Monday, July 01, 2013

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்


என்ன மாமா! பூஜை முடிச்சுட்டீங்களா?!வயக்காட்டுக்கு போகனுமே! நான் இட்லி எடுத்து வைக்கவா?!

ம்க்கும், எங்கே ஒழுங்கா பண்ணா விட்டே?! ஒரு பக்கம் டிவி, ஒரு பக்கம் குக்கர் சத்தம், தெருவுல காயகறிகாரம்மா கூட வாக்குவாதம், கூடவே உன் பையன் சின்ன ம்னடையன் கூப்பாடு வேற.  நிம்மதியா சாமி கூட கும்பிட முடியலை. இனி தனியா ஒரு வீடு கட்டி உங்க யாரையும் அதுக்குள்ள சேர்க்காமதான் பூஜை கும்பிடனும்போல! 

ஏன் மாமா! அப்படிலாம் சொல்லுதீய?! 

பின்ன சாமிகிட்ட நமக்கு வேணுங்குறதை கேட்க, இப்படிலாம் கடுமையா கும்பிட்டாதான் நாம நினைச்சதுலாம் நடக்க்கும் புள்ள. நேத்து டிவில கூட ஒரு படத்துல ஒரு முனிவர் தவம் பண்றார், இடி, மழ, மின்னல் பார்க்காம இருக்கார். அவரை சுத்தி புத்து கூட எழும்பிடுது. அப்பவும் கண் விழிக்காம சாமி கும்பிட்டு வேணும்ங்குற வரத்தை வாங்கிட்டார்.

ம்க்கும் இப்படிலாம் சாமி கும்பிட வேணாம்.., இயல்பா சாமி கும்பிட்டு, யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாம இருந்தாலே போதும்.., சாமி நாம கேக்குற வரத்தை தரும்.., ஒரு முறை.., புத்தர் ஒரு மரத்தடியில் உக்காந்து தவம் செஞ்சுக் கிட்டிருந்தார். தான் பார்த்த உயிரற்ற உடல், முதுமை... இதுக்கெல்லாம் என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்குறதுக்காக பண்ணுற கடுமையான தவம்.சாப்பிடலை, தூங்கலை, கொஞ்சம் கொஞ்சமா நினைவு தப்பிட்டு வருது. 

அப்போ, ஒரு கோஸ்டி பாட்டு  பாடியபடியே அந்த மரத்தை கிராஸ் பண்ணி போனாங்க. . அந்த பாட்டுச்சத்தம் புத்தரோட  தவத்தைக் கலைச்சது.”வீணையின் நரம்பினை  முறுக்கினால் இசை வரும்! முறுக்காத நரம்பினால் என்றுமே பலனில்லை! அதிகமாய் முறுக்காதே நரம்புகள் அறுபடும்! அளவோடு முறுக்கிடு வாழ்வும் அது போலே”!ன்னு அர்த்தம் வர்ற மாதிரியான பாட்டு அது. அந்தப் பாட்டு புத்தரின் சிந்தனையைக் தூண்டியது.  ஒரு விஷயத்தை அறிய அளவுக்கு மீறிய தவம் தேவையில்லை. ஏன்னா, ஒரேயடியாக பட்டினி கிடந்து மூச்சடக்கி தவம் செஞ்சா  இந்த உயிர் பறந்துடும். அதுக்கப்புறம்  என்ன காரணத்துக்காக தவமிருந்தோமே, அந்த லட்சியம் நிறைவேறாம போய்டும்ன்னு தெரிஞ்சுக்கிட்டவர், அன்னையிலிருந்து தவத்தின் கடுமையைக் குறைத்துக் கொண்டார்.  நாம கூட நம்ம வாழ்க்கையில அனுஷ்டிக்கும் விரதங்களுக்கு கூட ஒரு அளவவை வச்சுக்குறது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் எடுமே விஷம்தானே மாமா!?

நிஜம் தான் புள்ள.  இனி கடுமையான விரதம்லாம் இல்லாம இயல்பா விரதமிருக்கேன். நான் எதுக்கு விரதமிருக்கேன்னா! அக்க மகளுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாள் கழிச்சு கருத்தரிச்சிருக்கு.., அதான் அவ நல்லபடியா குழந்தை பெத்துக்கனும்ன்னு வேண்டிக்குறேன் புள்ள/

அப்படிங்கள்! ரொம்ப சந்தோசமான விசயம். அதுக்கு விரதம் மர்ரும் போதுமா?! நாமளும் கொஞ்சம் கேர் எடுத்துக்கனுமே! எனக்கு தெரிஞ்ச ஒரு சில டிப்ஸ் தரேன்..,

* கர்ப்பமா இருக்கும் போது முக்கியமான விசயம் என்னன்னா,  வீட்டு தரைங்கலாம்  ஈரமில்லாம இருக்கனும்.  ஏன்னா!  அப்படி  இருந்தா, எந்த நேரத்திலும் வழுக்கிடும் வாய்ப்பு இருக்கு. அதனால,  வீட்டுல இருக்குறவங்க, , இந்த விஷயத்துல  கவனமா இருக்கனும்.

* கர்ப்பத்தின் போது  சூடான பானத்தையோ, உணவையோ சாப்பிடும் போது கவனமா இருக்கனும். ஏன்னா,  தெரியாம  தடுமாறி உடல் மேலே விழுந்து காயம் பட்டுட்டா,  அது பிரசவத்தின் போது பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு
* கர்ப்பிணிகளுக்கு ஒருசில வேலை  செய்யும் போது  கஷ்டமா இருக்கும். உதாரணத்துக்கு உயரமான கட்டில்ல  படுத்து எழுந்திருக்கும் போது, உட்கார்ந்து எழுந்திருக்கும் போது ன்னு கஷ்டம் ஏற்படும். இதனால பெல்லியில் சிறிது அழுத்தம் ஏற்பட்டு, சிலசமயங்களல  ஆபத்து ஏற்படுற வாய்ப்பு இருக்கு.  அதாவது, வழுக்கிவிடும் நிலை ஏற்படும். அதனால், டைல்ஸ், மார்பிள்ஸ் தரை இருக்குறவங்க ரொம்ப கவனமா இருக்கனும்.

* கர்ப்பிணி பொண்ணுங்க  போட்டுக்குற ட்ரெஸ் அவங்க உடம்பு வாகுக்கு ஏத்த மாதிரி போட்டுக்கனும்.  ரொம்ப டைட்டான சுடிதார், ஜீன்ஸ், லெகிம்ஸ்லாம் போட்டுக்குறதை தவிர்க்கனும்.

* பாட்டி, சொன்னாங்க, மாமியார் சொன்னாங்கன்னு கடினமான வேலையை செய்ய வேணாம். சின்ன சின்ன வேலைங்க செஞ்சாலே போதும். . அதுக்காக வேலை செய்யாமலும் இருக்க கூடாது.
* கர்ப்பத்தின் போது பெண்கள் ஓடவோ, குதிக்கவோ கூடாது. இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காகத் தான், நிறைய மருத்துவர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பயணம் செய்யக்கூடாது ன்னு சொல்றாங்க.  அதனால, பயணத்தை தவிர்ப்பது நலம்.

*  சாதாரணமாக இருக்கும் போது நாவில் இருக்கும் சுவை, கர்ப்பத்தின் போது கொஞ்சம் மாறும். இது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. அதனால, சாப்பிடாம இருக்குறது, இல்லைன்னா உடம்புக்கு சேராததுலாம் சாப்பிட வேணாம்.  இந்த நேரத்துல கீரை, காஅய், பழம் போன்றதை சேர்த்துக்கலாம். அதிக காரம், மசாலா அயிட்டம்லாம் சேர்த்துக்க வேணாம்ன்னு சொல்லுங்க அவக்கிட்ட..,

கண்டிப்பா சொல்றேன். இதெல்லாம் யார் உனக்கு சொன்னது?!

நம்ம ராஜிதான். நான் சின்ன மண்டையனை உண்டான போது நெட்டுல படிச்சு வந்து சொன்னா..

ஓ! இதெல்லாம் செஞ்சுதான் அறிவான பிள்ளைகளை பெத்து, தன்  பசங்ககிட்டயே  அடிக்கடி பல்ப் வாங்குறாளா?!

ஏன் மாமா! என்னாச்சு?

அதுவா புள்ள. ராஜியோட பெரிய பொண்ணு தூயா மூணாவது படிக்குதுன்னு நினைக்குறேன். சின்னவ இனியா அப்போதான் எல்கேஜி ல சேர்த்திருக்காங்க. சாயங்காலம் இஸ்கோலு விட்டு வந்து கொஞ்ச நேரம் கழிச்சு ஹோம் வொர்க் பண்ண உக்காந்து இருக்குங்க.., உன் ஃப்ரெண்ட் பத்திதான் உனக்கு தெரியுமே! பொறுப்பா ஒரு வேலையும் செய்ய தெரியாது. பிள்ளைகளை படிக்க விட்டு சமையல் கட்டுல போய் வேலை பார்த்திருக்கா.

சின்னது, பெரியவளோட நோட்டு ஒண்ணுத்தை கிழிச்சுட்டுது.. அதனால, பெரியவ அழுதுகிட்டே, ராஜிக்கிட்ட போய், அம்மா! ”பாப்பா என் நோட்டை கிழிச்சுட்டா”ன்னு சொல்லி கம்பெளெய்ண்ட் பண்ணி இருக்கா.

ம்ம்ம்ம்ம் அப்புறம் ராஜிக்கு கோவம் வந்துடுமே அடிச்சுட்டாளா?!

அதான் இல்ல, ஏய், இனியா! எப்ப பாரு அக்காவை ஏன் வம்புக்கு இழுக்குறே!? இனி அப்படி வம்புக்கு இழுத்து கம்ப்ளெயிண்ட் பண்ணா, அடிச்சுடுவேன்”ன்னு மிரட்டி இருக்கா. அதுக்கு, இனியா! ஏய் தூயா! நல்லா கேட்டுக்க. நீ கம்பெளெயிண்ட் பண்ணுறது அம்மாக்கு பிடிக்கலியாம். இனி அப்படி கம்ப்ளெயிண்ட் வந்தா அடிச்சுடுவாளாம். ஓக்கேன்னு சொல்லி ராஜி வாயை அடைச்சிருக்கா.

ஹா! ஹா! சின்ன பிள்ளைல இருந்து ராஜி வாயாடுவா! படிக்கும்போது கூட கிளாசுல அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டா. ஆனா, அவ வாயடைக்க அவ பெண்ணே போதும் போல இருக்கு.

பொண்ணு மட்டும் இல்ல புள்ள! அவ பையன் அப்புவும் பலே ஆள்தான். அவன் கேட்ட விடுகதைக்கு விடை தெரியாமதான் குழம்பிட்டு இருக்கேன்..,

அப்படி என்னத்தை கேட்டுட்டான் மாமா! எங்கே சொல்லுங்க பார்க்கலாம்! என்னால முடியுதான்னு?!
விரிச்ச தலையை, 
முடிய தெரியாத பொம்பளைக்கு...,
அவ பெத்த பிள்ளைகளாலேயே பேரு..,
அவ யாரு?!
ன்னு கேட்டான். இன்னும் பதில் தெரியலை புள்ள.

ம்ம்ம்ம்ம் எனக்கும் தெரியலை மாமா!  நீங்களே சொல்லிடுங்க...

நான் ஒரு ஜோக் சொல்றேன் கேட்டாதான் பதில் சொல்லுவேன்..

சரி சொல்லி தொலைங்க...,

தாஜ் மகாலை பார்த்துக்கிட்டு இருந்த ஒரு ஜோடி..
மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்த்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...

கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது.
இது ஜோக்கா?! இல்ல எனக்கு இதுல எதாவது சொல்றீங்களா?!

கண்டுப்பிடிச்சுட்டியே கள்ளி! என் பொண்டாட்டி ரொம்ப புத்திசாலின்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லுவேன். அது நிஜம்ன்னு ஃப்ரூஃப் பண்ணிட்டியே!

உங்களை....,

                

19 comments:

  1. // கண்டுப்பிடிச்சுட்டியே கள்ளி! என் பொண்டாட்டி ரொம்ப புத்திசாலின்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லுவேன். அது நிஜம்ன்னு ஃப்ரூஃப் பண்ணிட்டியே! //

    ஆஹா அக்கா கலக்குது...

    ReplyDelete
  2. //மாமியார் சொன்னாங்கன்னு கடினமான வேலையை செய்ய வேணாம். சின்ன சின்ன வேலைங்க செஞ்சாலே போதும்.//

    பாப்போம் ராஜி மாமியார் ஆனா என்ன சொல்கிறார்கள் என்று...!

    ReplyDelete
  3. கதாகாலேட்சம் கேட்ட மாதிரி இருக்குதுங்க...

    ReplyDelete
  4. கதை நல்லா இருக்கு ..அந்த புத்தர் படமும் சூப்பர் அதை விட மக் வீசுற உங்க போட்டோ அருமை

    ReplyDelete
  5. ஓ! இதெல்லாம் செஞ்சுதான் அறிவான பிள்ளைகளை பெத்து, தன் பசங்ககிட்டயே அடிக்கடி பல்ப் வாங்குறாளா?!

    ReplyDelete
  6. ராஜி மாமியார் ஆனா கடினமான வேலை எல்லாம் மிக எளிதான வேலையாகிடும்

    ReplyDelete
  7. சகோ உங்க வூட்டுகாரர் தாஜ்மஹால் கட்ட ரெடியாக வில்லை என்றால் தகவல் கொடுங்க ஆளை வைச்சு மிரட்டிடலாம் என்ன சரிதானே

    ReplyDelete
  8. ஆலோசனைகள் நன்று!

    ReplyDelete
  9. அடடா... புல்லரிக்குதுங்க...

    ReplyDelete
  10. அவியல்... அவியலாகவே....

    ReplyDelete
  11. குழந்தைங்க கிட்ட பல்பு வாங்கறதுலயும் ராஜிக்கு தனி சந்தோமுண்டு. சரிதானே... அவியல் வெகு ருசி!

    ReplyDelete
  12. //ஹா! ஹா! சின்ன பிள்ளைல இருந்து ராஜி வாயாடுவா! படிக்கும்போது கூட கிளாசுல அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டா. ஆனா, அவ வாயடைக்க அவ பெண்ணே போதும் போல இருக்கு./
    ஹா ஹா வைபின்னாடி போட்டுக்கோங்க! கேக்கவே சந்தோஷமா இருக்கு,
    அது என்னவோ தெரியல இன்னைக்கு படிக்கிற எல்லா பதிவும் கலக்கலாவே இருக்கு.

    ReplyDelete
  13. வீட்டிலேயும் பல்புதானா?

    ReplyDelete
  14. சுவாரஸ்யமான எழுத்து நடை சொல்லப்பட்ட விசயங்களில் இருக்கும் அர்த்தம் நிறைந்த உண்மைகள் ஆச்சர்யப்பட வைக்கிறது ..........மேலும் இந்த புதர் கதையை நான் பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன் அருமையான வாழ்வின் தத்துவம் அது ............வாழ்த்துக்கள்

    ReplyDelete

  15. ஐஞ்சுவை அவியல் அருமையான டேஸ்ட்...

    ReplyDelete
  16. சுவாரசியமா இருந்திச்சும்மா...தாஜ்மகால் ஜோக்கை சுட்டுக்கறேன்....

    ReplyDelete
  17. தாஜ்மஹால் ஜோக் என்னுடைய ஃப்ரூட்சாலடில் முன்னரே பகிர்ந்திருக்கிறேன்! :)

    கடைசி படம் அருமை!

    அவியலின் பகுதி ஒவ்வொன்றும் அருமை.... பாராட்டுகள்.

    ReplyDelete