Saturday, October 09, 2010

தூயாவும், குரங்கும்

அடிக்கடி குரங்குகள் எங்கள் வீட்டருகே வருவது வழக்கம். அப்படி வந்துப் போகும் சமயத்தில் எங்கள் தோட்டத்தில் இருக்கும் கொய்யா, சீதாப்பசம், மற்றும் அங்குள்ள செடிகளை பாழ் பண்ணி விட்டு போகும். அப்படி வரும் சமயங்களில் என் பெண்கள் இருவரும் பயப்படுவார்கள். ஆனால், மகனோ பயப்படாமல் அருகே சென்று வீட்டில் உள்ள பழங்களைத் தருவது வழக்கம் . பின்பு, தமது தமக்கைகளை பயந்தாக்கொல்லிகள் என கேலி செய்வான். அதற்கு எனது மூத்த மகள் டேய் அதெல்லாம் உன் பிரண்டு அதனால் நீ பயப்படமாட்டே னு சண்டைக்கு போவாள்.

ஆனால் குரங்குகள் யாருக்கு பிரண்டு என்ற எனக்கு மட்டுமே தெரியும். அதை சொல்ல ஆரம்பித்தேன்.


எனது மகள் தூயா பிறந்து இருபத்தி எட்டு நாட்கள் ஆனபோது . பிறந்த குழந்தையை காலை இளம் வெயில் சூடு படும்படி போட்டு வைத்தால் மஞ்சள் காமாலை வராது மேலும் வைட்டமின்-கே , வைட்டமின்-டி பாப்பாவுக்கும் கிடைக்கும் என டாக்டர் அப்பாவிடம் சொல்ல ஆரம்பமாயிற்று வெயிலில் போடும் படலம்.

அப்போது எங்கள் மற்றும் அக்கம் பக்கம் வீடு என சுமார் பத்து வீடுகளில் கைக்குழந்தையே இல்லை. அதனால், வராது வந்த மாமணிப் போல எல்லாரும் அவளை சீராட்ட தொடங்கினர். என் அம்மா இல்லேன்னா அக்கம் பக்கத்து வீட்டாரில் யாரவது காலை ஆறு மணிக்கே எங்கள் வீட்டிற்கு வந்து வெய்யிலில் போட ரெடி செய்வாங்க.

எங்கள் வீடு கிழக்கு பார்த்த வாசற்படியாதளால், தாழ்வாரத்தில் வெயில் வரும். அந்த இடத்தை நன்றாய் பெருக்கி, ரப்பர் சீட் விரித்து, பாப்பாவுக்கு தேங்காய் எண்ணெய்யை இளஞ்சூட்டில் சுட வைத்து உடலெலாம் பூசி, மசாஜ் செய்து சீட்டில் போட்டுவிட்டு, மேலே கொசுவலையை போட்டு மூடிவிட்டு, அருகிலேயே அமர்ந்து இருப்பார்.

இப்படியே சில நாட்கள் சென்றது . காலை வேலை என்றாலே பெண்களுக்கு வேலை பெண்டு நிமிருமே. பாப்பாவை போட்டுவிட்டு சென்று விட்டனர். யாருமே அருகில் இல்லை. எங்கள் ஊரில் மலை இருப்பதால் எங்கள் ஊரில் நிறைய குரங்குகள் இருக்கும். அடிக்கடி எங்கள் வீட்டிலும் வந்து அட்டகாசம் செய்யும். அதுப்போல் அன்றும் வந்துள்ளது.

கொசுவளைலாம் போட்டு கனஜோராய் இருப்பதைப் பார்த்து என்ன நினைத்ததோ தெரியவில்லை. கொசு வலையை எடுத்து போட்டுவிட்டு, பாப்பாவை ஒரு கையில் எடுத்துக் கிட்டு போக ஆரம்பித்து. (ஒருவேளை இது மூஞ்சியப் பார்த்ததும் தன்னோட க் குட்டிப்போல இருந்துச்சோ என்னவோ- இது என் மகன் கமென்ட்)

நாங்க யாரும் கவனிக்கலை. வீட்டை விட்டு வெளிய வந்து, மாடி படிக்கட்டு ஏறி பதி படிகட்டுல வச்சுக்கிட்டு உக்காந்துடுச்சு. அப்புறம் எதிர்வீட்டு மாமி, தற்செயலாய் பார்த்துவிட்டு, அலறிக் கொண்டே, வந்து குரங்கிடம் இருந்து பாப்பாவை பிடுங்கப் பார்த்தால், குரங்கு பல்லைக் காட்டி கொர்ருனு கத்திட்டு பாப்பாவை தூக்கிட்டு மாடில போய் உக்காந்துடுச்சு.

அப்புறம் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி போய் பார்த்து அதுகிட்ட இருந்து வாங்க டிரை பண்றோம். ஆளாளுக்கு ஒரு யோசனை. இங்க ஒண்ணு சொல்லியாகனும், எங்க வீட்டுக்கு பக்கத்து மனைகளில் வீடுகள் இல்லை. காலி மனைகளே இருந்தது. நாம ஏதாவது செய்ய போய் குரங்கு பாப்பாவை தூக்கி காலி மனையில் தூக்கி போட்டுச்சுனா (எனக்கு ஒரு அக்கா ன்ற இம்சை இல்லாமையே போயிருக்கும் -எனது மகன்) பண்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருந்தோம்.

ஒருத்தர் கொம்பால அடிக்கலாம் என்றார். தவறி பாப்பா மேல பட்டுட்டால், ஒருத்தர் கெஞ்சி பார்க்கலாம் என்றார். அதுக்கு நம்ம பாஷை புரியலேன்னா, இப்படியே அரை மணி நேரம் முழிச்சுக்கிட்டு இருந்தோம். அப்புறம் என்ன நினைச்சுதோ, பாப்பாவை மடியில் இருந்து வேகமா தள்ளிட்டு போய்டுச்சு (அது தன்னோட குட்டின்னு உன்னை தூக்கிட்டு போய் மடியில வச்சு அரை மணிநேரமா உத்து உத்து பார்த்து இருக்கு. ஆனால், நம்ம குரங்கு இனத்துலையே இவ்வளவு அசிங்கமா குட்டி பொறக்க வைப்பில்லையேனு புரிஞ்சு போய் தூக்கி போட்டுட்டு போய்டுச்சு - எனது மகன்)

சின்ன சின்ன சிராய்ப்புகளோடு தப்பிவிட்டாள். அதன்பின்பு, அப்படி வெயில் போடும்போது அருகே யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருப்போம். (அதிர்ஷ்டம் ஒருமுறைதான் வரும். நிம்மதியா இருக்க நமக்கு குடுப்புனை இல்லை - எனது மகன்)

இதை சொன்ன பிறகு எனது மகள் கப் சிப் என்றாகிவிட்டாள். என்றவது குரங்குகள் வீட்டருகே வரும்போது, எனது மகன், தூயா உனது பிரண்டு வந்து இருக்காங்க என்று கத்துவான். அப்புறமென்ன, பதிலுக்கு காத்த, துரத்திக் கொண்டு ஓட...,No comments:

Post a Comment