Tuesday, July 23, 2013

மதுரை மாணவர்கள் இப்படியா?! ஐஞ்சுவை அவியல்

ஏய்  புள்ள! 


இங்க  வா,  கொஞ்சம் மஞ்சள் பொடி கொண்டு வா. காலில் அடிப்பட்டுச்சு. வலிக்குது...., ஆ, அம்மா! உயிர் போகுதே!

ஐயோ ! என்னங்க ஆச்சு?!   

கதவுல கால் மாட்டிக்கிச்சு. நகம் பேர்ந்து வந்துடும் போல இருக்கு, ரத்தம் வருகுது பாரு.

ம்க்கும். நானும் என்னமோ! ஏதோன்னு நினைச்சு ஓடி வந்தேன். இந்த சின்ன காயத்துக்கு இப்படி அலறுறீங்களே! நீங்கலாம் பொண்ணா பொறந்திருக்கணும்!!

நானே வலில துடிச்சிக்கிட்டு இருக்குறேன். நீ என்னடான்னா, இப்போ போய் பொம்பளைங்க பெருமை பத்தி பேசுறியே!!

அதுக்கில்ல மாமா! நம்ம மனுசங்க உடம்பு  45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணருமாம். ஆனா, பிரசவத்தின் போது ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாளாம். இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது வர்ற வலிக்கு சமமாம்!!

ஓ அப்படியா! சரி உன் ப்ரெண்ட் ராஜி தன் பொண்ணை பார்க்க சென்னை போனாளே என்ன சொன்னா?! தூயா நல்லா இருக்காளா?!

ம்ம் நல்லா இருக்காளாம். ஜூலை 19 அவளுக்கு பொறந்த நாள் அதனால ராஜி தூயாக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கி தந்திருக்கா. KFCல போய் கிரில் சிக்கன் சாப்பிட்டு வந்திருக்கா. அப்படி இருக்கு, இப்படி இருக்குன்னு ஒரே பெருமைதான். நாமளும் ஒரு தரம் நம்ம சின்ன மண்டையனை கூட்டி போய்சாப்பிட்டு வரணும் மாமா!

உன் ஃப்ரெண்ட் தான் லூசு போல கண்டதையும் சாப்பிட்டு உடம்பை பாழ் பண்ணிக்கிட்டா நாமளும் பண்ணிக்கனுமா?!  வெளிநாட்டுல இருந்த இந்தக்கடைங்க இப்போ நம்ம இந்தியாவுல பெரிய பெரிய டவுன்ல லாம் வந்துடுச்சு. பெரு நகரங்கள்ல இப்போ இருக்குற இளசுகள்ல முக்காவாசி பேர்  KFCல சிக்கன் சாப்பிட்டலைன்னா தன்னை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, லவ்வர்ஸ்ன்னு அங்கதான் போய் குமியறாங்க. இப்போ, ஓரளவுக்கு நடுத்தர வர்க்கத்து ஆளுங்க கூட போக ஆரம்பிச்சுட்டாங்க. 

ஹாம்ப்சயர்ன்ற யூனிவர்சிட்டில ஒரு ஆய்வு நடத்தி இருக்காங்க. அதுல
KFC பத்தி அதிர்ச்சியான பல விசயங்கள் வெளி வந்திருக்கு.  

KFCகாரங்க, நாம சாப்புடுற பிராய்லர் கோழியை யூஸ் பண்ணுறதில்லை!!   மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழியைதான் யூஸ் பண்றாங்க. ஆனா, அதை கோழின்னு சொல்ல முடியாதாம். ஏன்னா, இவங்க ஸ்பெஷலா வளர்க்குற கோழிகளுக்க்கு அலகு, இறக்கை, கால்கள் கொஞ்சமதான் இருக்குமாம். கறி அதிகமா வேணும்ங்குறதுக்காக எலும்பு மெல்லிசா இருக்குற மாதிரி இந்த கோழிலாம் மாற்றம் செஞ்சிருக்காங்க.  
அந்த கோழியோட உடம்புல ஃபிக்ஸ் பண்ணி இருக்குற டியூப் வழியாதான் கோழிக்கு தேவையான சத்துலாம் போகுதாம். இந்த மாதிரி வளர்க்க செலவும் கம்மியாதான் ஆகுதாம். 

இந்த கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்காது. இறகுகள் இல்லாததால சூரிய வெளிச்சம்லாம் இதுக்கு ஆகாதாம்!! சீக்கிரம் தொத்து நோய்களுக்கு ஆளாகிடுமாம்!!. அதனால, இதை  அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம்  ”கோழி” ன்னு சொல்லக்கூடாதுன்னு எச்சரிக்கை விட்டிருக்காங்களாம். இப்படி ஆபத்தான KFC சிக்கனை சாப்பிடதான் வேணுமா புள்ள?!

வேணவே வேணாம் மாமா!  நம்ம வீட்டுல வளர்க்குற கோழியைவே அடிச்சு சாப்பிட்டுக்கலாம். சரி மாமா!  ஏனுங்க மாமா! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?! பக்கத்து வீட்டு பையன் 6வது தான் படிக்குறான். அவன் அப்பாவோட லேப்டாப்புல ஏதோ பார்க்க கூடாத படத்தை பார்த்துட்டானாம். அதுக்கு அவன் அப்பா, பெல்ட் எடுத்து வாங்கி எடுத்துட்டாரு,

ஐயோ பாவம்! அந்த குழந்தை மேல தப்பில்ல புள்ள! இப்போ பெரும்பாலும் எல்லார் வீட்டுலயும் கம்ப்யூட்டர் இல்லாட்டி லேப்டாப் இருக்கு. அவங்கலாம்  பல தகவல்களை Google ல  தேடும் போது யதேச்சைவோ இல்லாட்டி  ஸ்பெல்லிங் மிஸ்டேக்குனாலயோ இதுப்போல  ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள்  வந்து தர்ம சங்கடத்தை குடுத்துடுது. பெரியவங்க இது தப்புன்னு ஒதுங்கி வந்துடுறோம். ஆனா, குழந்தைகள் ஏதோ ஒரு ஆர்வத்துல அதை பார்க்குறாங்க. அதனால நாம் வூட்டுல  இல்லாத போது குழந்தைகள் இதெல்லாம்  பார்க்காம இருக்க 

 முதல்ல  கூகிள்க்குள்ள போய்  நம்ம  User name, password கொடுத்து Login செஞ்சுக்கனும். அப்புறம்,  settings ல போய் search settings click பண்ணனும் இல்லாட்டி   http://www.google.com/preferences ஓபன் பண்ணி, Safe serrch Filtering போய் நமக்கு  தேவையானதை  நிறுவிக்கனும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செஞ்சுக்கனும். Locking Process நடக்கும். அப்புறமா  Safe search Locked ன்னு அரும்.  சரியா Lock ஆகலைன்னா மறுபடியும்  ஒரு முறை சென்று Lock safe search கொடுங்க. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் நமக்கு வராது. இதுக்கு பிறகு google search பக்கத்துல நீங்க Lock செய்த அடையாளமா வண்ண பந்துகள் அடையாளமா இருக்கும் . நீங்க இதனை Unlock செய்ய மீண்டும் Search setting போய் unlock ன்னு மாத்திட்டா போதும் புள்ள.
       
இவ்வளவு வசதி இருக்கா. நான் கூட அந்த பையனை தப்பா நினைச்சுட்டேன் மாமா!
                         

இந்த காலத்து பிள்ளைங்கலாம் சூட்டிகை. அவங்களை நல்ல வழிக்கு கூட்டி போறதும், கெட்ட வழிக்கு கூட்டி போறதும் நம்ம கைலதான் இருக்கு. கிழிஞ்ச ஜீன்ஸ், செல்போன், சூயிங்கம்ன்னு அரட்டை அடிக்குற நம்ம ஊரு பிள்ளைகளுக்கு மத்தியில் மதிரை மாவட்டத்துல இருக்குற  டி.கல்லுப்பட்டின்ற ஊருல  காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளில படிக்குற பசங்களோட யூனிஃபார்ம். வேட்டி சட்டை தான் ! இந்த இஸ்கோலு இந்தியா சுதந்திரம் வாங்குறதுக்கு 4 நாள் முன்னாடி ஆரம்பிச்சிருக்காங்க. இந்த இஸ்கோலு பசங்கலாம் போறதும் வர்றதையும் பார்க்குறதுக்கு எதோ அரசியல் கட்சி ஊர்வலம் போல இருக்கு. 

அந்த வேட்டி சட்டைகூட ஏதோ  சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ இல்ல!! கதர் வேட்டிதான்.  வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் செய்யுற  முறையையும் பள்ளியிலேயே கத்துக்குடுக்குறாங்க, பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ன்னும்,ஆசிரியர்களை 'ஐயா’ - ன்னு உறவு சொல்லிதான் பசங்க கூப்பிடுறாங்க. பசங்க வேட்டி சட்டை போல பொண்ணுங்களுக்கு தாவணிதான் யூனிஃபார்ம். சின்ன குழந்தைகள் கூட வாரத்துல மூணு நாளைக்கு கதர் துணிதான் போட்டுக்குறாங்க.

திங்கள் கிழமைல நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை பசங்க பாடுறாங்க .புதன்கிழமைல நடக்கும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்துல பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் போன்ற நூல்களை வாசிச்சு அர்த்தம் சொல்லுறாங்களாம்!! ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளியாம் இது காலாண்டு, அரையாண்டுப பரிட்சையின் போது பசங்களை கண்காணிக்கவே தேவை இல்லியாம். காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பாங்களாம்.

ஓ இப்படி கூட ஒரு இஸ்கோலு இருக்காமா!? நம்ம சின்ன மண்டையனை அங்க போய் சேர்த்துடலாமா மாமா?!


ஏன் புள்ள!? அவன் இங்கயே இருக்கட்டுமே! அவனோட வீட்டு பாடத்தையெல்லாம் நான் சொல்லி குடுக்குறேனே. மதுரைல கொண்டு போய் விட்டுட்டா எப்படி?!

ம்க்கும் உங்க லட்சணம் என்னன்னு தெரியாதா எனக்கு?!   நாலும் எட்டும் எத்தனைன்னு கேட்டா  கூட்டி சொல்ல ஒரு வாரமாகுமே!

ஏய்! என்னை பத்தி என்னடி நினச்சுக்கிட்டு இருக்கே?! அன்னிக்கு எதோ யோசனையில இருந்துட்டேன். அதனால பதில் சொல்ல முடியலை. சரி, இப்போ எதாவது கேளு டான்ன்னு பதில் சொல்றேனா பாரு?! இல்லாட்டி ஒரு பக்கத்து மீசையை எடுத்துடுறேன்.

ஓ சவாலா?! ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது.  அதை எப்படி  பிரிச்சு எடுக்குறது?! ன்னு  ராஜாவுக்கு குழப்பம்.  ராஜாகிட்ட  ஒரு தராசு மட்டும் தான் இருக்கு . அமைச்சர் உடனே விடை சொல்லிட்டார் அந்த விடை என்னன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!! 

ஹா! ஹா! ப்ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானே! இரு இந்த ஃபோன் காலை அட்டெண்ட் பண்ணிட்டு வந்து சொல்லுறேன்.

பதில் சொல்லாட்டி ஒரு பக்கத்து மீசையை எடுக்கலைன்னா என் பேரை மாத்திக்குறேனுங்க மாமோய்!!

21 comments:

 1. KFC பற்றிய உண்மையான தகவலுக்கும் மற்றபிற நல்லத்தகவல்களுக்கும் நன்றி ராஜி

  ReplyDelete
 2. தலைப்புல மதுரைன்னு இருந்ததும், ஏதோ நம்மளை பத்தி எழுதியிருப்பாங்களோன்னு நெனச்சுட்டேன்..

  kfc chicken பற்றி விளக்கமாக அறிந்து கொண்டேன்...

  கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் இந்த வகை சிக்கன்?இல் புழுக்கள் இருந்ததுனால அந்த உணவகத்தை சீல் வைத்துவிட்டார்கள்.

  ReplyDelete
 3. கே எப் சி பற்றிய விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது.... இனிமே அந்தப்பக்கம் போகவே கூடாதுப்பா....

  ReplyDelete
 4. மருமகளுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....நலமாக இருக்கிறாளா...?

  ஓஹோ அதான் என் நண்பன் ஒருத்தன் கே எ ஃ ப் சி சிக்கனைப் பார்த்து தலைதெறிக்க ஒடுறானா ? அவ்வ்வ்வ்வ்...

  அய்யயோ அண்ணாச்சிக்கு மீசை போச்சே பாவம்...

  ஐஞ்சுவை அசத்தல்....!

  ReplyDelete
 5. நாங்க இங்க எந்த ஹோட்டலில் நல்ல இந்திய உணவு கிடைக்குனு தேடி அலைகிறோம் அங்க KFC யைத்தேடி அலைகிறார்கள்.

  இங்கே KFC பாஸ்ட் ஃபுட் சீப் உணவகம் ஆனா இந்தியாவுல அது காஸ்ட்லி உணவகமாக இருக்கிறதாமே

  // ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது. அதை எப்படி பிரிச்சு எடுக்குறது?! ன்னு ராஜாவுக்கு குழப்பம். //

  அவர் என்ன ஏழை ராஜா வா என்ன அரண்மனையில் ஒரு Gold Metal Detector யை கூடவா வாங்கி வைதிருக்கமாட்டர்.


  இன்று ஒரு தகவல்: அமெரிக்காவில் வீடுகளில் திருட வருபவர்கள் Gold Metal Detector யை கொண்டு வந்து நாம எங்க ஒழிச்சு வைச்சாலுல் திருடி கொண்டு போய்விடுவார்கள் இப்படிதான் உங்கள் அண்ணியின் எல்லா நகைகளையும் எங்கள் வீட்டில் இருந்து எடுத்து போய்ட்டான் ஒரு படுபாவி

  ReplyDelete
 6. ஐஞ்சுவை அருமை.....

  நமக்கும் சிக்கனுக்கும் ரொம்ப இடைவெளி! அதனால பிரச்சனை இல்லை!

  அண்ணாச்சிக்கு ஒரு பக்க மீசை போச்சு! :)

  ReplyDelete
 7. கூகிள் safe search பற்றி நானுன் எழுத நினைத்திருந்தேன்.முன்பு மிக எளிமையாக இருந்தது., தற்போது சுற்று வழியில் செய்ய வேண்டி இருக்கிறது. அவசியமான ஒன்று

  ReplyDelete
 8. தகவல்களைக் கோர்த்த விதம் அருமை!

  ReplyDelete
 9. KFC தகவல் ஏற்கனவே முகநூளில் படித்திருந்தாலும் மிக அவசியமான பதிவு.

  ReplyDelete
 10. அவசிய தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 11. உரையாடலில் அருமையாக சொல்லப் பட்ட மூன்று தகவல்கள். மூன்றையும் ரசித்தேன்.

  சென்னைக்கு வந்து ஒரு வார்த்தை கூட சொல்லலையே, என் கையால உங்களுக்கு உணவு கிண்டி தரணும்னு காத்துக் கொண்டிருக்கிறேன்....

  ReplyDelete
 12. பயனுள்ள காய்கறியகளைக் கொண்டு
  தயாரித்த அவியல் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அதெப்படிங்க டெய்லி ஒரு பதிவு போட்டாலும் அசத்தலா போடறீங்க? நா வாரத்துக்கு ஒன்னு எழுதறதுக்கே விஷயம் இல்லேன்னு முழிச்சிக்கிட்டிருக்கேன்.

  நீங்க எழுதற விஷயங்கள விட அத சொல்ற விதம்தாங்க சூப்பர். எல்லாம் தானா வருது போலருக்கு.... ஹூம்!

  அப்புறம் இந்த கோல்ட் டிடெக்டர்... இங்க எங்கயாச்சும் கிடைக்குதா? ஏன்னா இப்போ கொஞ்சம் தொழில் டல்லாருக்காம்.. நமக்கு தெரிஞ்சவருக்குத்தான்.. அவருக்கு இதான் தொழில்.. அதான்...

  ReplyDelete
 14. அருமையான நல்ல தகவல்கள்.

  மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கேன்னு சாப்பிடுற நம்ம ஆளுங்களை எப்படி திருத்தறது ?

  ReplyDelete
 16. நம்ம ஊர்காரங்க திருந்தே மாட்டாங்கே.....

  ReplyDelete
 17. வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருதே .இதயா இத்தன காலமும்
  சாப்பிட்டு வந்தோம் .....!!! விடு விடு விடு விடு தலைவா இந்த
  லெக்கு பீசு வேணாம் தலைவா :)))))))))))))) .கூகுள் தகவலும் அருமை !
  இன்று வலைச்சரத்தில் மரபுக் கவிதை முத்துக்களின் அணிவகுப்பு .
  ஓடிப்போய் பாரு தங்கச்சி .எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு .

  ReplyDelete
 18. “உன் பிரெண்டு தான் லூசு. கண்டதையும் சாப்பிட்டு உடம்பைப் பாழ்பண்ணிக்கிட்டா....” ஹா ஹா ஹா....

  ஏங்க... மேடம்... இப்போ நல்லா ஆகிட்டீங்களா...?

  பதிவு நன்றாக உள்ளது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. ரமணி சார் தளம் மஊலமாக வந்தேன். வந்ததில் பல செய்திகள் கிடைத்தது. உங்கள் மதுரை இஸ்கூலு பற்றிப் படித்தேன்.
  அந்த
  school போலவே சென்னையில் தி.நகரில் ஒருபள்ளியுள்ளது. இதே தான் சீருடையும். அந்தப் பள்ளிக்குள் போகும் பொது நம்மையும் அறியாமல்
  பிரார்த்தனை மண்டபத்தில் கை கூப்பி நின்றிருப்போம்.

  நல்ல செய்திகள் பல அறிந்து கொண்டேன். உங்களைத் தொடரவும் ஆரம்பித்து விட்டேன். நேரம் கிடைக்கும் பொது என் தளத்திற்கு வருகை புரியுங்களேன்.

  ReplyDelete