சிஷ்யன்: என்ன குருவே asp.net புத்தகத்தை கையில் வைத்து இருக்கிங்க 
சாமியார் :  என்ன பண்றது வர வர நிறைய ஐ.டி. ஆளுங்க நம்ம ஆசிரமத்துக்கு வர  ஆரம்பிச்சுடாங்க அவங்க லாங்குவேஜ்லயே பேசினாத்தானே காரியம் ஆகும் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிஷ்யன் : ஆனந்தப்  பரவச நிலையைப் பற்றி விளக்கிட்டு இருந்த குரு ஏன் அரை மணி நேரமா அண்ணாந்து  இருக்காரே? நேத்து நைட் அடிச்ச சரக்கோட ஹேங் ஓவர் இன்னும் தீரலையோ..
சாமியார் : அந்த  பெப்பர் போட்டு வைத்து இருக்கும் தீர்த்தம் எடுத்து கொண்டு வா...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாமியார் :  சிஷ்யா... ஆசிரமத்துக்கு வர்ற பக்தர்கள் கிட்ட அவங்க பர்ஸையெல்லாம் என்  கண்ணுக்கு மறைவா உள்ளே வைக்க சொல்லு பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னாலே  போகுது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சாமியார் : சிஷ்யா...என்ன  காலை இரவும் பக்தர்கள் வருவதே இல்லை..ஏன்  
சிஷ்யன் :  குருவே மக்கள் எல்லாம் டிவி சீரியல் பார்க்கிறார்கள்...எதாவது செய்தால்  தான் நாம் ஆசிரமத்துக்கு கூட்டம் வரும்...
சாமியார் :  நமது   ஆசிரமத்திற்கு உடனே நான்கு டிவி வாங்குங்கள் இலவசமாக கொடுத்தாலும்  கேமரா வாங்கி விடாதீர்கள்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிஷ்யன் : குருவே நடிகர் விஜய் உங்களை பார்க்க வந்து  இருக்கிறார்...
சாமியார் :  சிஷ்யா அவரிடம் போய் சொல் நான் சாமியாரே இல்லை என்று..
சிஷ்யன் :  குருவே அவர் நடிகரே இல்லை என்று சொல்கிறார்
சாமியார் எங்கு போனார்  என்று சிஷ்யர்கள் தேடி கொண்டு இருக்கின்றனர்கள்  
------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
அப்பா அடிச்சா வலிக்கும்...
போலீஸ்  அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்
ஆனா  சைட் அடிச்சா வலிக்குமா?
..............................நண்பர் 1 : என்னடா இன்னைக்கு  ஒரே சந்தோசமா இருக்கே 
நண்பர் 2 : நேத்து எங்க  வீட்டில் திருட்டு போய் விட்டது 
நண்பர் 1 : என்னடா சொல்றே  இதுக்கு நீ கவலையா தானே இருக்கணும் 
நண்பர் 2 : அந்த திருடன்  போகும் போது என் மனைவியை ரெண்டு அடி அடிச்சான் அதான் சந்தோசம்
..........................................................................................................................................................     
நோயாளி : டாக்டர் பல் ஆடுது 
டாக்டர் : வாங்க வாங்க மானாட மயிலாட ஆடுறதுக்கு  சேர்த்து விடுகிறேன் 
...........................................................................................................................    
மக்கள் :என்ன விஜய் ஜோக்  சொல்லனுமா அமைதியா இருங்க சொல்றேன்
விஜய் : நான் அடிச்சா  தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட...
மக்கள் : டேய்,  நீ அடிச்சா கூட தாங்கிடுவோம் கொய்யால, நீ நடிச்சா தாண்டா தாங்க முடியல...
No comments:
Post a Comment