வைக்காம, சைவ சாப்பாட்டோடு கும்பிடுவோம்.  இப்பலாம்  நகர்புறத்திற்கு குடிப்பெயர்ந்தவங்கலாம் தன்வீட்டு மாடியிலேயே காட்டேரி அம்மனை கும்பிடுறாங்க. 

சிறுதெய்வ வழிபாட்டில் இன்னொரு தெய்வத்தை அழைச்சுக்கிட்டு விரைவில் வரேன்...

நன்றியுடன்,
ராஜி

32 comments:

  1. யம்மா... இப்படி பயமுறுத்தினா எப்படிம்மா...?!

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் அண்ணனை பார்த்து நான் பயந்ததுலாம் இன்னும் மறக்கலைண்ணே. உங்க மீசையை பார்த்து காட்டேரி அம்மன் பயப்படாமல் இருக்கனுமே!

      Delete
    2. It's our kula deivam. I have seen the pooja. But we don't know where the temple is we use to do pooja at home. Very powerful god. No couples at our family without child.

      Delete
  2. மிஞிலி- என்ன ஒரு பெயர்!

    காட்டேரி அம்மன் பற்றி இப்போது அறிந்துகொண்டேன். இந்த பூஜை எங்கள் வீட்டுக்கு அருகில் ஒருமுறை நடந்தபொழுது கிடைத்த அனுபவங்களை எங்கள் 'அமானுஷ்ய அனுபவங்கள்' பகுதியில் எழுதி இருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. சங்கக்கால பெயர். ஆனா, அர்த்தம் தெரில.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றியண்ணே

      Delete
  4. காட்டேரியம்மனைப் பற்றி அதிகமான செய்திகளை இப்போதுதான் அறிகிறேன். பொதுவாக தெய்வங்கள் கெடுதல் செய்வதில்லை என்பது ஒரு கருத்து. சிலர் சில தெய்வங்களை அவ்வாறாக நினைத்துக்கொண்டு, அவ்வாறான தெய்வங்களின் பக்கம் செல்வதேயில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு புராணக்கதையும் உண்டு. ஆனா, ஆதாரமில்லன்னு விட்டுட்டேன்ப்பா

      Delete
  5. சிறு தெய்வ வழிபாடே இருந்தது அதை ஹிந்துத்தவ மக்கள் தவறாக சித்தரித்து இந்துமதக் கோட்பாடுகளை உருவாக்கி சிலருக்கு தெய்வ வழிபாட்டுக்கே தகுதி இல்லை என்றாக்கி சொல்லிக் கொண்டே போகலாம் இன்னும் இதே வழியில் சிந்தனையை ஓட விடுங்கள் பலதும்புரியும்

    ReplyDelete
    Replies
    1. ம்ம் இதுலாம் சொன்னா தேசத்துரோகி லெவலுக்கு ட்ரீட் பண்ணுவாங்க..
      ஆதிகாலத்தில் இயற்கையை வணங்கின தமிழன், மெல்ல மெல்ல சிறுவழிபாட்டில் ஈடுபட்டான். வைணவ, சமணம், சைவ வழிபாடும் பல்வேறு காலக்கட்டத்தில் மாறிமாறி தமிழகத்தில் அந்தந்த பிரிவினை சார்ந்த மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது.

      இன்று, பரவலா சைவம் தழைத்தோங்க காரணம் சோழர்களே! அவங்கதான் பரவலா கோவில் எழுப்பி, வழிபாட்டுக்கென மானியமும் ஒதுக்கினாங்க. சைவத்தை ஏத்துக்க சொல்லி மக்கள் நிர்பந்திக்கப்பட்டாங்க. இதுக்காக கழுவேற்றமும்லாம்கூட நடந்திருக்கு.

      விஞ்ஞான அறிவு வளர்ந்தபின் விபூதி, நாமப்பட்டை தொடங்கி கோவில் வரைக்கும் புதுப்புது அர்த்தம் கண்டுபிடிச்சு இறைவனை சிலாகிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ருத்ராட்சம் பலகாலமா தமிழகத்தில் இருக்கு. ஆனா, அதை அணிய பல விதிமுறைகள் இருந்துச்சு. இப்பா எல்லாருமே அணிந்திருக்காங்க. ஆண், பெண் பாகுபாடில்லாம எல்லாருமே ருத்ராட்சம் கட்டி இருக்காங்க. முன்னலாம் ருத்ராட்சையை கண்டா ஒரு சிலிர்ப்பும் பயபக்தியும் அணிந்திருப்பவர்மேல் மரியாதையும் வரு. ஆனா, இப்ப?! இவன்லாம் அணிந்திருக்கானேன்னு நினைக்க தோணுது.. இதுக்குலாம் காரணம் வாட்ஸ் அப், பேஸ்புக் மாதிரியான சமூக வளைத்தலங்களால் பரப்படும் செய்திகளே!

      Delete
  6. காட்டேரி அம்மன் என்று சொல்லிக்கேள்விப்பட்டதுண்டு ஆனா இப்போது தான் முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன்.

    முதல் படத்தை போட்டு பயமுறுத்திட்டீங்களே

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும். இதுக்கேவா பயப்படுவாங்க?! சோ சேட்

      Delete
  7. Ayya yanka kudubathula katteti kudumbathil valakam ilai annal kumbeda assaiyaga ullathu katteriyai vannakenal vetel ulla Anna kulanthaikal ullanar anni 8matham agerathu asambavetham nadakuma

    ReplyDelete
    Replies
    1. Neengal ammani alayithirku sendti valippadalam

      Delete
    2. No . It's our kula deivam. Only that family can worship . Now I got married and so I was not called for pooja. I used to pray my husband deivam.

      Delete
  8. Kurepu nan thirunagai kudmbathai veetu thaniyaga irukeran anal 2nal oru muraiku veetrku sendru parpan

    ReplyDelete
  9. நாங்க கட்டேரி சாமியதான் குலதெய்வமா வணங்கி வருகிறோம் எங்கள் பழைய ஊர் சென்னபட்ப்பட்டனம் ஆன நாங்கள் இப்போது சிதம்பரத்தில் இருக்கிறோம்

    ReplyDelete
  10. Engel veettu kula deivam IrusiKatteriAmman. Kula deiva poojai cheyya vendum enra aarvam miga miga athigam.Aanaal Amman sannidanam iirukkumidam theriathadal poojai sarivara cheyya iyalavillai. Ippothu sannidanam Ulla idam therindu kondom. Very very thanks sister. Kindly share the sannidanam(Jolarpettai)correct address.

    ReplyDelete
  11. I am R.Anandavelu from Chennai and my contact number is 9789866460.

    ReplyDelete
  12. ஐய்யனார் என்பவர் சாட்சாத் ஹரிஹரன் சபரிநாதன் ஐய்யப்பன் மணிகண்டனே அவரை எப்படி கிராமக்குட்டி தேவதைகள் வரிசைல சொல்றீங்க

    ReplyDelete
  13. இரிசி காட்டேரி என்று பெண் தெய்வத்தின் ஆலயம் எங்கே இருக்கிறது?பெரும்பான்மையான இடங்களில் காட்டேரி அம்மன் என்றுதான் ஆலயங்கள் உள்ளது. அவையை இரிசி ஆலயமாக கொள்ளலாமா?.. தகுதியானவர்கள் தகுந்த பதில் தந்து உதவுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  14. காட்டேரி அம்மன் கோயில் தமிழகத்தில் எங்கு உள்ளது?

    ReplyDelete
  15. நல்ல பதிவு

    ReplyDelete
  16. Naa sellum kovilil koliyai arutu bali kodukka mudiyatam ayya ...athe koliyai naan uyirodu ammanin arugilaye vittuvittu varalama?

    ReplyDelete
  17. வழி காட்டேரி அம்மன் கோவில் எங்கே உள்ளது சொல்லுங்க

    ReplyDelete