Wednesday, October 06, 2010

வாழ்நாள் சாதனையாளர் விருது

சில நாட்களுக்கு முன் என் அம்மாவின் அண்ணன் முறையுள்ள ஒருவருக்கு, திருக்கடையூரில் அறுபதாம் திருமண நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. என் அம்மாவும், அப்பாவும் சென்று வந்தனர்.


இன்று அங்கு எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருந்தோம். என் பிள்ளைகள் தாத்தா பாட்டியை பாரேன் புது ஜோடி னு நினைப்பு னு கிண்டலடித்தனர். நான் அதட்டி, அடக்கினேன். எனது உறவினர் ஒருவரும் அப்போது எங்களுடன் இருந்தார். இதெல்லாம் வேஸ்ட். எப்படியும் ஒரு லட்சம் செலவாயிருக்கும். அந்தா காசு இருந்திருந்தால் வேறு எதற்காவது யூஸ் ஆகியிருக்கும் என்றார். அதற்கு நான், அதெல்லாம் அவரவர், விருப்பமும், வசதியும் சார்ந்தது னு அந்த பேச்சிற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தேன்.


பின்பு, ஓய்வாய் இருக்கும்போது, இந்த பேச்ச்சு மீண்டும் நினைவுக்கு வந்தது. குழந்தைகள் கிண்டலடித்தன. அது பரவாயில்லை . ஏனெனில், அவர்கள் விவரம் அறியாதவர்கள். ஆனால், என் உறவினருக்கு வயது நாற்பது தாண்டி. அவருக்கும் கூட அறுபதாம் திருமண நாளின் பெருமை தெரியவில்லையே என வருந்தினேன்.


அறுபதாம் திருமண நாள் எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அதனால்தான், அன்று திருமண நாள் யாருக்கு கொண்டாடுகிறோமோ, அவரின் கால்களில் வயதில் குறைந்தோரெல்லாம் வணங்கி ஆசி பெற சொல்லுவார்கள்.


காதல் திருமணமோ, இல்லை நிச்சயக்கப்பட்ட திருமணமோ

சரியான வயதில் திருமணம் கைகூட வேண்டும்,


கைகூடும் திருமணத்தில் காதலும் பூக்கவேண்டும்,


பூத்த காதல் அற்பாயுசில் போகாமல் இருக்க வேண்டும்,


மக்கட் செல்வமும் காலத்தே அமைய வேண்டும்,


அமையும் மக்கட் செல்வமும் பூரண ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.


ஆரோக்கியத்துடன், சிறந்த ஒழுக்கமும், நிறைந்த கல்வியும், நீண்ட ஆயுளும் வேண்டும்,


அப்படி அமையும் மக்கட்களுக்கு காலத்தே வேலைவாய்ப்பும் , திருமணமும், மக்கட்செல்வமும் அமைய வேண்டும்.


தம்மால் இயன்ற அளவு தம் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பருகளுக்கும் உதவிகளையும், பொருளுதவியும் செய்ய வேண்டும்.


அதேப்போல் வாழ்க்கை ஆரம்பித்த போது இருந்த காதல் ஒவ்வொரு கஷ்ட நஷ்டத்திலும் மெருகு குலையாமல், இருவரும் உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் இருத்தல் வேண்டும்.


இப்படி வாழ்ந்த ஒருவருக்கே அறுபதாம் திருமண நாள் கொண்டாடுவர். இதில் எத்தனை தாத்த்பரியம் உள்ளது. காதல், இனவிருத்தி, கடமை, ஆரோக்கியம் என நாம் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது தருவது போல்தான் இந்த நிகச்சிஎன்பது என் தாழ்மையான கருத்து.


என்மாமாவும் அப்படி வாழ்ந்தவரே, தமிழரான எனது மாமா மராட்டிய பெண்ணான எனது மாமியை மணந்தவர். எனது மாமியும் தமிழ் நாட்டில் குடிபெயர்ந்து, தமிழ் பெண்ணாகவே மாறி, புகுந்த வீட்டை தன குடும்பமென தாங்கியவர். இரண்டு மகன்கள், ஒரு மகளை பெற்றெடுத்து, பெரியவனை கணினி பொறியாளனாகவும், இளையவனை தொழிலதிபராகவும், மகளை நல்ல இடத்தில் மணமுடித்தும், பேரன் பேத்திகளுடன் அதே உற்சாகத்துடன் எனது மாமியுடன் வாழ்வதை நானே கண்டிருக்கிறேன். அப்பேற்பட்ட ஜோடி அறுபதாம் திருமண நாள் கொண்டாடியதில் என்ன தவறு?


என் மாமா, மாமிக்காக ஒரு கவிதை..,


தினமும் வியந்து பார்க்கிறேன்"
வியர்வை துடைத்து
விட்டு வேலை செய்"எனும்
கண்டிப்பை...,

"கிளிப்பை கழட்டிவிட்டு
படு" ... குத்தும்
என்கிறநேசத்தை,

"எப்பதான் கத்துக்கப்
போறியோ"..,என்று
முகப் பவுடரைசரிசெய்யும்
காதலை..,

"என்னைவிட
அவளை கேளுங்கள்
என்னும் பெருந்தன்மையை,

இப்போ குளிரா இருக்கு
வேணாம் வாக்கிங் என்பதற்கு ...,
.கேம்மா என்னும்
பணிவை...,

எண்ணி எண்ணி
வியந்துக் கொண்டே இருக்கிறேன்...,

யார் சொன்னது
"ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்
"என்று ????


.

No comments:

Post a Comment