Sunday, September 16, 2018

சந்திரனே! சூரியனே! நட்சத்திர நாயகனே! - பாட்டு புத்தகம்

 இளையராஜா 1980 - 90களில் ஏகப்பட்ட படத்துக்கு இசையமைச்சுக்கிட்டிருந்தார்.  என்னதான் அவர் படப்பாட்டுலாம் ஹிட் அடிச்சாலும்   ஒருவிதச் சலிப்பை தர ஆரம்பிச்சது.  90களில் வந்த தேவாவும் இளையராஜாவின் சாயலிலேயே இருந்ததால் பெருசா ஹிட் அடிக்க முடில.  அந்த மாதிரியான காலக்கட்டத்தில்தான் 1992-ம் வருடம்  அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஆதித்தியன்.
கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘அமரன்’படத்தில் மாறுபட்ட இசையமைப்பில் ஆதித்தியன் அறிமுகமானார். மாறுப்பட்ட தாளலயத்தை கொண்டிருந்த அப்படத்தின் பாடல்கள் கேட்டவுடனே அனைவரையும் கவர்ந்திழுத்தன. இளையராஜாவின் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலுக்கு இணையான வரவேற்பை இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் பாடிய ‘வெத்தல போட்ட சோக்கில’ பாடல் பெற்றது. அத்தனை குரல்வளம்லாம் கார்த்திக்கு கிடையாதபோதும் பாட்டு செம ஹிட். இந்த படத்துல ரெண்டு பாட்டு கார்த்திக்கை பாட வச்சார். அத்தோடு மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவையும் ஒரு பாட்டை பாட வச்சார். வெத்தலை போட்ட சோக்குல... பாட்டளவுக்கு அந்த ரெண்டு பாடலும் ஹிட் அடிக்கல. 

அந்த காலத்துல வெத்தலை போட்ட சோக்குல....  பாடலை முணுமுணுக்காத இளைஞர்களே இல்லன்னு சொல்லலாம். இன்னிக்கு இருக்குற மாதிரி யூடியூப், வாட்ஸ் அப்ன்னு அன்னிக்கு சமூக வலைத்தளங்கள்  இருந்திருந்தா  ‘வொய் திஸ் கொலவெறி’ பாட்டை  தூக்கி சாப்பிட்டிருக்கும். அந்த படத்துல, வசந்தமே அருகில் வா! நெஞ்சமே உருக வா! பாட்டும், சந்திரனே! சூரியனே.. பாட்டும்  செம ஹிட்...


சந்திரனே! சூரியனே !
நட்சத்திர நாயகனே!

கிழக்கு வெளுத்ததடா !

மனசும் அங்கே சிவந்ததடா! 
சுட்ட வடு ஆறல.. 
நெஞ்சில் பட்ட பின்பு மாறல,, 



சந்திரனே! சூரியனே!!



நெஞ்சிலே நெருப்பை வைச்சா 

நீரும் வந்து அணைக்குமா ?!
கண்ணிலே முள்ளு தைச்சா 
இமையை மூட முடியுமா? !
பாரதக்கதையும் கூட 
பழியில் முடிஞ்ச காவியம் தான்!



இருப்பதும் இறப்பதும் 

அந்த இயற்கையோட கையிலே!
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது 
என் உயிரெழுதும் கதையிலே!!



சந்திரனே! சூரியனே!



நீயும் நானும் வாழனுமென்றால் 

தீமை எல்லாம் தீயிடு.. 
கெட்டது இங்கு அழியனுமா 
கொடுமையெல்லாம் பலிகொடு...
கண்ணன் கீதையிலே 
சொன்னதைபோல் நடந்திடு... 



பச்சைப் பயிர் வாழ 

மண்ணில் களையெடுத்தா தவறில்ல..
அந்த முடிவில்தானே தொடக்கம் தேடி 
புதுக்கதை நான் எழுதறேன்! 



சந்திரனே! சூரியனே!

இந்த பாட்டை ஏசுதாஸ் பாடி ஹிட் அடிச்சிருந்தாலும் எஸ்.பி.பி குரலிலும் கிடைக்கும்.  தூக்கி சீவி தலையும், ஹே,ஹாய்,ஹூய்ன்னு குதிக்காத மெச்சூரிட்டியான அழகான கார்த்திக்கை இந்த படத்தில் பார்க்கலாம்.  தன் கணவன் டானா இருக்குறதை பிடிக்காத பானுப்பிரியாவும் அந்த மனக்குறையை அழகா நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார். செம ஸ்டைலிஷ்சா படம் வந்தாலும் ஏனோ படம் ஹிட் அடிக்கல.  அதே படம் இப்ப வந்திருந்தால் படம் பெரிய ஹிட்டை சந்திச்சிருக்கும். 


படம்: அமரன்
இசை: ஆதித்தியன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ்’
நடிகர்கள்: கார்த்திக், பானுப்பிரியா

8 comments:

  1. எனக்கு எஸ் பி பி குரலில் பாடும் பாடல்தான் பிடிக்கும். கார்த்திக் பாடிய பாடல் ஹிட்டா? எனக்குத் தெரிந்து இல்லை. இதை படத்தில் 'வெண்பனி வீசிடும் மேகங்களே' பாடலும் நன்றாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அடக்கடவுளே! வெத்தலை போட்ட ஷோக்குல பாட்டுதான் அந்த படத்துலயே செம ஹிட். மத்ததுலாம் சுமார் ரகம்தான். இத்தனைக்கும் கார்த்திக் குரலில் அத்தனை நயம் கிடையாது

      Delete
  2. hello... nice to remember this ... vethala potta sokkula naan gappunu kuthina mukkula... semma hit song... athey pola .. musthafa musthafa appadinnu innoru song athuvum Karthik thaan paadiruppar athuvum hit. Srividya song.. sunday bazaar mama konjam usharu athuvum hit... infact antha samayathila , maduraila naan schoola work pannumpodu annual day functionla girls antha pattukku thaan dance pannanga
    athoda, hindi superstar shammi kapoor vera iruppar... radaravi oru mathiri thethu palla vechu makeup pottu villan role pannirupar

    ReplyDelete