Friday, July 19, 2013

சிப்பியில் பூத்த சின்ன மலருக்கு பிறந்த நாள்!! எனக்குப்பின், பல வருடங்கள் கழித்து வீட்டில் சின்னஞ்சிறு பாதம் பதியப்போகுதுன்னு  ஏகப்பட்ட எதிர்பார்ப்ப்பை மனதில் சுமந்தபடி  நானும், என் பெற்றோரும்...,

வயிற்றில் குழந்தையின் அசைவை உணராமல், அருகிலிருக்கும் மருத்துவரை நாட, அவரின் தவறான கணிப்பில் குழந்தை இறந்துவிட்டது. ஸ்கேன் செய்து பார்த்துட்டு  ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துடலாம்ன்னு சொன்னதை கேட்டு அலறி அடிச்சுக்கிட்டு...,

பெரிய ஆஸ்பிட்டலுக்கு செல்ல, குழந்தை பூரண நலம். கடைசி சில நாட்கள் குழந்தையின் அசைவு தாய்க்கு அதிகம் தெரியாதென்று வயிற்றில் பால் வார்க்க....,

 பதினெட்டு வருடங்களுக்கு முன் இதே நாளில், துணியில் சுற்றப்பட்ட பொற்குவியலென கையில் வாங்கினேன்.பிரசவ வலி சிறிதும் இன்றி, ”என் மகளை”

அன்றைய தினத்தை தவிர,  அவளால் நான் எதற்கும் பதறி நின்றதில்லை. அவ்வளவு பக்குவமாய் நடந்துக்குவா.

என் கண்ணை பார்த்தே, என் மனசுல உள்ளதை புரிஞ்சு நடந்துப்பா. அவளின் ஒரே பார்வையில்,  என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள்...

நான் சொல்வதற்கெல்லாம் எதிர்வாதம் செய்வா. ஆனா, சொல்பேச்சை தட்டாதவ. சில சமயம் யார் அம்மா?! யார் மக?!ன்னு தெரியாத அளவுக்கு எங்க சேட்டை இருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தவங்க, எங்க அரட்டையை பார்த்து அம்மா, மகள்தானா?!ன்னு கேப்பாங்க. அந்த அளவுக்கு நாங்க ஃப்ரெண்ட்ஸ்.
                                  
என் பெரிய பொண்ணு தூயா, படிப்புல, பேச்சுல, நடத்தைலன்னு படு சுட்டி. அவ,  ரெண்டாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த போது ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா.

அவக்கிட்ட, ஒரு இங்கிலிஷ் வார்த்தை சொல்லி அதுக்கு மீனிங்க் கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிட்டா.

அடுத்து சின்ன, சின்னதான வாக்கியம் சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிக்கிட்டே வந்தா..., அந்த நேரம் பார்த்து என் ஃப்ரெண்ட் வந்தாங்க. அவங்க  எதிர்க்க பெருமை பீத்திக்கனும்ன்னு  "I AM READING WELL"க்கு மீனிங்க் சொல்லுன்னு கேட்டேன்....

”நான் கிணத்துக்குள்ள இருந்து படிக்குறேன்”ன்னு சொல்லி குண்டை தூக்கி போட்டா.  ஏண்டி, தப்பா  சொல்றே? மீனிங்க் தப்பா வருதேன்னு கேட்டா..., READINGன்னா படிக்குறது, WELLன்னா கிணறு. ஒண்ணா சேர்த்தா, கிணத்துக்குள்ளிருந்து படிக்குறதுன்னு சொல்லி என்னை அசடு வழிய வெச்சா. அங்க இங்க ஓடி கீழ விழுந்து காயம் பட்டதில்லை. படிப்புலயும் சமர்த்து. தன் பொருளைலாம்  ஒழுங்கா சின்ன சின்ன டப்பாக்குள்ள போட்டு  எதையும் தொலைக்காம அடுக்கி வச்சுப்பா.  புத்தகம்கூட கிழிக்காம கிறுக்காம பார்த்துப்பா. தன்னோட தம்பின்னா அவளுக்கு கொள்ளை பிரியம். காலேஜ் போனப்பின் தங்கைகிட்ட  ஓவர் அட்டாச்மெண்ட்.

இதுவரை ஒரு பிறந்த நாளுக்கும் பிரிந்ததில்லை. விழா போல கொண்டாடலைன்னாலும், புது ட்ரெஸ், கோவில்,கேசரி, சாக்லேட்ன்னு சிம்பிளா முடிச்சுப்போம். ஆனா, இந்த வருசம்!!??

கல்வி கற்க தூரமா போயி  பிரிவுனால குரல் கம்மினாலும்,  நான் பார்த்துக்குறேன்ம்மா! நீ வராதே! பாப்பாவை பார்த்துக்கோ. தாத்தாவை அனுப்பாத அவரால, லோங்க் டிராவல் பண்ண முடியாது, அப்பாவை அனுப்பாத லீவ் கிடைக்காது. பாட்டியை தனியா அனுப்பாத. அவங்களுக்கு மொழி தெரியாதுன்னு அங்கிருந்தே எங்களை இங்க ஆட்டி வைக்குறா!!

இதய சிம்மாசனத்தில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
என் உள்ளத்து ராணி நீ!
உன் அன்புக் கயிற்றால்,
எங்களை கட்டியது ஏனோ!?

நீ நின்று.., படித்த..,
அமர்ந்து.., உறங்கிய..,
தலைக்கோதிய..,பூச்சூடிய..,
அத்தனை இடமும் ஆயிரம்
கவிதை சொல்லுது..,
உன்னை நினைத்து ஏங்கி!!

பாலை போல, நிலவைப்போல
தூய்மையானவள்ன்னு
யோசித்துதான் தூயாவென பெயரிட்டான்
உன் மாமன்!!

எல்லார் மீதும்,
 அன்பு காட்டுவதில் வள்ளல் நீ!
உடன் பிறந்தவங்களை   அரவணைத்து
 செல்வதில் அன்னை நீ!!

பெற்றோருக்கும், அவர்களை பெற்றோருக்கும்
சில சமயம் ஆலோசனை சொல்வதில் ஆசான் நீ!!
அன்பு என்ற மந்திரக்கோலை கொண்டு
எங்கோ அமர்ந்து கொண்டு 
எங்களையெல்லாம் சுழற்றும் வித்தைக்கு அரசி நீ!!

நீ தொட்டதெல்லாம் துலங்கும்
என்பதற்கு சாட்சி உன் பணி !!
பெண்ணுக்கு தேவையா இந்த படிப்பு ?!
என கேலி பேசுவோர் மத்தியில்
அதிலிருக்கட்டும் உன் பாணி!!

அதில் தொடரட்டும் உன் சேவை!!
அதுக்கு இறைவன் அருள் என்றும் கிட்டட்டும்.
எட்டு திக்கும் உன் புகழ் பரவி..,
இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு,
 வாழ வாழ்த்துகிறேன் மகளே!!

45 comments:

 1. முதலில் என் வாழ்த்துக்களைச் சொல்லிடுறேன் .

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும், முதல் வாழ்த்துக்கும் நன்றி அக்கா!

   Delete
 2. வலி தந்து பிறந்தாலும் இனிதான இதயத்தால்
  ஒரு நாளும் மறவாத உணர்வுக்குள் சிக்க வைத்தாள் !!
  மலரே உன் மனம் போல மணம் வீசு வாழ்நாளில்
  உலகத்தின் சிறப்பெல்லாம் உனை வந்து சேரட்டும் .

  தூயாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் .பலகாரம் எங்க ?.......

  ReplyDelete
  Replies
  1. அதான் மேல கேக் இருக்குல்ல. எடுத்து சாப்பிட்டுக்கோங்க அக்கா! அதிகமா சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஆகாது

   Delete
 3. கவிதை வரிகள் சிறப்பு...

  தூயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கவிதையை ரசித்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா!

   Delete
 4. இதய சிம்மாசனத்தில்
  கம்பீரமாய் வீற்றிருக்கும்
  உள்ளத்து ராணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,,,!

  ReplyDelete
  Replies
  1. தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா!

   Delete
 5. துயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தூயாக்கிட்ட உங்க வாழ்த்துகளை சேர்த்துடுறேன் தம்பி!

   Delete
 6. தூயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  Angelin.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஏஞ்சலின்

   Delete
 7. சிப்பியில் புத்த சின்ன மலர் தூயாவிற்கு
  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்தை தூயாக்கிட சொல்லிடுறேன். எல்லாம் சரி, தூயாக்கு தன் சித்தியோட பரிசு எங்கே?!

   Delete
 8. தாய் கண்ட கனவுகளை எல்லாம் கனியவைத்து பெற்றோருக்குப் பெருமையும் உறவினருக்கு உரிமையையும் மற்றவர்களுக்கு அன்பும் தந்து மகிழ்ச்சியாக தனது பிறந்த நாளை இன்று கொண்டாடும் தூயாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி!

   Delete
 9. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்க ... வாழ்க ... நல்லவங்க சொல் பலிக்கும் ... நல்ல இருப்பமா நீ ....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி! அதென்னை இடைச்செருகலா ஒரு சுய விளம்பரம்?!

   Delete
 10. Replies
  1. வாழ்த்துக்கு நன்றி!

   Delete
 11. தூயாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அக்கா உங்கள் மகளை நினைத்து எழுதிய கவிதை வரிகள் மிக அருமை...உங்களை போல் அம்மா கம் ஃப்ரெண்ட் கிடைச்சதுக்கு உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

  ReplyDelete
 12. தூயா - இன்று பிறந்த நாள் காணும் இந்தச் சின்னப் பெண்ணுக்கு வாழ்வில் எல்லா வளமும் நலமும், சந்தோஷங்களும் கிடைக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  பிறந்த நாள் வாழ்த்துகள் தூயா!!

  ReplyDelete
 13. தங்கள் மகள் தூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தூயா.

  ReplyDelete
 15. வானில் பறக்கும் தேவதையான தூயாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தூயா... தூயாவுக்கான பிறந்த நாள் கவிதை சூப்பர், தூயா என்ற பெயர்காரணம் சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
 17. தூயாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. தூயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. தூயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. எண்ணியவாறு சிறந்து விளங்க இந்நாளில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. மொழி பெயர்ப்பு என்றவுடன் ஒரு நினைவு

  தினத்தந்தியிலிருந்து மொழி பெயர்த்தது (யாராக இருக்கும்)

  தீடீரென்று_______ நாட்டு அதிபர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டார்.

  suddenly President became house watchman  ReplyDelete
 22. எனது மகிழ்ச்சியான ஆசிர்வாதங்களுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. செல்ல மருமகளுக்கு மிகமிக சந்தோஷத்தோட என் ஆசிகளும் இனிய பிறந்ததின நல்வாழ்த்துகளும்! அன்பு காட்டுவதில் அவள் வள்ளல் - சரியாச் சொல்லியிருக்கேம்மா!

  ReplyDelete
 24. உங்கள் செல்ல மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

  ReplyDelete
 25. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவள் வாழ்க வளமுடன் !

  நான் உழைக்கும் அமெரிக்க நேரப்படி இன்னும் தூயாவின் பிறந்தநாள் முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சரி, உங்க வாழ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. சந்தடி சாக்குல நீங்க அமெரிக்காவுலதான் இருக்கீங்கன்னு விளம்பரப்படுத்தீட்டீங்க பாருங்க!! அங்கதான் நீங்க பிரபல பதிவராகிட்டீங்கன்னு நல்லா தெரியுது :-)

   Delete
  2. ஹா ஹா ஹா ... அக்காவுக்கு என்ன வம்பிழுக்கலன்னா தூக்கம் வராதே.... இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்காவுக்கு உழைக்கிறேன்... இருப்பிடம் கிழக்கு தாம்பரம், சென்னை :)

   Delete
 27. நீ வராதே! பாப்பாவை பார்த்துக்கோ. தாத்தாவை அனுப்பாத அவரால, லோங்க் டிராவல் பண்ண முடியாது, அப்பாவை அனுப்பாத லீவ் கிடைக்காது. பாட்டியை தனியா அனுப்பாத. அவங்களுக்கு மொழி தெரியாதுன்னு அங்கிருந்தே எங்களை இங்க ஆட்டி வைக்குறா!! //

  ஆக அவங்க உங்க குடும்பத்துக்கு ஒரு ரிமோட் கன்ட்ரோல்னு சொல்லுங்க. எங்க வீட்லயும் அப்படித்தான். மலேஷியாவுல இருக்கான்னுதான் பேரு. அங்க என்ன நடக்குதுன்னு சொல்றத தவிர இங்க என்ன நடக்குது தினசரி கேட்டு தெரிஞ்சிக்காம இருக்கமாட்டா. எத, எத எப்ப செய்யணும், எப்படி செய்யணும்னு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் வேற. பொண்ணுங்கதான் இவ்வளவு பொறுப்பா இருப்பாங்க. சில சமயங்கள்ல எரிச்சல் எட்டிப்பார்த்தாலும் அதுலயும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்யிது.

  மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. தூயாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. தூயாவுக்கு சற்றே தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இனிதே வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 30. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)

  ReplyDelete
 31. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... மனம் போல வாழ்வு மலரட்டும் !

  ReplyDelete