Monday, July 15, 2013

ராஜிக்கு ஒரு அடிமை சிக்கிய அந்த நாள்?! இந்த நாள்தான்!! - ஐஞ்சுவை அவியல்





ஏனுங்க மாமோய்! நான் ராஜி வீடு வரை போய் வரவா?!

ஏன் என்ன விஷேசம்?! எதுக்கு அவ வீட்டுக்கு போகப் போறே?!

இன்னிக்கு அவளுக்கு 20வது கல்யாண நாள் அதாவது பீங்கான் விழா,  அதான், அவளை வாழ்த்திட்டு வரலாம்ன்னு அவ வீட்டுக்கு போகப்போறேன்.

உன் ஃப்ரெண்டுக்கு ஒரு அடிமை சிக்கி 20 வருசம் ஆச்சா?!  நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு. அதுக்குள்ள 19 வருசம் ஓடிப்போச்சா?!

நானும் அவ கல்யாணத்துக்கு போய் இருந்தேன். கல்யாணப் பொண்ணா, அடக்கம் ஒடுக்கமா இல்லாம கண்ணை உருட்டுறதும், கையை ஆட்டுறதும் அவ பண்ண அலப்பறை இருக்கேஏ! ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்ன்னு நினைச்சேன்.

என்னைதான் கூட்டிப்போகலை. காமெடியா என்ன நடந்துச்சு மாமா. உன் ஃப்ரெண்டே ஒரு காமெடி ஃபீசு. அப்புறம் புதுசா காமெடி என்ன வேண்டிகிடக்கு?!

ம்க்கும், அவளை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே! சொல்லு மாமா!

நிறைய விசயம் நடந்துச்சு. ஆனா, விதி வலியதுன்னு அன்னிக்குதான் புள்ள தெரிஞ்சுக்கிட்டேன். தாலிக்கட்டி, அம்மி மிதிக்குற சடங்கு. அந்த அப்பாவி மனுசன் தலையெழுத்து உன் ஃப்ரெண்ட் காலை பிடிச்சு, அம்மில வச்சு நிமிர்ந்து, மணப்பெண் தோழியா நின்னுட்டு இருந்த ராஜியோட அத்தை கையை பிடிச்சுக்கிட்டு மணமேடையை சுத்த ஆரம்பிச்சுட்டார். இதை கவனிச்ச, ராஜியோட அண்ணன்தான் ராஜி கையை பிடிச்சு கொடுத்து மணமேடையை சுத்த வச்சார். அப்பவே தப்பிக்க பார்த்தார் அந்த மனுசன். ஆனா, விதி வலியதாச்சே! அதான் உன் ஃப்ரெண்ட்கிட்ட மாட்டி சிக்கி சின்னா, பின்னமாகிட்டு இருக்கார்.  

எல்லாம் சரி,  அதென்ன பீங்கான் விழா!? 

அதாங்க 25 வது வருச கொண்டாட்டத்தை வெள்ளி விழான்னு சொல்ற மாதிரி ,

  1வது  வருசம் - காகித விழா, 2வது வருசம் - பருத்தி விழா, 3வது வருசம் - தோல் விழா, 4வது வருசம் - மலர் மற்றும் பழ விழா, 5வது வருசம் - மர விழா, 6வது வருசம் - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா, 7வது வருசம் - கம்பளி / செம்பு விழா, 8வது வருசம் - வெண்கல விழா, 9வது வருசம் - மண் கலச விழா, 10வது வருசம் - தகரம் / அலுமினிய விழா, 11வது வருசம்- எஃகு விழா , 12வதுவருசம் - லினன் விழா,  13வது வருசம் - பின்னல் விழா, 14வது வருசம் - தந்த விழா, 15வது வருசம் - படிக விழா , 20வது வருசம் - பீங்கான் விழா, 25வது வருசம் - வெள்ளி விழா, 30வது வருசம் - முத்து விழா,  40வது வருசம் - மாணிக்க விழா, 50வது வருசம் - பொன் விழா, 60வது வருசம் - வைர விழா
75
வது வருசம் - பவள விழா, 100வது வருசம் - நூற்றாண்டு விழான்னு ஒவ்வொரு வருசத்துக்கு ஒரு பேரு மாமா.

ஓ! அப்படியா! இப்போ தெரிஞ்சுக்கிட்டேன் புள்ள!  இவ்வளவு  விசயம் தெரிஞ்சு வச்சிருக்கே! ஆனா, நெத்தில குங்குமம் இடாம, ஸ்டிக்கர் பொட்டு வச்சிருக்கியே!?


குங்குமம் இட்டுக்கிட்டா வேர்வையில நனைஞ்சு, புடவையில பட்டு புடவையிலாம் பாழாகுது, முகமும் சிவப்பா மாறி அசிங்கமாயிடுது. அதுமட்டுமில்லாம குங்குமம் வச்சுக்கிட்டா அந்த இடம் அலர்ஜியாகி அரிக்குது  மாமா! அதான்.

தப்பு புள்ள, சுத்தமான குங்குமம், மஞ்சளிலிருந்து செய்யுறாங்க. மஞ்சள் புனிதமானதுன்னு  நம்ம கலாசாரத்துல சொல்லப்படுது. விபூதி, குங்குமம் வச்சுக்கிறதுலாம் செல்வத்தோட அடையாளம்.  அதை யூஸ் பண்ணிக்குறது  நம்முடைய நல்வாழ்விற்கு மிகவும் முக்கியம். எல்லாரும், நல்வாழ்வுன்னாலே  பணம், நகை, காருன்னு நினைக்குறாங்க. ஆனா, அதுமட்டும் நல்வாழ்வு இல்ல. ஆண்கள் விபூதி பூச காரணம் “விடுதலை” உணர்வும், பெண்கள் குங்குமம் இட்டுக்கொள்ள காரணம் குடும்பத்தின் “நல்வாழ்வு”தான் காரணம்.

நம்ம நெற்றில, ரெண்டு புருவத்துக்கும் மத்தியில ஒரு வித திரவம் சுரக்குது, அந்த திரவம்தான், பொய், திருட்டு, கோவம்ன்னு கெட்ட எண்ணங்களை உருவாக்குதாம். அதனால, அதை உறிஞ்சியெடுக்க ஆண்கள், விபூதியையும், பெண்கள் குங்குமத்தையும் பூசிக்கனும்ன்னு பெரியவங்க சொல்றாங்க.  அதனால, இனி நீயும் குங்குமம் இட்டுக்கோ புள்ள்!!


சரிங்க மாமோய்! நான் வர லேட்டானா கொஞ்சம் சாதம் வடிச்சு, ஒரு சாம்பார் வச்சு நம்ம சின்ன மண்டையன் இஸ்கோலுல இருந்து வந்த உடனே பசிக்குதும்பான். அவனுக்கு ஊட்டி விட்டுடுங்க மாமா!!

ம்க்கும், ராஜி கூட சேர்ந்து நீ ரொம்ப கெட்டு போய்ட்டே! வர வர சமைக்க கூட சோம்பேறித்தன்மாகிட்டு உனக்கு!!

ஏனுங்க மாமா! சமைக்குறதுன்னா அவ்வளவு கஷ்டமா?!   முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் வேக வைக்கும்போது ஒரு துண்டு எலுமிச்சை சேர்த்துக்கிட்டா காய்கறிலாம் கலர் மாறாம இருக்கும்.  சமோசா, தனியாவையும், தேங்காயையும் வறுத்து பொடி பண்ணி வச்சுக்கிட்டு சாமபார் கொதி வந்து இறக்கும்போது கொஞ்சம் போட்டா சாம்பார் வாசனையோடு, ருசியும் ஆளை மயக்கும். உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், வாழைக்காய், கத்திரிக்காய்லாம் நறுக்கி வினிகர் கலந்த நீரில் போட்டு வச்சா நிறம் மாறாது. ரவை தோசை செய்யும்போது தோசைக்கல்லுல எண்ணெய் ஊத்தாம மாவுலயே எண்ணெய் ஊத்திட்டா கல்லுல இருந்து  தோசை வெளில வர அடம்பிடிக்காது. பாயாசம் எப்படி பண்ணாலும் தண்ணியா இருக்குன்னு புலம்புறவங்க,  பாலை அப்படியே சேர்க்காம, மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்தி சேர்த்தா பாயாசம் திக்கா இருக்கும். பால் கம்மியா இருக்கும்போதும் இபடி செய்யலாம் மாமா.

போதும் தாயே! போதும். போற போக்கை பார்த்தா நிரந்தரமா என்னையே சமைக்க சொல்லுவே போலிருக்கே!!

அப்படி இல்ல மாமோய்!!  இதெல்லாம் தெரிஞ்சு வசுக்கிட்டா உதவுமில்ல. அதான். ஒரு ஜோக் படிச்சேன்,அந்த ஜோக்குல  

English Story :-
.He Smiled
..She Smiled
……Life Smiled :)
தமிழ் டப்பிங் ?
.
.
.
.
.
..நீ சிரிப்பே
..அவ சிரிப்பா
…உன் பொழப்பு சிரிப்பா சிரிக்கும்:)

இம்புட்டு வியாக்கியானம் பேசுறே இல்ல!! இந்த விடுகதைக்கு விடை சொல்லு பார்க்கலாம்!? 

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, 
 உருண்டோடி வரும்
பந்தும் அல்ல.
அது என்ன?
அது வந்து..., அது வந்து ஆங்க்...,
    

38 comments:

  1. இருவருக்கும் இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  2. 20வது கல்யாண நாள் அதாவது பீங்கான் விழா வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. முதலில் உங்க தோழி ராஜி அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ..அப்புறம் சில்வர் ஜூப்ளி டைமென்ட் கோல்ட் பளாட்டினம் எல்லாம் கேள்வி பட்டுஇருக்கிறேன் ஆனா பீங்கன் எல்லாம் இருக்கிறது இப்பதான் தெரிஞ்சு கிட்டேன் புருவமத்தி விஷயமும் தெரிந்து கொண்டோம் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இன்றுபோல் இளமை துள்ளும் இனிய மனத்துடன்
    நூறாவது மண நாளும் காண இனிய நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்கள் இருவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. இனிய பீங்கான் தின வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  9. உங்கள் இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் வாழ்க. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. பெண்கள் வேண்டுமானால் ஒரு அடிமை கிடைச்ச நாளாக நினைக்கலாம். ஆனால் ஆண்களாகிய நாங்கள் நினைப்பது இந்த நாளை ஒரு தியாகத் திருநாளாகத்தான் கருதுவோம் காரணம் சுதந்திரமாக எந்த கவலையும் இன்றி திரிந்த நாங்கள் எங்கள் சுதந்திரத்தை பிறரின் நலனுக்காக விட்டு கொடுப்பதுதான்

    ReplyDelete

  11. //ரவை தோசை செய்யும்போது தோசைக்கல்லுல எண்ணெய் ஊத்தாம மாவுலயே எண்ணெய் ஊத்திட்டா கல்லுல இருந்து தோசை வெளில வர அடம்பிடிக்காது.

    ஆமாம் அளவு சொல்லலியே? சரி ஒரு கரண்டி மாவுக்கு 2 கரண்டி எண்னெய் ஊத்தலாமா?

    ReplyDelete
  12. திருமண நாள் நல்வாழ்த்துகள்......

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.
    உங்க சமையல் அறையில் அவர் உப்பா சர்க்கைரையா?
    ஒ சமையக் காரரே அவர்தானே!

    ReplyDelete
  14. என் மனமார்ந்த இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி...
    நலமும் வளமும் பெற்று வாழிய நீடூழி...

    ReplyDelete
  15. ஒருவருக்கொருவர் அடிமையான இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்ரி ஐயா!

      Delete
  16. பீங்கானுக்கு வெள்ளியின் நல்வாழ்த்துகள் :-))

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா! அப்போ வெள்ளிக்கு பீங்கானின் வாழ்த்துகள்

      Delete
  17. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி.....

    பாவம் என் மச்சான் ஹா ஹா ஹா ஹா...

    ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒவ்வொரு பெயரா ? ஆச்சர்யமா இருக்கே !

    கடைசி மொழி பெயர்ப்பு சூப்பரோ சூப்பர்ப்....!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா! ஆனா, பெண் வீட்டார், அதனால இப்படில்லாம் பொதுவுல பேசப்படாது. எது நடந்தாலும் தங்கச்சிக்குதான் ஆதரவா பேசனும்!!

      Delete
  18. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா!

      Delete
  19. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .இரண்டு அடிமைகளும்
    என்றென்றும் இப்படியே இணைபிரியாது துணை நிற்க இறைவனருள்
    கிட்டட்டும் .பலகாரம் எங்கம்மா தங்கச்சி ?????????????...........

    ReplyDelete
    Replies
    1. எனக்காக, என் அக்கா, சமைச்சு அவ வீட்டுல விருந்து பரிமாறி இருக்கா. இந்த லிங்க்ல போய் வயிறு முட்ட சாப்பிடுங்க மேடம் http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_7459.html

      Delete
  20. இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
    சமையல் குறிப்புக்கள், மற்றும் குறிப்புகள், சிரிக்க, சிந்திக்க வைத்தவை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  21. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. இனிய வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  23. அந்த தியாகிக்கும், அடிமை கிடைத்த இந்த ராணிக்கும் இனிய மண நாள் நல்வாழ்த்துகள்... இன்னைக்கு போல எப்போதும் மகிழ்ச்சியா இருக்கனும்...

    ReplyDelete
  24. அந்த விடுகதைக்கு என்ன பதில்?

    ReplyDelete
  25. @இரவின் புன்னகை
    >> விடுகதைக்கான பதில்: கடல்

    ReplyDelete
  26. திருமண நாளுக்கான இனிய நல்வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  27. My belated wishes...many many many ....more happy returns of the day..இனிய திருமண தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  28. நல்வாழ்த்துகள் ராஜி.....நல்லா இருங்க..

    ReplyDelete
  29. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்க!

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  31. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
    ,

    ReplyDelete