Wednesday, October 13, 2010

பரணில் என் கவிதைகள்

கோரிக்கை:
நீ எனக்கில்லை என்றாலும்
என்னுள்ளே இருப்பதெல்லாம்
நீதான்...,

என்னிலிருந்து எதை வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்
என்னுயிரையும் கூட....,
உன்னைத் தவிர...,

தேடல்:
ஒன்றை அடைதலின் சுகத்தைவிட
தேடலின் சுகம் அலாதியானது,
விரியட்டும் நம் தேடலின் எல்லை ...,

ஒரு தலை காதல்:
முள் படுக்கையில்
காகத்தின் தவம்
குயிலின் முட்டைக்கும் சேர்த்து...,

கனவா?
நீ சோர்ந்திருக்கும் வேளையில்
ஒரு கோப்பை தேநீர் தந்து,
வியர்வை துடைத்து,
கைவிரல் சொடுக்கெடுத்து,
தலை முடி கோதி,
மார்போடு அணைத்து,
உறங்க வைத்து, உறங்க போனேன்,
அதிகாலையில் கண்விழித்து பார்க்கையில்
என் அணைப்பினில் சுகமாய் உறங்குகிறது.....,
"என் தலையணை"

தூக்கமா? அப்படியென்றால் என்ன?

கவலை மறந்து
உறங்க நினைத்து
தாய்மடி தேடி
என்னையறியாமல் கண் மூடி உறங்க முயற்சிக்கையில்
தாயாக நான் இருக்கிறேன் என்று உன் மடி தந்து,
தலை கோதி,
காதோரம் இதழ் வைத்து கதை சொல்லி,
உன் கைவிரலால் என் கைவிரல் பற்றி உறங்க வைத்தது நீதான்
என்ற நம்பிக்கையில்,
இதழ் மலர்ந்து நான் உறங்கி,
கண்விழித்து பார்க்கையில்
நீ இல்லாத வெறுமையை உணர்ந்ததிலிருந்து
சத்தியமாய்
தூங்க பிடிக்கவில்லை எனக்கு....,

என்னைப் போலவே என் கவிதை:
எதையும் விரும்பாத மனது...,
தரையில் அமர்ந்து அழுகின்றது..,
இழந்து விட்ட ஒன்றிற்காக,
அடைந்துவிடுதல் என்பது மகிழ்ச்சிக்குறியதுதான்..,
ஏன் மறந்து கூட போகலாம்..,
ஆனால் இழந்துவிட்டால்....??!!!!

பிளீஸ்:
உன்னை விரும்ப ஒர்ராயிரம் காரணம் தந்த நீ
உன்னை வெறுக்க ஒரே ஒரு காரணம் தரக் கூடாதா?

கிறுக்கச்சி
என் விரல் பிடித்து நீ காரணம் சொல்லவே உன் மீது ஏழு வீண் சந்தேகங்கள்,
உன் கெஞ்சல் சுகம் வேண்டி வரும் போய் கோவம்,
நீ விபூதி பூசும் தொடுளுக்கு வரும் தலைவலி,
நீ என் கால் பிடிக்கவே வரும் போய் முள் குத்தல்,
என் காதை திருகி, தலையி கொட்டவே..., நான் செய்யவே சிறு சிறு தவறுகள்,
இதையெல்லாம் பெற நான் வேறு யாரிடம் செய்வேன் "என் கிறுக்குத்தனங்களை" "

வழித்துணை:
பாடல்கள் ஒலிக்காத,
திரைப்படம் ஓடாத
பேருந்துகளையே நாடுகிறேன்,
உன் நினைவுகளுடன்
பயணத்தை கழிக்க

அரூபம்:
நான் உன் நிழல் என்றேன்!
வேண்டாம் நீ நிஜமாகவே இரு, அதுதான் உனக்கழகு என்றாய்
சரி என்று தேற்றி கொண்டு உன் நிஜமானேன்,
ஆனால் இன்று நீ
நிஜத்தையும் மறுக்க!?
நிழலையும் பறிகொடுத்த படி நான்!!!

பார்க்கும் பொருளெல்லாம் நந்தலாலா:
குளிருக்கு இதமான சூடான் காபி,
வாசலில் விரியும் மாக்கோலம்,
கை சிவக்க வைக்கும் மருதாணி,
சுவையான உணவு,
யாரோ யாருக்கோ எழுதிய கவிதை,
எங்கோ ஒலிக்கும் மெல்லிசை,
ஏதோ ஓர் ஒற்றை வார்த்தை,
சாலைகளில் விரையும் வண்டிகள்,
அழகான வீடுகள்,
ஆணோ, பெண்ணோ உடுத்து உடை,
சிரிக்கும் குழந்தை,
சிந்தும் கண்ணீர்,
பூக்கும் பூக்கள்,
இது போன்ற அனைத்தும்
உன்னை நினைவு படுத்தும் போது
தனியாக நினைவு பரிசு எதற்கு....,

ஏமாற்றம்:
சாலையில் உன் வண்டி போலவே
ஆயிரம் வண்டிகள்,
ஆனால் அத்தனை முறையும்
ஏமாந்த அனுபவம் எனக்கு....,

பொங்கல்:
நான் வரைந்த கோலத்தில் வண்ணம் பளிச்சடவில்லை,
நான் உடுத்திய சேலையில் பூக்கள் மலரவில்லை
நான் சமைத்த சர்க்கரை பொங்கல் இனிக்கவில்லை,
கரும்பும் ருசிக்க வில்லை,
சுற்றத்தவர் அனைவரும் மகிழ்ந்திருக்கையில் நான் மட்டும் மகிழவில்லை,..,
ஏன்?
ஏன்?
ஏன்?

கார்த்திகை:
ஊரெல்லாம் கார்த்திகை வெளிச்சத்தில்...,
நான் மட்டும் இருளில்...,
உனக்காக,


இன்னும் வரும்......,




2 comments:

  1. //என்னுயிரையும் கூட....,
    உனைத் தவிர...,//

    Simply Superb


    //நான் செய்யவே சிறு சிறு தவறுகள்,
    இதையெல்லாம் பெற நான் வேறு யாரிடம் செய்வேன் "என் கிறுக்குத்தனங்களை" " //


    nice


    //எங்கோ ஒலிக்கும் மெல்லிசை,
    ஏதோ ஓர் ஒற்றை வார்த்தை,
    சாலைகளில் விரையும் வண்டிகள்,//


    very very good

    Athirai

    ReplyDelete
  2. கவிதைகள் அருமையாக இருகின்றன ..

    ReplyDelete