Saturday, July 20, 2013

என் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி

என்னை மொத்தமாய் களவாடிய ஆறடி ராட்சசனே!

என்னை நீ களவாடிய தருணம் எப்போன்னு சிந்திச்சு பார்க்குறேன்!! பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் முட்டி மோதும்போது வார்த்தைகளை தேடி தேடி எடுக்க வேண்டி இருக்கு!! முதல் காதல் கடிதம் எழுதும் எல்லாருக்கும் இப்படியா?! இல்லை எனக்கு மட்டும் இப்படியா?! புதிதாய் பிறந்த கன்னுக்குட்டி  நடைப் பயில ஆரம்பிப்பதை போல இப்படி தத்தி தடுமாறுதே என் பேனா!!

எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது?! கேசத்தில் ஆரம்பித்து..., கண், உதடு, கழுத்து என பயணப்பட்டு பாதத்தில் முடிக்க வேண்டுமே!! அதனால, என் கடிதம் கண்டிப்பா ரொம்ப நீளமாதான் இருக்கும். படிக்க சோம்பேறித்தனம் படாதே!!

ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., "அந்த புரிதல்"

கண்களும், நினைவுகளும் திறந்திருக்கும் வேளையில் மட்டுமல்ல, அவை மூடியிருக்கும் வேளையில்கூட விலகாமல் இருக்கும் ”உன் நினைவு”


என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும்  “உன் கோரிக்கை. ”

ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் ”உன் அகங்காரம்”


என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த  “ உரிமை.”
உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த  “பன்மை”


எல்லாரையும் போலதான் நமக்குள் சண்டை வருகிறது. எல்லாரையும்போலதான் சமாதானமும் ஆகிறோம், ஆனால், சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும் ” சண்டை ”  

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த கண்களின் ”மொழி”.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கைவிரல்களில் இருக்கும் உன் வாசம்


பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்?! 


என் உயிரோட்டம் எதனால் நிகழ்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால்அத்துணைக்கும் நீயே காரணம் 

இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் உன் குறுஞ்சிரிப்பு 
 
என்னடா? இது சம்பந்தம், சம்பந்தமில்லாமல் எழுதி இருக்கான்னு குழப்பமா இருக்கா?! உறவில் குழப்பம் வந்தால் பிரிவு வரும். என் எழுத்தில் குழப்பம் வந்தால் மீண்டும் படி என்மீது காதல் வரும்.., இதில் நிறைய மெய்யும், கொஞ்சூண்டு பொய்யும் கலந்திருக்கும். காதல் மனசுக்குள் வந்துட்டாலே பொய்யும் சேர்ந்து வருமா?! இலவச இணைப்பு போல?! இனிப்பில் கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால்தன் அந்த பலகாரம் சுவைக்கூடும் அதுப்போல மெய்யோடு கொஞ்சம் பொய் கலந்தால்தான் காதலில் சுவை கூடுமாம்.

சிறு வயதிலேயே ஆரவாரமாய் பிறந்துவிட்டது உன் மீதான் என் காதல்!! கொட்டும் மழையில் நம்மோடு நனைந்தது என் காதல்!! இதமான தென்றல் காற்றோடு, சூடான காஃபியுடன் வந்து நம்மோடு கைக்குலுக்கியது என் காதல்!!

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் இரைச்சலோடு தன் குரலை சேர்த்துக் கொண்டது என் காதல்!! ஐஸ்கிரீம் ஜில்லிப்பில்..,, கால்களை தவழும் அலையில்.., புத்தக வாசனையில்.., மயிலிறகு மென்மையில்..., என எல்லாவற்றிலும் கலந்து.., என் உயிரிலும் கலந்து விட்டது என் காதல்!!


 உன் மீதான என் காதலால் வில்லொடித்த ராமன் மனநிலையை ஒத்திருந்தது என் நிலை.  வார்த்தை கற்களை வீசி உன்னை காயப்படுத்தினாலும் சிறு புன்னகையால் அதை கடந்து போகும் உன் அமைதியை நினைத்து பார்க்கிறது என் மனம்...,

கரம் கோர்த்து என் மடி சாய்ந்து கதை பேசிய  நினைவுகளில் முகிழ்கிறதென்
தாவணி பருவ நாட்கள்.  தடதடத்து ஓடிய எக்ஸ்பிஷன் ”டோரா டோரா”வில் சுத்தும்போது பயந்து உன் தோள் சாய்ந்து கட்டிக்கொண்டது இன்னும் மனதில் நிழலாடுது. அப்ப, ஆதரவாய் நீ பற்றிய கரங்களுக்குள் தாயின் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்தேன்.  நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மூணெழுத்து வார்த்தை நீ உச்சரித்த போதெல்லாம் என் சோர்வெல்லாம் நீங்கி மான்குட்டி, முயல்குட்டி  போல துள்ளிய மர்மமென்ன?

சொர்க்கத்தையே காண நேர்ந்தாலும் அது பற்றி அக்கறை படாமல் ஒதுங்கி  இருந்த உம்மனாமூஞ்சியான நான்,  எந்த நிமிடம் நீ என்னுள் நுழைந்தாயோ, அந்நொடியிலிருந்து பட்டாம்பூச்சியிலிருந்து பராக் ஒபாமா வரை  ரசிச்சு பகிர்ந்துக்கொள்ள ஓடோடி வருவேன் உன்னிடம்..,

கைக்கு பேனா கிடைக்கும் போதெல்லாம் நம் பெயரை FLAMES போட்டு பார்த்து L இல்லாட்டி M வந்த பேப்பரெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ஏதோ இதிகாசம் படைத்த இறுமாப்பில்!! தலைக்கோதிய உன் ஸ்பரிசத்திலும், வஞ்சையான உன் பேச்சிலும் உன் கால்சுற்றும் உன் வீட்டு நாய்க்குட்டியானது என் பெண்மை. இதுப்போன்ற கனவுகள் எல்லாமே அழகாய்த்தானிருந்தது!!!

எல்லாவற்றிலும் கலந்து உலகையே ரசிக்க வைத்த என் காதல்.., திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தையாகிவிட்டது போலும்?!உரிமையில்  நீ கொட்டிய சந்தேக மொழியில் சவமாய் போனதா?! இல்லை பணிச்சுமையினால் நேரமின்மையால் நொண்டியாகிவிட்டதா?!வாழ்க்கை ஓட்டத்தில் வழுக்கி விட்டதா?!அல்லது பழக பழக பாலும் புளிக்கும் என அலுத்துவிட்டதா என் காதல்?! எங்கே போயிற்று?! என்னவாற்று என் காதல்?!


புல்வெளியில், ஆகாயத்தில், அழகில், அருவெறுப்பில், வலியில், மகிழ்ச்சியில், இணையத்தில், தமிழில், புத்தகத்தில், வண்ணப்பொடிகளில்........,என அகிலமெங்கும் தேடி தேடி பார்க்கிறேன்! ஆனால், கிடைக்கவே இல்லை என் காதல்!!


காற்று உன் பக்கம் வீசியது போலும்!! அவ்வளவு சீக்கிரம் என் காதல் காற்றோடு காற்றாய் கரைந்து காணாமலே போனது!!  காடு, மலை, நாடு, நகரமெங்கும் தேடி அலைகிறேன். என் காதலை போல பல காதல்கள் கைக்கு சிக்குகிறதே தவிர, என் காதல் மட்டும் சிக்கவே இல்லை.

சலிக்காமல் நானும் தேடுவேன்..., என் இறுதி  மூச்சு வரை மழலை சிரிப்பில், ஒலிக்கும் மெல்லிசை பாடலில்,  ரசிக்கும் கவிதை வரியில், யாரோ!! யாரையோ விளிக்கும் ஒற்றை வார்த்தையில், சிவக்கும் கைவிரல்  மருதாணியில்,  மொறு மொறு தோசையில்...., என என்றாவது ஒரு நாள்  சிக்காமலா போகும் என் காதல்?!

அதுவரை.....,

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தும் தாய் உண்பதை போல.., உனக்கும் சேர்த்து நான் காதலித்து விட்டு போகிறேன் ”என் காதலை”!! 


என் காய்ச்சலின் சூட்டை உன் உடம்பிலும், உன் காயத்தின் வலியை என் மனதிலும் உணர்ந்து அழுத தருணங்களும்....,  தோல்வியின் போது சாயும் தோளையும், வெற்றிக்காக குலுக்கிய கைகளும்...., பரிமாறிய கணங்கள் என் வாழ்வின் வசந்த காலங்கள் என் இருவரும் சொல்லிக் கொண்டது உண்மையென்றால்......,

என் மரணத்திற்குள் கிடைத்து விடும் ”என் காதல்” அதுவரை..............,


காத்திருப்போடு...........,


”உன்” ஜில்லு.டிஸ்கி:  ஐயா சீனு! உனக்கும், எனக்கும் எந்த ஜென்மத்திலோ ஏதோ பகை இருக்கும் போல. அது இந்த ஜென்மம் வரை தொடர்ந்திருக்கும் போல!! இல்லாட்டி   உன்னோட இந்த போட்டி  ஏன் என் கண்ணுல பட்டு தொலையனும்?! படிச்ச மூணாப்பு படிப்பு பரிட்சைக்கு கூட இப்படி கண்விழிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு ஜிந்திக்கலை. அதனால, மத்த கடிதத்தையெல்லாம் படிக்காம சட்டு புட்டுன்னு எனக்கே பரிசை குடுத்துடுங்க. தலைவலிக்கு காஃபி பொடி, பால், தைலம் வாங்கவாது உதவும்!!

நீங்க குடுத்த 3 தலைப்புல நான் எடுத்துக்கிட்டது உங்கள் காதலன் அல்லது காதலிக்கு   நீங்கள் எழுதிய காதல் கடிதம்.  தான்.

38 comments:

 1. ஒரு வழியா கடைசி நாளா பார்த்து எழுதிட்டிங்க போல அது என்ன ஊசலாடும் சாவி.. இதை படிக்கிறவங்க உசிரும் இப்படி ஆடனும்னு நினைச்சி எழுதினிங்களா..?

  ReplyDelete
  Replies
  1. நீங்கலாம் படிச்சி ஃபீல் பண்ணி மனசு இப்படி ஊசலாடனும்ன்னு தான்.

   Delete
 2. கொஞ்சூண்டு உப்பு தானே போட்டீர்கள்...? தைலம் பாட்டில் இன்று தான் வீட்டில் தேடினேன்... ஹிஹி.. இனிக்கும் காதல் எங்களுக்கு சிக்கி விட்டது...!!! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...!

  ReplyDelete
  Replies
  1. தைலம் பாட்டில் தேடும் அளவுக்கு மொக்கையாவா இருக்கு என் காதல். போங்கண்ணா!

   Delete
 3. முடிவில் படம் : தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் நிலையோ...?

  ReplyDelete
  Replies
  1. அதான் என் கடிதம் மொக்கைன்னு சொல்லீட்டீங்களே! அப்புறம் மத்தவங்களுக்குதான் பரிசு

   Delete
 4. காதல் கடிதம் அழகாக இருந்தது. பரிசு கிடைக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. காதலின் ஏக்கம் நெஞ்சம் நெகிழ்த்துகிறது. பரிசு பெற வாழ்த்துக்கள் ராஜி.

  ReplyDelete
 6. காதல் கடிதம் அருமை

  ReplyDelete
 7. azhakiya kaditham..

  nantri!

  ReplyDelete
 8. வயிறு பத்தி எரியுது ராஜிம்மா கடிதம் என்ற பெயரில ஒரு சின்ன
  விட்டைப் போட்டு விட்டு பரிசைக் கேட்பது நீதியா ?...நான் இந்தப்
  பரிசு எப்ப கிடைக்குது வீடு வாங்கலாம் என்று காத்துக் கிடக்கும்
  போது இந்த ஏழையோட வயித்தில குத்த வேண்டாம் .பின் பகையாளி
  சீனுவா இருக்க முடியாது தங்கச்சி .நம் அக்கா தங்கச்சி உறவே
  இத்தோடு காலியாகிடும் யாக்கிருதை .சீனுவாத் தந்தாலும் நீ அத
  வாங்கக் கூடாது (ம்ம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))))))))))))))))))))))

  ReplyDelete
 9. அட லைக்க வேற போட்டிற்றனே !உண்மையிலும் நான் ஒரு லூசு ...:))

  ReplyDelete
 10. இதுதான் தலை எழுதென்றால் என் வாழ்த்துக்கள் தங்கச்சி .

  ReplyDelete
 11. என் காதல் - திடங்கொண்டு போராடு அதுவே நல்ல தொடக்கம் இபொழுது காதலில் திடம் இருபபதில்லை ..ஆனால் உங்கள் வரிகள் திடமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete

 13. லாஸ்ட் பால்ல சிக்சர் அடிச்சிருக்கீங்க,...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. ஓ உண்மையிலையே எழுதிய காதல் கடிதமா, ஆமா இந்தக் கடிதம் கொடுத்தும் ஏற்பட்ட பின்விளைவுகளை சொன்னா இன்னும் நல்லா இருந்து இருக்கும் :-)

  அத்தனை பாராக்களிலும் காதல் ஊஞ்சல் ஆடியது...

  ReplyDelete
  Replies
  1. ஏன் சீனு உனக்கு இந்த விபரீத ஆசை?! குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ண பார்க்குறியே!

   Delete
  2. அட கடிதமே எழுதியாச்சு, உங்களுக்கு கிடைச்ச ரீசல்ட் சொல்றதுல என்ன பிரச்சனை ?

   Delete
 16. காதல் கடிதம்....

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....

  ReplyDelete
 17. உங்கள் கடிதம் வெற்றி பெறனும் என்று வாழ்த்தமாட்டேன் காரணம் நான் வாழ்த்தினேனா நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அப்படி நீங்கள் வெற்றி பெற்றால் நான் தோல்வி அடைஞ்சிடுவேனே

  ReplyDelete
 18. போட்டியின் கடைசி நாளில் காதல் கடிதம் எழுதி கலக்கிட்டீங்க! கவிதை தனமும் காதல் நயமும் கடிதம் முழுக்க இறைஞ்சி கிடக்கு.

  ஒரே ஒரு டவுட்டு,
  ஆண்கள் கடிததம் எழுதினால் ராட்சசியே என்னும், பெண்கள் கடிதம் எழுதினா ராட்சசனே என்றுமே எழுதறாங்களே! ஆகா மொத்தம் மனுஷங்களா இருக்கக் கூடாது? ஹிஹிஹி

  ReplyDelete
 19. சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும் ” சண்டை ”

  அருமையான கடிதம் ..
  வெற்றி பெற வாழ்த்துகள்...!

  ReplyDelete
 20. நீண்ண்ண்ண்ட காலம் எடுத்து எப்படி எல்லாம் எழுதலாம் என்று ஜோசித்து இப்படி அருமையாக காதல் கடிதம் தீட்டிய ராஜி அக்காளுக்குத்தான் பரிசு போலும்!போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்§

  ReplyDelete
 21. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி ...

  ReplyDelete
 22. காதல் கதை திடங்கொண்டு ஜெயிக்க வாழ்த்துக்கள், அந்த சாவி படம் அழகா இருக்கே....! நான் சாவியைத்தான் சொன்னேன்.

  ReplyDelete
 23. வரிக்கு வரி வழிகிறது காதல் ரசித்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. போட்டியை விட்டுத்தள்ளுங்கள். இப்படியொரு கடிதம் எழுதி எங்களை கவர்ந்திருக்கிறீர்களே அதுவே போறாதா? தமிழ் உங்க பேனா வழியா கரைபுரண்டு ஓடற காட்டாத்து வெள்ளம் போல, தபதபன்னு விழற குத்தால நீர்வீழ்ச்சிபோல.... சூப்பர்ங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. "அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!"

  ReplyDelete
 26. அக்காவின் கடிதம் என்னுள் பயத்தை கிளறி விட்டுடுச்சி....

  நல்ல எழுத்தில் நச்சென்று ஒரு கடிதம் ... யதார்த்தமான சொல்லாடல் ...

  ReplyDelete
 27. கவித்துவமாய் உணர்வுகளைச் சொல்கிறது கடிதம். முதல் படமும், சாவி ஆடும் படமும் ரசிக்க வைத்தன. TNM பின்னூட்டமும் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 28. வரிக்கு வரி காதலை உணர்ச்சிமயமாய் சொல்லிவிட்டு, கடைசியில் காதல் மறைந்தது ஏன்?
  தொலைந்த காதல் சீக்கிரம் கிடைக்கட்டும்.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 29. உணர்ச்சிப்பிழம்பைக் கடைசியில் காணோமென்று சொன்னது நியாயமா? நீங்களே சொல்லுங்க.. ஜாலியாகப் படிச்சுட்டு வர்றப்ப ஜில்லிட்டுப் போக வச்சுட்டிங்களே!
  அருமையான கடிதம். அழகான நடை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. //என் எழுத்தில் குழப்பம் வந்தால் மீண்டும் படி என்மீது காதல் வரும்.//அட அட
  காதல் சொட்ட சொட்ட ஒரு கடிதம்...ஆனால் இறுதியில் தேடுகிறேன் என்று விட்டீர்களே..

  வெற்றி பெற வாழ்த்துகள் ராஜி!

  ReplyDelete