Tuesday, July 30, 2013

அன்றும்!! இன்றும்!!

  

அந்திவானம்
அலையில்லாக் கடலை அணைத்து
சிவப்பை பூசிக்கொள்ள,
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே!!

அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ!!
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.

உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதி கொண்டாடினாய்!!

அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!

இன்றும்,
ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,


18 comments:

  1. பாதச் சுவடுகள் பிரிந்து தனித் தனியாவது துன்பத்தில் உச்சம் பெறும் .வலிநிறைந்த கவிதை வரிகள் .மனதை வாட்டியது .அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  2. தனிமை வலி நிறைந்தது! அதை கவிதையில் வடித்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தனிமையில் சுகமும் உண்டு, வலியும் உண்டு....

    ReplyDelete
  4. கவிதை வரிகள் தனிமையின் தவிப்பை அழகாய் சொல்கிறது.

    ReplyDelete
  5. தனிமை (சிலசமயம்) கொடுமை...

    ReplyDelete
  6. வணக்கம்
    தனிமையின் தவிப்பு பற்றி அருமையான கவி படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. தனிமையின் தவிப்பு அழகிய கவியாகி ....

    ReplyDelete
  8. வலையில் வழி(லி)ய சிக்கிய மீன் யாரது?

    ReplyDelete
  9. உங்கள் அறிவுரையின் படி, என் காதலுக்காக இந்த கவிதையை நான் copy செய்து கொள்கிறேன்...ஹி ஹி ஹி ...

    ReplyDelete
  10. வணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete
  11. தனிமையின் வலி...... கவிதையில்...

    நல்ல கவிதை.

    த.ம. 9

    ReplyDelete
  12. தனிமையில் அனைத்தும் உண்டு...

    ReplyDelete
  13. இன்றும்,
    ஒரே பாதசுவடுதான்,
    ஒரே நிழல்தான்!!
    ஆனால்,
    தனிமையில் நான்......,/

    இள வயது தனிமையை விட முதிர் வயது தனிமை மிகவும் கொடிது. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

    ReplyDelete
  14. தனிமையின் மொத்த வலியையும் கடைசி இரண்டு வார்த்தை உணர்த்துகிறது

    ReplyDelete
  15. கணிப்பொறி என் தோழி
    http://eniyavaikooral.blogspot.com/2013/07/blog-post_30.html

    ReplyDelete