பிராய்லர் கோழி சாப்பிடுவது உடலுக்கு கேடுன்னு சொல்றாங்க. அதனால ஆட்டுக்கறி, நாட்டுக்கோழிக்கறி பக்கம் போக ஆரம்பிச்சுட்டாங்க நம்மாளுங்க. பிராய்லர் கோழிக்கறியைவிட ஆட்டுக்கறி விலை மும்மடங்காகும். பிராய்லர் கோழிக்கறி சீக்கிரத்துல வெந்துடும். அதேநேரத்தில் சாப்பிட மிருதுவாகவும் இருக்கும். ஆனா, நாட்டுக்கோழிக்கறியும், ஆட்டுக்கறியும் வேக நேரமெடுக்கும். அதேநேரம், ஆட்டுக்கு வயசாகி இருந்தால் கறி மிருதுவா இருக்காது. ஆனா, ஆட்டுக்கறின்னாலே சத்தோடு ருசியும்கூட...
தேவையான பொருட்கள்..
ஆட்டுக்கறி
வெங்காயம்
தக்காளி,
மஞ்சப்பொடி
மிளகாய் பொடி
உப்பு
எண்ணெய்
பட்டை
கிராம்பு
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா
வறுத்து அரைக்க...
தனியா
காய்ஞ்ச மிளகாய்
சீரகம்
மிளகு
சோம்பு இதுலாம் வாணலியை சூடாக்கி வறுத்து அத்தோடு
தேங்காய், முந்திரிப்பருப்பு சேர்த்து பொடி செய்துக்கனும். வெங்காயத்தை பொடியா நறுக்கிக்கனும். தக்காளியை பொடியா நறுக்கிக்கனும்.
குக்கரில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கடுகு போட்டு பொரிக்க விடனும்.
நறுக்கி வச்ச வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கனும்..
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக்கனும். அடிப்பிடிக்காம இருக்க கொஞ்சம் உப்பு சேர்த்துக்கனும்.
தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து வதக்கிக்கனும்...
சுத்தம் செய்த ஆட்டுக்கறியை சேர்த்துக்கனும்..
அரைச்ச மசாலாப்பொடி, மிளகாய் பொடி, மஞ்சப்பொடியை சேர்த்து வதக்கிக்கனும்...
தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அஞ்சு விசில் வரும்வரை வேகவிடனும்.
திக்கான சுவையான ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கறி குழம்பு தயார்.
புரட்டாசி மாசம் அசைவம் சேர்க்கக்கூடாதுன்னு நேத்து சொல்லிட்டு இன்னிக்கு பதிவு போடுறியேன்னு திட்டாதீக. இது போன மாசம் செஞ்சது. சாப்பிடதான் கூடாது சாப்புடறவங்களுக்கு செஞ்சு கொடுக்கலாம். அதை பதிவாகவும் போடலாம். தப்பில்லைன்னு புராணங்கள் சொல்லுது சகோஸ்
ராஜி.
தப்பில்லைன்னு புராணங்கள் சொல்லுது சகோஸ்
ReplyDeleteபுராணங்களே சொல்லிவிட்டதா
சபாஷ்
நன்றி சகோதரியாரே
சொல்லிட்டுதுண்ணே
Delete/// புராணங்கள் சொல்லுது ///
ReplyDeleteஹா... ஹா... ஹா... ஹா...
நிஜமாதான் சொல்றேன். சிரிக்காதண்ணே
Deleteஇன்று போய் நாளை வருகிறேன்!
ReplyDeleteசரி சரி
Deleteமட்டன் கறின்னா உங்க அண்ணிக்கு பெரிய ரசிக பட்டாளமே இருக்கு, என்ன..... என் காசு மாட்டிக்கும், இந்த ரெசிபியை அடுத்தமுறை ஊர் போறப்போ செய்ய சொல்லுறேன்.
ReplyDeleteஇப்பயே வாட்ஸ் அப்ல அனுப்புங்க. நல்லா காரசாரமா மணமா இருக்குண்ணே
Deleteநடத்துங்க...
ReplyDeleteசரிங்க, சாரிங்கண்ணே
Deleteஆஹா...ஆனாலும் அடுத்த மாசம் போட்டு இருக்காலம் ராஜி க்கா...
ReplyDeleteதலைப்பில் ட் காணோம்..
திருத்திட்டேன்
Delete