ஏதுமில்லை !
உன் ஆசைகளை தீர்த்து வைப்பதே
என் ஆசையாய் இருந்தது !
ஒரு முறை "நான் வேண்டாம்" என்று
ஆசையாசையாய் கேட்டாய் !
வேண்டியதை மட்டுமே கொடுத்து
பழக்க பட்ட எனக்கு , நீ
வேண்டாததையும் கொடுக்க
வேண்டிய நிலை வரவும்
ஏது செய்வதெனத் தெரியாமல்
ஒரு நிமிடம் நின்று யோசித்தேன் !
வியர்வையில் நனைந்து போன
முகத்தை துடைத்துக்கொண்டு
வேகவேகமாய் வீட்டுக்கு நடந்தேன்!
வழக்கம் போல இப்போதும்
உனக்குப் பிடித்ததைத் தானே செய்தேன் ?
பின் ஏன் எப்போதும் சிரிக்கிற
என் இதழ்களும் இமைகளும்
இன்று மௌனம் சாதிக்கிறது.!?
யார் என்னிடம் எது கேட்டாலும்
எரிந்து விழுகிற நான்
நீ கேட்டால் மட்டும்
எல்லாவற்றையும் கொடுத்து
விடுகிறேனென்று பொறாமையில்
அழுகிறது என் கண்கள்!
பாவம் அதற்கொன்றும் தெரியாது
எனக்காக அதை மன்னித்து விடு அழகி !
நீ நீயாக ,
ReplyDeleteநான் நானாக ,
நாம் நாமாக ,
பிறர் பிறராக ,
சிலர் சிலராக ,
பலர் பலராக ,
என் நேசம் மட்டும்......?
--- ஆதிரை.