திங்கள், அக்டோபர் 04, 2010

நீயா? நானா?

அவன்:
சிணுங்கும் தொலைப்பேசியை
செல்லமாய் எடுத்தணைக்க.,
யாரோ எதற்கோ பேச
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக .....,
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்...,
அமிர்த சுவை தேடி, அள்ளி
காதுமடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தைகள்..,
"அடடே உனக்கு வந்திடுச்சா? மாத்தி பண்ணிட்டேனா"? னு
துடிதுடிக்க துண்டிக்கிறாய் இணைப்பை...,
கூடவே நம்பிக்கை நரம்பையும்.

அவள்:
சிணுங்கும் இதயத்தை
செல்லமாய் தட்டி, அமைதிப் படுத்தி,
நின்று, நிதானமிழந்து,
உன் எண் ஒத்தி
வேறு ஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொட முடியாமல்துவண்டு,
இன்னொரு முயற்சியில், இணைப்பில்.....,
ஏங்கித்தவிக்கும் , காதுமடலோடு
இனிக்கும் உன் குரல் தேட

பதட்டததில்
உதடு உதறி பொய்
உதிர்கிறது...,
"அடடே உனக்கு வந்திடுச்சா? மாத்தி பண்ணிட்டேனா"? னு
துவண்டு துண்டிக்கிறேன் இணைப்பை???!!!
தோல்வி வலையில்
இறுக பிணைந்தபடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக