Saturday, July 27, 2013

பொன் முட்டையிடும் வாத்து! - பாட்டி சொன்ன கதை


சீனு வந்துட்டியா?! வா! வா! சாப்பிட்டியா?! என் தங்கம்! என் பட்டுக்குட்டி சாப்பிட்டியாடி செல்லம்!

சாப்புத்தேன் பாட்டி!

ம்ம்ம் குட் கேர்ள். சீனு! வா கதை சொல்றேன்.  எங்க போறே!?• 

உள்ளார ஃபேன் ஓடும் சவுண்ட் கேக்குதே!  போட்டீங்களா பாட்டி?! தாத்தா இருக்காரா?!

தாத்தா இல்லை வெளில போய் இருக்கார். நாந்தான் ஃபேன் போட்டேன் அப்படியே மறந்து வந்துட்டேன். ப்ளீஸ் கொஞ்சம் ஆஃப் பண்ணிட்டு வந்திடேன். 

ம்ம்ம் சரி பாட்டி! பாட்டி இப்படிலாம்  கரண்டை வேஸ்ட் பண்ணலாமா?! இப்போதானே கரண்ட் ஒழுங்கா வருது. ரெண்டு மாசத்துக்கு முன் 12 மணிநேரம் கரண்ட் கட்டாகி எவ்வளவு கஷ்டப்பட்டோம். மறந்துட்டீங்களா?!

ஆமா சீனு! இனி இப்படி நடக்காம பார்த்துக்குறேன்.

பாட்டி, கவர்ன்மெண்டை மட்டுமே குறை சொல்லிக்கிட்டு இருந்தா போதாது. நாமும்தான் கொஜ்சம் சிக்கனமா இருக்கனும். அதுக்கு சில டிப்ஸ் எங்க டீச்சர் சொல்லி குடுத்து இருக்காங்க பாட்டி.  

*மோட்டாரிலிருந்து தண்ணி டேங்குக்கு போகும்  பப்லாம் அதிகமா பெண்ட் இல்லாம ஃபிக்ஸ் பண்ணா தண்ணி சீக்கிரமா தொட்டிக்கு போகும். கரண்டும் கொஞ்சம் கம்மியா செலவாகும். 

• நல்லா காய்ஞ்சிருக்குற துணியில தண்ணி தெளிச்சு  அயர்ன் பண்ணுறதை குறைச்சுக்கிட்டா கொஞ்சம்  கரண்ட் கம்மியா செல்வாகும்.

• ஆட்டோமேடிக்  "டீஃப்ராஸ்ட்' ஆகாத ஃபிரிட்ஜா இருந்தா ஃபீரிசர் பாக்சுல  ஐஸ்கட்டி அதிகமா சேராம  அடிக்கடி "டீஃப்ராஸ்ட்' செய்யனும்.  இல்லாட்டி அதிகமா கரண்ட் செலவாகும்.

• வாஷிங் மெஷின்ல துணி துவைக்குறவங்களா இருந்தா சம்மர்ல துவைச்சு அலசுறது மட்டும் பண்ணி வெயில்ல காயவச்சுக்கலாம். விண்டர் அண்ட் ரெய்னி டேஸ்ல ட்ரையரை யூஸ் பண்ணிக்கலாம்.  

• கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்ய, ஷட்டௌவ்ன் செய்ய சோம்பறித்தனம் பட்டு கம்ப்யூட்டரை ஸ்க்ரீன் சேவர்லயே போட்டு வச்சுட்டு போறதாலயும் கரண்ட் அதிகமா செலவாகுது. எதாவது டவுன் லோட் ஆகும்போது அப்படி வைக்கலாம். எதும் வேலை இல்லாத போது ஷ்ட் டவுன் பண்ணிட்டு போறதுதான் பெஸ்ட்.

• ஏசி-யை வருசத்துக்கு 2 டைம்ஸ் சுத்தம் செய்யனும். ஏசி ஃபில்டரை ஒவ்வொரு மாசமும் செய்யனும். 

• ஃப்ரிட்ஜ்  ரோர் லாக் ஆகாம இருந்தாலும்,   அடிக்கடி ஃப்ரிட்ஜ் டோரை ஓப்பன் பண்ணாலும் கரண்ட் வேஸ்ட் ஆகும். 

• ரெண்டு மூனு நாளைக்கு வீட்டை பூட்டிக்கிட்டு ஊருக்கு போகும்போது ஃப்ரிட்ஜை ஆஃப் பண்ணிட்டு போகனும். எல்லா ஃபேனும், லைட்டும் ஆஃப் பண்ணி இருக்கான்னு செக்பண்ணனும். இல்லாட்டி கிளம்பும் அவசரத்துல ஃபேன் இல்லாட்டி லைட் எரிய விட்டு போய்டுவோம். அதனாலயும் கரண்ட் வேஸ்ட் ஆகும். 

• அடிக்கடி பல்பு மேல இருக்குற  தூசிலாம்  துடைச்சு வெச்சா
அதிக வெளிச்சம் கிடைப்பதோடு கரண்டும் மிச்ச்மாகும்.

• ஆளுக்கொரு ரூம்ல இல்லாம முடிஞ்ச வரை   ஒரே அறையில் இருந்து படிப்பது, டிவி பார்ப்பது ன்னு பிளான் பண்ண கரண்ட் மிச்சமாகும் பாட்டி.

ஓ இம்புட்டு விசயம் இருக்கா?! இனி நானும் அப்படியே ஃபாலோ பண்றேன் சீனு!! உனக்கு தெரியும் இந்த சின்ன விசயம் கூட எனக்கு தெரியலியே! இனி கவனமா இருந்துக்குறேன்.

சரி பாட்டி!! இன்னிக்கு என்ன கதை?!
  

பொன் முட்டையிடும் வாத்துன்னு ஒரு கதை சீனு.

”பொன்”ன்னா என்ன பாத்தி?! 

“பொன்”ன்னா ”கோல்ட்” ”தங்கம்” ன்னு அர்த்தம் குட்டிம்மா! 

ஒரு ஊருல ஒரு ஃபார்மர் சந்தையில இருந்து ஒரு குட்டி வாத்தை வாங்கி வந்தார். அதை  பார்த்து பார்த்து வளர்த்தான். அது பெருசாகி முட்டை போடும் ஸ்டேஜுக்கு வந்துச்சு.

கூடைக்குள்ள போட்டு மூடி வச்சுட்டு வயலுக்கு போய் ஈவினிங் வந்து கூடையை திறந்து பார்த்தான்.  வாத்து முட்டை இட்டிருந்துச்சு. சந்தையில் கொண்டு போய் விக்கலாம்ன்னு  கையில் எடுத்து பார்த்தா முட்டை சாதாரண முட்டையாய் இல்லாம தங்க முட்டையா இருந்துச்சு.


ஆச்சர்யப்பட்டுக்கிட்டே போய் சந்தையில வித்துட்டு பணமாக்கி வீட்டுக்கு தேவையான திங்க்ஸ்லாம் வாங்கி வந்தான். 

இப்படியே வாத்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு முட்டை போட்டுச்சு. அதை வித்து அவனும் தனக்கு தேவையானதை வாங்கி வந்தான். உங்க அத்தை ராஜி சில சமயம இப்படிதான் தத்து பித்துன்னு எதாவது செய்வா. அதுமாதிரிஅந்த ஃபார்மரும், இந்த வாத்து டெய்லி ஒரு முட்டைதானே போடுது. அதை கொண்டு போய் விக்க டெய்லியும் சந்தைக்கு போக வேண்டியதா இருக்கே. முட்டை அது வயத்துல இருந்துதானே வருது. அப்போ அது வயத்துல நிறைய தங்க முட்டை இருக்குமே!ன்னு யோசனை பண்ணான்.

அதனால, அந்த வாத்தோட வயத்தை கிழிச்சு எல்லா முட்டையையும் எடுத்து, ஒரே நேரத்துல வித்து அதுமூலமா வர்ற பணத்துல எதாவது பிசினெஸ் செஞ்சு பணக்காரணாகிடலாம்ன்னு நினைச்சு அந்த வாத்தோட வயத்தை கிழிச்சுட்டான் அந்த ஃபார்மர்.

ஐயோ! பாவம் பாத்தி அந்த வாத்து! அப்படி கிழிச்சா அதோத வயத்துல ஒண்ணும் இருக்காதே!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  உனக்கு தெரியுது. ஆனா, அவனுக்கு தெரியலியே! அதோட வயத்துக்குள்ள அன்னிக்கு போட வேண்டிய ஒரே ஒரு முட்டை மட்டும் இருந்துச்சு. வாத்தும் துடிதுடிச்சு செத்து போச்சு.

வாத்து செத்து போனதால டெய்லியும் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு முட்டையும் கிடைக்காம போச்சு. தன்னோட முட்டாள் தனத்தால மீண்டும் தன் குடும்பத்து வறுமை மாறாம போச்சேன்னு நினைச்சு கவலைப்பட்டான்.
இதிலிருந்து என்ன தெரியுது?!

பேராசை பெரு நஷ்டம்ன்னு தெரியுது பாட்டி. 

ம் ம் ம் குட் பாய். போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு படிங்க.

சரி பாத்தி . பை! பை!


27 comments:

  1. மின் சிக்கன டிப்ஸ் ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த டிப்ஸ்லாம் எப்பவும் நினைவில் இருக்க வேண்டியவைகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. அடடா..முட்டை போச்சே..

    ReplyDelete
    Replies
    1. சாதாரண முட்டையில்ல. தங்க முட்டை :-(

      Delete
  3. டிப்ஸோ டிப்ஸ் சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  4. Replies
    1. ரசித்தமைக்கு நன்றி

      Delete
  5. வாவ்... செம்ம கதை....

    ReplyDelete
  6. நல்ல ஆலோசனை வழங்கிய சீனுக்கு பாராட்டுக்கள், பேராசை பெரும் நஷ்ட கதை சொன்ன பாட்டிக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  7. மின்சாரச் சேமிப்பு .....பலபேருக்கு உதவும் !

    ReplyDelete
  8. [[ரெண்டு மூனு நாளைக்கு வீட்டை பூட்டிக்கிட்டு ஊருக்கு போகும்போது ஃப்ரிட்ஜை ஆஃப் பண்ணிட்டு போகனும்.]]

    விசாரித்து இதை செய்யவும்! தரையெல்லாம் தண்ணீராக இருக்கப் போகுது! மேலும் ஃப்ரிட்ஜ உள்ள உள்ள சாமன்கள் கெட்டுப் போகாதா?

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு போகும்போது அதில் மாவு, பால், தயிர் போன்ற பொருளை வச்சுட்டு போகப்போறதில்லை. ஊருக்கு போவோம்ன்னு தெரிஞ்சா உருளை, வெங்காயம் தவிர மத்த காய்கறிலாம் காய்ஞ்சுடும்ன்னு அதையும் வாங்க மாட்டாங்க பெண்கள். அதனால, தைரியமா ஃப்ரிட்ஜ் ஆஃப் பண்ணிட்டு தண்ணிலாம் சுத்தமா துடைச்சு வச்சுட்டு வந்தா வாசமும் வீசாது.

      Delete
    2. இங்க வாடகை வீட்டில் அல்லது அபார்ட்மென்டில் இருந்து காலி செய்யம் போது..சொல்லும் கட்டளை..ப்ரிட்ஜை அணைக்கக் கூடாது! பத்து பைசா மிச்சம் புடிக்க ப்ரிட்ஜை அனைத்து வீடு காலி செய்து தண்டம் அழுதவர்கள் நிறைய பேர்...இங்கே உண்டு. அதில் இந்தியர்கள் அதிகம்.

      ப்ரிட்ஜ கதவை திறக்காமல் இருக்கும் வரை கரண்ட் செலவு ஆகாது. பூஜ்யம் தான்.

      இது தெரியாமல், தமிழ்நாட்டில், இதுமாதரி ஆலோசனைகளை கேட்டு பார்மசி வைத்திருக்கும் பலர் தினமும் இரவு, ப்ரிட்ஜை அணைந்து விட்டு செல்கிறார்கள். அப்படி செய்யும் மருந்துக் கடையில் தயவு செய்து மருந்து ஊசி, vaccines வாங்காதீர்கள். அந்த மருந்தை வாங்கி சாப்பிடுவத்ர்க்கு பதில் சும்மா இருக்கலாம்.

      இது மாதிரி Cold Chain concept - புரியாததினால் தான் தமிழ் நாட்டில் பல மருந்துகள் வேலை செய்வது இல்லை; இந்த Cold Chain concept டாக்டர்களுக்கும் தெரிவது இல்லை என்பது கொடுமை.

      Delete
  9. உங்க இடுகையை விரும்பிப் படிப்பவன். நல்லா கிண்டலா எழுதுறீங்க. தொடருங்கள்...

    அதே மாதிரி இனி தினமும் ஒரு நீதிக் கதையை எழுதுங்கள். தென்கச்சி சாமிநாதன் மாதிரி நல்லா கதை சொல்றீங்க!

    ReplyDelete
  10. பேராசை பெரு நஷ்டம்ன்னு தெரியுது ..

    மின் சிக்கனம் சிறப்பான யோசனை ..!

    ReplyDelete
  11. அட அக்கா நீதிக் கதை நல்லா இருக்கு :) (smiley)...

    இது போல சிக்கனமா மின்சாராம் பயன் படுத்தினா எவ்வளோவோ மிச்சமாகும் !

    ReplyDelete
  12. சகோ டிப்ஸ் ஒகே ஆனா கதை......


    இது மிக மிக சின்ன புள்ளைகளுக்கு சொல்லவேண்டிய கதை....எங்களை எல்லாம் மிக மிக சின்ன குழந்தையாக்கிட்டீங்களே சகோ

    ReplyDelete
  13. இந்த பின்னூட்டத்தை தனியாக போடுவதின் காரணம்...நீங்கள் படிக்க பார்மசி ஆட்களிடம் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காக...
    _______________
    இங்க வாடகை வீட்டில் அல்லது அபார்ட்மென்டில் இருந்து காலி செய்யம் போது..சொல்லும் கட்டளை...அறிவுரை அல்ல! மப்ரிட்ஜை அணைக்கக் கூடாது அப்படியே ப்ரிட்ஜ் ஓடிக்கொண்டிடுக்க வேண்டும் என்ற கட்டளை!

    அனால் என்றைக்கு தமிழன் சொன்ன கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். பத்து பைசா கரண்ட் செலவில் மிச்சம் புடிக்க ப்ரிட்ஜை அனைத்து வீடு காலி செய்து தண்டம் 100 அல்லது 150 டாலர்கள் தண்டம் அழுதவர்கள் நிறைய பேர்..இங்கே உண்டு. அதிலும் இந்தியர்கள் தான் முதல்...!

    ப்ரிட்ஜ கதவை திறக்காமல் இருக்கும் வரை கரண்ட் செலவு ஆகாது. கரண்ட் செலவு கம்மி அல்லது பூஜ்யம் தான். இது தெரியாமல், தமிழ்நாட்டில், இதுமாதரி ஆலோசனைகளை கேட்காமல் கபார்மசி வைத்திருக்கும் பலர் தினமும் இரவு, ப்ரிட்ஜை அணைந்து விட்டு செல்கிறார்கள். இது ஒரு மிகப்ம் பெரிய குற்ரம்...இங்கு..அங்கு அல்ல!

    அப்படி செய்யும் மருந்துக் கடையில் தயவு செய்து மருந்து ஊசி, vaccines வாங்காதீர்கள். அந்த மருந்தை வாங்கி உபயோகப்படுதவ்ர்க்கு பதில் சும்மா இருக்கலாம்.

    இது மாதிரி "Cold Chain Concept" - புரியாததினால் தான் தமிழ் நாட்டில் பல மருந்துகள் வேலை செய்வது இல்லை; இந்த Cold Chain concept டாக்டர்களுக்கும் தெரிவது இல்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  14. உங்க மின்சார சிக்கன டிப்ஸ் உபயோகமானது.
    எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் அலுக்காத கதை.
    படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  15. மின்சாரம் சிக்கனமாக உபயோகிக்க சொன்ன டிப்ஸ் நன்று..

    பொன் முட்டையிடும் வாத்து! :)

    ReplyDelete
  16. குழந்தை சீனூ மூலமாக எல்லோருக்குமே பயனுள்ளவைப்பா... மின்சார சிக்கனம் எத்தனை பயனுள்ளது என்பதை இந்தக்காலத்து குழந்தைகள் மூலமாக நமக்கு தெரியவைத்தது இன்னும் சிறப்பு....

    அதே போல் பாட்டிச்சொன்ன கதை பழையது என்றாலும்... சொல்லும் கருத்து எப்போதுமே புதியதே தான்... கிடைப்பதைக்கொண்டு சந்தோஷமாய் மனிதன் வாழத்தொடங்கினால் அங்கு துன்பமோ ப்ரச்சனையோ கோபமோ பொறாமையோ ஏற்படுவதில்லை... இதெல்லாம் இல்லாதபோது பேராசைக்கு அங்கு இடமில்லாமல் போகிறது... இன்னும் வேண்டும் என்ற ஆசையின் உச்சம் தான் மனிதன் அழிவின் நிலைக்கு செல்கிறான் என்பதை மிக அழகாக கதையில் சொன்னது அருமைப்பா ராஜி...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

    ReplyDelete
  17. நல்ல கதையும், மின்சார சேமிப்பு பற்றிய தகவல்களையும் ஒருங்கே அளித்தமைக்கு நன்றி ! நிச்சயம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.....

    ReplyDelete