Tuesday, July 16, 2013

கொடிது!! கொடிது! முதுமையில் தனிமை கொடிது!!


இளமை அகன்றுவிட,  முதுமை அணைத்துக்கொள்ள,
இயலாமையில் சோர்ந்துபோய் அசைபோடும் மனது!!
காலமதில் பயிர் செய்யாமல்,  காத்திருந்த கன்னிதனையும்,
கடைத்தெருவில் களைந்துவிட்டு  கவனமில்லா வாழ்வுதனை
கடமையாக வாழ்ந்தேனே!!

இளமைதனின் முறுக்கோடு,  இயலாதது ஏதுமில்லை என்று,
அகங்காரம் அங்கமெல்லாம் ஆபரணமாய் சூடி கொண்டு
ஆனந்தமாய் இருந்தேனே!!

தனித்திருப்பது சுகம்!!  இறைவன் தந்த  வரம்!! என்றும்
பந்த பாசங்கள்லாம் சிறை!!
வழித்துணையாய் வாழ்க்கை முழுதும்..,
 வருபவளும் துன்பம்...,  என்று
காலமதை வீணே கழித்தேனே!!
 
வாக்குகளும்,  வாதங்களும் வசந்தகால பருவத்திலே..,
வசந்தத்தை வலுவிழக்க செய்தனவே!!
இன்று, வாதம் செய்ய கூட,  நீ இல்லாமல்..,
 வாய் மூடி கிடக்கின்றேனே!!

உடல் தளர்ந்து, உறுதுணையும் இல்லாமல் ..,
உற்றாரும், பெற்றோரும் இல்லாமல்..,
பலமெல்லாம், பலகீனமாய்...,  மனமிடும் பணி..,அதனை,
உடல்கூட உதாசீன படுத்தும், உரமில்லா உடல்கொண்டு
உழலுகின்றேன் உள்ளினுள்ளே !!

காலமதை தவறவிட்டு..,
 காலனுக்கு காத்திருக்கும் முதுமைதனில்!!
கனவிலும், நனவிலும் கடந்துவிட்ட காலம்தனை ,
வீழும் வரை வீழாது
வேகும்வரை நினைதிருப்பேனே!!   

21 comments:

 1. முதுமையில் குழந்தைகளின் பாரமரிப்பை பொறுத்து மாறும்... சிலருக்கு இது கொடுமை... சிலருக்கு அருமை...

  ReplyDelete
 2. என்னென்ன ஆபரணம் என்று முதுமையில் தெரிந்து என்ன செய்ய...?

  முடிவில் (ஞானம்) உணர்த்தும் வரிகள் உண்மை... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. புது தள வடிவமைப்பு அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தமிழ்மணம் இணைக்க முடியவில்லை... கவனிக்கவும்... முடியவில்லையெனில் dindiguldhanabalan@yahoo.com தொடர்பு கொள்ளவும்... நன்றி..

  ReplyDelete
 5. முதுமை முத்தாய்ப்பை கொடுத்தது..உங்கள் கவிதை வாயிலாய்

  ReplyDelete
 6. தாம் முதுமையடைந்துவிட்டதை உணர்ந்து இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் அதையும் கொண்டாட்டமாகவே அணுகுகிறார்கள். வாழ்கிறார்கள்!

  ReplyDelete
 7. இளமையில் நாம் மற்றவர்களை உதாசீன படுத்தினால், முதுமையில் நம்மை மற்றவர்கள் மட்டும் அல்ல உற்றவர்களும் உதாசீனபடுத்ததான் செய்வார்கள்.விதை ஒன்று நட்டால் மரம் ஒன்றா முளைக்கும். அருமையான கவிதை...

  ReplyDelete
 8. முதுமையில் தனிமை கொடியது தான்....

  ReplyDelete
 9. இளமையில் வறுமை கொடியது! முதுமையில் தனிமை கொடியது! ஆனால் என் தங்கையின் கவிதையோ இனியது!

  ReplyDelete
 10. உண்மைதான்.முதுமைக் கொடிது.
  இதையும் படியுங்களேன்
  http://kaviyazhi.blogspot.com/2013/04/blog-post_7855.html

  ReplyDelete
 11. ///கொடிது!! கொடிது! முதுமையில் தனிமை கொடிது!!//
  அதுக்குதான் அவர் பதிவாளராக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அவர் தனிமையின் கொடுமையை அனுபவிக்க வேண்டியது இல்லை. அடிக்கடி பதிவாளட் சந்திப்பு நடத்தி யாரையாவது பார்த்து பேசி அரட்டை அடிக்கலாம். ஆனால் தனிமையின் கொடுமைக்கு பதில் நாம் பதிவாக போடும் மொக்கைகளை படிக்க நேரிடும் கொடுமை ஏற்படும் அவ்வளவுதான்


  சகோ உங்களிடம் இப்படிபட்ட படைப்பா மிக ஆச்சிரியம் அளித்தது...பாராட்டுகள் புதிய வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. முடிந்தால் பேனரை சற்று நீளமாக்கவும்

  ReplyDelete
 12. ஊரில் உள்ள பெரிசுங்க நாலஞ்சி ஆடு வாங்கி வளர்த்து நேரத்தை [[தனிமையை]] போக்கி விடுகிறார்கள்...!

  ReplyDelete
 13. கொடியது கொடியது
  தனிமை
  கொடியது ? அதனினும்
  கொடியது
  முதுமையில்
  தனிமை

  ReplyDelete
 14. முதுமையில் தனிமை கொடியதுதான் அதை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும்.

  ReplyDelete
 15. இளமையிலேயே முதுமைக்கு முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தை உணரவைத்த பகிர்வுகள்..

  ReplyDelete
 16. தனிமை எந்த வயசிலும் கொடுமைதாங்க. அதிலும் முதுமையில்.... அது கொடுமையிலும் கொடுமை. நல்லாருக்கு ஒங்க நடை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. முதுமையில் தனிமை கொடியது தான்.
  இளமையில் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடந்து யோசித்து என்ன செய்ய?

  ReplyDelete
 18. தங்களின் தளம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

  ReplyDelete
 19. தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

  ReplyDelete
 20. மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇

  alone quotes in tamil

  ReplyDelete