Thursday, July 25, 2013

வாட பிறந்தவள்!!

 
என்னை பற்ற வைப்பது எளிது
தீக்குச்சி தேவையில்லலை
உன்னுடைய முடியாது..., என்ற
ஒரு வார்த்தைப் போதும்!!

 இப்போதும்..,
எரிந்துக் கொண்டுதான் இருக்கிறேன்..,
நீ முடியாது என்று சொன்னதால்!!

உன்னிடம் மன்றாடி கெஞ்சினேன், நீ
மறுத்ததை மறக்க முடியவில்லை.
கனவிலும் என் கன்னத்தில் தைத்தன,
முட்களாய் உன் முத்தங்கள்??!!!

நாம் ஒன்று சேரவில்லை..,
நம் காதலும் ஒன்று சேரவில்லை..,
சேரும் என்ற நம்பிக்கை போனதால்!!
பிரிவோம் என்று நம்புகிறேன்.

அதாவது, சரியாக நிறைவேறட்டும்
பிரிவிலும் ஒரு இன்பம் உண்டாம்..,
அதையாவது.,
 அனுபவிக்க ஆசையாய் இருக்கிறது,

பிறந்த குழந்தைக்கு தெரியாது
தான் பிறந்திருப்பது! இறந்த
மனிதனுக்கு தெரியாது
தான் இறந்திருப்பது! அப்படித்தான்
எனக்கும்தெரியாது!?
"உன்னை பிரிந்திருப்பது"

என் நினைவுகளை, உன் தோட்டத்தில்
செடிகளோடு சேர்த்தே புதைத்துவிடு,
பூக்களில் என் வாசமும் இருக்கும்!
இரவுகளில் வரும் உன் கனவுகளில்
நான் உன்னோடு பேசலாம்,

வீசும் காற்றில் என் சுவாசமும்
கலந்து இருக்கலாம்!
கேட்கும் பாடலில் என் நினைவும் வரலாம்...,

இப்படி நாம் பிரிந்தே இருந்தாலும்
சின்ன சின்ன நிகழ்வுகள் நடந்து
கொண்டுதான் இருக்கும்..,
உன்னையும் என்னையும் இணைத்து......!!!

இன்றும் நான் உன்னை தேடுகிறேன்!?
நீ இங்கே இல்லை.
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்,
இனிய முத்தங்களும் மட்டுமே இருக்கின்றது

”வாழ பிறந்த என்னை...,
வாட பிறந்தவாளாக்கி விட்டாய்..,

18 comments:

  1. பிறந்த குழந்தைக்கு தெரியாது
    தான் பிறந்திருப்பது! இறந்த
    மனிதனுக்கு தெரியாது
    தான் இறந்திருப்பது! அப்படித்தான்
    எனக்கும்தெரியாது!?
    "உன்னை பிரிந்திருப்பது"

    ஆஹா.. நச்சென்று சொல்லி விட்டீர்கள் ! மிக ரசித்தேன்

    ReplyDelete
  2. பிரிவின் ரணம் வரிகளில் வலிகளாக...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  3. காதலின் பிரிவும் ஒரு சுகம்தான் போல, கண்ணில் கண்ணீர் வரவேண்டுமென்றால், அவள் நினைவுகளை அசைபோட்டாலே போதும் மொத்தமாக கண்ணீர் வடிந்து மனசும் லேசாகி விடுகிறது....

    கவிதை நினைவுகளின் வீணை....!

    ReplyDelete
  4. காதல் கடித கவிதை அருமை

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரிகளும் மிகவும் அர்த்தம் பொதிந்த வரிகளாக உள்ளன, நீங்களா இதை எழுதினீர்கள் என்று நினைக்கும் போது சபாஷ் சபாஷ்சபாஷ் சபாஷ் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை சகோ

    நிஜமகாவே எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. பிறந்த குழந்தைக்கு தெரியாது
    தான் பிறந்திருப்பது! இறந்த
    மனிதனுக்கு தெரியாது
    தான் இறந்திருப்பது! அப்படித்தான்
    எனக்கும்தெரியாது!?
    "உன்னை பிரிந்திருப்பது"

    பொருள் பொதிந்த வரிகள்..!

    ReplyDelete
  7. எனக்கும் தெரியாது உன்னைப் பிரிந்திருப்பது. நல்ல வித்தியாசமான சிந்தனை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அருமையாக பிரிவின் வலியை உணர்த்தும் கவிதை சகோ... ஆனால் எனக்கு இந்த கவிதை தேவைப் படாது

    ReplyDelete
  9. அந்த படமும் அருமை... ரசித்தேன்

    ReplyDelete
  10. காதலின் பிரிவும் சுகம் தான்... சுகமாக எடுத்துக்கொள்ளும் போது...

    ReplyDelete
  11. அழகான காதலை, காதலின் பிரிவை, பிரிவின் வலியை, தவிப்பை வரிக்கு வரி வெளிப்படுத்திய கவிதைக்குப் பாராட்டுகள் ராஜி. ரிஷபன் சார் சிலாகித்த வரிகளை நானும் மேற்கோளிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

    ReplyDelete
  12. பிரிவு கவிதையை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  13. ஆமா எப்பவும் சிரிக்கிற மாதிரி பதிவை தந்து விட்டு இன்று மனம் கனக்கும் வரிகள்..

    ReplyDelete
  14. ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதிரி கவிதை கட்டுரை பயணம் ஆன்மீகம் எல்லாம் ஒரே இடத்தில கவிதையின் ஒவ்வரு வரிகளும் பிரிவின் கோரத்தை அழுத்தமாக தேரிவிக்கின்றன வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. சோகத்தினால் வரும் வரிகள்.. பிரிவிலும் ஒரு இன்பம் உண்டாம்.

    ReplyDelete
  16. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. ஒரே கவிதையா பொழியுதே இப்பல்லாம்! :)

    நல்ல கவிதை.

    ReplyDelete