Thursday, July 18, 2013

எனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு


2002 இல்ல 2003ன்னு நினைக்குறேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்டுலதான் முதன் முதலா கம்ப்யூட்டரை கிட்டக்க பார்க்க நேர்ந்தது. அதுவரை, சில ஹாஸ்பிட்டலில், ஆஃபீசுல கம்பியால பிண்ணப்பட்ட வலைக்கு இந்த பக்கமாதான் பார்த்திருக்கேன். ”உயிரே” படத்துல இருந்து “என்னுயிரே! என்னுயிரே! என் ஆருயிரே!ன்னு பாடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த பாட்டு இன்னிய வரை என் ஃபேவரிட்.., சரி, சரி, சொல்ல வந்தது டிராக் மாறுது போல!

எப்பவாவது அவங்க வீட்டுக்கு போகும்போதுலாம் என் பசங்களை உக்கார வச்சு, நோட் பேட்ல டைப பண்ணவும், படம் வரைஞ்சு பார்க்கவும் சொல்லிக்குடுத்து, தனியா பழகி பார்க்கவும் விடுவான். ஆனா, எனக்கு மட்டும் என்ன பார்ட், எப்படி ஆன் பண்றது?!ன்னு கூட சொல்லி தந்ததில்லை...,  ஒரு வேளை எனக்கு கத்துகுடுத்து, அப்புறம் அதை நல்லா பழகி பரிட்சை எழுதி கம்ப்யூட்டர்ல B.Com பட்டம் வாங்கிடுவேனோன்னு பயப்பட்டிருப்பான்னு நினைக்குறேன்.

டேய்! எனக்கு கம்ப்யுட்டர் பத்தி சொல்லி குடுடான்னு கேட்டா...,  வந்தியா?! என்கிட்ட அரட்டை அடிச்சியா?! அம்மாக்கிட்ட பேசுனியா?! தங்கச்சிக்கு எம்ப்ராய்டரி சொல்லி தந்தியா?!ன்னு போய்கிட்டே இருக்கனும்ன்னு சொல்வான். ரொம்பவும் அடம்பிடிச்சா  போனாப்போகுதுன்னு “ரோட் ரேஷ்”ன்னு ஒரு விளையாட்டை ஆன் பண்ணி விளையாட சொல்லிட்டு போய்டுவான். பொதுவா,  வேகமா வண்டி ஓட்டுறது எனக்கு பிடிச்சதால, இந்த விளையாட்டு என்னை ஈர்த்தது.

 இப்படியே நாட்கள் போயிட்டு...,  2008 ல எனக்கு ஆஸ்திரேலியாவுல வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு. நான் கிளம்ப போறேன்னு சொன்னான்.  எனக்கு கஷ்டமாகிட்டு.., இப்போ மாதிரிலாம் செல்போன் கட்டணம்  அப்போ கிடையாது. நாங்க போடுற மொக்கைக்கு அவன் ஒரு நாள் சம்பளம் ஒரு நாள்லயே தீர்ந்து போகும். என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது...,

தன்னோட, மெயில் ஐடியை தந்து இதுக்கு மெயில் பண்ணு, இது என்னோட “பிளாக்” அட்ரஸ் என் கவிதைகள்லாம் படிச்சுக்கோன்னு சொல்லிட்டு ஆஸ்திரேலியா பறந்து போய்ட்டான்.., எப்பவாவது  ஃபோன் மூலமா பேசிக்குவோம்.  அப்படி ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு ஃப்ரெண்டோட பேரைச் சொல்லி, அவ, மெயில் அனுப்புறா. நீயும் இருக்கியே!!ன்னு  சொன்னான். வந்துச்ச்ச்ச்ச்ச்சு பாருங்க ஒரு கோவம்..., அவ PG டிகிரி வாங்குனவ. நாமளோ மூணாப்பு ஃபெயில்ங்குறதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம அவன் எழுதி கொடுத்த மெயில் ஐடியை எடுத்திக்கிட்டு நேரா பிரவுசிங் செண்டர்ல போய் நின்னேன்...,

இருங்க மூச்சு வாங்கிட்டு வரேன்...,

அங்க வேலைல இருந்த ஒரு குட்டி பொண்ணு, அக்கா! என்ன வேணும்ன்னு கேட்டுச்சு. ஒரு செட் தோசை, பூரி செட் கேட்டா குடுப்பியா?!ன்னு நக்கலா ஒரு கேள்வி கேட்டுட்டு,  ஒரு மெயில் அனுப்பனும்ன்னு சொன்னேன். போய்  6வது கம்ப்யூட்டர்ல போய் உக்காருங்க, நான் ஆன் பண்றேன்னு  சொல்லுச்சு.., சரின்னு போய் உக்காந்ததும் ஆன் ஆகி ஒரு தீவுல ஒரே ஒரு ஒத்தை பனைமரம் என்னை போல  ”ங்கே”ன்னு  நின்னுட்டு இருந்துச்சு. அப்பவே, சுதாரிச்சு வெளில வந்திருக்கலாம். என் கெரகம்...,

எக்ஸ்கியூஸ் மீ, இங்க வாம்மா!

என்ன வேணும்?! ஸ்கிரீன் இன்னும் ஓப்பன் ஆகலியா?!ன்னு கேட்டுக்கிட்டே அந்த பொண்ணு வந்துச்சு. இந்த அட்ரஸ்லாம் ஓப்பன் பண்ணனும்ன்னு சொன்னேன். என்னை ஏற இறங்க பார்த்துட்டு, இதுக்கூட தெரியலை, செட்தோசை, பூரி மசாலான்னு நக்கல் வேறன்னு முணுமுணுத்துக்கிட்டே சரின்னு சொல்லி என்னமோ படபடன்னு கீபோர்டை தட்டிச்சு. உடனே அவன் பிளாக் ஓப்பன் ஆச்சு. அவன் எழுதிய கவிதைலாம் ஏற்கனவே படிச்சு இருந்தாலும் ஸ்கீர்ன்ல பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அந்த சந்தோஷத்தோடவாவது வெளில வந்திருக்கலாம். அங்கதான் விதி என் நாக்குல நின்னு பாலே டான்ஸ் ஆடிச்சு...,

அந்த மெயில் ஓப்பன் பண்ணும்மா!!ன்னு அந்த புள்ளைக்கிட்ட சொன்னேன். அதும், டக்குன்னு தட்டி ஐடியை அடிச்சுட்டு பாஸ்வேர்டு குடுங்கன்னு கேட்டுச்சு. பாஸ்வேர்டா?! அப்படின்னா?! என்னன்னு கேட்டேன்?! என்னை புழுவைவிடவும் கேவலமா பார்த்துட்டு அது நம்ம வீட்டுக்கு சாவி போல. அது இருந்தாதான் திறக்கும்ன்னு சொல்லி, இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா என்னை அனுப்பிடுச்சு.

அப்புறம், அந்த அவமானத்தை ஈசியா மறந்துட்டேன். என் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது குழந்தைகளும் புரிஞ்சுக்குற மாதிரி தமிழ்ல ”கம்ப்யூட்டர் கற்க”ன்னு ஒரு புத்தகம் கண்ணுல பட்டுச்சு. அதை வாங்கி வந்து படிச்சு, குறிப்பெடுத்து அதே பிரவுசிங் செண்டர்ல போய் மெயில் அனுப்பனும்ன்னு சொன்னேன். ஹெல்ப்புக்கு வரவா?!ன்னு கேட்ட பொண்ணை  I know very well ன்னு சொல்லி ஒரு மெயில் தட்டி விட்டப் பின் ஏதோ ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி பாஸ் பண்ண மாதிரி அந்த பொண்ணை பார்த்துட்டுதான் வந்தேன்.

அப்புறம்,  3 மாசம் கிளாசுக்கு கம்ப்யூட்டர் பழக கத்துக்கிட்டேன். அப்பவும் அதிகப்பட்சம் நான் போறது 123greetings.com, என் ஃப்ரெண்ட் பிளாக், நிலாச்சாரல் இந்த மூணு மட்டும்தான். அப்படி ஒரு வைராக்கியத்துல கத்துக்கிட்டது தான் இன்னிக்கு சுமாரா கம்ப்யூட்டரை பத்தி தெரியும்.

ஆனாலும், இன்னமும் கம்பியூட்டரை கழட்டி மாட்ட தெரியாது. ப்ரிண்டர் செட்டிங்க்ஸ் தெரியாது. அதுக்குலாம் என் பையனைதான் கூப்பிடுவேன், அவனுக்கு எதாவது காரியம் ஆகனும்ன்னா, எதாவது ஒரு வயரை எடுத்திட்டு, டேய் கண்ணா!  சரி பண்ணித் தாடான்னு நான் கெஞ்சும்போது, தன்னோட ஆஃபரை சொல்லி காரியத்தை சாதிச்சுப்பான்.    எனக்கும், கம்ப்யூட்டருக்குமான முதல் அனுபவம். இதுப்போல எல்லாருக்கும் ஒரு அனுபவமிருக்கும். அதை, சொல்ல இதை ஒரு தொடர் பதிவாக்க போறேன். இதை தொடர,


ஆகிய ஐந்து பேரை கூப்பிடுறேன். அவஙக இதேப்போல அஞ்சு பேரை சிக்க வைக்கனும். அப்போதானே நம்மாளுங்க விவரம்லாம் வெளில வரும்.

டிஸ்கி: ரொம்ப நாளாச்சே தொடர்பதிவு இல்லியேன்னு தம்பி தமிழ்வாசி பிரகாஷ்க்கிட்ட  பேசிட்டு இருந்தேன். ஆமாக்கா, எனக்கும் தோணுது இந்த தலைப்புல நீங்களே போடுங்க. ஆனா, என்னை சிக்க வைக்காதீங்கன்னு கண்டிஷன் போட்டார். நாம யாரு?! சொன்ன சொல்லை காப்பாத்தும் ஆளா?! அதான் முதல் ஆளா தம்பியையே கூப்பிட்டுட்டேன்.60 comments:

 1. நிச்சயம் எல்லோருக்கும் இது போன்ற ஒரு அனுபவம் கண்டிப்பாக இருக்கும்... இப்போ நினைத்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் நீங்களும் பகிருங்க. நங்களும் படித்து மகிழ்வோமில்ல!!

   Delete
 2. தோ... இங்கேயே என் முதல் கணினி அனுபவத்தை சொல்லிறேன்....

  பிளக் பாயிண்டை ஆன் பண்ணாம, cpu ஆன் பண்ணாம மானிட்டர் பட்டனை அமுக்கி அமுக்கி கம்ப்யூட்டர் ஓபன் ஆகுமா, ஆகாதான்னு பார்த்துட்டே இருந்தேன். வாத்தியார் மண்டையில ஒரு தட்டு தட்டினார்.. இதான் என் முதல் அனுபவம்...

  ReplyDelete
  Replies
  1. இப்படி பொசுக்குன்னு சொன்னா எப்படி? அதை விலாவரியா பதிவா போடுங்க.

   Delete
  2. இதான் முதல் அனுபவம்... அப்புறம் வந்ததெல்லாம் ரெண்டாம், மூன்றாம் அனுபவம்னு..... இப்படி சொல்லிட்டே போகலாம்....

   உங்க தலைப்பை தெளிவா வாசியுங்க அக்கா....

   எப்படியெலாம் எஸ்கேப் ஆக வேண்டியிருக்கு??

   Delete
  3. அந்த முதல் அனுபவத்தைதான் விளக்கமா சொல்ல சொல்றேன். கிளாசுக்குள்ளா போகும்போது உங்க ஃபீல், கம்ப்யூட்டரை பார்க்கும்போது தோணினது, டைப் பண்ணதுன்னு விளக்கமா சொல்லுங்க தம்பி!

   Delete
  4. சிக்கல்ல மாட்டி விருறவரே சிக்கிட்டீரா...ஹா...ஹா...

   Delete
 3. அப்போதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்டுலதான் முதன் முதலா கம்ப்யூட்டரை கிட்டக்க பார்க்க நேர்ந்தது.///

  என்னமோ பாக்க கூடாதத பார்த்த மாதிரி சொல்றிங்க????

  ReplyDelete
  Replies
  1. ஆமா, பழகும் வரை அப்படிதான். பாம்புக்கு கூடதான் ப்யந்து ஒதுங்குறோம். பழகிட்டா!! எப்படி அட்டாச்மெண்ட்டோட இருக்கு. அதுப்போலதான் எல்லாமே! பழகும் வரை ஒரு பயம்தானுங்க தம்பி!

   Delete
 4. ஒரு வேளை எனக்கு கத்துகுடுத்து, அப்புறம் அதை நல்லா பழகி பரிட்சை எழுதி கம்ப்யூட்டர்ல B.Com பட்டம் வாங்கிடுவேனோன்னு பயப்பட்டிருப்பான்னு நினைக்குறேன்.///

  கம்ப்யூட்டர் பட்டம் வாங்கினா BCom பட்டம் வாங்க முடியுமா? காத்தாடி வாங்க முடியாதா???

  ReplyDelete
  Replies
  1. ஏன் முடியாது?! ஃபேன் வாங்கலாம்! பனை ஓலை விசிறி கூட வாங்கலாமே!!

   Delete
 5. /// பாஸ்வேர்டா?! அப்படின்னா?! ///

  இப்ப தான் தூள் கிளப்புகிறீர்களே...!

  ReplyDelete
  Replies
  1. போதும் அண்ணா! எனக்கு இந்த புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது.

   Delete
 6. அடடா பதிவுகளின் வசந்த காலம் மறுபடியும் வந்துரும்னு கவலையாக இருக்கே ஹி ஹி.....

  ReplyDelete
  Replies
  1. ஏன் வரக்கூடாதா அண்ணா! அது ஒரு ஆரோக்கியமான சூழல். விடிய விடிய கமெண்ட்ல இருந்தாலும் சண்டை வந்ததில்லை. யார் பெரியவங்கன்ற போட்டி இல்ல, என்னை திட்டிட்டான், கிள்ளிட்டான்னு புகார் இல்ல. அந்த காலம் வரனும்ண்ணா!

   Delete
  2. இத நான் லைக் பண்றேன்..

   Delete
  3. கண்டிப்பாக தங்கச்சி, நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன்.

   Delete
 7. //இருங்க மூச்சு வாங்கிட்டு வரேன்...,// ஹா ஹ ஹா

  என்னுடைய பல பழைய நினைவுகளையும் கிளறி விட்டுடீங்க... பல பேரோட கணினி நினைவுகள படிக்க போறோம்... சூப்பர் தொடர் பதிவு

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் இந்த அஞ்சு பேருல யாராவது ஒருத்தர் உங்களை கூப்பிடுவாங்க. உங்க அனுபவத்தையும் நாங்க படிச்சு கும்மதான் போறோம். இந்த தலைப்பு தமிழ்வாசி தந்தது. , பாராட்டை தம்பிக்கு ஃபார்வர்ட் பண்ணிடுறேன்.

   Delete
  2. தம்பி.. டோன்ட் ஒர்ரி.. நான்தான் உன்னை கூப்பிடப் போறேன்..ஹிஹிஹி..

   Delete
 8. கணினி பற்றிய உங்க பதிவு அருமை. தொடர்பதிவு ஆரம்பிச்சுடுச்சா? நல்லபடியாக தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி!

   Delete
 9. நல்ல தொடக்கம் ...ஒருத்தரையும் விடக்கூடாது....டோர லாக் பண்ணுங்க...

  ReplyDelete
  Replies
  1. டோரை லாக் பண்ணிட்டா நீங்களும்தான் மாட்டீப்பீங்க. ஓக்கேவா?!

   Delete
 10. தொடர் பதிவு ரொம்ப நாள் ஆச்சு... எழுதுங்க எழுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. ம்ம் நாங்கலாம் எழுதுறது இருக்கட்டும். உங்களையும் யாராவது கூப்பிடுவாங்க. நீங்களும் எழுதத்தானே போறீங்க?!

   Delete
 11. ஆரம்பிச்சாசா அடுத்த சுற்று ஆட்டத்தை ...

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆட்டத்துல உங்க சுற்றும் வரும். அப்போ நீங்களும் ஆடுங்க ராஜா!

   Delete
 12. செம கமெடி போங்க! சிரித்து படித்தேன்... நல்லதொரு ரிலே ரேஸ் !! ஐந்து ஐந்து பேராக....

  ReplyDelete
  Replies
  1. எப்படியும் இந்த ரிலே ரேசுல உங்க முறையும் வரும். அப்போ நீங்க கலக்குங்க.

   Delete
 13. // “ரோட் ரேஷ்”ன்னு ஒரு விளையாட்டை ஆன் பண்ணி விளையாட சொல்லிட்டு போய்டுவான்.//

  என்னோட பேவரைட் கேம் அது..

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்குமேன்னுதான் நினைக்குறேன். கூடவே மம்மி ஷூட்டிங் கேமும் எனக்கு பிடிக்கும்.

   Delete
 14. // எனக்கு ஆஸ்திரேலியாவுல வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு. நான் கிளம்ப போறேன்னு சொன்னான்//

  ஒரு மனுஷன இவ்வளவு தூரம் ஓட வச்சுட்டீங்களே..

  ReplyDelete
  Replies
  1. ஹலோ! எனக்கு பயந்து போகலை. அவன் லைஃப் நல்லா இருக்கனும்ன்னு வேலைக்கு போனான்.

   Delete
 15. //ஒரு செட் தோசை, பூரி செட் கேட்டா குடுப்பியா?!ன்னு நக்கலா ஒரு கேள்வி கேட்டுட்டு, //

  இதுக்கப்பறமும் உங்களை உள்ளே விட்டுச்சே அந்தப் பொண்ணு..

  ReplyDelete
  Replies
  1. அது அந்த பொண்ணோட கெட்ட நேரம்!!

   Delete
 16. // எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா //

  அப்பாடா..

  ReplyDelete
 17. இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.. சீக்கிரமே முடிச்ச மாதிரி இருந்தது..

  ReplyDelete
 18. நேற்றுதான் தமிழ்வாசி பிரகாஷோட இன்ஸ்டன்ட் போஸ்ட் பத்தி பதிவு படிச்சேன்...நீங்க ஒன்னொன்னா ஃபாலோ பண்றீங்க போல ...முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. நல்லாயிருக்கு.

  நான் 1992-ல் கம்யூட்டர் பக்கத்துல பார்த்தேன். என் கணவர் ரயில்வேயில் கம்யூட்டர் செக்‌ஷனில் வேலை பார்த்தார். 98-ல் வீட்டில் கம்யூட்டர் வாங்கிட்டோம். என் தம்பி இருவரும் துபாயில் வேலை பார்த்தாங்க அவன்க கூட பேச என் மகன் பெயரில் ஒரு யாஹூ ஐடி கிரியேட் செய்து
  அதெல்லாம் ஒரு வரலாறுங்க..

  ReplyDelete
 20. கலக்கலான தொடர்பதிவை ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 21. நல்லா நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். தொடர் பதிவுக்கு நம்பளை எல்லாம் கூப்பிடமாட்டேங்கிறீங்களே! அதெல்லாம் பிரபலமான பதிவர்களுக்கு மட்டும்தானா? ஹூம்..........

  ReplyDelete
  Replies
  1. 2வது நபரைத்தவிர( அவர்கள் உண்மைகள் தவிர) மற்றவர்கள் மட்டும்தான் பிரபலங்கள்

   Delete
 22. கணினியா...? அப்படி என்றால் என்ன...?

  ஐயோ... ராஜி மேடம்...
  என்னைப் போய்... என்னைப் போய்... இது சரியா?
  நியாயமா...?
  நேர்மையா...?
  தர்மமா...?
  ஏன் இந்த சின்ன புள்ளைய
  இந்த விளையாட்டுக்கெல்லாம் அழைச்சிங்க...? எனக்கு என்ன தெரியும்?
  நான் பாவம் இல்லையா?

  சரி சரி நாலு பேர் எதிரில் கூப்பிட்டுட்டீங்க. யோசிச்சிட்டு வர்றேன்.


  ReplyDelete
  Replies
  1. ரொம்பதான் அலுத்துக்குறீங்க மேடம்!!

   Delete
 23. உங்க கணினி அனுபவம் சுவாரசியம்
  சரியான அஞ்சுபேரைத்தான் தாங்க கூப்பிட்டிருக்கீங்க.
  பிரகாஷ் எக்ஸ்பர்ட் ஆச்சே!
  ரெடி ஸ்டார்ட்.

  ReplyDelete

 24. சகோ நான் உங்களை கலாய்க்கிறது உண்மைதான் அதனால என் மேல் கோபம் இருக்கலாம் அதற்காக இப்படியா என்னை நடுத்தெருவுல கொண்டு வந்து புலம்பவிட்டுடீங்களே

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் எப்படி பழிக்கு பழி வாங்குறதாம்?!

   Delete
 25. இத படிச்சதும் என்னுடைய முதல் அனுபவத்தையும் பகிர்ந்துக்கிட்டா என்னன்னு தோனுது. நீங்க கூப்டாட்டாலும் இந்த தொடர் பதிவுல ஒரு அங்கமா வராட்டாலும் இன்னும் சில தினங்கள்ல என்னுடைய என்னுலகம் பதிவுல எழுதறேன்... என்னடா கொஞ்ச நாளா எழுதறதுக்கு எதுவும் தென்பட மாட்டேங்குதேன்னு நினைச்சேன்.ஐடியா குடுத்ததுக்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா எழுதுங்க. நாங்களும் படிச்சு சிரிப்போமில்ல!!

   Delete
 26. நல்ல வேலை என்னை தொடர் பதிவுக்கு அழைக்க வில்லை. தப்பிச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா! ஹா! அதெப்படி?! சொல்லி இருக்கேன். கூப்பிடுவாங்க பாருங்க நம்மாளுங்க :-(

   Delete
 27. அட போங்க தங்கச்சி நீங்க .ஆரம்பத்தில இந்த எலியப் பிடிச்சு
  எப்படி வேலை வாங்குவது என்று புரியாமல் தவிச்சுப் போன
  நானும் இப்படித்தான் .ஒரு கணணியை வாங்கித் தலை மறைவாக
  வைத்துக் கற்றுக் கொண்ட பின்னரே கழுத்தை வெளியில் நீட்டினேன்.
  இன்னும் அந்த நினைப்புப் போகல :))))))))

  ReplyDelete
 28. என்னை ஒபாம மாமா அழைத்துள்ளார் ஆதலால் நான் எப்ப வருவன் என்று எனக்கே தெரியாது .ஆதலால் சிக்குபவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  (தப்பிச்சண்டா சாமி ......:) )

  ReplyDelete
 29. அருமையான அனுபவம்... சுவையா சொல்லியிருக்கீங்க ராஜி!

  தொடரட்டும் தொடர்பதிவு... தொடரப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள் [என்னை கூப்பிடாம இருந்தா போதும்!]

  ReplyDelete
 30. அருமையான கணினி அனுபவம். தொடருங்கள்

  ReplyDelete