Monday, July 29, 2013

”மம்மி” செய்வது எப்படி?! - ஐஞ்சுவை அவியல்




என்னங்க மேடம்?! பொது அறிவு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு போல!! டிஸ்கவரி சேனல்லாம் பார்க்குறீங்க!!  அழுகாச்சி சீரியல்லாம் போரடிச்சுடுச்சா?!

அதெல்லாம் இல்லீங்க மாமோய்! சும்மா சேனல் மாத்திட்டு வந்தேன். அப்போ டிஸ்கவரி டிவில மம்மியை காட்டுனாங்க அதான் பார்த்துட்டு இருந்தேன்.  

ம்ம்ம் என்ன காட்டுனாங்க?! அம்மணி அப்படி சொக்கி போய் பார்த்துட்டு இருந்தீங்க?! அந்த மம்மிக்கு சொந்தமான நகை எதாவது காட்டினாங்களா?! 

ம்க்கும் எப்ப பாரு என்னை தப்பாவே நினைங்க.  எகிப்துல  இறந்துட்டவங்க உடம்பை பதப்படுத்தி வைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். அது எப்படி பதப்படுத்தி வைக்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு?!

ஏண்டி நான் என்ன எகிப்துலயா பொறந்தேன் இதெல்லாம் தெரிஞ்சுக்க?!

அப்படி இல்ல மாமா! நீங்கதான் கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள    உக்காந்து  என்னென்னமோ படிக்குறீயளே அதான் தெரியுமா ன்னு கேட்டேன். செத்து போனவங்களோட வயத்துல துளை போட்டு, நுரையீரல், குடல் பகுதிகளை எடுத்துட்டு சில பச்சிலைகளை வச்சு தச்சுடுவாங்களாம். இதயம் மட்டும்தான் அந்த உடம்புல இருக்குமாம்!! அதுக்கப்புறம், மூக்கு வழியா மூளையை ஜாக்கிரதையா எடுப்பாங்களாம். இந்த மாதிரி செய்யும்போது சில சமயம் கண்ணு வெளில வந்துடுமாம். அப்போ செயற்கையான கண்ணை அதுக்கு பொருத்துவாங்களாம். 


அடுத்ததா உப்புத்தொட்டிக்குள்ள நாப்பது நாளுக்கு அந்த உடம்பை அமிழ்த்தி வைக்கனுமாம்.  உடலில் உள்ள திரவங்கள் பூராவும் இதனால வெளியேறிடும் (decompose ஆகாமல் இருக்க ! ). அதுக்கப்புறம் அந்த உடலை எடுத்து அதன்மீது ஒரு விதமான மெழுகுப் பசையை பூசுவாங்களாம். Mumo  ன்னா  மெழுகு ன்னு அர்த்தமாம். அதிலிருந்து வந்ததால இது mummy ன்னு சொல்லப்படுதாம்.  பதப்படுத்த உடல் ரெடி ஆனதும், அந்த உடலுக்கு சொந்தக்காரரோட பதவிக்கேற்ப   தங்க வைர வைடூரிய அலங்காரங்கள் செய்வாங்களாம். இப்போது நாம விரும்பிய mummy ரெடி !!!!!!!!!

என்ன புள்ள! என்னமோ மீல்ஸ் ரெடின்ற மாதிரி மம்மி ரெடின்னு சொல்றே! காலங்காத்தால நல்ல விசயமா சொல்லாம பொணம், அது, இதுன்னு சொல்லிக்கிட்டு!!

என்ன மாமா! இப்படி சொல்லிட்டீரு?! பொணம்னா அபசகுனமா?! எல்லோரும் சாகப்போறாவங்கதானே! ரொம்ப ஆசைப்பட்டுட்டீங்க. இருங்க வாழ்க்கை தத்துவம் ஒண்ணு சொல்றேன்...,

 ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல இருக்குற ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை சொல்லனும்ன்னு நினைச்சார். சீடர்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு,  அவங்களுக்கு தன்னோட பொக்கை  வாயை திறந்து காண்பித்து,

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லிட்டு எல்லாரையும் போகச் சொல்லிட்டார்.சீடர்களுக்குலாம் ஒண்ணும் புரியலை. இருந்தாலும் குருவை தொந்தரவு பண்ண வேணாம்ன்னு நினைச்சு போய்ட்டாங்க. ஒரே ஒரு சீடனுக்கு மட்டும்.  வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவா குருவையே எழுப்பி கேட்டான்.

அதுக்கு குரு  கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்துச்சு?!! 'நாக்கும் உள்நாக்கும் இருந்துச்சு குருவே”ன்னு பதில் சொன்னான் சீடன். உடனே குரு, 'பல் இருந்ததா?'ன்னு கேட்டார்.  அந்த சீடன் 'இல்லை.'ன்னு சொன்னான்.


'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'ன்னு சொல்லி செத்து போய்ட்டார் குரு.

ம் ம் ம்  வாழ்க்கை தத்துவம் நல்லாவே இருந்துச்சு புள்ள. இனி நானும் எல்லர்கிட்டயும் சாஃப்டாவே நடந்துக்குறேன்.  தாகமா இருக்கு புள்ள. கொஞ்சம் மோர் கொண்டு வர்றியா?!

எந்த காலத்துல இருக்கீக நீங்க. அதான் ஐஸ் பொட்டில விதவிதமா ஜூஸ் பாட்டில் இருக்குல்ல அதுல ஒண்ணை கலந்து வரேன் இருங்க.

அதுலாம் வேணாம் புள்ள! எனக்கு நீர் மோர்தான் வேணும்.  அதான் உடம்புக்கு  நல்லது.   தயிரை விடச் சிறந்தது மோர். தயிரை கடைஞ்சு மோராக்கி குடிச்சா சளி பிடிக்காது. நம்ம முன்னோர்கள்லாம் தயிர் சாப்புடுறது ரொம்ப குறைவு.  ஆனா, மோரை நிறைய சேர்த்துப்பாங்க. தண்ணிரைவிட மோர் கூடுதலா குடிக்கனும்ன்னு சித்தர் தேரையர் சொல்லி இருக்கார். மோர் குடிச்சா உடல் சூடு குறையுமாம். அதுமட்டுமில்லாம, மோரில் உடலுக்கு தேவையான நுண்ணுயிரிகள் நம்ம உடம்புக்கு பல நன்மைகள் செய்யுதாம்.  ஜீரண சக்தியை பெருக்கி, பசியை தூண்டுமாம்.

மோர்ல பொட்டாசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துலாம் இருக்காம். அதுமட்டுமில்லாம புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம்ன்னு நாலு வித்தியாசமான சுவைகள் மோரில் இருக்குமாம். உடல் கொண்ட மொத்த களைப்பையும் மோர் குடிச்ச உடனே போயிட்டு புத்துணர்ச்சி வருமாம்.  

அப்படியா மாமா!? இருங்க ஒரு கிளாஸ் கலந்துட்டு வரேன். 

சும்மா தயிரை ஒரு கிளாஸுல ஊத்தி உப்பு போட்டு கலக்கி கொண்டு வந்துடாதே!! தயிரை ஒரு பாத்திரத்தில் ஊத்தி, தயிர் கடையும் மத்தால கட்டி இல்லாம சிலுப்பி வெண்ணெய் தனியே பிரிஞ்சு வரும் வரை கடையனும். வெண்ணெயை எடுத்துட்டு அதுல, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு போட்டு கலக்கனும் விருப்பப்பட்டா கொஞ்சூண்டு பெருங்காயப்பொடி சேர்த்துக்கலாம்.

ம்ம்ம் சரி மாமா! அப்படியே செஞ்சு கொண்டு வரேன். ஆனா, நிறைய செஞ்சு வெச்சுட்டா மோர் புளிச்சு போகுமே!

 வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குதண்ணிக்கு பதிலா மோர் குடுத்தா உடல் சூடு தணியும் . மோர் புளிச்சுடும்ன்னு நினைக்குறவங்க தயிரிலிருந்து எடுத்த வெண்ணெயை அந்த மோர் தீரும் வரை அதிலேயே போட்டு வெச்சா  மோர் கடைசி வரை புளிக்காமயே இருக்கும். 

சரிங்க மாமா எல்லாத்தையும் மனசுல பதிஞ்சுக்கிட்டேன். எல்லாமே கொஞ்சம் சீரியசான விசயமே பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லட்டுமா? 

ம்ம்ம் சொல்லு.... 

 பாலு: மச்சான், எனக்கு இதுவரைக்கும் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சுடா. ஏனோ எனக்கு யாரையுமே பிடிக்கல.
வேலு:உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....? 
பாலு:  அதையும் பார்த்தோம்டா. ஆனா அது அப்பாவுக்கு பிடிக்கல!
 வேலு:???!!

ஹா! ஹா! ஜோக் நல்லா இருக்கு. ஒரு விடுகதை கேக்குறேன். பதில் சொல்லு பார்க்கலாம்?!

ம்ம்ம் கேளுங்க மாமோய்! பதில் சொல்றேனா? இல்லியா?ன்னு பாருங்க. 

கொய்த இவனை.., கொய்யாத பெயர் சொல்லி அழைப்பர். அவன் யார்?!

ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானா?! நான் கூட என்னமோ பெருசா கேக்கப் போறீங்கன்னு நினைச்சேன். அதுக்கு விடை...,

நீ போய் மோர் கலந்து எடுத்துட்டு வந்துட்டு விடை சொல்லு. சரியான்னு சொல்றேன். 

20 comments:

  1. நான் மோர் குடிச்சிட்டேன்

    ReplyDelete
  2. தகவல், ஜோக், விடுகதை என்று கலக்கறீங்க....

    மோர் மட்டும் தான் குடிக்க முடிஞ்சுசு.. விடுகதைக்கு விடை தெரியல...

    ReplyDelete
  3. ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி....இறந்தபிறகும் பதப்படுத்தி வைக்கப்படுபவர்கள்.தகவலுக்கு நன்றி ராஜி.கதை மனதிற்கும் மோர் உடம்பிற்கும் ஜில்.விடுகதை தெரில !

    ReplyDelete
  4. அவியல் சுவைத்தது.

    ReplyDelete
  5. வாழ்க்கை தத்துவம் அருமை... மோர் குடிச்சாட்சி...! கொய்யாப்பழம்...?

    ReplyDelete
  6. மம்மி'ன்னதும் அம்மாவை தான் சொல்றிங்கன்னு நெனச்சேன்... இங்க வந்து பார்த்தா???

    இதுக்கு தான் இங்கிலிபீச் படமெல்லாம் பாக்க கூடாதுன்னு சொல்றது!

    ReplyDelete
  7. படிக்க ஆரம்பித்த போது எகிப்தில் இருந்தேன். படித்து முடிக்கும் போது உங்கள் வீட்டில் மோர் குடித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுது எகிப்து போனேன், எப்பொழுது உங்கள் வீட்டிற்கு வந்தேன் . புரியவில்லை. ஒரே மாய் மலம் செய்கிறீர்களே!

    ReplyDelete
  8. நல்ல சுவையான அவியல், எல்ல விஷயங்களும் கலந்து கட்டி அருமையா கொடுத்திருக்கீங்க.

    ReplyDelete
  9. வாழ்க்கை தத்துவம் நல்லாவே இருந்துச்சு
    கொய்யாப்பழம் போல..!

    ReplyDelete
  10. அட அவியல்ல இருக்கற அத்தனை விசயமும் நல்லா இருக்கு... எனக்கு இரண்டு கேள்விகள்

    1) இந்த அவியல்ல வர்ர விடுகதைக்கு எல்லாம் எப்ப விடை சொல்லுவிங்க ?

    2) அக்காவுக்கு அவியல் சமைக்க தெரியுமா ?

    ReplyDelete
  11. நல்ல ஐஞ்சுவை அவியல்.
    மோர் நல்ல ருசி.
    கொய்யாபழம் தானே விடை.

    ReplyDelete
  12. மம்மி உடலுக்கு பரிமளத்தைலம், வேற என்னன்னல்லாமோ வாசனை திரவங்கள் உண்டு என்று வேதாகமத்தில் படித்ததுண்டு.

    ReplyDelete
  13. ஊருக்கு போனா எனக்காக ஒரு பெரிய பாத்திரம் நிறைய மோர் செய்து ஃபிரிட்ஜில் வைத்து விடுவாள், தாகம் வரும்போதெல்லாம் எடுத்து குடிக்கும்போது தேவாமிர்தமாக இருக்கும், என் பையனுக்கும் அந்த பழக்கம் வந்துவிட்டது, பொண்ணு குடிக்கவே மாட்டாள்.

    என் வீட்டம்மா மோரில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி இவைகளை லேசாக அரைத்துத்தான் மோரில் கலக்குவாள், நல்ல ருசியாகவும், உடலில் இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை சென்றடைய வசதியாகவும் இருக்கும்...!

    ReplyDelete
  14. வன்மையானது அழிவும் மென்மையானது வாழும்
    அருமையான தத்துவம் நன்றி

    ReplyDelete
  15. மம்மி செய்வது எப்படி என்று நான் ஒரு இடுகை எழுதாலாம் என்று இருக்கிறேன்...உங்கள் அனுமதி கிடைத்தால்..

    உங்கள் அனுமதி கிடைத்தால்..நாளைக்கே வரும். எனக்கு அனுமதி உண்டா இல்லை என்று சொல்லுங்கள்...please

    ReplyDelete
    Replies
    1. ஐயோ இதுக்கெதுக்கு என் அனுமதி?! தாராளமா எழுதுங்கோ சகோ!

      Delete
  16. அறியாத தகவல்களோடு மனதை இலகுவாக்கும் நகைச்சுவையும் புதிரும் சேர்த்து ஐஞ்சுவை அவியல் அசத்தல். வாழ்க்கைத் தத்துவம் மனம் தொட்டது. நன்றி ராஜி. புதிருக்கு விடை கொய்யாப்பழம் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. மூக்குலருந்து மூளையை உறிஞ்சி எடுத்துருவாங்க அப்போ கண்ணு பிதுங்கிரும்... என்னடா இது என்னாச்சி இவ்வளவு பயங்கரமா எழுத ஆரம்பிச்சிட்டாங்களேன்னு நினைச்சேன்.

    கடைசியில ஒரு கிண்ணம் நிறைய மோர காமிச்சி கூல் ஆக்கிட்டீங்க.

    உங்களுடைய அருமையான நடையில் மீண்டும் சொக்கிப் போனேன்.

    ReplyDelete
  18. ஐஞ்சுவை அவியல் அருமையாக இருந்தது தோழி.

    ReplyDelete