Sunday, April 05, 2020

பாடகி பி.சுசீலாவை இளையராஜா இதற்காகத்தான் தவிர்த்தாரா?! - பாட்டு புத்தகம்

ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் ஆஸ்தான மேக்கப் மேன், உடை அலங்காரம், டிரைவர்ன்னு இருந்த காலக்கட்டம் அது,   டி.எம்.சௌந்திரராஜன்தான்  எம்.ஜி.ஆர், சிவாஜியின் பெரும்பான்மையான  பாடல்களை பாடுவார். அதேமாதிரி பத்மினி , சரோஜாதேவி மாதிரியான முன்னனி நாயகிகள் பாடலை பாட பி.சுசிலாதான் பாடுவது வழக்கம்...  ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தால் முதல் கதாநாயகிக்கு பி.சுசீலாவும், இரண்டாவது கதாநாயகிக்கும் மற்றவர்களும் பாடுவது எழுதப்படாத விதி.


அந்த விதியை மாற்றி எழுதினார் இளையராஜா. அன்னக்கிளியில் இசையமளாராக அறிமுகமான இளையராஜா கதாநாயகி பாடும் பாடல்களை எஸ்.ஜானகியை பாட வைத்தார். பாடல் ஹிட். பட்டிதொட்டியெல்லாம் அன்னக்கிளி உன்னைத்தேடுது....  பாட்டுதான்.  இளையராஜாவுக்கும், எஸ். ஜானகிக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. எந்தவித ஆயத்தமுமில்லாமல் சொன்னதும் பாடும் திறன்,  சோகம், காதல், கேலி, ரொமான்ஸ், என எந்த உணர்ச்சியானாலும் குரலை மாற்றிப்பாடும் லாவகமெல்லாம் இளையராஜாவின் கெமிஸ்ட்ரியோடு ஒத்துப்போக வச்சது. அதன்பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் ஹிட் அடிக்க ஆரம்பித்தது.  தொடர்ந்து எஸ். ஜானகியையே இளையராஜா பாட வைத்தார்.  பி.சுசீலாவை பாடி ஹிட் அடித்தாலும் தொடர்ந்து எஸ்.ஜானகிதான் இளையராஜாவின் ஆஸ்தான பாடகியாக இருந்தார்.

இப்படி பி.சுசீலாவை  இளையராஜா தவிர்க்க, எஸ்.ஜானகியின் குரல் மட்டும் காரணமில்லை. இளையராஜா இசையமைப்பாளாராக அறிமுகம் ஆகும்முன்  இன்னொரு இசையமைப்பாளரிடம் ஒரு கிடாரிஸ்ட் ஆக இருந்தார். ஒரு ரெக்கார்டிங்கின்போது இசையமைப்பாளர் தந்த  ஒரு இசைக் குறிப்பை (chord)  இளையராஜா வாசிக்கலைன்னு  பி.சுசீலா இசையமைப்பாளரிடம் சொன்னார். அதை  தான் வாசித்ததாக இளையராஜா கூறினார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி இளையராஜா கோவத்துடன் வெளியேறினாராம். இசையமைப்பாளர் பிறகு அங்கிருந்தவர்களை விசாரிக்க,   இளையராஜா வாசித்ததை சவுண்ட் என்ஜினீயர் ரெக்கார்டு செய்யத் தவறிவிட்டார் என தெரியவந்தது. இந்த சம்பவத்தை மனசில் வச்சுக்கிட்டுதான் இளையராஜா பி.சுசீலாவை தவிர்த்து வந்ததாக சொல்வாங்க.

தன்னோட இசையில் லதா மங்கேஷ்கரை பாட வைக்கனும்ன்னு ரொம்ப நாள் இளையராஜாவின் கனவு. அவர் கனவு நிறைவேறி ஆனந்த்ன்ற பிரபு, ராதா நடிச்ச படத்துல வரும் ஆராரோ ஆராரோ’ன்ற பாட்டை பாடவைத்தார். பாட்டு ரெக்கார்டிங்க் முடிஞ்சு வரும்போது  லதா மங்கேஷ்கர் குரல்  அற்புதம் என்றாலும் ஜானகி ஜானகிதான் என இளையராஜா சொன்னதா பத்திரிக்கையில் படிச்சிருக்கேன். 
இளையராஜா அறிமுகமான காலத்தில் பி. சுசிலாவிற்கு வயதின் காரணமாக குரலில் இனிமை குறைய ஆரம்பிச்சதும், எஸ்.ஜானகிப்போல நாட்டுப்புற பாடல்களில் பெருங்குரலில் பாட சுசீலாவால் முடியாதென்பதையும் இளையராஜா  உணர்ந்து எஸ்.ஜானகியை பாட வைத்து பி.சுசீலாவின் இசைப்பயணத்தை முடித்து வைத்தார். ஆனாலும், பழைய கசைப்பையெல்லாம் மறந்து பி.சுசீலாவின் இசைப்பயணத்தை மீண்டும் அவரே தொடங்கி வைத்தார். பி.சுசீலாவின் ரீ எண்ட்ரிக்கு காரணமான பாட்டைதான் இன்றைய பதிவில் பார்க்கப்போறோம். 


கங்கையாற்றில் நின்றுக்கொண்டு
நீரைத்தேடும் பெண்மான் இவள்..
கண்ணை மூடி, காட்சித்தேடி..
இன்னும் எங்கே செல்வாள் இவள்?!
தன்னையே தான் நம்பாது 
போவதும் ஏன் பேதை மாது?!
கங்கை ஆற்றில் நின்றுக்கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள் ...

பொய் போலவே, வேஷம் மெய் போட்டது ..
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்..
நூறாயிரம், சாட்சி யார் கூறினும்,
அவை எல்லாம் வேஷம் என்றாள் ?!
தன் கண் செய்த மாயம்..
பெண்மேல் என்ன பாவம்?!
தன் நெஞ்சோடு தீராத சோகம்..
இப்போராட்டம் எப்போது தீரும்?! இனி ,

கங்கை ஆற்றில் நின்றுக்கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள் ,

பொய்மானையே, அன்று மெய் மானென
அந்த சீதை பேதை ஆனாள்.
மெய்மானையே, இன்று பொய்மானென 
இந்த கோதை பேதை ஆனாள்...
பொய் நம்பிக்கை அங்கே... 
 வீண் சந்தேகம் இங்கே!!
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை 
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது !!

கங்கை ஆற்றில் நின்றுக்கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள் ..

படம்: ஆயிரம் நிலவே வா
நடிகர்கள்: கார்த்திக், சுலக்‌ஷனா,
இசை:இளையராஜா
பாடியவர்: பி.சுசீலா’
எழுதியவர்: புலமைபித்தன்

இளையராஜா பி.சுசீலாவை தன் இசையில் பாடுவதை ஏன் தவிர்த்தார்ன்னு நமக்கு தெரியாது. ஆனா,  எஸ்.ஜானகியை பாட வைக்காவிட்டால்  இன்று நம் உணர்ச்சிகளுக்கு தீனிப்போடும் நாம் ரசிக்கும் பல பாடல்கள் நமக்கு கிடைக்காமலே போய் இருக்கும். அவரவர் எடுக்கும் முடிவுகள் நமக்கு சாதகமாகவே இருக்கு. சரிதானே?!

நன்றியுடன்,
ராஜி

25 comments:

  1. ஜானகி அளவுக்கு இல்லையெனினும் நிறைய பாடல்கள் தந்திருக்கிறார். உதாரணம் ராகவனே ரமணா, அவர் அதிகம் புறக்கணித்தது டி.எம்.எஸ்தான்

    ReplyDelete
    Replies
    1. சுசீலாம்மாவை தன் இசையில் பாட வைத்திருக்கிறார். ஆனாலும் ஜானகி, சித்ரா அளவுக்கு பாடவைக்கலை.

      Delete
  2. நல்ல பாடல். எனக்கும் அவரது குரலில் பாடல்கள் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இளையராஜா-ஜானகி காம்பினேஷன் பாடல் எவர்க்ரீன் பாடலாச்சே!!

      Delete
  3. அன்பு சகோதரிக்கு ,பி.சுசீலா ,TMS போன்றவர்களையும் ஏன் கவியரசர் கண்ணதாசனையும் கூட வேண்டுமென்றே புறக்கணித்தார் இளையராஜா ...இன்று கண்ணே கலைமானே என்று அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் !ஜல் ஜல் சலங்கை ஒலி ,சிங்காரவேலனே தேவா என்று குறிப்பிடத்தக்க பாடல்கள் உண்டு !பின்னாளில் S ஜானகி மூலம் பல பாடல்கள் உருவாகின !ஆனால் பி சுசீலாம்மா வின் மாலைப்பொழுதில் மயக்கத்திலே பாடலுக்கு இணையாக ஒரு பாடலும் ஒரு பெண் பாடகியால் தமிழ் பட உலகில் இனிமேல் உற்பத்தியாக வாய்ப்பே இல்லை ... MSV ,TK R ,KVM போன்றவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பாட வைத்தனர்...இளையராஜா மாதிரி அவர்கள் ஓரங்கட்டவில்லை ...இளையராஜாவும் வளர்ந்த பின்பு SPB க்கு கொடுத்த அவமரியாதை ,தனக்கு வாழ வாய்ப்பு அளித்த பஞ்சு அருணாச்சலம் குடும்பம் நொடித்துப்போன பின்பும் கூட கண்டுகொள்ளவில்லை . MSV ,TK R ,KVM உண்மையான இசை மேதைகள் ! அவர்கள் பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்று மட்டுமே நினைத்தனர் !
    MSV ,TK R ,KVM ராயல்ட்டி பற்றி ஒரு நாளும் வரவில்லை என்று கேஸ் போட்டதில்லை !தவறு என்றால் பொறுத்து கொள்ளுங்கள் !நான் ஒரு பழைய காலத்துக்காரன் !நன்றி சகோதரி !

    ReplyDelete
    Replies
    1. எல்லா திறமைக்காரர்களுக்கும் கிறுக்குத்தனங்கள் இருக்கும். அதில் இளையராஜாவும் விதிவிலக்கல்ல!

      Delete
    2. //தனக்கு வாழ வாய்ப்பு அளித்த பஞ்சு அருணாச்சலம் குடும்பம் நொடித்துப்போன பின்பும் கூட கண்டுகொள்ளவில்லை//
      இப்டில்லாம் அபாண்டமா பழி சொல்லாதீங்க.

      Delete
    3. உண்மை தான் சார் - யாருமே வளர்ந்த பின்பு தன்னை வளர்த்து விட்டவர்களை கண்டு கொள்வதில்லை -இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ?இளையராஜா ஏதேனும் உதவி செய்தார் என்ற ஆதாரம் செய்தித்தாளில் வந்த செய்தி உங்களிடம் இருந்தால் ஆதாரத்துடன் கூறுங்கள் ! ஏன் ரஜனி கூட ஆறிலிருந்து அறுபதுவரை எடுத்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு உதவி செய்யவில்லை,கே பாலசந்தர் அவர்களுக்கு கவிதாலயா கட்டிடம் ஏலத்திற்கு வந்தபோது ரஜனி ,இளையராஜா உதவி செய்யவில்லை(உதவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை -மனிதாபிமானம் வேண்டும் என்பதே எனது ஆதங்கம் ) ! இதற்கு பஞ்சு அருணாச்சலம் அவர்களுடைய சுயநலமும் கூட ஒரு பின்னணி காரணம் ! தான் வளர்ந்தபிறகு , கண்ணதாசனை (அந்த கால படங்களில் கண்ணதாசன்-உதவி பஞ்சு அருணாச்சலம் என்று பார்த்திருப்பீர்கள் )இளையராஜா புறக்கணிக்க காரணமும் அவர் தான் !தன்வினை தன்னை சுடும் !திரு MGR கண்ணதாசனை பிடிக்காதபோதும் அவரது புலமைக்கு மதிப்பு கொடுத்து ஆயுள் வரை அரசவை கவிஞர் என்று அறிவித்து கவுரவித்தார் -இது ஊரறிந்த உண்மை !நன்றி

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!

      Delete
  5. HEAD WEIGHT KONJAM JASTHI ENDRU KOODA VAITHU KOLLALAAM ILAYARAJAVIRKKU - MSV,TKR, KVM IVARGALIDAM THALAIKANAM ORU NAALUM KIDAYATHU . TMS IDAM VENDUMAANAL HEADWEIGHT UNDU -AANAL P SUSEELA- SIMPLE LADY WITH NO HEAD WEIGHT . SORRY,DONOT MISTAKE ME .IT IS MY OPINION .THANK YOU SISTER .

    ReplyDelete
    Replies
    1. இளையராஜாவிற்கு தலைக்கனம் உண்டு என்பது ஊருக்கே தெரியும்.

      Delete
  6. சுசீலா அம்மாவின் ரசிகன் நான்... எனது தளத்தில் அதிக பாடல்களும் அவர்கள் பாடிய பாடல்களாக இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?!

      Delete
    2. குங்குமம் - தூங்காத மனம்
      பார் மகளே பார் - நீர் ஓடும்
      ஆண்டவன் கட்டளை - அமைதியான
      ஆலயமணி -பொன்னை விரும்பும்
      இருவர் உள்ளம் - கண்ணெதிரே
      வல்லவனுக்கு வல்லவன் - மனம் என்னும்
      பிராப்தம் - சந்தனத்தில்
      பொன்னூஞ்சல் - ஆகாய பந்தலிலே
      ஊட்டி வரை உறவு - பூ மாலையில்
      பாலும் பழமும் - என்னை யார்
      பூவும் பொட்டும் - நாதஸ்வர ஓசை
      காக்கும் கரங்கள் - ஞாயிறு என்பது
      அன்னை இல்லம் - மடி மீது
      பச்சை விளக்கு - வாரத்திருப்பானோ
      இரு வல்லவர்கள் - நான் மலரோடு
      பட்டினத்தில் பூதம் - அந்த சிவகாமி
      நான்கு கில்லாடிகள் - செவ்வானத்தில்
      போலீஸ்காரன் மகள் - இந்த மன்றத்தில்
      தெய்வபலம் - மலரோடு விளையாடும்
      வீரதிருமகன் - ரோஜா மலரே

      Delete
  7. இந்த சம்பவம் பற்றி நானும் படித்திருக்கிறேன். இளையராஜா இசையில் சுசீலாம்மா நிறைய அற்புதமான பாடல்கள் பாடி இருக்கிறார். இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சமீபத்துலதான் இந்த பாட்டை கேட்டேன். கேட்டதும் பிடிச்சு போச்சு சகோ

      Delete
  8. ஜானகி அம்மா, சுசீலா அம்மா ஆகிய இருவருக்கும் தனித்தனிச் சிறப்புண்டு.
    அருமையான பாடல்

    ReplyDelete
    Replies
    1. இருவரும் திறமைசாலி என்பதில் மாற்று கருத்து இல்லை சகோ.

      Delete
  9. சுசீலா அவர்களின் குரம் மிகவும் பிடிக்கும். கேட்ட நினைவு வந்தது என்றாலும் அதிகம் கேட்டதில்லை. நல்லாருக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பி சுசீலாவின் முதல் 100 சிறந்த தமிழ் பாடல் பட்டியல்

      தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடகி பி.சுசீலா அவர்களின் 100 மிகச்சிறந்த பாடல்கள்.

      Saragama Presents the 100 best songs of legendary Tamil singer P. Susheela. Enjoy !

      Tracks:

      1. Naalai Indha Velai - 00:05
      2. Gangaikarai Thottam - 04:48
      3. Nalandhana - 11:09
      4. Maalai Pozhuthin - 16:24
      5. Thamizhukkum Amudhendru - 20:55
      6. Ninaikka Therintha Maname - 24:56
      7. Thendral Urangiya Pothum - 29:29
      8. Mannavan Vanthanadi - 33:34
      9. Paruvam Enadhu Paadal - 40:44
      10. Solla Solla Inikkuthada - 46:26
      11. Sonnathu Neethaana - 49:45
      12. Antha Sivagaami - 53:15
      13. Paartha Nyabagam Illaiyo - 59:20
      14. Iravukku Aayiram - 01:02:50
      15. Amuthai Pozhiyum - 01:05:54
      16. Aadaamal Aadugiren - 01:09:14
      17. Vaazha Ninaithaal - 01:13:14
      18. En Uyir Thozhi - 01:15:21
      19. Unnai Kaanatha Kannum - 01:19:03
      20. Chittu Kuruvi - 01:24:16
      21. O Vennila O Vennila - 01:29:23
      22. Marainthirunthu Paarkum - 01:32:37
      23. Mayakkamenna Indha - 01:37:48
      24. Mannavane Azhalama - 01:41:16
      25. Love Birds - 01:44:58
      26. Thiruparankundrathil Nee Sirithal - 01:48:33
      27. Kangal Enge - 01:52:01
      28. Rajaavin Paarvai - 01:56:41
      29. Naan Unnai Vaazhthi - 02:01:21
      30. Thannilavu Theniraika - 02:05:38
      31. Naan Pesa Ninaipathellam - 02:09:05
      32. Yarukku Mappillai Yaaro - 02:12:09
      33. Thanimayile Inimai Kaana - 02:15:37
      34. Madimeethu Thalai Vaithu - 02:19:42
      35. Naan Malarodu - 02:23:56
      36. Vinnodum Mugilodum - 02:27:29
      37. Aadaikatti Vandha Nilavo - 02:30:43
      38. Valarntha Kalai - 02:33:44
      39. Thedinen Vanthathu - 02:37:23
      40. Ninaithen Vanthai - 02:41:02
      41. Azhagiya Tamizhmagal - 02:46:36
      42. Thamarai Kannangal - 02:53:15
      43. Thanga Pathakathin Mele - 02:57:16
      44. Amaithiyana Nathiyinile - 03:01:30
      45. Pani Illatha Margazhiya - 03:06:11
      46. Kannan Ennum Mannan - 03:09:51
      47. Unnai Naan Santhithen - 03:13:55
      48. Aalayamainiyin - 03:17:12
      49. Athikaai Kaai - 03:20:43
      50. Iravukkum Pagalukkum - 03:25:10
      51. Kettimelam Kottura - 03:29:16
      52. Indru Vantha Intha Mayakkam - 03:32:56
      53. Thottaal Poo Malarum - 03:37:08
      54. Pachaikili Muthucharam - 03:41:47
      55. Paarthen Sirithen - 03:47:17
      56. Inbam Pongum Vennila - 03:51:41
      57. Poo Maalaiyil - 03:56:20
      58. Saravana Poigaiyil - 04:00:04
      59. Ennai Vittu Odipoga - 04:04:26
      60. Athaimadi Methaiyadi - 04:07:46
      61. Azhage Vaa Aruge Vaa - 04:11:10
      62. Naanamo Innum - 04:15:13
      63. Azhagiya Mithilai - 04:19:51
      64. Kumari Pennin Ullathile - 04:23:20
      65. Kaniya Kaniya Mazhalai - 04:29:06
      66. Aththaan Ennathaan - 04:32:08
      67. Aayiram Nilave Vaa - 04:35:36
      68. Puttam Puthiya - 04:41:34
      69. Paruthi Edukkaiyile - 04:44:43
      70. Manam Padaithen - 04:49:16
      71. Yetho Yetho Oru - 04:53:28
      72. Neerodum Vaigaiyile - 04:57:09
      73. Chittukkuruvikkenna Kattupadu - 05:01:41
      74. Maanaattam Thanga Mayilattam - 05:05:00
      75. Kaveri Oram - 05:08:29
      76. Kannan Oru Kai Kuzhandhai - 05:11:43
      77. Naan Paarthathile - 05:16:21
      78. Aduthathu Ambujatha - 05:20:21
      79. Inbame Undhan Per - 05:24:17
      80. Mannikka Vendugiren - 05:29:16
      81. Vaadikkai Maranthathum - 05:32:45
      82. Ennai Yaarendru Enni - 05:36:10
      83. Andru Vanthathum - 05:39:34
      84. Iyarkai Ennum - 05:43:38
      85. Thangathile Oru Kurai - 05:47:04
      86. Amuthe Thamizhe - 05:50:27
      87. Mayangukiral Oru Maadhu - 05:55:10
      88. Oruthi Oruvanai - 05:58:34
      89. Muthukkalo Kangal - 06:02:47
      90. Kaathiruntha Kangale - 06:06:19
      91. Nanga Pudusa - 06:10:14
      92. Ponnandhi Maalai Pozhuthu - 06:13:24
      93. Ponezhil Poothathu - 06:19:10
      94. Aayiram Iravugal - 06:23:53
      95. En Kanmani - 06:27:55
      96. Kannathil Ennadi Kaayam - 06:31:32
      97. Vizhiye Kathai Ezhuthu - 06:35:03
      98. Mullai Malar Mele - 06:39:47
      99. Paarthaal Pasi Theerum - 06:43:07
      100. Mellappo Mellappo - 06:46:31

      Delete
  10. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரிடம் தனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதிலுள்ள சங்கடங்களை அறிந்தவர்கள் இதை எளிதாய் உணர்ந்து கொள்வார்கள்.
    இருந்தும் இளையராஜா இசையில் ஜானகி, சித்ரா விற்கு அடுத்து சுசிலா வே அதிக பாடல்களை பாடியிருப்பார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார் - யாருமே வளர்ந்த பின்பு தன்னை வளர்த்து விட்டவர்களை கண்டு கொள்வதில்லை -இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ?இளையராஜா ஏதேனும் உதவி செய்தார் என்ற ஆதாரம் செய்தித்தாளில் வந்த செய்தி உங்களிடம் இருந்தால் ஆதாரத்துடன் கூறுங்கள் ! ஏன் ரஜனி கூட ஆறிலிருந்து அறுபதுவரை எடுத்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு உதவி செய்யவில்லை,கே பாலசந்தர் அவர்களுக்கு கவிதாலயா கட்டிடம் ஏலத்திற்கு வந்தபோது ரஜனி ,இளையராஜா உதவி செய்யவில்லை(உதவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை -மனிதாபிமானம் வேண்டும் என்பதே எனது ஆதங்கம் ) ! இதற்கு பஞ்சு அருணாச்சலம் அவர்களுடைய சுயநலமும் கூட ஒரு பின்னணி காரணம் ! தான் வளர்ந்தபிறகு , கண்ணதாசனை (அந்த கால படங்களில் கண்ணதாசன்-உதவி பஞ்சு அருணாச்சலம் என்று பார்த்திருப்பீர்கள் )இளையராஜா புறக்கணிக்க காரணமும் அவர் தான் !தன்வினை தன்னை சுடும் !திரு MGR கண்ணதாசனை பிடிக்காதபோதும் அவரது புலமைக்கு மதிப்பு கொடுத்து ஆயுள் வரை அரசவை கவிஞர் என்று அறிவித்து கவுரவித்தார் -இது ஊரறிந்த உண்மை !நன்றி

      Delete
  11. நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் வரிகள் சொல் (ல கரம் ) மொழி (ழ கரம் ) பொருளென்றும் (ள கரம் ) என்று தமிழ் லகர வரிசை பரீட்சை வைத்தார் கவியரசர் கண்ணதாசன் -ஒழுங்காக உச்சரித்து பரிசை தட்டி சென்றார்
    பி .சுசீலா (தெலுங்குக்காரர் ). இசைஅமைத்தவர் MSV (கேரளா மலையாளம் ) DEDICATION இருந்தது -பாடல் சிறப்பாக வந்தது
    சொல்லென்றும் மொழியென்றும்
    பொருளென்றும் இல்லை
    பொருளென்றும் இல்லை
    சொல்லாத சொல்லுக்கு
    விலையேதும் இல்லை
    விலையேதும் இல்லை
    ஒன்றோடு ஒன்றாக
    உயிர் சேர்ந்த பின்னே
    உயிர் சேர்ந்த பின்னே
    உலகங்கள் நமையன்றி
    வேறேதும் இல்லை
    வேறேதும் இல்லை

    ReplyDelete
  12. இளையராஜா கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.. சுசீலா அம்மா குரலை சரியாக பயன்படுத்தாதது இளையராஜாவிற்கு தான் நஷ்டம்.. ஜானகி அம்மா, சித்ராமா போல் நிறைய பேர் படுகிறார்கள்.. ஆனால் சுசீலா அம்மா போல் யாராலும் பாடமுடியாது.. அம்மாவின் குரல் சாயல் யாருக்கும் கிடைக்காது.. சுசீலா அம்மா இசையுலகின் மாணிக்கம்..

    ReplyDelete