Monday, February 11, 2019

பிண்டம் வைக்கும்போது மூன்று தலைமுறை பேர்களை சொல்லி வைப்பது ஏன்?!- ஐஞ்சுவை அவியல்

போன வாரம் தை அமாவாசை பத்தின ஐஞ்சுவை அவியலில் பிண்டம் வைக்குறதை பத்தி சொன்னியே! அப்படி பிண்டம் கொடுக்கும்போது, பிண்டம் கொடுப்பவரின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, என மூன்று தலைமுறையினர் பேர் சொல்லி பிண்டம் கொடுப்பாங்க. குழந்தை பிறக்க மூலகாரணமானது  ஆணிடமிருக்கு '' சுக்கிலம் '' எனச்சொல்லப்படும் விந்து.  இந்த விந்துவில் மொத்தம் 84 அம்சம் இருக்கும்.  அதில் 28 அம்சம் நாம சாப்பிடும் உணவு, நீர்ல இருந்து கிடைக்கும்.  அப்பாக்கிட்ட இருந்து இருபத்தியொரு அம்சமும், தாத்தாக்கிட்ட இருந்து  பதினைந்து அம்சமும், கொள்ளுத்தாத்தா என சொல்லப்படும் மூன்றாம் தலைமுறைக்கிட்ட இருந்து  பத்து அம்சமும்,  நான்காம் தலைமுறையிடமிருந்து ஆறு அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமுறையிடமிருந்து 54 அம்சம் விந்துவுக்கு கிடைக்கும். .  என்னதான் 4,5,6,7 தலைமுறைகள் தங்களிடமிருந்து தனது அம்சத்தினை கொடுத்தாலும் அதிகப்படியா தருவது முதல் 3 தலைமுறையினரே! அதனால்தான் திவசம், திதி, மாதிரியா நேரத்துல முதல் மூன்று பேர்களை சொல்லி பிண்டம் கொடுப்பது. இங்க அம்சம்ன்னு சொல்லுறது அறிவியல்படி டி.என்.ஏவைதான்.  இந்த காரணத்துக்காகத்தான் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா பேரை சொல்லுறமாதிரி, அம்மா, பாட்டி கொள்ளு பாட்டின்னு மூணு தலைமுறை பேரை சொல்லுறது.
DNA (Deoxyribonucleic Acid) - Dunken K Bliths

  டியாக்சிரிபோநியூக்லிக் அமிலம்(deoxyribonucleic acid) என்பதன் சுருக்கமே டி.என்.ஏ. இந்த டி.என்.ஏ நம்ம உடம்பை கட்டமைக்க மூலக்காரணமான குரோமோசோமில் இருக்கு. இந்த டி.என்.ஏவில்தான் நமது குணநலன், உருவ அமைப்பு, திறமைகள் என அனைத்து தகவலும் சேமிக்கப்படுது. இந்த டி.என்.ஏ நான்குவகையாய் பிரிச்சிருக்காங்க. சைட்டொசைன், தைமைன், குவானைன், அடினைன். மனிதர்களின் டி.என்.ஏவோடி சிம்பான்சி குரங்கின் டி.என்.ஏ 95% ஒத்துபோகுது. வாழைப்பழத்தின் டி.என்.ஏ 50% , முட்டோக்கோசின் டி.என்.ஏ 40-50% ஒத்துப்போகுது.  ஒரு கிராம் டி.என்.ஏ வில் 700 டெராபைட்ஸ் தகவல்களை சேமிக்கலாம். ஒரு டெராபைட்ங்குறது 1024 ஜிகாபைட்ஸ்க்கு சமம். உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் சேமிக்க 2 கிராம் டி.என்.ஏவே போதும்ன்னா டி.என்.ஏவின் பிரம்மாண்டம் உனக்கு புரியும்.
GIF.......DNA........SOURCE TUMBLR.COM..........

ஆத்தாடி இம்புட்டு விசயமிருக்கா மாமா?!

இன்னமும் இருக்கு..  பரிணாம வளர்ச்சியில் இதுவரை 510 டி.என்.ஏ அமைப்புகள் அழிந்து போனதாய் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. உலக மனிதர்களின் அனைவரின் உடலில் இருக்கும் எல்லா டி.என்.ஏ வையும் பிரித்து இணைச்சு அளந்தா, 10 பில்லியன் மைல்கள் நீளம் வருமாம்!!! இதன் ஒரு முனை பூமியில் இருந்தால் மற்றொரு முனை சூரியனை தொடக்கூடுமளவுக்கு இருக்குமாம்.  மனிதர்கள் அனைவருக்கும் 99 - 99.9 % டி.என்.ஏ அமைப்புகள் ஒன்றாக இருக்கிறது. மீதமுள்ள 0.1 - 1 % டி.என்.ஏ அமைப்புகள் மட்டுமே ஒருவருக்கொருவர் வேறுபடும். இந்த டி.என்.ஏக்கள்தான் நம்ம பெற்றோர்களை இன்னொரு பெற்றோர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுது. இல்லன்னா ஒரேமாதிரி அச்சில் வார்த்ததாய் இருந்து அடையாளம் தெரியாம குழம்பி தவிச்சிருப்போம்.  இரட்டையர்களாக பிறந்தவர்களின் டி.என்.ஏ 100% ஒத்துபோகும்.  புற்றுநோய்க்கு முக்கியமான காரணமே டி.என்.ஏ அமைப்புகளில் ஏற்படும் குளறுபடிதான். ஒவ்வொரு நாளும் நம்ம உடம்பில் இருக்கும்மரபணுக்கள் அழிந்து, அதற்கு சமமான மரபணு மீண்டும் உருவாகும். அப்படி ஒரு நிகழ்வில் குளறுபடி ஏற்படும்போது புற்றுநோய் உண்டாகும்.  புற்றுநோயை மரபணு மாற்றம் செய்து எளிதில் குணப்படுத்த முடியும். ஆனா, இந்த சிகிச்சை செய்ய  5 லிருந்து  15 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படும். 

போதும் நிறுத்து மாமா.. இந்த மாதிரி இம்சை கூடாதுன்னுதான் நான்மூணாப்பு படிப்போட நிறுத்திக்கிட்டேன். இங்க வந்து குரோமோசோம் , டி.என்.ஏன்னு பிளேடு போட்டுக்கிட்டு..

அப்படியா?! அப்ப தினத்துக்கும் நீ பார்க்குற, பயன்படுத்துற பொருள் பத்தி கேக்கவா?!

ம்ம்ம் கேளு மாமா.

பொண்ணுங்க ஏன் தலைமுடியை பின்னிக்குறாங்க?!

தலைமுடியை பின்னாம லூஸ் ஹேர் விட்டா தலைமுடி தூசி, வெயில் பட்டு பாழாகும். அதுமில்லாம தலைமுடியை விரிச்சு போடுறது அமங்கலத்துக்கான அறிகுறி. விதவிதமா தலைமுடியை பின்னிக்கிட்டா அழகா இருப்போம். அதனால்தான் பொண்ணுங்க தலையை பின்னிக்குறாங்க.

அதுமட்டும்தான் காரணமா?!

வேறென்ன காரணம் இருக்க போகுது மாமா?!
Image may contain: 1 person, standing

மூன்று பிரிவாய் தலைமுடியை எடுத்து பின்னும் பின்னல் அமைப்பு த்ரிவேணி சங்கமத்துக்கு ஒப்பானது. மூன்று நதிகள் சேரும்போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு தெரியும். ஆனா  சரஸ்வதி நதி நம் கண்ணுக்கு தெரியாது.  அதுமாதிரி பின்னலில் இரண்டு தலைமுடி பாகமே கண்ணுக்கு தெரியும். நடுவில் இருக்கும் பாகம் கண்ணுக்கு தெரியாது. அதுமட்டுமில்லாம தலைமுடியின் வலது பாகம் பிறந்தவீடு., இடப்பக்க பாகம் புகுந்தவீடு, நடுவில் இருக்கும் பாகம் பெண்.  திருமணத்துக்கு பின் தான், தனது என்ற எண்ணம் மறந்து போகுமளவுக்கு உழைப்பு, தியாகம்,  அன்பினால் இரு வீட்டாரையும் இணைக்கனும் என்பதே பின்னலின் தத்துவம்.   தலைமுடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுது. நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான கேட் பாஸ் மாதிரியானது தலைமுடியின் நுனி. இதனால்தான்  சந்நியாசிகள் மொட்டை அடிச்சுக்குறாங்க. வெளி உலகிலிருந்து பெற்றுக்கொள்ள எதுவுமில்லை. அதேப்போல தன்னிடமிருந்து உலகத்துக்கு கொடுக்கவும் ஒன்னுமில்லைன்னு அர்த்தப்படுத்தவே மொட்டை அடிச்சுக்குறாங்க. பின்னல் மட்டும் போதாது. தலைமுடி நுனி தெரியாம இருக்க நுனியில் ரிப்பன், குஞ்சலம் வச்சுக்குறது அந்த காலத்துல வழக்கம். துக்க வீட்டில் மட்டுமே தலைமுடி விரிச்சு போட்டுக்கிட்டிருப்பாங்க. உறவின் மீதான பிடிப்பை அறுத்துக்கவே தலைவிரிக்கோலம் உண்டானது. ஆனா, இப்ப பேஷன்ற பேர்ல கல்யாணம், காதுகுத்து, கோவில்ன்னு எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் தலைவிரிகோலமாகிட்டுது வேதனை தருது..
No photo description available.

ம்ம் அப்படி விரிச்சு போட்டுக்கிட்டு சுத்துறதால வீடு முழுக்க தலைமுடியா கிடக்கு மாமா.  அப்படி விழுந்த முடியை எத்தனைதான் பெருக்கினாலும் போகாது. ஒன்றிரண்டு தரையில் கிடக்கும். அதனால் தலைவாரி முடிச்சுதும், கொஞ்சூண்டு செல்லோ டேப்பை விரலில் சுத்திக்கிட்டு தரையில் தேய்ச்செடுத்தா தலைமுடி அத்தனையும் வந்திரும். 
முன்ன ஒருமுறை சுசீலா ராமன்ன்ற பொண்ணு , பாடிய?! பால் இருக்குது.. பழம் இருக்குது.. பழனி மலையிலே.. பாட்டை கேட்டு ரசிச்ச நம்ம சமூகம் இன்னிக்கு ஒரு முருகன் பாட்டை கேட்டு, பார்த்து ரசிக்கட்டுமேன்னு இந்த வீடியோவை அப்லோட் பண்ணு மாமா. அப்படியே என் விடுகதைக்கு பதில் சொல்லு.. அடித்தாலும், உதைத்தாலும் அழமாட்டான்... அவன் யார்?!

மாமா விடுகதை சொல்றதுக்கு முன் சகோ’ ஸ் யார் வேணும்ன்னாலும் பதில் சொல்லலாம். டிடி அண்ணா தவிர்த்து...

நன்றியுடன்,
ராஜி

19 comments:

  1. பலருக்கும் அறிவு உடனடியாக வெளியே தெரிவதால் தலைவிரிக்கோலம்...!

    என்னை அடித்தாலும் "அதை" உதைத்து, திரும்பி வாங்கிக் கொள்ள விருப்பமில்லை...!

    ReplyDelete
    Replies
    1. நானும் திரும்ப கேட்கும் உத்தேசமில்லை.

      Delete
  2. ராஜி... இன்னொன்று, 7 தலைமுறைக்கு முன்னும் பின்னும் உறவு கிடையாது. அதாவது அந்த உறவினால் நாம பாதிக்கப்படமாட்டோம் என்பது (அப்பா, தாத்தா, பேரன் இவங்க இறந்தா சிலர் தலை முழுகுவாங்க. அந்த மாதிரி எந்த உறவும் 7 தலைமுறைக்கு மேல் கிடையாது).

    நல்ல முக்கியமான செய்திகளைப் போட்டிருக்கீங்க. பாராட்டறேன்.

    தலை பின்னுவதைப் பற்றி நீங்க எழுதுனதைப் படிச்சு, ஒவ்வொருத்தரும் எப்படிப் பின்னியிருக்காங்கன்னு பார்க்கப்போனால், அவங்க நம்மைப் பின்னிட மாட்டாங்களோ?

    ReplyDelete
    Replies
    1. கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டு பாருங்க. பின்ன மாட்டாங்க

      Delete
  3. நல்ல பகிர்வு.

    சுசீலா ராமன் அவர்களின் இந்தக் காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யூ ட்யூப்ல கொட்டி கிடக்கு சகோ

      Delete
  4. நல்லதொரு பகிர்வு. ராஜி. திருஷ்டி. பரிகாரம். இந்தப் பாடல். பின்னல். அழகு. சிடுக்கில்லாமல். அழகா இருக்கு. எத்தனை தத்துவங்கள் நம் நாட்டில். நன்றி மா..

    ReplyDelete
    Replies
    1. திருஷ்டி கழிஞ்சதா இருக்கட்டுமேம்மா. சாமி பாட்டை இப்படி குழப்படி பண்ணி இருக்குதுங்களேன்னு ஆதங்கத்துலதான் இணைச்சேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete
  5. தலைமுறைத்தகவல்கள் அறிந்ததே. தலைமுடிப் பின்னல் தகவல் சுவாரஸ்யம்.​

    ReplyDelete
    Replies
    1. தலைமுறை தகவல் இப்பதான் அறிகிறேன். ஆனா, குரோமோசோம் கதை மட்டும் படிக்கும்போது தெரியும்.

      Delete
  6. பொதுவாக தலை பின்னுவதையும், சடையையும் நான் ரசிப்பதுண்டு. அதனை ஒரு கலையாகக் கூட நான் பாவிக்கிறேன். அதனைப் பற்றி கூடுதல் செய்திகளை அறிந்தேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆயக்கலைகளான 64 கலைகளில் சிகையலங்காரமும் ஒன்றுன்னு தாங்கள் அறியாததாப்பா?!

      Delete
  7. அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  8. டி.என்.ஏ குறித்த தகவல்கள் அருமை...
    தொடர்க

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் சகோ

      Delete
  9. சுசீலா ராமன் பாடல் தேவையா.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமேதான் தெரிஞ்சுக்கனும். தப்பில்லை சகோ

      Delete
  10. தலைப் பின்னுவதைப் பற்றி இவ்வளவு செய்திகளா.
    இந்த மாதிரி ஆண்களுக்கு ஏதாவது இருக்கிறதா சகோ?

    ReplyDelete
    Replies
    1. இருக்கே. உடைகள் பத்திய ஒரு பதிவு, விரைவில் பதிவிடுகிறேன் சகோ

      Delete