Sunday, February 24, 2019

YEs i Love This Idiot.. Loveable Idiot - பாட்டு புத்தகம்

Image result for கோபுர வாசலிலே
எல்லோருக்குள் ஈகோ இருக்கும்.. அது ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். ஈகோவை காப்பாத்திக்க ஆண்கள் ரொம்ப போராடுவாங்க. அதிலும் காதலில்?! சொல்லவே வேணாம். வேணும்ன்னா எந்த லெவலுக்கும் இறங்குவாங்க. வேணாம்ன்னாலும் எத்தனை உதாசீனப்படுத்தவும் தயங்கமாட்டாங்க. தனக்கு பிடிச்சது நடக்க சாம, தான, பேத, தண்டம் என அத்தனை அஸ்திரத்தையும் பயன்படுத்துவாங்க. அப்படிதான் இங்க ஒரு பையன் தனக்கு பிடிச்ச பொண்ணோட மனசில் இருக்கும் காதலை வெளிக்கொணர பிடிவாதம் பிடிக்கிறார். அந்த பொண்ணும் லேசுப்பட்டதில்லை. மனசில் ஆசை இருந்தாலும் வெளிய சொல்லாம இருக்கு. அறையின் மூலையில் அகப்பட்ட பூனையாய் வேற வழியாய் காதலை சொல்லுது. அதும் பொதுவெளியில், அந்த பொண்ணோட காதலை சொல்ல வச்சுட்ட மகிழ்ச்சியில் பையன் சிரிப்பான் பாருங்க ஒரு சிரிப்பு. அதில் எள்ளலும் துள்ளலும் இருக்கும். இப்படி ஒரு காட்சி படத்துல.வருது. 
Image result for கோபுர வாசலிலே

இந்த காட்சில நடிக்கவும், இசைக்கவும், பாடவும் யார் பொருத்தமா இருப்பாங்க?! வேற யாரு நடிக்க கார்த்திக், இசைக்கு ராஜா, பாட எஸ்.பி.பி, சித்ராதான் பொருந்தினாங்க. இளையராஜாவின் டாப் டென் பாடல்களில் எப்படியும் இந்த பாட்டு வந்திரும் இதுக்கு ராஜா சார் எத்தனை மெனக்கெட்டிருப்பார்.   இசை முடிந்ததும் படத்தில் கூடி இருக்கவுங்க உற்சாகத்தில் தண்ணியில் குதிப்பதும், புறாக்கள் பறப்பதும்ன்னு நம்மை பறக்க வைக்கும். இசை ஒரு போதை, காதல் ஒரு ராஜ போதை. அந்த போதையோடு படத்துல வரும் லவ் சீன்லாம் மனசை  சாராயம் குடிச்ச குரங்கை தேள் கடிச்ச கதையா அங்குமிங்கும் ஓட வைக்கும். 
Related image

அத்தனை பேர் கூடியிருக்க எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅஅ அட்..ன்னு கத்தலா காதலை சொல்லிட்டதும் வரும் வயலின் இசையை கேட்டாலே மனசுல பட்டாம்பூச்சிலாம் பறக்காது. நாமே பட்டாம்பூச்சியாய் பறப்போம். அத்தனை உற்சாகம் தரும் இசை.. வயலினுக்கு அடுத்ததா புல்லாங்குழல் இசை. ஒன்றில்லை. இரண்டு புல்லாங்குழல் சத்தம் வித்தியாசமாய். ஹெட்போனில் மட்டுமே கேட்கும் மெலிதான சில் சில் சத்தம்.. 
Related image

ஒரு பாட்டின் ஆரம்ப இசைக்கே எத்தனை இசைக்கருவிகள்?! இந்த மெனக்கெடலுக்குதான் இந்த பாட்டு இப்பயும் எல்லாராலும் ரசிக்கப்படுது. இந்தபாட்டோட இடையில் ஒருமாதிரியான் உடுக்கை சத்தம் வரும். பெரும்பாலும் உடுக்கை சத்தம் பயத்தை கொடுக்கும். இந்த பாடலில் மட்டும் உடுக்கை சத்தம் வித்தியாசமாய் உற்சாகத்தை கொடுக்கும். உடுக்கைக்கு அடுத்து வயலின், அடுத்து புல்லாங்குழல், அதுக்கடுத்து பியானோன்னு இப்ப நினைச்சாலும் எந்த மியூசிக் பிளேயரை ஆன் பண்ணாமலே பாட்டும் காட்சியும் மனசில் விரியும். அந்தளவுக்கு இந்த பாட்டு மனசுல நின்னுட்டுது.
Related image
இந்த பாட்டில் எஸ்.பி.பியும், சித்ராவும் அதகளம் பண்ணியிருப்பாங்க. கார்த்திக் பாடிக்கொண்டிருக்கும்போதே மைக்கை நாயகி(சுசித்ரான்னு நினைக்குறேன்)யிடம் நீட்ட  அவர் வெட்கத்தோடு பாட ஆரம்பிப்பார்..கார்த்திக் உற்சாகத்தோடு இன்னும் ஆவலாய் மைக்கை நீட்டுவார்..இதைக் கற்பனை செய்து பாட வைச்சாங்களா இல்ல இப்படித்தான் எடுப்போம்ன்னு கேட்டே இப்படி பாட வைச்சாங்களான்னு  தெரியலை.   பாட்டு முடியும்போது, 
இதயம்ம்ம் இடம் மாறும்....ம் 

இளமை பரி...மாறும். ம்

அமுதும்ம்ம் வழிந்தோடும்.....ம் 

அழகில் கலந்தாட


பாடல் முடியும் கடைசியில் ஒவ்வொரு வரிக்கும்  எஸ்.பி.பியும், சித்ராவும் மாற்றிமாற்றி ’ம்’ சொல்வாங்க. இது ஆடியோவில் மட்டுமே வரும். வீடியோவில் வராது. இந்த பாட்டை ஆடியோவில் டவுன்லோட் பண்ணி, ஹெட்போன்ல கேட்டுட்டு இந்த பதிவை படிச்சுட்டு விடியோவை பார்த்தா எத்தனை அழகான பாட்டுன்னு புரியும்.
Image result for கோபுர வாசலிலே
பாட்டோட பாடலின் பாதில காத்துலகுடை பறக்கும்!!. ஒருநாள் என் சின்ன பொண்ணு இதை பார்த்துட்டு அம்மா குடையை யாரோ பிடிச்சு இழுத்துட்டு போறாங்க, நல்லா பாருன்னு சொல்லுச்சு. அப்புறம் வீடியோவை பார்த்தபின் அது தெரிஞ்சுது. நமக்கு ஏது இதுக்கெல்லாம் நேரம்?! கார்த்திக்கை ரசிக்கவே நேரம் போதலியே!! ஒரு படத்துல பார்த்தீபன் ரம்பாவை பார்த்துட்டு விவேக்கிட்ட சொல்வார். சார் ரம்பா சார்ன்னு.. அதுப்போல.... சார் கார்த்திக் சார்!! அழகு சார் .... குறும்பு சார் ..   இனிமையான காதலன் சார் .. சிரிப்பே கிக்கா இருக்கும் சார்..  சிரிக்கறப்ப கண் சின்னதாகிடும் சார்..ன்னு புலம்ப வச்சிடும் இந்த பாட்டு.  எத்தனை ஹீரோக்கள் கார்த்திக்கு முன்னும் பின்னும் வந்தாலும் கார்த்திக்க்கு ஈடாகாது. நியாயமா காதல் மன்னன்னு கார்த்திக்குதான் பட்டம் கொடுத்திருக்கனும். ஏன்னா அத்தனை ரொமாண்டிக்கான ஹீரோ.  காதல் காட்சிகளை , கார்த்திக்கின் சாயல் இல்லாமல், இனி வரும் ஹீரோக்கள் செய்துவிட முடியாது.

அதனால்தான்........

எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅ அட் :))


காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ...

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்... 

படம்: கோபுர வாசலிலே...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி
நடிகர்கள்: கார்த்திக், சுசித்ரான்னு நினைக்குறேன்...

போதையுடன்,
ராஜி


14 comments:

  1. Replies
    1. ஆமாம், எஃப், டிவின்னு தினத்துக்கு ஒருமுறையாவது இந்த பாட்டு ஒளி/லிப்பரப்பாகும்...

      Delete
  2. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடல் இது

    ReplyDelete
    Replies
    1. வயது வித்தியாசமில்லாம எல்லாருக்குமே பிடிக்கும்..

      Delete
  3. நான் அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தநேரம் அங்கிருக்கும்தியேட்டரிலெப்போதாவது போடும் தமிழ் படங்களுக்குப் போவேன் படம்பார்ப்பதை விட பார்ப்போரின் ரிஆக்‌ஷனையே அடிகம் கவனீப்பேன் ஒரு படம்ஜெமினி கணேசன் நடித்தது ஜெமினி கணேசன் திரையில் தோன்றும்போதெல்லாம் அங் கு படம் பார்க்க வந்திருக்கும் பெண்கள் ஜெமினி ஜெமினி என்று துள்ளுவதுகண்டு ஆச்சரியப்படுவேன் இந்தப் பதிவு ஏனோ அந்நாளைய நினைவுகளைக் கிளறி விட்டது

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!? ஜெமினிகணேசனுக்கு அம்புட்டு ரசிகைகளா?!

      Delete
  4. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இதில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும். குறிப்பாய் நாதம் எழுந்ததடி க்ளாஸ் பாடல்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அதிலும் பானுப்பிரியா வெள்ளைகலர் பட்டுச்சேலை கட்டிக்கிட்டு சூப்பரா இருப்பாங்க!!

      Delete
    2. அதே ஸ்ரீராம் அண்ட் ராஜி, இந்தப் பாட்டு செம பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஸ்ரீராம் சொல்லிருக்கும் பாடலும் ஹையோ ரொம்பப் பிடிக்கும்...இந்தப் பாட்டு மாயாமாளவகௌளை ராகத்துல அமைஞ்ச பாடல்...

      கீதா

      Delete
  5. மிகவும் பிடித்தமான பாடல்
    பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன்
    இன்று தங்களால் மீண்டும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாடலை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிண்ணே

      Delete
  6. பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது
    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. இருக்கும். கார்த்திக் பாட்டாச்சே!

      Delete
  7. நான் ரசித்த பாடல்களில் ஒன்று.

    ReplyDelete